செவிக்கினிமை
மயக்கம் என்ன?
மயக்கம் என்ன?
சட்டென தனுஷின் குரலில் இருக்கும் சோகம், தாபம், கோபம் எல்லாமே கேட்ட மாத்திரத்தில் ஒட்டிக் கொள்கிறது.அட்ரா அவளை என்றதும் நம்முள் உருவாகும் ஒரு விதமான உண்ர்வு இருக்கிறதே அட்டகாசம். இம்மாதிரியான விஷயங்கள்தான் செல்வாவை மற்ற இயக்குனர்களிடமிருந்து விலகிப் எதிர்பார்க்க வைகிறது. மயக்கம் என்ன?
“வாகை சூடவா” படத்தில் வரும் “சரசர சாரக்காத்து “ என்கிற இந்தப் பாடல் செம க்யூட். ரொம்பவும் சிம்பிளான ஆர்கஸ்ட்ரேஷன். அற்புதமான ஒளிப்பதிவு. முக்கியமாய் கதாநாயகியின் சின்னச் சின்ன ரியாக்ஷன்கள். படத்தில் இவருக்கு டப்பிங் கொடுத்தவரின் குரல் மயக்குகிறது. படத்திலிருக்கும் சிற்சில சுவாரஸ்யங்களில் இந்த பாடலும் ஒன்று.
ஏழாம் அறிவு படப் பாடலுக்கான எதிர்பார்ப்பு சொதப்பிவிட்டது. ஏற்கனவே ரஹ்மானின் இசையில் வெளிவந்த “டாக்ஸி.. டாக்ஸியை” மீண்டும் ஏன் “ரிங்கா...ரிங்கா”வாக கேட்க வேண்டும். ஒரு பழைய காலத்து ட்யூனில் எஸ்.பி.பி. பாடும் அந்த ‘யம்மா..யாம்மா” மட்டும் கொஞ்சமே தேவலாம். மொத்தத்தில் ஏழாம் அறிவு பாடல்கள் படத்திற்கு மைனஸாகி விட்டது என்றே சொல்ல வேண்டும்.
######################################ஏழாம் அறிவு படப் பாடலுக்கான எதிர்பார்ப்பு சொதப்பிவிட்டது. ஏற்கனவே ரஹ்மானின் இசையில் வெளிவந்த “டாக்ஸி.. டாக்ஸியை” மீண்டும் ஏன் “ரிங்கா...ரிங்கா”வாக கேட்க வேண்டும். ஒரு பழைய காலத்து ட்யூனில் எஸ்.பி.பி. பாடும் அந்த ‘யம்மா..யாம்மா” மட்டும் கொஞ்சமே தேவலாம். மொத்தத்தில் ஏழாம் அறிவு பாடல்கள் படத்திற்கு மைனஸாகி விட்டது என்றே சொல்ல வேண்டும்.
தினமும் ஒரு மணி நேரம் சென்னையில் மின்வெட்டுகிறார்கள். நமக்கு எவ்வளவோ பரவாயில்லை கோவையில் தினமும் சுமார் ஐந்திலிருந்து ஆறு மணி நேரம் வகை தொகையில்லாமல் போகிறதாம். சென்ற ஆட்சியின் வீழ்ச்சிக்கு ஒரு முக்கிய காரணம் இந்த மின்வெட்டுத்தான். அதைச் சொல்லித்தான் இந்த ஆட்சியை பிடித்தது ஆளும்கட்சி. உள்ளாட்சி தேர்தல் வர இருக்கும் இந்த நேரத்தில் கூட சரிகட்ட முடியாத அளவிற்கு மின்சார ப்ரச்சனையிருக்க, எனக்கொண்ணு தோன்றியது. ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் கவலை நமக்குத்தான் போலருக்கு.ம்ஹும்.*நேத்து ராத்திரி நான் எழுதினதுக்கு உடனடியாய் பதில் சொன்ன சி.எம்முக்கு நன்றி.:))
#######################################
தமிழ் சினிமா ரசிகர்கள், அதிலும் பதிவுலகில் இருப்பவர்களில் சில தீவிரவாதிகள் இருக்கிறார்கள். என்னுடய சில விமர்சனங்களை முழுதும் படிக்காமல் கடைசி பஞ்ச் வரிகளை மட்டுமே படித்துவிட்டு காச்மூச்சென கத்துவது. எனக்கும் அந்த பட இயக்குனருக்கும் ஏதோ வாய்க்கால் தகராறு என்பது போல இவர்களாகவே நினைத்துக் கொண்டு பின்னூட்டமிடுபவர்களை பார்த்தால் எனக்கு பாவமாய் இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை சினிமா என்பது இரண்டு மணி நேரம் என்னை அதில் உள்ள நிறை குறைகளை மீறி என்னை ஆக்கிரமிக்க வேண்டும். அப்படி ஆக்கிரமிக்கவில்லையென்றால் தான் அதில் உள்ள குறைகள் கண் முன் தெரிய ஆரம்பிக்கும்.
