Thottal Thodarum

Oct 24, 2011

கொத்து பரோட்டா -24/10/11

தமிழ் சினிமா என்கிற பொன் முட்டையிடும் வாத்தை விநியோகஸ்தர்களும், தியேட்டர் அதிபர்களும் அறுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே நான் நிறைய முறை டிக்கெட் கட்டணங்களை நியாய விலைக்கு விற்பனை செய்ய வேண்டிய தேவை என்ன? என்பதைப் பற்றி எழுதியிருக்கிறேன். சென்ற ஆட்சியில் தான அவர்கள் குடும்பம் வியாபாரம் செய்தது அதற்கு ஆதரவு தெரிவித்தார்கள் என்று கூறினார்கள். இந்த ஆட்சியில் வரிவிலக்கை ஆல்மோஸ்ட் ரத்து செய்து, வரியை டபுளாக்கியதை தவிர வேறேதும் இல்லை. ஆனால் அந்த வரி அரசுக்கு செல்லுமா? என்றால் அது இல்லை. ஒவ்வொரு தியேட்டரும் 120யிலிருந்து 300 ரூபாய் வரை மக்களிடம் கொள்ளையடிக்கிறார்கள். பல தியேட்டர்களில் அந்த விலை வைக்க அரசாணையே கிடையாது. கேட்டால் வாய் மொழி உத்தரவு என்கிறார்கள். சில மல்ட்டிப்ளெக்ஸ் திரையரங்கத்தில் டிக்கெட்டுடன் சாப்பாட்டை கட்டாயம் வாங்கியே ஆகவேண்டிய நிலைக்கு ரசிகர்களை தள்ளுகிறார்கள். நிஜத்தில் கடைசியாய் நம் அரசாணைப் படி ஒவ்வொரு தியேட்டரும் வாங்க வேண்டிய டிக்கெட் விலை என்ன தெரியுமா? http://www.tn.gov.in/stationeryprinting/gazette/2009/22-III-1(a).pdf கீழே கொடுக்கப்பட்டுள்ள விலையில் தொழில் நடத்த முடியுமா? என்று கேட்பவர்களுக்கு ஆந்திராவில் இன்றைக்கும் ஒரு ஏசி, டி.டி.எஸ் தியேட்டரில் பால்கனி டிக்கெட் 50 ரூபாய்க்கு பார்க்க முடியும். ப்ரசாத போன்ற மல்ட்டிப்ளெக்ஸில் 70-80 ரூபாயில் படம் பார்க்க முடியும். சமீபத்தில் புத்தூரில் ஒரு தெலுங்கு படம் பார்க்க போனேன். அங்கு டிக்கெட் விலை வெறும் 35 ரூபாய்தான்.
Maximum rates as detailed below:—
Rates of Admission             A/c Theatre           Non A/c Theatre
Municipal Corporation:
Minimum                                         Rs. 10/-               Rs. 7/-
Maximum                                         Rs. 50/-             Rs. 30/-
Municipalities:
Minimum                                             Rs. 5/-             Rs. 4/-
Maximum                                          Rs. 40/-             Rs. 30/-
Town Panchayats:
Minimum                                                Rs. 5/           - Rs. 4/-
Maximum                                               Rs. 25/-         Rs. 20/-
Village Panchayats:
Minimum                                               Rs. 5/-            Rs. 4/-
Maximum                                              Rs. 15/-          Rs. 10/-
################################################

