Posts

Showing posts from October, 2011

கொத்து பரோட்டா -31/10/11

Image
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குதண்டனை விஷயத்தில் மத்திய அரசுதான் முடிவு எடுக்க வேண்டும். மாநில அரசால் ஒன்றும் செய்ய முடியாது என்று மம்மி சொல்லியிருப்பது ஒன்றும் ஆச்சர்யமேயில்லை. என்னை அவர்களை நம்பி.. ஆஹா ஓஹோவென காலில் விழாத குறையாய் துதி பாடியவர்களை பார்த்துத்தான் பாவ்மாய் இருக்கிறது. சட்டசபையில் தீர்மானமெலலாம் இயற்றினார்களே? என்று கேட்பவர்களுக்கு என்னா பாஸ் விளையாட்டுப் புள்ளைகளா இருக்கீங்களே? உள்ளாட்சி தேர்தலும் முடிஞ்சுருச்சு. இனி பாராளுமன்ற தேர்தலின் போதுதானே வந்து நிக்கணும். அப்ப பாத்துக்கலாம்.  அம்மா தன் இன்ப்ளூயன்ஸ் முழுக்க யூஸ் பண்ணி அவங்களை ரிலீஸ் பண்ணனும்னு சொல்லியிருக்காரு... தானைத் தலைவர். அம்மாவோட பதில் திருப்தி தரலையாம் டாக்டருக்கு. கேப்டன் ஒன்னியும் சொன்னாமேரி தெரியலை. #############################

சாப்பாட்டுக்கடை - ID@ Sathyam

Image
நல்ல தியேட்டரில் சினிமா பார்க்க வேண்டுமென்றால் சென்னைவாசிகளின் முதல் ஆப்ஷன் சத்யமாய்த் தான் இருக்கும். சென்னையின் முக்கிய டெஸ்டினேஷன்களில் ஒன்றாக விளங்கும் இந்த மல்ட்டிப்ளெக்ஸில் முதல் மாடியில் ஒரு வெஜிட்டேரியன் ரெஸ்டாரண்ட் இருக்கிறது. பெயர் ஐடி.  நிர்வாகத்தினர் பெயருக்கான பாண்ட் டிசைனிலேயே நம்மை கவர்ந்து விடுவார்கள். உள்ளே சென்றதும் அருமையான ஆம்பியன்ஸ். நடுவே சமையல் இடம். அதை சுற்றி பாரில் உள்ளது போல ஒரு சீட்டிங் அரேஞ்ச்மெண்ட். அவசர அடியாய் தனியாய் என்னைப் போன்றவர்களுக்காக அமைத்திருப்பார்கள் போலும். தோசைக்கல்லுக்கு முன்னாடியே உட்கார்ந்து சுடசுட சாப்பிடலாம்.

வேலாயுதம்

Image
தொடர்ந்து ஆறரை தோல்விகள். அதை மீறி ஏதாவது மேஜிக் செய்வார் என்ற எதிர்பார்பை ரசிகர்களிடையே இன்னமும் வைத்திருக்கும் விஜய். தசாவதாரத்தை தயாரித்த புகழ் பெற்ற தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிசந்திரன். ரீமேக் புகழ் ராஜா. ஹிட்டான பாடல்கள் என்று ஏழாம் அறிவுக்கான எதிர்பார்ப்பையும் மீறி தனக்கென ஒரு ஓப்பனிங்கை வைத்திருக்கும் விஜய்யின் படம். விஜய் லோ ப்ரொபைலில் இருக்கும் காலத்தில் வந்த படம் தான் திருமலை. அதற்கு முன்னால் ரிலீஸான படங்கள் எல்லாம் தோல்வியடைந்திருக்க, எந்த விதமான எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் ரிலீசான திருமலை ஹிட்டடித்தது. அதே போன்ற மேஜிக்கை இந்த வேலாயுதம் செய்தானா? என்பதை பார்ப்போம்.

Trespass -2011

Image
பல சமயங்களில் நம் உறவுகளின் பலம் பற்றித் தெரியாது. அதைப் பற்றி கவலை கூட பட்டிருக்க மாட்டோம். ஆனால் ஒரு ப்ரச்சனை என்று வரும் போது அந்த உறவுகள் பற்றிய அத்துனை விஷயங்களும் நமக்கு தெரியவரும். துன்பம் வரும் போதுதான் நிஜ நண்பர்கள், உறவுகள் பற்றி அறிந்து கொள்ள முடியும் என்று சொல்வார்கள். அதை அடிப்படையாய் வைத்து வெளிவந்திருக்கும் படம் தான் இது. நிகலோஸ் கேஜ், நிக்கோல் கிட்மென், பிரபல இயக்குனர் ஜோல் ஷுமேக்கர் என்று எதிர்பார்பை ஏற்படுத்தும் ஸ்டார் காஸ்ட்.