######################################
காதலிக்கும் போது நதிமூலம் பாக்குறவனும், கல்யாணத்தின் போது ரிஷிமூலம் பாக்குறவனும் நல்லா இருந்ததா சரித்திரமே கிடையாது.
The most selfish 1 letter word is "I" Avoid it. The most Satisfying 2 letter word "we" use it. The most poisonous 3 Letter word is "Ego" kill it. The most used 4 Letter word is "love" value it. The Most pleasing 5 letter word is "SMILE" Keep it. The Fastest spreading 6 letter word is "RUMOUR" ignore it . The hardest working 7 letter word "success" Achieve it. The most enviable 8 letter word "JEALOUSY" Distance it. The most Powerful 9 letter word "KNOWLEDGE" Acquire it.
நம்பிக்கை எனும் கனவுதான் மனிதனின் விழித்து கொண்டிருப்பதற்கான காரணம்.
சில சமயம் நாம் கசப்பான காபபியின் கடைசி சொட்டு வரை குடித்தபின், அடியில் சர்க்கரை இருக்கும் அதுதான் வாழ்க்கை. நம் வாழ்வில்சந்தோஷம் எனும் சர்க்கரை இருக்கத்தான் செய்கிறது, நாம் தான் சரியாக கலக்கிக் கொள்வதில்லை.
#######################################################
ப்ளாஷ்பேக்
கமல், எஸ்.பி.பி காம்பினேஷன் எப்போதுமே ஹிட் காம்பினேஷன் தான். அது இந்தியிலும் தொடர்தது தான் ஆச்சர்யம். சாகர் படத்தில் எஸ்.பி.பி, கமல் ராக்ஸ். ஆனால் என்ன பாடி என்ன இந்த இந்திக்காரர்களுக்கு நம்ம ஆட்களை ஹீரோயின்களைத் தவிர யாரையும் பிடிக்காதே.. ம்ஹும். ஒன் ஆப் த பெஸ்ட் ஃப்ரம் கமல்- எஸ்.பி.பி. காம்போ.
#########################################################
ஒரு வாரமாய் நான் கொஞ்சம் பிஸி. பிரபல இயக்குனர் ஒருவர் விரைவில் பிரபல நடிகர்களை வைத்து இயக்கப் போகும் அட்டகாசமான காமெடி திரைப்படத்துக்கு வசன உதவி செய்ய பணிக்கப்பட்டு பயணித்துக் கொண்டிருக்கிறேன். படத்தை பற்றிய செய்திகள் விரைவில்.
########################################
யுடான்ஸின் இன்னொரு அங்கமான யுடான்ஸ் டிவிக்கு நீங்கள் அளித்துக் கொண்டிருக்கும் வரவேற்ப்புக்கு எப்படி நன்றி கூறுவது என்றே தெரியவில்லை. நேற்று யுடான்ஸ் டிவி நேயர்களுக்காக பிரத்யோகமாய் எழுத்தாளர் கங்கை மகன் அவர்களுடனான உரையாடலை நேரடியாக ஆடியோவில் யுடான்ஸில் ஒலிபரப்பினோம். அதை கேட்க விரும்புகிறவர்கள் www.udanz.com மூலமாகவோ.. அல்லது www.tv.udanz.comல் போய் நேரடி ஒளிபரப்பு என்கிற தலைப்பின் கீழ் இருக்கும் ஆடியோ விட்ஜெட்டில் ப்ளே பட்டனை அழுத்தினால் நேற்றைய ஒலிபரப்பை கேட்க முடியும். கேட்டு விட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.
