Thottal Thodarum

Oct 5, 2011

வீடியோ ப்ளாகிங் மற்றும் ஆடியோ பாட் காஸ்டிங். - உங்கள் யுடான்ஸ் டிவியில்.

வீடியோ ப்ளாகிங். உட்கார்ந்து எழுத யோசிக்கும் பலருக்கு இது வரப்பிரசாதம். கம்ப்யூட்டரில் இருக்கும் வெப்கேம், மொபைல் போன் கேமராக்கள், காம்கார்டர்கள், இருந்தால் போதும் ஒரு ஐந்து நிமிட வீடியோவில் நீங்கள் மனதில் நினைத்ததை பேசி வெளியிட்டு விடலாம். யுடான்ஸ் டிவி ஆரம்பித்தவுடன் இதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். இதற்கு முன்பே நம் பழம் பெரும் பதிவர் ஓசை செல்வா இணைய பேண்ட்வித், வீடியோ அப்லோடிங் சிரம்ங்கள் எல்லாம் இருந்த காலத்திலேயே சிறப்பான வீடியோ ப்ளாகிங் செய்தவர். இருந்தாலும் இன்றைய காலத்தில் எல்லாமே சுலபமாய் இருக்கும் வேளையில் ஏன் மீண்டும் நம் மக்களுக்கு அறிமுகப்படுத்தக்கூடாது என்று யோசித்ததில் வந்த எண்ணம்தான் இது. யுடான்ஸ் டிவியில் உங்கள் வீடியோ ப்ளாக்கிங்கை வெளியிடலாம்.

http://www.tv.udanz.com/2011/10/tamil-cinema-report-september-2011.html
என் வீடியோ ப்ளாகிங்கின் லிங்க் இது.
உங்கள் வீடியோவை எடுத்து யூட்யூபில் அப்லோட் செய்துவிட்டு, அந்த வீடியோவின் லிங்கை, udanztv@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பிவிட்டால் அங்கே உங்கள் வீடியோ ப்ளாக் வெளியிட்டு விடுவோம்.  அந்த பதிவின் லிங்கை உங்கள் பஸ்ஸிலோ, மின்னஞ்சலிலோ, டிவிட்டரிலோ யு.ஆர்.எல்லை கொடுத்துவிட்டால், வீடியோ ப்ளாகிங் செய்தது போலும் இருக்கும் பதிவு போட்டார் போலவும் இருக்கும். என்ன சொல்றீங்க. இது பற்றிய உங்கள் கருத்துக்களை எங்களுக்கு தெரிவியுங்கள்.

ஆடியோ நேரடி ஒலிபரப்பு
அதே சென்ற வாரம் அக்டோபர் 2 ஆம் தேதி நம் யுடான்ஸ் டிவியில் எழுத்தாளர் கங்கை மகன் அவர்கள் எழுதிய ஆத்மலயம் எனும் புத்தக விமர்சனக் கூட்டம் டிஸ்கவரி புக் பேலஸில் நடைப் பெற்றது. அந்நிகழ்ச்சியை  நேரடியாய் ஒலிப்பரப்பினோம்.

8/10/11 அன்று  மாலை எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய ”துயில்” நாவல் குறித்த கலந்தாய்வை டிஸ்கவரி புக் பேலஸிலிருந்து நேரடி ஆடியோ ஒலிபரப்பு செய்ய விருக்கிறோம். எஸ்.ரா கலந்து கொள்ளும் இந்த விழா நிகழ்வை உலகம் முழுவதும் இருக்கும் இலக்கிய ஆர்வலர்கள் கேட்டு மகிழலாம்.

6-10-11 அன்று ஈரோட்டிலிருந்து எழுத்தாளர், இயக்குனர் பாரதி கிருஷ்ணகுமார்  இயக்கிய ”எனக்கில்லையா கல்வி?” எனும் ஆவணப்பட அறிமுக விழாவை நேரடி ஒலிப்பரப்பு செய்யவிருக்கிறோம். பதிவர் அரிமா ஈரோடு கதிர் இதைப் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார். இந்த ஒலிபரப்புக்கு முக்கிய தொழில் நுட்ப உதவியை அமெரிக்காவிலிருந்து அளிக்கும் நண்பர் வீரராகவனுக்கும், இதற்கு ஏற்பாடு செய்த நண்பர் ஈரோடு கதிருக்கும், இயக்குனர் பாரதி கிருஷ்ணகுமாருக்கும், டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன் அவர்களுக்கும் யுடான்ஸ் டிவி சார்பாக நன்றிகள் பல.

மேலும் இது போன்ற பல புதிய முயற்சிகளை உங்கள் ஆதரவுடன் வெற்றிகரமாக பதிவர்களுக்காக பதிவர்களால் நடத்தப்படும் உங்கள் http://www.udanz.com / tv.udanz.com மும் செய்து முடிப்போம் என்ற நம்பிக்கையில்...
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்



Post a Comment

12 comments:

SURYAJEEVA said...

கலக்குங்க தலைவரே

ரைட்டர் நட்சத்திரா said...

நல்ல முயற்சி

சசிகுமார் said...

//உங்கள் வீடியோவை எடுத்து யூட்யூபில் அப்லோட் செய்துவிட்டு, அந்த வீடியோவின் லிங்கை, udanztv@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பிவிட்டால் அங்கே உங்கள் வீடியோ ப்ளாக் வெளியிட்டு விடுவோம். அந்த பதிவின் லிங்கை உங்கள் பஸ்ஸிலோ, மின்னஞ்சலிலோ, டிவிட்டரிலோ யு.ஆர்.எல்லை கொடுத்துவிட்டால், வீடியோ ப்ளாகிங் செய்தது போலும் இருக்கும் பதிவு போட்டார் போலவும் இருக்கும். என்ன சொல்றீங்க. இது பற்றிய உங்கள் கருத்துக்களை எங்களுக்கு தெரிவியுங்கள்.//

இது கொஞ்சம் புரியல சார் நேரடியா யூடியுப் லிங்க் கொடுப்பதற்கும் இதுக்கும் உள்ள வித்தியாசம் என்ன...

Sivaraman said...

Cool... Better lighting and sound will help a lot...

நிரூபன் said...

வாழ்த்துக்கள் பாஸ்

jayaramprakash said...

congrats ji.

Sivakumar said...

AV Amoga Vetri pera vaalthugal!

Unknown said...

கலக்குங்க நண்பா.வாழ்த்துகள்

Unknown said...

கலக்குங்க நண்பா.வாழ்த்துகள்

Riyas said...

வாழ்த்துக்கள் யுடான்ஸ் டீவிக்கு..

தமிழ்சினிமா ரிப்போட் வீடியோ தெளிவாகயில்லை

Vediyappan M said...

நல்ல முயற்சியில் நம்மையும் இணைத்துக்கொண்டது மகிழ்ச்சி. உத்தரவுகள் தொடர்ந்தால் போதும் இத்க்காக என்ன வேலைகளையும் செய்யத் தயாராக உள்ளேன்.

aotspr said...

நல்ல பதிவு..,.
உங்கள் பகிர்வுக்கு நன்றி....


நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com