
தொடர்ந்து ஆறரை தோல்விகள். அதை மீறி ஏதாவது மேஜிக் செய்வார் என்ற எதிர்பார்பை ரசிகர்களிடையே இன்னமும் வைத்திருக்கும் விஜய். தசாவதாரத்தை தயாரித்த புகழ் பெற்ற தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிசந்திரன். ரீமேக் புகழ் ராஜா. ஹிட்டான பாடல்கள் என்று ஏழாம் அறிவுக்கான எதிர்பார்ப்பையும் மீறி தனக்கென ஒரு ஓப்பனிங்கை வைத்திருக்கும் விஜய்யின் படம். விஜய் லோ ப்ரொபைலில் இருக்கும் காலத்தில் வந்த படம் தான் திருமலை. அதற்கு முன்னால் ரிலீஸான படங்கள் எல்லாம் தோல்வியடைந்திருக்க, எந்த விதமான எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் ரிலீசான திருமலை ஹிட்டடித்தது. அதே போன்ற மேஜிக்கை இந்த வேலாயுதம் செய்தானா? என்பதை பார்ப்போம்.

ஜெனிலியா ஒரு பத்திரிக்கை ஆரம்பிக்கிறார்.(அல்லது ஃபிரீலான்ஸ் ஜர்னலிசம் செய்கிறார்.) ஏதோ ஒரு எழவு வேலை செய்கிறார். உள்துறை அமைச்சரின் விஷயம் என்று தெரியாமல் இன்வெஸ்டிகேட்டிவ் ரிப்போர்ட்டிங்கில் அவரும், அவரின் நண்பர்களும் ஈடுபடுகிறார்கள். அதில் ஜெனிலியாவின் நண்பர்கள் கொல்லப்பட, அந்த ரவுடிகள் மூலமாக சென்னையில் பல இடங்களில் வெடி குண்டு வெடிக்கப் போவதாய் தெரிகிறது. ஜெனிலியா கத்திக்குத்தோடு உயிர்பிழைக்கிறார். ஒரு விபத்தில் ரவுடிகள் எரிந்து போயிருக்க, அப்போது ஜெனிலியா அவர்களை கொன்றது “வேலாயுதம்” என்று கற்பனைப் பெயரை எழுதி வைக்க, அடுத்து நடக்கவிருக்கும் வெடிகுண்டு மேட்டரையும் எழுதி வைக்கிறார். இப்போது கிராமத்தில் தன் தங்கை மீது அதீத பாசமுள்ள அண்ணனாக விஜய். அப்பா அம்மா இல்லாமல் பாசத்துடன் தங்கையை வளர்க்கிறார் விஜய். தங்கையின் திருமணத்திற்காக சென்னையின் ஒரு பெரிய கம்பெனியில் சீட்டு போட்டிருக்க, அதை எடுக்க சென்னை வருகிறார். அடுத்தடுத்து நடக்கும் குண்டு வெடிப்புகளை எத்தேசையாய் அவருக்கே தெரியாமல் செயலிழக்கப்பட, வேலாயுதம் மக்களிடையே ஒரு சூப்பர் ஹீரோவாக பார்க்கப் படுகிறான். இது பற்றி தெரியாத விஜய் அப்பாவித்தனமாய் ஜாலியாய் சுற்ற, ஒரு கட்டத்தில் அவர் நம்பி பணம் கட்டிய சீட்டுக் கம்பெனி பணம் கொடுக்காமல் ஏமாற்றிவிட, நொந்து போயிருக்கும் நேரத்தில் ஜெனிலியா மூலம் தன்னைத்தான் எல்லோரும் வேலாயுதம் என்று நம்பியிருக்கிறார்கள் என்ற உண்மையை தெரிந்து கொள்கிறார். பின்பு அவர் வேலாயுத அவதாரம் எடுத்தாரா? தங்கையின் திருமணம் நடந்ததா? வில்லனின் குண்டு வைப்பு திட்டத்தை அழித்தாரா? என்பது போன்ற நைல் பைட்டிங் கேள்விகளுக்கு எல்லாம் பதில் வெண்திரையில்.