##########################################
போன வாரம் ஜாக்கி என்னைப் பற்றி தமிழ்மணத்தில் திட்டி எழுதியதாக சிலர் லிங்க் அனுப்பியிருந்தார்கள்.அது ஒரு போலி பின்னூட்டம். இவர்களுக்கு என்ன ப்ரச்சனை என்று தெரியவில்லை தேவையில்லாம எங்களுக்குள் ப்ரச்சனை உண்டு பண்ண வேண்டுமென்று நினைக்கிறார்கள். உங்களுக்கு ஒரு விஷயம் சொல்கிறேன். நாங்கள் இருவரும் சண்டைப் போட்டுக் கொள்ள வேண்டுமென்றால் நேரிலோ, அல்லது தொலைபேசியிலோ நாங்களே நேரடியாய் போட்டுக் கொள்வோம். பாவம் உங்கள் பொன்னான நேரத்தை வீணடிக்காதீர்கள். ஜாக்கியும் அவர்களை பார்த்தால் பாவமாய் இருக்கிறது என்றான் இதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது போனில்.
###########################################
மேக்கிங் ஆப் த வீக்குரு படத்தில் வரும் இந்த இடைவேளை காட்சி எனக்கு மிகவும் பிடிக்கும். மிகச் சாதாரணமாய் ஆரம்பிக்கும் காட்சி மெல்ல, அட்ரிலின் பம்ப செய்யப்பட்டதை போல எகிறி வெடிக்கும். இந்த காட்சியில் வசனம், நடிப்பு போன்றவையை விட, வைக்கப்பட்ட ஷாட்டுக்களும், எடிட்டிங்கும் தான் என்னை கட்டிப் போட்டது. ஒரு இயக்குனரின் முழு ஆளுமை இந்த காட்சியில் இருக்கிறது.
######################################
காதலிக்கும் போது நதிமூலம் பாக்குறவனும், கல்யாணத்தின் போது ரிஷிமூலம் பாக்குறவனும் நல்லா இருந்ததா சரித்திரமே கிடையாது.
The most selfish 1 letter word is "I" Avoid it. The most Satisfying 2 letter word "we" use it. The most poisonous 3 Letter word is "Ego" kill it. The most used 4 Letter word is "love" value it. The Most pleasing 5 letter word is "SMILE" Keep it. The Fastest spreading 6 letter word is "RUMOUR" ignore it . The hardest working 7 letter word "success" Achieve it. The most enviable 8 letter word "JEALOUSY" Distance it. The most Powerful 9 letter word "KNOWLEDGE" Acquire it.
நம்பிக்கை எனும் கனவுதான் மனிதனின் விழித்து கொண்டிருப்பதற்கான காரணம்.
சில சமயம் நாம் கசப்பான காபபியின் கடைசி சொட்டு வரை குடித்தபின், அடியில் சர்க்கரை இருக்கும் அதுதான் வாழ்க்கை. நம் வாழ்வில்சந்தோஷம் எனும் சர்க்கரை இருக்கத்தான் செய்கிறது, நாம் தான் சரியாக கலக்கிக் கொள்வதில்லை.
#######################################################
ப்ளாஷ்பேக்
கமல், எஸ்.பி.பி காம்பினேஷன் எப்போதுமே ஹிட் காம்பினேஷன் தான். அது இந்தியிலும் தொடர்தது தான் ஆச்சர்யம். சாகர் படத்தில் எஸ்.பி.பி, கமல் ராக்ஸ். ஆனால் என்ன பாடி என்ன இந்த இந்திக்காரர்களுக்கு நம்ம ஆட்களை ஹீரோயின்களைத் தவிர யாரையும் பிடிக்காதே.. ம்ஹும். ஒன் ஆப் த பெஸ்ட் ஃப்ரம் கமல்- எஸ்.பி.பி. காம்போ.