எஸ்.சி.வியின் ஆதிக்கத்தை அடக்குவதற்காக ஆரம்பிக்கப்பட்டதாக சொல்லப்படும் அரசு கேபிள் வெற்றியா இல்லையா என்ற குழப்பம் எல்லா இடத்திலும் இன்னமும் இருக்கத்தான் செய்கிறது. இன்னும் நிறைய ஊர்களில் பழைய எம்.எஸ்.ஓக்களே கண்ட்ரோல் ரூம் வைத்திருக்கிறார்கள். இன்று வரை அரசு கேபிளில் சன் குழும சேனல்கள் இடம் பெறவில்லை என்றாலும் எல்லா ஊர்களிலும் சன் டிவி தெரிந்து கொண்டுதானிருக்கிறது. பைரஸி சிக்னல்களைத்தான் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். சன்னை காட்டக்கூடாது என்று சொன்னால் அரசு கேபிளின் நிலை மோசமாகி விடும் என்பதால் அவர்களும் ஆப்பரேட்டர்கள் பைரஸியில் ஓட்டுவதை கண்டு கொள்ளவில்லை. பைரஸியை பற்றிய பேச்சை எடுத்தால் சேனலின் இருப்பு ப்ரச்சனையாகிவிடும் நிதி தரப்பு அமுக்கி வாசிக்கிறார்கள். இந்நிலையில் தமிழில் மேலும் இரண்டு நியூஸ் சேனல்களும், இரண்டு மியூசிக் சேனலும், இன்னும் சில வடநாட்டு கார்பரேட் சேனல்களின் தமிழ் வர்ஷன்களும் வரவிருக்கின்றன. வெயிட் அண்ட் சீ.
#############################################
விரைவில் வெளிவர இருக்கும் தன்னுடய புதிய நாவலான “எக்ஸைல்” குறைந்த பட்சம் 50,000 பிரதிகளிலிருந்து ஒரு லட்சம் பிரதிகள் விற்பனையாகும் என்று எழுத்தாளர் சாருநிவேதிதா சொல்லியிருக்கிறார். அது பற்றி ஆளாளுக்கு க்ரிட்டிக்கலாய் பல விதமாய் சொன்னாலும், நல்ல மார்க்கெட்டிங்கும், ப்ரோமோஷனும் இருந்தால் நிச்சயம் அவர் அசைப்பட்டத்தில் கால்வாசியாவது ரீச் செய்துவிட முடியுமென்பது என் எண்ணம். எதை வைத்து சொல்கிறேன் என்றால் என்னுடய முதல் சிறுகதை தொகுப்பான “லெமன் ட்ரீயும்.. ரெண்டு ஷாட் டக்கீலாவும்” புத்தகம் வெளியான ஒரு வருடத்தில் முதல் பதிப்பான 500 பிரதிகள் விறறு இரண்டாம் பதிப்பும், இரண்டாவது புத்தகமான சினிமா வியாபாரம் வெளியான ஒரே மாதத்தில் முதல் ஐந்நூறு பிரதிகள் விற்றதும், மேலும் சில ஆயிரம் பிரதிகள் விற்றிருப்பதும், என்னுடய முதல் குறுநாவலான “மீண்டும் ஒரு காதல் கதை” நன்றாக விற்றுக் கொண்டிருப்பதையும் வைத்து சொல்கிறேன்.  இலக்கியத்தைப் பற்றி ஏதும் அறியாத என் புத்தகங்களே விற்கும் போது. தமிழில் உள்ள சிறந்த எழுத்தாளர்களில் ஒருவராக விளங்கும் சாருநிவேதிதாவின் புத்தகம் நிச்சயம் விற்கும் என்பது என் எண்ணம்.
##################################################
சேத்தன் பகத்தின் “Revolution2020" வெளியான நாள் அன்றே அரை மில்லியன் காப்பிக்கள் விற்றிருப்பது வைத்துப் பார்க்கும் போது சேத்தன் பகத்தை இந்திய பல்ப் உலகின் மன்னன் என்று தான் சொல்வதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். இவரது கால்செண்டர் நாவலை படித்து விட்டு எல்லா நாவல்களையும் வாங்கிப் படித்தேன். மிக சுவாரஸ்யமாய், பெரிய உலக இலக்கியமெல்லாம் எழுதுகிறேன் என்று டிக்‌ஷனரியை வைத்து படிக்க வைக்காமல் சுலப ஆங்கிலத்தில் நம்மை அதனுள் கலக்க வைப்பவர். இவரது ரெவ்வல்யூஷன் 2020 புத்தகத்தை வாங்கிப் படித்துவிட்டேன். அதன் விமர்சனம் விரைவில்.
 ############################################
சென்ற வாரம் ஒரு பெரிய இயக்குனரின் படத்தில் நான் வேலை செய்வதாய் கிசுகிசு போல சொல்லியிருந்தேன். ஆனால் அது உலகறிந்த ரகசியம் என்பதை இரண்டு மூன்று இணையதளங்களில் செய்தியாய் வந்துபின் தான் தெரிந்தது.  அந்த இயக்குனர் சுந்தர்.சி. அவர் இயக்கப் போகும் ‘மசாலா கஃபே” என்கிற முழு நீள காமெடி படத்தில் இயக்குனர் பத்ரியோடு வசனமெழுதிக் கொண்டிருக்கிறேன். ஒரு அவுட் அண்ட் அவுட் காமெடியை நிச்சயம் எதிர்பார்க்கலாம். வாய்ப்பை நல்கிய இரண்டு இயக்குனர்களுக்கும் நன்றிகள் பல.
###################################################
நாம் தான் இங்கு வில்பர் சர்குணராஜைப் பற்றி காமெடியாய் கிண்டலடித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் மனுஷனுக்கு உலகமெல்லாம் பெரிய வரவேற்பு இருக்கிறது என்பதற்கு இந்த வீடியோவே ஒரு உதாரணம்.:))

