கொத்து பரோட்டா -31/10/11

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குதண்டனை விஷயத்தில் மத்திய அரசுதான் முடிவு எடுக்க வேண்டும். மாநில அரசால் ஒன்றும் செய்ய முடியாது என்று மம்மி சொல்லியிருப்பது ஒன்றும் ஆச்சர்யமேயில்லை. என்னை அவர்களை நம்பி.. ஆஹா ஓஹோவென காலில் விழாத குறையாய் துதி பாடியவர்களை பார்த்துத்தான் பாவ்மாய் இருக்கிறது. சட்டசபையில் தீர்மானமெலலாம் இயற்றினார்களே? என்று கேட்பவர்களுக்கு என்னா பாஸ் விளையாட்டுப் புள்ளைகளா இருக்கீங்களே? உள்ளாட்சி தேர்தலும் முடிஞ்சுருச்சு. இனி பாராளுமன்ற தேர்தலின் போதுதானே வந்து நிக்கணும். அப்ப பாத்துக்கலாம்.  அம்மா தன் இன்ப்ளூயன்ஸ் முழுக்க யூஸ் பண்ணி அவங்களை ரிலீஸ் பண்ணனும்னு சொல்லியிருக்காரு... தானைத் தலைவர். அம்மாவோட பதில் திருப்தி தரலையாம் டாக்டருக்கு. கேப்டன் ஒன்னியும் சொன்னாமேரி தெரியலை.
#############################


செவிக்கினிமை
பாட்டை கேட்க ஆரம்பித்த வினாடிகளில் பாடல்உங்களுக்கு பிடித்திருக்கிறதா? கேட்க, கேட்க ஒரு விதமான ட்ரான்ஸ் நிலையை அப்பாடலின் இசை உங்களை சுழற்றி, சுழற்றி அடித்திருக்கிறதா? அப்படிப்பட்ட உணர்வை எனக்கு கொடுத்தது ஏ.ஆர்.ரஹ்மானின் ராக்ஸ்டார் படப் பாடல்கள். முக்கியமாய் அந்த கவாலி பாடல்.. ஸ்பெல்பவுண்டிங். என்ன ஒரு ஹாண்டிங் ஆல்பம்.
######################################
தமிழ், தமிழ் என்று தமிழர்களின் உணர்வுகளை தூண்டிவிட்டால் வெற்றி நிச்சயம் என்று ஏழாம் அறிவுக்கு எழுதியதை வைத்து நிறைய பேர் கேள்வி கேட்டிருந்தார்கள். நீங்கள் மட்டும் இண்டி ப்ளாக்கர்கள் கூட்டத்தில் தமிழ் பதிவர்களுக்காக உணர்ச்சிவசப்படவில்லையா? எனறு. நான் கேட்டதற்கும், விமர்சனத்தில் எழுதியதற்கும் வித்யாசம் தெரியாதவர்களுக்கு என்ன சொன்னாலும் புரியப் போவதில்லை. இதே படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டிருக்கிறது. அந்த படத்தில் க்ளைமாக்ஸில் தமிழனை பற்றி பேசும் வசங்களில் எங்காவது தமிழ் பற்றியோ, தமிழர் பெருமையை பற்றியோ பேசியிருந்தால் நிஜமான தமிழ் உணர்வோடு எடுக்கப்பட்ட படம் என்று ஒத்துக் கொள்கிறேன். அங்கு மட்டும் இந்திய உணர்வையும், லேசான பிராந்திய உணர்வோடும் வசனம் பேசியிருக்கிறார்கள்.  மக்கள் மறந்த ஒரு தமிழனின் பெருமையை உலகுக்கு சொல்ல விழைகிறேன் என்று சொல்லும் போது, எந்த மொழியிலும் அந்த உணர்வை சரியாக சொல்லியிருக்க வேண்டும். அப்படியில்லாத எந்த ஒரு படைப்பும் போலியானதே.ஸோ.. விடு ஜூட்.
#################################################3