வெடி படத்தை பற்றி எழுதவில்லை என்று பல பேர் கேட்கிறார்கள். சில படங்களை பார்க்காமலேயே வெடி- கடி, போன்ற பஞ்ச் லைனை சொல்லிவிடலாம். அப்படிப்பட்ட ஒரு படம் தான். வெடி. எற்கனவே தெலுங்கில் சவுரியமாய் பட்ட காயமே இன்னும் ஆறவில்லை. அதனால் இந்த வெடி வேண்டாம் என்று இருந்துவிட்டேன். நான் எஸ்கேப்.
########################################ஒரு வாரமாய் நான் கொஞ்சம் பிஸி. பிரபல இயக்குனர் ஒருவர் விரைவில் பிரபல நடிகர்களை வைத்து இயக்கப் போகும் அட்டகாசமான காமெடி திரைப்படத்துக்கு வசன உதவி செய்ய பணிக்கப்பட்டு பயணித்துக் கொண்டிருக்கிறேன். படத்தை பற்றிய செய்திகள் விரைவில்.
########################################
யுடான்ஸின் இன்னொரு அங்கமான யுடான்ஸ் டிவிக்கு நீங்கள் அளித்துக் கொண்டிருக்கும் வரவேற்ப்புக்கு எப்படி நன்றி கூறுவது என்றே தெரியவில்லை. நேற்று யுடான்ஸ் டிவி நேயர்களுக்காக பிரத்யோகமாய் எழுத்தாளர் கங்கை மகன் அவர்களுடனான உரையாடலை நேரடியாக ஆடியோவில் யுடான்ஸில் ஒலிபரப்பினோம். அதை கேட்க விரும்புகிறவர்கள் www.udanz.com மூலமாகவோ.. அல்லது www.tv.udanz.comல் போய் நேரடி ஒளிபரப்பு என்கிற தலைப்பின் கீழ் இருக்கும் ஆடியோ விட்ஜெட்டில் ப்ளே பட்டனை அழுத்தினால் நேற்றைய ஒலிபரப்பை கேட்க முடியும். கேட்டு விட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.
##########################################
போன வாரம் ஜாக்கி என்னைப் பற்றி தமிழ்மணத்தில் திட்டி எழுதியதாக சிலர் லிங்க் அனுப்பியிருந்தார்கள்.அது ஒரு போலி பின்னூட்டம். இவர்களுக்கு என்ன ப்ரச்சனை என்று தெரியவில்லை தேவையில்லாம எங்களுக்குள் ப்ரச்சனை உண்டு பண்ண வேண்டுமென்று நினைக்கிறார்கள். உங்களுக்கு ஒரு விஷயம் சொல்கிறேன். நாங்கள் இருவரும் சண்டைப் போட்டுக் கொள்ள வேண்டுமென்றால் நேரிலோ, அல்லது தொலைபேசியிலோ நாங்களே நேரடியாய் போட்டுக் கொள்வோம். பாவம் உங்கள் பொன்னான நேரத்தை வீணடிக்காதீர்கள். ஜாக்கியும் அவர்களை பார்த்தால் பாவமாய் இருக்கிறது என்றான் இதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது போனில்.
###########################################
மேக்கிங் ஆப் த வீக்குரு படத்தில் வரும் இந்த இடைவேளை காட்சி எனக்கு மிகவும் பிடிக்கும். மிகச் சாதாரணமாய் ஆரம்பிக்கும் காட்சி மெல்ல, அட்ரிலின் பம்ப செய்யப்பட்டதை போல எகிறி வெடிக்கும். இந்த காட்சியில் வசனம், நடிப்பு போன்றவையை விட, வைக்கப்பட்ட ஷாட்டுக்களும், எடிட்டிங்கும் தான் என்னை கட்டிப் போட்டது. ஒரு இயக்குனரின் முழு ஆளுமை இந்த காட்சியில் இருக்கிறது.
