வேலூர் மாவட்டம்

vellore_mavattam_tamil_movie_stills_2407110102_009 வழக்கமாய் மதுரை, திருநெல்வேலி, கோவை என்றிருந்த்ததை வேலூருக்கு மாற்றியிருக்கிறார்கள் இப்படத்தின் மூலம். படம் முடிந்து ரொம்ப நாள் ஆகியும் வ்ளியிட சமயம் கிடைக்காமல் வெயிட் செய்து மேலும் வெளியிட லேட்டானால் வெளங்காது என்பதால் உடனடியாய் ஓடுகிற வரை ஓடட்டும் என்று பதட்டமாய் கிடைத்த தியேட்டரில் வெளியிட்டிருக்கிறார்கள்.


vellore_mavattam_tamil_movie_stills_2407110102_022 வழக்கமாய் காக்க… காக்க முதல் சமீபத்தில் பார்த்த எல்லா போலீஸ் கதைகளைப் போல.. இதிலும் ஹீரோ உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்க்கபட்டு ப்ளாஷ்பேக் ஆரம்பிக்கிறது. ஒரு குக்கிராமத்தில் விவசாயக்கூலியின் மகன் ஐ.ஏ.எஸ் படிக்க ஆசைப்பட்டு, கடைசியில் ஐ.பி.எஸ் ஆகிறார். இதற்கு நடுவில் காதல், கல்யாணம் எல்லாம் முடிந்து வேலூர் மாவட்ட ஏ.எஸ்.பியாய் பதவியேற்கிறார். எல்லா தமிழ் பட போலீஸ் ஹீரோ போல் இவர் செல் நம்பரை விளம்பரப்படுத்தி ஊருக்கே ராஜாவாகிறார். வழக்கம் போல அரசியல்வாதி வில்லன் அல்லக்கை,  அரசியல்வாதி மந்திரி என்று வில்லன் கும்பல். இவர்களை எப்படி சமாளித்து வெற்றி பெறுகிறான் என்பதுதான் கதை. முடிந்தால் பார்த்துக் கொள்ளூங்கள்.
Poorna-hot-stills (4) நந்தா ஒரு நல்ல நடிகர். சரியான நேரம் அமையாமல் அலைந்து கொண்டிருப்பவருக்கு ஹீரோ ரோல். காக்கி சட்டை விரைப்புடன் நடிப்பது ஓகேதான் ஆனால் எல்லாக் காட்சியிலும் சிடுசிடுவென இருப்பது எரிச்சலாய் இருக்கிறது. 