மேலே உள்ள இரண்டு படங்களும் நேற்று முன் தினம் தேவர் ஜயந்திக்காக பெயிண்ட் செய்யப்பட்ட நந்தனம் சிக்னல் போலீஸ் பூத். குழந்தை தொழிலாளர்களை அமர்த்துபவர்கள் மீது சட்டத்தை பிரயோகிக்கும் போலீஸாரின் பூத்தை பெயிண்ட் அடிக்கும் ஒரு சிறுவன். என்னத்தை சொல்ல..?
##############################
நான் ஒரு விஷயத்தை விமர்சனம் செய்யும் போது, அந்த விமர்சனத்துக்கான எதிர்வினையை எதிர்பார்த்துதான் எழுதுகிறேன்.அதனால் விமர்சனங்களை வரவேற்கிறேன். என் எழுத்துக்களை விமர்சிப்பவர்களை என் பதிவில் அனுமதிப்பவன். என் பின்னூட்டப் பெட்டியில் எதிர்வினைகள் மட்டுறுத்தப்படுவதில்லை என்பது வாசகர்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால் தரம் தாழ்ந்து, மனநிலை பிழன்றவர்களின் ஆபாச பின்னூட்டங்கள் என்னைப் படிக்கும் வாசகர்களை இம்சிக்கும் என்பதால் பின்னூட்ட மட்டுறுத்தல் வைத்திருக்கிறேன். என்னிடம் எதிர்வினை புரிய முடியாமல் இப்படி கீழ் தரமாக போகிறவர்களை பார்த்தால் எனக்கு ரோட்டில் திரியும் பைத்தியக்காரனின் மேல் வரும் பரிதாபம் தான் வருகிறது. எந்த காத்து கருப்பு அண்டிச்சோ....:)
###################################
தத்துவம்
The naked truth is always better than the dressed lie..


Never trust the promises of a man with an erection or the promises of a man who is drunk.


உங்கள் மனவோட்டத்தை பேச்சாக மாற்றும் கருவி எது என்று தெரியுமா? ஆல்கஹால்.


நீ எவ்வளவு தான் வேகமாக ஓடினாலும் சரியான ரோட்டில் ஓடவில்லையெனில் பிரயோஜனமில்லை. - ஜெர்மனிய பழமொழி
##################################


சமீபத்தில் கேட்ட, ரசித்த ஹிட் நம்பர்.




#####################################
ப்ளாஷ்பேக்
ராஜாவின் பல பாடலகள் சரியான படங்களில் அமையாமல் பெரிதாக அறியப்படாமல் போயிருக்கிறது. அப்படிப்பட்ட பாடல்களை கேட்கும் சந்தர்ப்பம் வரும்போது என்னா பாட்டுடா.. இது பெருசா ஹிட்டாகலையே என்ற ஆதங்கம் நம்முள் வரும். அப்படிப்பட்ட ஒரு பாடல் தான் இந்த பாடல். ரீதிகெளள ராகத்தின் அடிப்படையில் அமைந்த பாடல்.  பாடலின் பிஜிஎம்மில் வரும் வயலின் கம்போஷிசனைக் கேளுங்கள். உருக்கும். மொட்டை மொட்டைதாண்டா..
#######################################
யுடான்ஸ் கார்னர்.
இன்றுடன் ஆதி-தாமிராவுடன், யுடான்ஸ் இணைந்து நடத்தும் “சவால் சிறுகதை போட்டி”க்கான உங்கள் கதைகளை அனுப்ப கடைசி நாள்.  உடன் உங்கள் கதைகளை அனுப்பி போட்டியில் பங்கு பெற வேண்டுகிறோம்.
########################################
அடல்ட் கார்னர்
பெரிய பிஸினெஸ்மேன் ஒருவர் ப்ளைட்டில் அமர்ந்ததும் பக்கத்தில் ஒரு அழகிய பெண் இருப்பதை பார்த்தார். அவ்ள் செக்ஸுவல் ஸ்டாடிஸ்டிக் என்கிற புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தாள். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டார்கள். “இந்த புத்தகம் அருமையான புத்தகம் பல அறிய தகவல்களை கொண்டது. உலகிலேயே நீண்ட “லுல்லா” இந்தியனுக்கும், நல்ல பருத்த “லுல்லா” பாகிஸ்தானியர்களுக்கும் தான் இருக்கிறதாம். பை த பை என் பெயர் ரோஸி. .உங்கள் பெயர்?” என்று கேட்க, பிஸினெஸ்மேன் “சுரேஷ் ஹயத்துல்லா” என்றார்.
####################################
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
டிஸ்கி: வெளியூர் பயணமாய் ஒரு வாரம் செல்லவிருப்பதால். யாராவது மகானுபாவர்கள் திரட்டிகளில் சேர்த்து விடவும். அவர்களுக்கு என் சொத்தில் பாதியை ஏன் முழுவதையும் தருகிறேன்.:)