###########################################
அடல்ட் கார்னர்
கணவன்: ஒரு விஷயத்தை சொன்னா அதைக் கேட்டு எனக்கு கோபமும் வரணும் பெருமையாவும் இருக்கணும் அது போல ஒண்ணைச் சொல்லு பாப்போம்.
மனைவி: உங்க தம்பிய லுல்லாவை விட உங்களோட லுல்லா பெரிசு.
அடல்ட் கார்னர்
கணவன்: ஒரு விஷயத்தை சொன்னா அதைக் கேட்டு எனக்கு கோபமும் வரணும் பெருமையாவும் இருக்கணும் அது போல ஒண்ணைச் சொல்லு பாப்போம்.
மனைவி: உங்க தம்பிய லுல்லாவை விட உங்களோட லுல்லா பெரிசு.
########################################
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்Post a Comment
20 comments:
vada
&
batta jilebi
புதிய நகைச்சுவை திரைபடத்திற்கு வாழ்த்துகள்....
எப்பவும் போல கொத்து அருமை !!!!
KOtthu KAARAM kammi
கேபிள் சார், புதிய முயற்சிகளில் வெற்றி பெற வாழ்த்துக்கள்...
//அதனால் இந்த வெடி வேண்டாம் என்று இருந்துவிட்டேன். நான் எஸ்கேப்.//
சார். நீங்க பாக்காத மொக்கைப்படமா...
யாரோ ஒருத்தர் எனக்கு மைனஸ் ஓட்டு போட்டுருக்காரு.. என்னை கலாய்க்கிறாராமாம்..?:))))
//பிரபல இயக்குனர் ஒருவர் விரைவில் பிரபல நடிகர்களை வைத்து இயக்கப் போகும் அட்டகாசமான காமெடி திரைப்படத்துக்கு வசன உதவி செய்ய பணிக்கப்பட்டு பயணித்துக் கொண்டிருக்கிறேன். ////
Is it Sundhar.C movie??
Anyhow, Congtrazzz!!
குரு படம் முழுவதுமே அருமை... இந்த மாதிரி ஒரு கதை அம்சத்தை தொட்டு சொல்ல ஒரு தைரியம் வேண்டும்... என்ன தான் பெரிய பெயர் இருந்தாலும்..
//ஒரு வாரமாய் நான் கொஞ்சம் பிஸி. பிரபல இயக்குனர் ஒருவர் விரைவில் பிரபல நடிகர்களை வைத்து இயக்கப் போகும் அட்டகாசமான காமெடி திரைப்படத்துக்கு வசன உதவி செய்ய பணிக்கப்பட்டு பயணித்துக் கொண்டிருக்கிறேன். படத்தை பற்றிய செய்திகள் விரைவில்.// வாழ்த்துகள், தல..
#### பகுதி வாரியான கருத்துரை ####
***செவிக்கினிமை***
மயக்கம் என்ன பாடல்கள் கேட்டவுடனேயே பிடித்திருந்ததில் ஆச்சரியமில்லை. காரணம் யதார்த்தமான ட்யூன்கள். ஏழாம் அறிவு கிளப்பிய ஹைப்புக்கு பாடல்கள் புஸ். "முன் அந்தி" மட்டும் கொஞ்சமே கொஞ்சம் பரவாயில்லை. வாகை சூடவா பாட்டு இன்னும் கேட்கவில்லை.
***மின்வெட்டு***
பழைய குருடி, கதவ திறடி கததான்.இவுங்களுக்கும் தாத்தாவுக்கும் ஒண்ணும் பெரிய வித்தியாசமில்ல. எல்லாம் ஒரே குட்டைல ஊறின மட்டை தானே..
***விமர்சனம்***
நான் ஏற்கனவே உங்ககிட்ட சொன்னதுதான். பக்குவமில்லா மனங்களின் வெளிப்பாடுதான் அது. கொஞ்சம் தலை தூக்கினா தட்டிடுங்க, தப்பே இல்ல.