கொத்து பரோட்டா -24/10/11

Image
தமிழ் சினிமா என்கிற பொன் முட்டையிடும் வாத்தை விநியோகஸ்தர்களும், தியேட்டர் அதிபர்களும் அறுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே நான் நிறைய முறை டிக்கெட் கட்டணங்களை நியாய விலைக்கு விற்பனை செய்ய வேண்டிய தேவை என்ன? என்பதைப் பற்றி எழுதியிருக்கிறேன். சென்ற ஆட்சியில் தான அவர்கள் குடும்பம் வியாபாரம் செய்தது அதற்கு ஆதரவு தெரிவித்தார்கள் என்று கூறினார்கள். இந்த ஆட்சியில் வரிவிலக்கை ஆல்மோஸ்ட் ரத்து செய்து, வரியை டபுளாக்கியதை தவிர வேறேதும் இல்லை. ஆனால் அந்த வரி அரசுக்கு செல்லுமா? என்றால் அது இல்லை. ஒவ்வொரு தியேட்டரும் 120யிலிருந்து 300 ரூபாய் வரை மக்களிடம் கொள்ளையடிக்கிறார்கள். பல தியேட்டர்களில் அந்த விலை வைக்க அரசாணையே கிடையாது. கேட்டால் வாய் மொழி உத்தரவு என்கிறார்கள். சில மல்ட்டிப்ளெக்ஸ் திரையரங்கத்தில் டிக்கெட்டுடன் சாப்பாட்டை கட்டாயம் வாங்கியே ஆகவேண்டிய நிலைக்கு ரசிகர்களை தள்ளுகிறார்கள். நிஜத்தில் கடைசியாய் நம் அரசாணைப் படி ஒவ்வொரு தியேட்டரும் வாங்க வேண்டிய டிக்கெட் விலை என்ன தெரியுமா?  http://www.tn.gov.in/stationeryprinting/gazette/2009/22-III-1(a).pdf  கீழே கொடுக்கப்பட்டுள்ள வில...

Oosaravelli

Image
சமீபகாலமாய் தெலுங்கு பெரிய பட்ஜெட் படங்கள் எல்லாம் மரண அடி பெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் மகேஷ்பாபுவின் தூக்குடு வந்து கொஞ்சம் காப்பாற்றியது. எப்படி நம்ம மங்காத்தா தல அஜீத்துக்காக பார்த்தோமோ அதே நிலையில் தான் தூக்குடுவும். அந்த வரிசையில் இப்போது ஜூனியர் என்.டி.ஆர். சுரேந்திர ரெட்டி, தேவி ஸ்ரீ பிரசாத் என்று ஜாம்பவான்களின் அணிவகுப்பு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

எண்டர் கவிதைகள் -20

Image
பால்கனியின் ஜன்னலை பூட்டுப் போட்டு வைத்திருக்கிறேன் எதிர்வீட்டு இளைஞனோடு  அவள் ஓடாதிருக்க பூட்டிற்கு வெளியே தெரு  விளக்கொன்று மினுக்கி  மினுக்கி எறிகின்றது இருட்டினிலிருந்து பார்த்தாலும் வெளிச்சம் மின்னத்தான் செய்கிறது அவளுக்கு அவன் சிகரெட் முனையும் அவனுக்கு அவள் மூக்குத்தி ஒளியும் உடைகளை களைந்து பூட்டி வைத்தேன் இருட்டில் நிர்வாணம் பொருட்டல்ல மனமே பிரதானமென்று  பூட்டியும் பிரயோஜனமில்லை சங் கர் நாராயண் @கேபிள் சங்கர்

The Three Musketeers

Image
ரொம்ப நாள் ஆயிற்று ஆங்கில படங்களை ரீலீஸின் போதே பார்த்து.இந்த வாரம் பெரிதாய் சொல்லுமளவுக்கு தமிழில் படங்கள் வராததால் வேறு வழியில்லாமல் ஏற்கனவே கேட்ட, பார்த்த கதையாய் இருந்தாலும் பார்க்கலாம் என்று போனேன். இதில் 3டி வேறு.