Comments

உங்க தொல்ல தாங்க முடியல, தூங்க போங்க சார்
shan said…
vazakkam pola super boss
ரோபோ.........ரோபோ....பல மொழிகள் கற்றாலும் என் அன்னை மொழி தமிழல்லவா....... என்று வரும் எந்திரன் தமிழ்பாடல் தெலுங்கில் அப்படியே தாய் பாஷை தெலுகு அல்லவான்னு வரும், 7 அறிவு படம் தெலுங்கில் வெளியாக்கி, தமிழ்நாட்டுப் பல்லவர்கள் தெலுங்கை தாய்மொழியாகப் பேசியவர்கள் என்று பிட்டுப் போட்டாப் போச்சு :)
IlayaDhasan said…
ஏதோ ஒரு கன்னடப் படத்தில பிரபு தேவாவோ வேற யார்ரோ தமிழ் வசனம் பேசுனதுக்கே தேட்ற
தீ வச்சி கொழுதிடான்கோ..இதுல தெலுகுல போயி தமிழன் புகழ் பாடினா சும்மா விற்றுவாயீன்களா...
ரியாலிட்டி அப்பிடின்னு ஒன்னு இருக்கு பாருங்க.. அதுவும் கோடில புரள்ற பிசினஸ் ,எடுத்தோம் கவிழ்தோமுன்னு
செய்யக் கூடிய விசயமா பாசு ....நமகுள்ளயாவது நம்மளப் பத்தி பெரும அடிச்சிகிட்டா தப்பே இல்ல ,இது என் தாழ்மையான
கருத்து.

நான் போட்ட சவால்
Unknown said…
//அவர்களுக்கு என் சொத்தில் பாதியை ஏன் முழுவதையும் தருகிறேன்.:)//

சொத்து மதிப்பு எவ்ளோ ?
"ஒரு தமிழனின் பெருமையை உலகுக்கு சொல்ல விழைகிறேன் என்று சொல்லும் போது, எந்த மொழியிலும் அந்த உணர்வை சரியாக சொல்லியிருக்க வேண்டும். அப்படியில்லாத எந்த ஒரு படைப்பும் போலியானதே "

well attack . . .
Unknown said…
Adult corner i awesome boss :D
thanks for the ARR Album Name ;)))

Hacking Tips and Tricks
CS. Mohan Kumar said…
Haunting, Soothing melody, Divine போன்ற வார்த்தைகளுக்கெல்லாம் பதிவுரிமை வாங்கிடுங்க
CS. Mohan Kumar said…
//அவர்களுக்கு என் சொத்தில் பாதியை ஏன் முழுவதையும் தருகிறேன்.:)//