பூர்ணா தான் கதாநாயகி. பெரிதாய் ஸ்கோர் பண்ண ஏதுமில்லை. பார்க்கிறார், அழுகிறார்,  ரெண்டு டூயட் பாடுகிறார். அவ்வளவே. அமைச்சராக ஒரு புது வில்லன் பார்க்க ஓகேவாக இருக்கிறார். அழகம் பெருமாள் மந்திரியின் முக்கிய அல்லக்கை கேரக்டர். இவர் குரலில் இருக்கும் ந்டிப்பு பாடிலேங்குவேஜில் இல்லாதது வருத்தமே. படத்தை ஆங்காங்கே கலகலக்க வைப்பது சந்தானம் மட்டுமே.
vellore சுந்தர் சி. பாபுவின் இசையில் பெரிதாய் ஏதும் சொல்லிக் கொள்கிறார்ப் போல இல்லை. ஒளிப்பதிவு பற்றியும் பெரிதாய் சொல்ல ஏதுமில்லை. எழுதி இயக்கியிருப்பவர் ஆர்.என்.ஆர். மனோகர். இதற்கு முன்பு மாசிலாமணி படத்தை இயக்கியவர். வழக்கமான மசாலா கதைதான் அதில் முடிந்த வரை சுவாரஸ்யத்தை தர முயற்சித்திருக்கிறார். நந்தாவின் சின்சியர் கேரக்டரை சொல்லிவிட்டு அவருக்கு வரும் ப்ரச்சனைகள் என்று எடுத்துக் கொள்ளூம் போது படு வழக்கமான ப்ரச்சனைகளையே எடுத்துக் கொண்டதால் சுவாரஸ்யம் கெட்டுப் போகிறது. வேலையை ரிசைன் செய்தவர் அடிபட்டு ஒரு மாதமாவது ஆயிருக்கும். மீண்டும் எப்படி விசாரணைக்கு பின் வேலைக்கு சேர்ந்தார் என்பதற்கான பதிலில்லை. படத்தில் முக்கியமான விஷயம் வேண்டாத இடத்தில் காதல் பாட்டுக்கள் போடாமல் சட்டு புட்டென காதல் காட்சிகளை முடித்தது. ஆங்காங்கே சிறு சிறு டயலாக்குகள் மூலம் காதலை, அன்பை சொன்னவிதம். எதிராளிகளை  சமாளிக்கும் ஐடியாக்கள் எல்லாம் படு பழசு. பஸ்ஸில் ஹார்ட் அட்டாக் வந்தவருக்கு  ஒண்ணுமில்லை வெறும் அஜீரணம் தான் என்று ஒரு ஆர்டினரி மாத்திரையை கொடுத்து விட்டு ஆஸ்பிட்டலில் சேர்ப்பது எல்லாம் அரத பழசு. மொத்தத்தில் மாவட்டத்தை தவிர வேறு ஏதும் புதிதாய் இல்லாத படம்.
வேலூர் மாவட்டம்- வறட்சி
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Comments

முதலே ஒரு வணக்கம், நல்ல வேலை எங்களுக்கு இந்தப்படம் ரிலீஸ் இல்லை, தப்பிச்சோம்.
Ravi said…
Me the second!!!:)
அடபோங்க சார்! நேத்து சாயங்காலம் படத்துக்கு போலாம்னு பார்த்தா ஒருபடம் உருப்படியா இல்லை. தமிழ் சினிமாவிலேயே வறட்சியா?!
aotspr said…
படம் சுமார் தான்.....
உங்கள் விமர்சனத்துக்கு நன்றி....

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com
IlayaDhasan said…
நந்தா , நல்ல நடிகர் , புன்னகை பூவே அப்புறம் ,ஒரு பிரேக் கெடைகாமலே இருக்கிறாரு.

ஆத்தாடி பாவாட காத்தாட - பாகம் 2
arumayana blog and writings thalaiva....
tamil comedy
Sakthi said…
அடடடடா அப்பப்பா.....அருமையான விமர்சனம்......(ஜிங்...ஜிங்)
sharing thoughts. ungalukku vera velai illaiya.. en vimarsanathai kurai solla ungalukku urimai ullathu.. anaal ingu vimarsanam seipavarkalai.. seyya ungalukku urimaiyillai.. sorry..
Sakthi said…
shortfilmindia.com ---- You have to accept others critics also...dont be super genius always and dont dominate others...naan aduthavarkalai vimasikka villai...iam answering for their questions...
Sakthi said…
Guys dont read this "Super Genius" blog....
hai sankar...

please do not use the words which is hurting the makers of the project. this is my suggestion. you know that all directors life carrier is based on his project. you are simple telling that "mokkai".
@sharing thoughts
//அடடடடா அப்பப்பா.....அருமையான விமர்சனம்......(ஜிங்...ஜிங்)//

ithu thaan neega sollara pathila.. ???

semma comedy boss neenga.. ennai padikatheengannu thenam ennai vanthu padichitu feedback vera podareenga.. good.. appadithtaan irukkanum
@sharing thoughts if you still feel that iam not accepting other critics. :))

if iam not accepting sharing of your thoughts wont be here..

Popular posts from this blog

100 போன்கால்களும், கெட்ட வார்த்தை மெசேஜுகளும்.

3 திருநங்கைகளும், 1 வடக்கனும் 100 போலீசும்

பேரைச் சொல்லவா? - மெய்யழகன் தருணங்கள்.