***தத்துவங்கள்***
எதுக்குமே நதிமூலம், ரிஷிமூலம் பாத்தா அப்படித்தான். Can't help it:)
மற்றவையும் நல்ல தத்துவங்களே.
***ஃபிளாஷ்பேக்***
கமல்-பாலு காம்பினேஷன் இன்று நேற்றல்ல. என்றுமே இனிமை. அதிலும் "ஒமாரியா" பாடலில் அது தனித்துத் தெரியும். கமலுக்கு தெலுங்கு டப்பிங்கிலும் பாலுவின் குரலே டாப்.
***யுடான்ஸ்***
யுடான்ஸ் களை கட்டிவிட்டது. கலக்குங்க. எனது மன்மார்ந்த வாழ்த்துகள். என்னாலான தொழில்நுட்ப உதவிகளை செய்ய எப்பொழுதும் காத்துக் கொண்டிருக்கின்றேன்.
***வெடி***
வெடி - காமெடி
***நட்பு***
உங்களுக்கும் ஜாக்கிகும் இடையில் சிண்டு முடிய முயன்ற அந்த மஞ்ச மாக்கானுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். Betta luck next time, dumbo.
உங்கள் இருவரின் நட்பும், நல்ல புரிதலும் என்றும் தொடர நல்வாழ்த்துகள்.
***மேக்கிங் ஆஃப் த வீக்***
குரு என்றுமே நான் ரசிக்கும் படங்களில் ஒன்று. திருபாய் குருபாய் ஆனதும் சரி, அவர் சாதாரணனிலிருந்து சாம்ராஜ்யனாய் ஆனதும் சரி, மேக்கிங்கில் மணி கலக்கியிருப்பார். மாதவனுக்கு இந்தப் படத்தில நல்ல ரோல். தமிழில் ஜூனியர் பச்சனுக்கு சூர்யாவின் டப்பிங் நேர்த்தி.
***அடல்ட் கார்னர்***
நிச்சயா ச்சே ரகம் இல்லை. ரசிக்கும்படியாகவே இருந்த்து.
//பக்குவமில்லா மனங்களின் வெளிப்பாடுதான் அது.
:))
The quote you mentioned on 1 to 9 letter-words is quite interesting. However, I heard the same quote differently. Here it is: "The six most important words are: I ADMIT I MADE A MISTAKE. The five most important words are: YOU DID A GOOD JOB. The four most important words are: WHAT IS YOUR OPINION? The three most important words are: IF YOU PLEASE. The two most important words are: THANK YOU. The least important word is: I".
உங்களின் புதிய ப்ராஜக்ட்டிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
கொத்து அருமை,வெடி போன்ற படங்கள் யாரை நம்பி எடுக்கப்படுகின்றன?
பாடல்கள் இனிமை...கமல் - எஸ்பிபி காம்பினேஷன் சூப்பர்.
புது படத்திற்கு வாழ்த்துக்கள்...
-அருண்-
என்னா தல...
சுமாரா கொத்தீருக்கீங்க...
கொத்து கலக்கல் பாஸ்.... கடைசி மேட்டர் ஹீ ஹீ
இந்த படத்துக்கு எங்க கேபிள் சார் தான் வசனம் எழுதுனாருனு பெருமையா சொல்லிக்குலாம்ல...
//ஜாக்கியும் அவர்களை பார்தால் பாவமாய் இருக்கிறது என்றான்//
ஜாக்கிக்கு பேசும்போது கூட ஸ்பெல்லிங் மிஸ்டேக் வருமா இல்லை அவரைப் பற்றி எழுதினாலே ஸ்பெல்லிங் மிஸ்டேக் வருமா?
#டபுள் டவுட்#
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
@Ezhil Ra a.k.a எழில் ரா a.k.a: அடடடடா அப்பப்பா......(ஜிங்...ஜிங்)
சூப்பர் கொத்து.......
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com
Post a Comment