மிகச் சாதாரண லைனை விஜய் என்கிற ஒருவர் தன் தோள் மீது தூக்கி சுமந்திருக்கிறார். முதல் பாதியில் திருப்பாச்சி கணக்கா தங்கச்சி மேல அம்புட்டு பாசத்தை பொழியிராரு.. ஊருல நாலைஞ்சு இளந்தாரி பயளுகளோட ஃப்ரெண்ட்சா இருக்காரு. துள்ளி குதிச்சு, ரவுசு பண்றாரு. ஏன்னா இவரு யூத்தில்லையா அதனால. ஆனால் ஊருல எல்லாரும் அவருக்கு ஆதரவா இருப்பாங்களாம். இப்படி ஆஹா..ஓஹேன்னு பில்டப்பு கொடுத்தாலும் அறிமுக காட்சியில் சுறாவை போல பார்த்தவுடன் நம்மை நொந்து போக வைக்காமல், ஊரே அவரை வழியனுப்பி வைப்பதற்கான காரணத்தையும், அதன் பின்னணியில் உள்ள சோகக் கதையை சொல்லும் போது விஜய் நம்மை சிரிக்க வைக்கிறார். அதன் பிற்கு சென்னைக்கு வந்த பிறகு சந்தானம் தன் பங்கிற்கு ஆட்டத்தை ஆட, அட என்று ஆச்சர்யப்படும் வகையில் போரடிக்காமல் முதல் பாதி போனது எப்படி என்றே தெரியவில்லை. முழுக்க முழுக்க விஜயின் ஆதிக்கம் செலுத்தியுள்ள இடம் இது. ஆங்காங்கே வரும் வில்லன் காமெடிகளைத் தவிர.

இப்படியெல்லாம் சுறுசுறுப்பா கதையேயிலலாம கதைய நவத்துனவங்க.. அய்யயோ கதை சொல்லணுமேன்னு யோசிக்க ஆரம்பிச்சதும் சொதப்ப ஆரம்பிச்சது தான் ப்ரச்சனை. அவ்வளவு நேரம் விஜய்யை அவரின் நடிப்பை, ஸ்க்ரீன் ப்ரெசென்சை ரசிக்க ஆரம்பிச்சிருந்த் நேரத்தில மறுக்கா ஆக்ஷன் ஹீரோ, சூப்பர் ஹீரோன்னு வெறும் அசாசின் க்ரீட் ட்ரெஸ்சை மட்டுமே போட்டு பில்டப் கொடுக்கறதும், சண்டை போடறதுமா பொழுது ஒடி தூக்கம் வந்ததுதான் மிச்சம். சாதாரணமாவே ஆபத்து நேரத்தில டக்குன்னு ஸ்பாட்டுல வந்து நிப்பாங்க ஆக்ஷன் ஹீரோவெல்லாம். இப்ப சூப்பர் ஹீரோன்னதும் கேக்கணுமா? தேணுற இடத்தில தோணுற சீனுலயெல்லாம் டக்கு டக்குன்னு வந்து நின்று கையால சண்டைப் போட்டே தூள் கிளப்புறாரு.
ஹன்சிகா மோத்வானி சரியான மொத்துவானி. ரியாக்ஷனுங்கிறது ஸ்பெல்லிங் என்னன்னு கேட்பாங்க போலருக்கு? லவ் பண்ணவும் வர்மாட்டேன்குது. அழுகவும் வர மாட்டேன்குது. கொஞ்சமே கொஞ்சம் இம்ப்ரசிவான நடிப்பு ஜெனிலியாவிடம் மட்டுமே.. ஹீரோயின்களில். மற்றபடி எம்.எஸ்.பாஸ்கர். சரண்யா மோகன், பரோட்டா சூரி, பாண்டி என்று ஏகப்பட்ட நடிகர்கள். எல்லோருமே அவர்களுக்கு கொடுத்த பாத்திரத்தில் நிறைவாக செய்திருக்கிறார்கள். விஜய்க்கு பிறகு படத்தை விறுவிறுப்பாக போக வைப்பவர் சந்தானம் ஒருவரே. படத்தின் முதல் பாதி முழுவதும் மனுஷன் சகஜமாய் அடித்து விட்டு கலாய்க்கிறார்.

ப்ரியனின் ஒளிப்பதிவு பளிச். ஓப்பனிங் பாம் வெடிக்கும் காட்சியில் சிஜி படு அமெச்சூர்தனம். படத்தின் இன்னொரு பலம் விஜய் ஆண்டனி. வழக்கமாய் சத்தமாய் கொத்தியெடுக்கும் குத்துப் பாட்டுகளை நம்புகிறவர் இம்முறை கொஞ்சம் அடக்கி வாசித்து மெலடியில் நின்றிருக்கிறார். முளைச்சு மூணு இலை, ரத்தத்தின் ரத்தமே, மாயம் செய்தாயோ.. ஆகிய பாடல்கள் ஸூத்திங் மெலடிகள். குட் ஜாப் விஜய்.