###########################################
ப்ளாஷ்பேக்
ரவீந்தரன் மலையாள சினிமாவில் மிகப் பிரபலமான இசையமைப்பாளர். இவரது இசையில் வெளியான திரைப்பட பாடல்களின் ஹிட் வரிசை மிகப் பெரியது. இவர் எனக்கு தெரிந்து இசையமைத்த ஒரே தமிழ் படம் சத்யராஜ் நடித்த “ரசிகன் ஒரு ரசிகை” தான். ஜேசுதாஸின் மயக்கும் குரலில் அருமையான க்ளாசிக்கல் பாடல்களை கொண்ட படம். இப்படத்தில் வரும் இந்த இரண்டு பாடல்களும் அற்புதமான காம்போசிஷன்கள். 


##########################################
யுடான்ஸ் கார்னர்.
பதிவர்களுக்காக பதிவர்களால் நடத்தப்படும் யுடான்ஸ் திரட்டியின் சார்பாக  நிகழ்ந்து கொண்டிருக்கும் “சவால் சிறுகதை போட்டி"க்கான சிறுகதையை அனுப்ப இன்னும் எட்டு தினங்களே உள்ளது. உடன் உங்கள் சிறுகதைகளை எழுதி அனுப்புங்கள். இன்னுமொரு சிறப்பு செய்தி. போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கான யுடான்ஸ் தரும் மூவாயிரம் ரூபாய்க்கான புத்தக  பரிசை தவிர மேலும் சில சிறப்பு பரிசுகளை டிஸ்கவரி புக் பேலஸ் வழங்கவிருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
#########################################
தத்துவம்
If a girl in love her parents ask "who is that idiot?". If a boy in love. His parents ask "Idiot. who is that girl?" Moral: No matter whoever in love boyz are always IDIOTS

எப்போதும் நாம் இதனால் பாதிக்கப்பட்டுவிடுவோமோ? அதனால் பாதிக்கப்பட்டுவிடுவோமோ? என்று கற்பனை செய்தே பல சமயம் பயந்து கொண்டிருக்கிறோம். பல சமயங்களில் நிஜத்தை விட கற்பனைகளுக்கான வீரியம் குறைவு என்று புரியாமல்.
##############################################
அடல்ட் கார்னர்
சின்னபையன் செக்ஸ் எஜுகேஷன் க்ளாஸுக்கு போனான். அப்போது டீச்சர் போர்டில் லுல்லா படத்தை வரைந்து இது என்னன்னு தெரியுமா? என்று கேட்டார்கள். உடனே சின்னப்பையன் ஆர்வமா கையத் தூக்கினான். டீச்சர் அவனை என்னன்னு சொல்லச் சொன்னாங்க. சின்னப்பையன் “இதும் பேரு லுல்லா டீச்சர். என் அப்பாவுக்கு ரெண்டு இருக்குன்னான். டீச்சருக்கு ஆச்சர்யமா போயிருச்சு. அதெப்படின்னு கேட்க, சின்னப்பையன் சொன்னான் “ காலையில உச்சா போறதுக்கு சின்னதா ஒண்ணும், ராத்திரி அம்மா பல் தேய்க்க பெரிசா ஒண்ணும் வச்சிருக்காருன்னான்.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
டிஸ்கி: தொடர்ந்து தியேட்ட்ர்களில் அதிக விலை விற்பனை பற்றி எழுதிக் கொண்டிருக்கிறேன். அது மட்டுமில்லாமல் கேட்டால் கிடைக்கும் குழுமத்தின் மூலமாகவும் அரசு அதிகாரிகளுக்கு தெரியப்படுத்திக் கொண்டிருக்கிறோம். நேற்று கோவையில் கங்கா திரையரங்கத்தின் லைசென்ஸை அதிக விலைக்கு விற்றதாய் சொல்லி கேன்சல் செய்திருப்பதாய் தகவல் வந்திருக்கிறது. 

Post a Comment

23 comments:

Philosophy Prabhakaran said...

சாருவின் எக்சைல் புத்தகம் எத்தனை பக்கம், என்ன விலை என்று தெரிந்தால் சொல்லுங்களேன்...

andygarcia said...