தமிழ் சினிமாவின் கேளிக்கைகள் - சினிமா வியாபாரம்.

சினிமா என்பதே கேளிக்கைதானே? தனியாக என்ன தமிழ் சினிமா கேளிக்கைகள் என்று சிலர் கேட்கலாம். சினிமாவை பார்பவர்களாகிய நமக்கு வேண்டுமானல் சினிமா கேளிக்கையாக இருக்கலாம். ஆனால் அதை தயாரிப்பவர்களுக்கு, இயக்குபவர்களுக்கு, அதையே தன் வாழ்வாதாரமாய் வைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு அது வெறும் கேளிக்கையல்ல வாழ்க்கை.

Sahib.. Biwi.. Aur Gangster

Image
குருதத்தின் சாஹிப், பீவி, அவுர் குலாம் படத்தின் பெயரை உங்களுக்கு இது ஞாபகப்படுத்தலாம். ஆனால் இது வேறு. சமீபத்தில் வெளியான பல தமிழ், தெலுங்கு பட ரீமெக் ஹிந்தி படங்களை  பார்க்கவே இஷ்டமில்லாமல் இருந்தேன். சரி பெயரளவில் ஏதோ நன்றாக இருக்கும் போலிருக்கிறதே என்று பார்த்த படம். ஆனால் படம் பார்த்து மூன்று நாட்களாகியும் மனதினுள் ஓடிக் கொண்டேயிருக்கிறது.

கொத்து பரோட்டா - 17/10/11

Image
தேர்தல் காலத்தில் மக்கள் நல பணிகள் எதையும் ஆளும் அரசு செய்யக்கூடாது என்று தேர்தல் கமிஷனின் கட்டுப்பாடு. சென்ற சட்டமன்ற தேர்தலில் கண்கொத்திப் பாம்பாய் இருந்த தேர்தல் கமிஷன் இம்முறை எதையும் கண்டு கொண்டதாய் தெரியவில்லை. ஏன் மக்கள் நல பணிகளை செய்யக்கூடாது என்று சொல்கிறார்கள் என்றால்.. தேர்தல் சமயத்தில் ரோடு, குடிதண்ணீர் போன்ற வசதிகளை செய்து கொடுத்து அதன் மூலமாய் அரசு இயந்திரத்தின் மூலமாய் ஓட்டு வாங்கிவிடக் கூடாது என்பதற்காக்த்தான். ஆனால் சென்னையில் பல இடங்களில் புது ரோடுகள் போடப்பட்டிருக்கிறது. ஆனால் தேர்தல் கமிஷன் அதை கண்டு கொண்டதாய் தெரியவில்லை. பணம், பொருள் போன்றவைகளை விநியோகம் செய்வதில் இம்முறை ஆளும் கட்சி தான் முன்னிலையில் இருப்பதாய் தகவல். ஆனால் அதையும் கேட்பதாய் இல்லை.உள்ளாட்சி தேர்தலுக்காக ஜனநாயக கடமையாற்றிவிட்டு வந்தவர்களுக்கு வாழ்த்துக்கள். ஆனால் ஏண்டா ஓட்டுப் போட்டோம் என்று வருந்தப்படும் அளவிற்கு நிச்சயம் வரும் காலத்தில் நடக்கத்தான் போகிறார்கள். நாமும் மறுக்கா அடுத்த தேர்தலில் ஓட்டுப் போட வெய்யிலில் இருக்கத்தான் போகிறோம். என்னா கொடுமை சார் இது.. ############################...

உயிரின் எடை 21 அயிரி

Image
  தமிழில் பெயர் வைத்தால் தான் வரி விலக்கு என்றிருந்த காலத்தில்  வேறு வழியேயில்லாமல் கட்டாயத்தினால் கிராம் என்பதற்கு அயிரி என்று தமிழில் தேடிக் கண்டுபிடித்து வைக்கப்பட்ட பெயர். சுமார் ஒரு வருடம் கழித்து வருகிறது. பிரபல மலையாள நடிகர் திலகன் நடித்த தமிழ் படம். வெகு காலத்திற்கு பிறகு பிலிம் இன்ஸ்டிடூயூட் மாணவர்களால் எடுக்கப்பட்டிருக்கிறது என்று சொல்கிறார்கள்.

