எண்டர் கவிதைகள் -20
பால்கனியின் ஜன்னலை
பூட்டுப் போட்டு வைத்திருக்கிறேன்
எதிர்வீட்டு இளைஞனோடு
அவள் ஓடாதிருக்க
பூட்டிற்கு வெளியே தெரு
விளக்கொன்று மினுக்கி
மினுக்கி எறிகின்றது
இருட்டினிலிருந்து பார்த்தாலும்
வெளிச்சம் மின்னத்தான் செய்கிறது
அவளுக்கு அவன் சிகரெட் முனையும்
அவனுக்கு அவள் மூக்குத்தி ஒளியும்
உடைகளை களைந்து பூட்டி வைத்தேன்
இருட்டில் நிர்வாணம் பொருட்டல்ல
மனமே பிரதானமென்று
பூட்டியும் பிரயோஜனமில்லை
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
Comments
உனக்கு பொறாமை.. நம்மாள இப்படி எழுத முடியலையேன்னு..?)
வெளிச்சம் மின்னத்தான் செய்கிறது//
பூட்டியும் பிரயோஜனமில்லை//
திக்கற்றவர்களுக்கு எண்ட்டரே துணை!
தொடர்ந்து எழுதுங்கள்......
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com
கவித இன்னும் 'முடியல ', அடுத்து என்ன நடந்துச்சுன்னு ஆர்வமா கேட்குராருங்கோ!
(தமிழே மறந்துடுச்சுங்கோ)
வள்ளுவர் கேள்வி!
புலவர் சா இராமாநுசம்