வழக்கமாய் ரீமேக் படங்களாய் மட்டுமே எடுத்து வந்த ராஜா முதல் முறையாய் ஆசாத் என்கிற தெலுங்கு படத்தின் லைனை மட்டுமே வைத்துக் கொண்டு திரைக்கதையாக்கி சுவாரஸ்யமாக கொடுக்க முயற்சித்திருக்கிறார். அவ்வகையில் முதல் பாதியில் இவர் ஜெயித்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். ஆனால் அந்த க்ரிப்பை இரண்டாவது பாதியில் விட்டுவிட்டார். வழக்கமான மசாலா அடிதடி க்ளைமாக்ஸை நோக்கி போகிறார். க்ளைமாக்ஸ் அந்நியன் படத்தை ஞாபகப்படுத்துகிறது. கடைசி பத்து நிமிஷம் விஜய் பேசும் காட்சியில் கொஞ்சமே கொஞ்சம் புத்திசாலித்தனத்தை உபயோகித்திருந்தால் இன்னும் சுவாரஸ்யமாயிருந்திருக்கும். சரி அதுக்கென்ன பண்றது வச்சிகிட்டா வஞ்சனை பண்றாரு. இதற்கு முன் வந்த விஜய் படங்களைப் பார்த்ததும் ஒரு விதமான எரிச்சல் வரும். அது இந்த படத்தைப் பார்த்ததும் வரவில்லை. அந்த வகையில் விஜய்க்கு இப்படம் ஒரு கம்பேக் என்றே சொல்ல வேண்டும்.
Rating : 35/120
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
Comments
http://realsanthanamfanz.blogspot.com/
=29.2/100??
35- கொடுத்த காசுக்கு ஒர்த் :)
Vadai Miss Aagitte it's k
mark podurathu puthusa irukke .. k k Kalakkunga jechudunga
http://greenhathacker.blogspot.com
என்ன டா இன்னும் விமர்சனம் காணோம் ன்னு பார்த்தேன்..வந்திடுச்சு.
first ஒரு படத்தை விருப்பமே இல்லாம பார்த்தா இப்டி தான் விருப்பமே இல்லாம விமர்சனம் போடா தோணும்..
வேலாயுதம் விஷயத்துலயும் இப்டிதான் நடந்திருக்கு. இதுக்கு மேல ஒரு festival mood படம் தர முடியும்னு எனக்கு தெரியல..நீங்க எடுங்களேன் !விஜய் படம் ஹிட் ஆனா பல பேருக்கு வயிதெரிச்சல் நீங்க மட்டும் விதி விளக்கா என்ன ??.
நீங்க என்ன வேணா சொல்லுங்க, படம் செம ஹிட் ன்னு ரிசல்ட் தெரியும் ல..
உங்க படத்தை நாங்க பார்த்து சொல்றோம் பாருங்க விமர்சனம்..
கிழிச்சு எடுக்குறோம் சரியா
- சாதாரண ரசிகன்...
நிச்சயம் நான் எடுப்பேன். படம் செம ஹிட்டெல்லாம் இல்லை.. என் படத்தை நிச்சயம் கிழிச்சு எடுங்க.. ஆல்வேஸ் வெல்கம்.
உனது விழி வலிமையிலே!
நீங்க படம் பார்க்காமலேயே விமர்சனம் எழுதிட்டீங்களா பாஸ்? ஃபர்ஸ்ட் லைனே தப்பா இருக்கே? :-(
## இது உண்மை. கேபிள் ஏதாவது நெகடிவ் ஆக எழுதும் பொழுது, இது போன்ற விமர்சனங்கள் நிரம்ப வருகின்றது. வருந்தத்தக்கது.
@Cable Sankar: if the critic covers on what and how things could have been done rather actually will be still interesting.
இதற்கு முன் வந்த விஜய் படங்களைப் பார்த்ததும் ஒரு விதமான எரிச்சல் வரும். அது இந்த படத்தைப் பார்த்ததும் வரவில்லை//
உண்மைதான்
இந்த ஒரு வரி போதாதா? நீங்க படத்தை வெற்றி படம் எண்டு ஒத்து கொண்டதுக்கு. குறைகள் எல்லா படத்திலும் தான் இருக்கு. அதனால் கவலை தேவை இல்லை.