நான் – ஷர்மி – வைரம் -9

Image
9. நான் முதல் நாள் அனுபவத்திற்கு பிறகு நானும் செந்திலும் மிக நெருக்கமாகிவிட்டோம். கையில் இருந்த காசையெல்லாம் சினிமாவுக்கும், தண்ணிக்குமாகவே செலவாகிவிட, மீண்டும் காசுக்கு என்ன செய்வது? என்ற யோசனையே ஒரு விதத்தில் டார்ச்சரை கொடுத்தது. முதல் அனுபவம் இருவருக்குமே கற்பனையை மீறிய விஷயமாய் இருந்ததால் அடுத்த வாய்ப்புக்கான ஏக்கம் உள்ளுக்குள் இருக்கத்தான் செய்தது. அடுத்த ஒரு வாரத்திற்கு அங்கிருந்து போன் வரவில்லை. கூப்பிடலாமா என்று தோன்றிய போதெல்லாம் அவனே கூப்பிடுகிறேன் என்று சொன்னது ஞாபகத்திற்கு வந்தது.

சாப்பாட்டுக்கடை- O. S.S CHATS

Image
சாட் அயிட்டங்கள் எல்லாருக்குமே மிகவும் பிடித்த ஒன்று. அதுவும் வடநாட்டு பானிபூரி, தய்பூரி, வடாபாவ், பானிபூரி, ஆலு டிக்கா, சமோசா போன்ற அயிட்டங்கள் மேல், பல பேருக்கு தனியாத மோகம் இருக்கவே செய்கிறது. முக்கியமாய் பானிபூரி. அதனால் தான் தெரு முனையில் எல்லாம் ரோட்டில் பானி பூரி விற்பனையாகிறது.  அப்படிப்பட்ட இடங்களில் சுகாதாரம், தரம் பற்றி யோசனையினால் நிறைய பேர் சாப்பிடாமல் போய்விடுவார்கள். அப்படி தரம், சுகாதாரம் பற்றி யோசித்தால் கங்கோத்ரி மாதிரியான இடங்களில்தான் கிடைக்கும். விலையும் அதை போலவே இருக்கும்.

நாம் ஏன் தமிழ் ப்ளாகர்களுக்கு உதவக்கூடாது?.

Image
இரண்டு நாள் முன்னதாக ஒரு ஆங்கில வலைப்பதிவு திரட்டி மற்றும் வலைப்பதிவாளர்களை இந்தியாவெங்கும் குழுமமாய் அமைக்க முயற்சிக்கும் ஒரு நிறுவனம் சென்னையில் ஒரு பதிவர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தது. இவர்கள் வருடா வருடம் நடத்துவதுதான். இம்முறை நிறைய தமிழ் வலைப்பூக்கள் நடத்துபவர்களும் கலந்து கொண்டோம்.

கொத்து பரோட்டா - 10/10/11

Image
ஒரு நாளைக்கு பத்து பேராவது வருகிறார்கள். மேயர் வேட்பாளர், கவுன்சிலர் என்று. யார் எந்தக் கட்சி என்று புரியவேயில்லை. பெரும்பாலான தேர்தல்களில் இவர்களை ஏதாவது ஒரு கட்சியின் பின்னால் இருந்து பார்த்தாகிவிட்டதால் இவர்கள் நேரில் வரும் போது கொஞ்சம அப்ரசண்டித்தனம் தெரிகிறது. நம் நண்பர் ஒருவர் வீட்டிற்கு வந்த வேட்பாளரின் கட்சியை தெரிந்து கொண்டே மாற்றி மாற்றி கட்சி பெயர் கேட்டார். பின்னர் வழக்கமாய் இரண்டு பேருக்கு ஓட்டுப் போட்டு என்னத்த கண்டோம்? இந்த வாட்டி உங்களுக்கு போடறேன் என்று சொன்னதும் சந்தோஷமாய் கிளம்பிய வேட்பாளரின் கடைசி தொண்டன், “சார்.. இந்த வாட்டி நம்மளுக்கு போட்டுப் பாருங்க.அப்புறம் தெரியும்” என்றவுடன், நம் நண்பர் “ என்ன இப்ப நீங்க ஓட்டு கேட்டு எங்க வீட்டுக்கு வர்றீங்க.. அப்புறம் எங்களை உங்க ஆபீஸுக்கு அலைய விடுவீங்க அவ்வளவுதானே. இது எவன் வந்தாலும் மாறாது” என்றாராம். அந்த தொண்டர் எதுவும் பேசாமல் வெளியே போய் விட்டாராம். போனது பெரிதில்லை. ரோட்டிற்குப் போய் தனியாய் சிரித்துக் கொண்டிருந்தாராம்.நிஜம் சிரிக்கிறது.இம்மாதிரியான நேரங்களில் இவர்களை கலாய்ப்பது சந்தோஷமாய்த்தான் இருக்கிறது. ####...