காமெடி படத்துக்கு வசனம் எழுதறீங்க வாழ்த்துக்கள் !
அதுக்காக போறபோக்குல இப்படி "தமிழில் உள்ள சிறந்த எழுத்தாளர்களில் ஒருவராக விளங்கும் சாருநிவேதிதாவின் " அப்படீன்னு காமெடி பண்ணி வயிறு வலிக்க சிரிக்க வச்சுட்டீங்களே. ஓவர் சில்மிஷம்!

sugi said...

superb!Thank u...:)

sugi said...

Superb..Thank U :)

Unknown said...

அடல்ட் கார்னர் செம...

IlayaDhasan said...

உள்ளத்தை அள்ளித்தாவை விட காமெடி ஆக இருக்கும் என்று நம்புகிறோம். கலக்குங்கள் , வாழ்த்துக்கள்!

அடுத்தவனுக்கு உதவினால் தப்பா?

Jackiesekar said...

டிக்கெட் மேட்டரை விரிவா உரைப்பது போல எழுதி இருங்கிங்க...சம்பந்தபட்டவங்களுக்கு உரைக்குமா???

karuppu said...

Very bad, you just link the productions of others?!

ராஜ் said...

//ப்ரசாத போன்ற மல்ட்டிப்ளெக்ஸில் 70-80 ரூபாயில் படம் பார்க்க முடியும்//

இது ரொம்ப தப்பான தகவல். ப்ரசாதில் டிக்கெட் விலை 150/- I MAX விலை 250/-.வேறு மல்டிப்லேசிலும் இதே விலை தான்.

settaikkaran said...

இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்! :-)

SURYAJEEVA said...

சினிமா பக்கம் போய் நாளாச்சு,

சங்ககிரி ரமேஷ் said...

Got the following from the same link.

The maximum and minimum rates of admission to the theatres in the Multiplex having more than three theaters
with air-condition and with family entertainment and restaurant facilities shall be of Rs.120/- and Rs.10/- respectively

rajamelaiyur said...

//
ஸ்.சி.வியின் ஆதிக்கத்தை அடக்குவதற்காக ஆரம்பிக்கப்பட்டதாக சொல்லப்படும் அரசு கேபிள் வெற்றியா இல்லையா என்ற குழப்பம் எல்லா இடத்திலும் இன்னமும் இருக்கத்தான் செய்கிறது. ///

உண்மைதான்

rajamelaiyur said...

இன்று என் வலையில்

விஜய் Vs சூர்யா : ஜெய்க்கபோவது யார்?

P.K.K.BABU said...

RS 250/.FOR ONE TICKET AT A G S VILLIWAKKAM FOR SEVENTH SENSE. FROM 26.10.11.TO 31.10.11 (FREE COKE AND POPCORN)

Astrologer sathishkumar Erode said...

மசாலா கஃபே படம் பதிவர்களுக்கு சிறப்பு காட்சி உண்டா...? )) வாழ்த்துக்கள் சார்

Srinivas said...

SO..

DEVI CINEPLEX Theatre la Mattum dhaan...

MAXIMUM 95Rs and MINIMUM 10 RS Ticket Rate Follow pannraanga !!!!!!

'பரிவை' சே.குமார் said...

மசாலா கஃபேக்கு வாழ்த்துக்கள்.

விஜய் said...

"சென்ற ஆட்சியில் தான அவர்கள் குடும்பம் வியாபாரம் செய்தது அதற்கு ஆதரவு தெரிவித்தார்கள் என்று கூறினார்கள்."

இன்னும் எத்தனை முறைதான் இந்த வாசகத்தை சொல்வீர்களோ?
வேண்டுமானால் ஒரு நூறு முறை imposition போல எழுதிவிடுங்களேன்.

ராம்ஜி_யாஹூ said...

wishes for Masala cafe project

குடந்தை அன்புமணி said...

தாம்பரம், குரோம் பேட்டை தியேட்டர்களில் கவுண்டரில் காசுவாங்கிவிட்டு ரிசர்வேஷன் டிக்கெட்தான் குடுப்பார்கள். டிக்கெட் கிழிக்கும் இடத்தில் அந்த ரிசர்வேஷன் டிக்கெட்டை வாங்கிக்கொண்டு படத்திற்கான விலை குறைந்த டிக்கெட்டை குடுப்பார்கள்.

குடந்தை அன்புமணி said...

தங்களின் திரைத்துறை வளர்ச்சி விஸ்வரூபமெடுக்க வாழ்த்துகள். அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்...

A Simple Man said...

3rd para is superb comedy :-)