இதுக்கு மட்டுமே நிறைய கமென்ட் வருமே !!
அருண் said…
சுவையான கொத்து பரோட்டா தயார்,இந்த மாதிரி ராஜாphto சார் பாட்டெல்லாம் எங்க பாஸ் தேடி பிடிக்குறிங்க?நெஜமாவே சூப்பர் சாங்! போட்டோ - இதயத்தில் கனம்.
-அருண்-
rajamelaiyur said…
அடல்ட் கார்னர் super
கொத்துப் பரோட்டா அருமை.
தமிழ் தமிழன் என்று பேசினால் செம்மறி ஆட்டுத் தமிழன் படத்தை வெற்றி பெற வைத்துவிடுவான் என்ற எண்ணம் அவர்களுக்கு சரியான பாடத்தைக் கொடுத்திருக்கும் என்று நினைக்கிறேன்.
ஏழாம் அறிவைப் பற்றிய உங்களது கருத்து மிகச் சரியானதே!தமிழ் என்ற உணர்வைத் தூண்டிவிட்டு இலாபம் அடைய நினைப்பது இன்றைக்கு நேற்றல்ல, நெடுங்காலமாகவே நடைமுறையில் உள்ளது.
ஒரு தமிழனின் பெருமையை உலகுக்கு சொல்ல விழைகிறேன் என்று சொல்லும் போது, எந்த மொழியிலும் அந்த உணர்வை சரியாக சொல்லியிருக்க வேண்டும். அப்படியில்லாத எந்த ஒரு படைப்பும் போலியானதே.ஸோ.. விடு ஜூட்.//

சும்மா நச்சின்னு சொல்லிட்டீங்க அண்ணே....!!!
குழந்தை தொழிலாளர்களை இது போல பயன்படுத்தும், அரசு துறைகளை கேட்க யாருக்கு தான் துநிவுள்ளது , இந்தமாதிரி பிளாக்குல போட்டாதான் உண்டு, சீக்கிரம் இந்த பிரச்னைக்கு ஒரு முடிவு வரணும்,
SURYAJEEVA said…
அந்த சிறுவன் வேலை செய்வது இன்னும் கண்ணில் நின்று கொண்டே இருக்கிறது
Cinema Virumbi said…
கேபிள் சார்,

ரா. ஒன். விமர்சனம் எப்போ? ஆவலுடன் காத்திருக்கிறோம்!

நன்றி!
சினிமா விரும்பி
http://cinemavirumbi.blogspot.com
ஐ எம் ஃப்ஸ்ட்
சரி, அந்த கோ படத்தில் ஒரு செல்போன் ரிங்டோன் வருமே அது ராஜா பாடல்தானே?
// இதே படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டிருக்கிறது. அந்த படத்தில் க்ளைமாக்ஸில் தமிழனை பற்றி பேசும் வசங்களில் எங்காவது தமிழ் பற்றியோ, தமிழர் பெருமையை பற்றியோ பேசியிருந்தால் நிஜமான தமிழ் உணர்வோடு எடுக்கப்பட்ட படம் என்று ஒத்துக் கொள்கிறேன். அங்கு மட்டும் இந்திய உணர்வையும், லேசான பிராந்திய உணர்வோடும் வசனம் பேசியிருக்கிறார்கள். //

இவர்கள் சமூக சேவைக்காக மட்டும் பட எடுக்கவில்லை போட்ட காசை மறுபடியும் எடுக்கவேண்டும் என்கிற பயத்துல அப்படி செய்து விட்டார்கள்.

வேண்டுமென்றால் நீங்கள் படத்தை தயாரிப்பதாக இருந்தால் நீங்கள் சொல்வது போல் படம் எடுக்கலாம்.

என்ன நீங்க தயாரா?

நாங்கள் அறிவுஜீகள் என்பதற்காக கூறப்படும் குற்றச்சாட்டுகள் சுயவிளம்பரத்திற்காக மட்டுமே.

Popular posts from this blog

100 போன்கால்களும், கெட்ட வார்த்தை மெசேஜுகளும்.

3 திருநங்கைகளும், 1 வடக்கனும் 100 போலீசும்

பேரைச் சொல்லவா? - மெய்யழகன் தருணங்கள்.