சதுரங்கம்

Image
சில படங்கள் எப்போது வந்தாலும் காலத்தினால் அழியாமல் இருக்கும். சில படங்கள் காலத்தே பின் தங்கி வந்திருந்தால் நன்றாகயிருந்திருக்குமோ? என்று தோன்றும். இன்னும் சில படங்கள் காலத்தே வந்திந்திருந்தால் அதன் சிறப்பை பெற்றிருக்குமோ? என்று கேள்வியோடு இருக்கும். சதுரங்கம் மூன்றாவது வகை.

வேலூர் மாவட்டம்

Image
வழக்கமாய் மதுரை, திருநெல்வேலி, கோவை என்றிருந்த்ததை வேலூருக்கு மாற்றியிருக்கிறார்கள் இப்படத்தின் மூலம். படம் முடிந்து ரொம்ப நாள் ஆகியும் வ்ளியிட சமயம் கிடைக்காமல் வெயிட் செய்து மேலும் வெளியிட லேட்டானால் வெளங்காது என்பதால் உடனடியாய் ஓடுகிற வரை ஓடட்டும் என்று பதட்டமாய் கிடைத்த தியேட்டரில் வெளியிட்டிருக்கிறார்கள்.

வீடியோ ப்ளாகிங் மற்றும் ஆடியோ பாட் காஸ்டிங். - உங்கள் யுடான்ஸ் டிவியில்.

வீடியோ ப்ளாகிங். உட்கார்ந்து எழுத யோசிக்கும் பலருக்கு இது வரப்பிரசாதம். கம்ப்யூட்டரில் இருக்கும் வெப்கேம், மொபைல் போன் கேமராக்கள், காம்கார்டர்கள், இருந்தால் போதும் ஒரு ஐந்து நிமிட வீடியோவில் நீங்கள் மனதில் நினைத்ததை பேசி வெளியிட்டு விடலாம். யுடான்ஸ் டிவி ஆரம்பித்தவுடன் இதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். இதற்கு முன்பே நம் பழம் பெரும் பதிவர் ஓசை செல்வா இணைய பேண்ட்வித், வீடியோ அப்லோடிங் சிரம்ங்கள் எல்லாம் இருந்த காலத்திலேயே சிறப்பான வீடியோ ப்ளாகிங் செய்தவர். இருந்தாலும் இன்றைய காலத்தில் எல்லாமே சுலபமாய் இருக்கும் வேளையில் ஏன் மீண்டும் நம் மக்களுக்கு அறிமுகப்படுத்தக்கூடாது என்று யோசித்ததில் வந்த எண்ணம்தான் இது. யுடான்ஸ் டிவியில் உங்கள் வீடியோ ப்ளாக்கிங்கை வெளியிடலாம்.

தமிழ் சினிமா ரிப்போர்ட் -செப்டம்பர்2011

சென்ற மாத மங்காத்தா புயல் இம்மாத ஆரம்ப வாரங்களிலும் இருந்ததால் நிறைய பெரிய படங்கள் வெளிவரவில்லை. ஆனால் வழக்கம் போல மதிகெட்டான் சாலை போன்ற பல குட்டிப் படங்கள் தமிழ் சினிமாக் கடலில் தங்கள் கால்களை நினைத்துக் கொண்டு சென்றது. அப்படங்களைப் பற்றி சொல்ல ஏதுமில்லாததால் வழக்கம் போல சொல்ல முடிந்த படங்களைப் பற்றிய ரிப்போர்ட்.

கொத்து பரோட்டா - 03/10/11

Image
செவிக்கினிமை

முரண்

Image
ஹிட்ச்காக்கின் “Strangers on a Train” என்ற படத்தை கிட்டத்தட்ட அப்படியே ஒற்றி தெலுங்கில் எடுக்கப்பட்ட விசாகா எக்ஸ்பிரஸ், பின்பு இந்த முரண் என்று ஒரே கதையின் மூன்று பர்ஷப்ஷன்களை பார்த்திருக்கிறேன். ஒரிஜினலை விட்டுவிட்டு பார்த்தால் அந்தக் கதையை இண்ட்ரஸ்டிங்காக சொல்ல முயற்சித்ததில் முரண் வெற்றி பெற்றிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.