ரசிகர்கள் தன் தலைவன் அப்படி சூப்பர் ஹீரோவாக மட்டுமே வலம் வருவதைத்தான் விரும்புகிறார்கள் போல.அதனாலையே அப்படி எடுக்கிறார்கள்.
சமீபத்தில் சின்மயி ட்விட்டரில் சொன்னது.
”பெரும்பாலான தமிழ் ரசிகர்கள் டீக்கடை வாசல்”
இதன் அர்த்தம் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். சினிமா ரசிகனை பிரபல் நடிகர்கள், நடிகைகள்,இயக்குனர்கள் மனதிற்குள் இப்படித்தான் நினைத்துக்கொண்டு வெளியில் பணத்திற்காக நாடகமாடுகிறார்கள்.
ஆகவே டீக்கடை ரசிகனுக்காகவே தமிழ் திரைப்படம் எடுக்கப்படுகிறதே ஒழிய இனையத்தில் உலா வருபவர்களுக்காகவோ,அல்லது நன்கு படித்தவர்களுக்கா அல்ல.
இது புரியாத ரசிகனும் !!!
உங்க கிட்ட ஒரு டவுட்.காவலன் பட பிரச்சனை போது,இதுல அரசியல் இல்ல,விஜய் படம் மூலம் நெறைய நஷ்டம் - அது தான் நிஜ காரணம்-நு சொன்னீங்க.ஆனா அதுல ரொம்ப தீவிரமா இருந்த பன்னீர்செல்வம் இப்போ வேலாயுதத்த தன்னோட தியேட்டர்ல ரிலிஸ் பண்ணி இருக்காரே?அப்போ எது தான் உண்மை?
விமர்சனம் எல்லாம் ஓகே ,ஆனால் வலிக்காம அடிக்கிறாப்போல தெரியுதே, ஆசாத் கதைக்கும் இதுக்கும் 6 வித்தியாசம் கூட சொல்ல முடியாது போல இருக்கு, ஆனால் ஒன் லைனர் வச்சு படம் எடுத்து இருக்கார்னு சொல்றிங்க.
இந்த படத்தையும் சந்தானம் தான் காப்பாத்தனுமா அப்போ, மனுசன் எத்தனப்படத்தான் காப்பாத்துவார்,
டொக்டர் விசய், ரெண்டு கையையும் சேர்த்து வச்சு ஓட்டை வழியாப்பார்க்கிறாப்போல ஸ்டில் போட்டு இருக்கிங்களே அதுல ஒரு மேட்டர் இருக்கு.
அதுக்கு பேரு யோனி முத்திரை, யோகாவில இருக்கு(கூகிளிடவும்).ஆனால் இவர் தலை கீழாகக்காட்டுகிறார்.அப் சைட் டவுனாக காட்டனும் , எனவே யோகக்கலையை அவமதிப்பு செய்ததாக யாரும் போராட்டம் நடத்தலையா? வழக்கமா போராட்டம் நடத்த ஒரு குருப் இருக்குமே?(எப்படி பத்த வச்சுட்டொம்ல)
01. ஹீரோ மக்களை அழைக்கவில்லை. வில்லன் தான் அழைக்கிறார்.
02. ஹீரோ தன்னை வெளிப்படுத்தவில்லை. குரலால் மட்டும் மக்களுடன் பேசுகின்றார்.
இது போதுமே! இதை விட வேறு என்ன மாதிரியான க்ளைமாக்ஸ் இந்த படத்திற்கு வந்தால் நன்றாக இருக்கும் என விமர்சன விண்ணர்கள் கருதுகிறீர்கள்?
01. வீடு வீடாக நோட்டீஸ் அடித்து விநியோகிக்கச் சொல்கிறீர்களா?
02. மரண அறிவித்தல் போல மைக் செட் போட்டு ஊர் ஊராகச் சொல்லச் சொல்கிறீர்களா?
03. இந்தியன் கமல் போல் ரி.வியில் நேரடியாகத் தோண்றச் சொல்கிறீர்களா?
04. கேபிள் ரி.வி ஆப்பரேட்டர்களிடம் ஒசாமா பில்லேடன் போல கேசட்டை குடுத்து விடச் சொல்கிறீர்களா?
நீங்களாவது உங்கள் எட்டாம் அறிவைப் பாவித்து எதையாவது சொல்லுங்களேன். எதையாவது கூற வேண்டும் என்பதற்காக “முட்டையில் … பிடுங்கியதைப் போன்று” குறைகளை அடுக்காதீர்கள்.
போக்கிரிக்கு பின் அழகிய தமிழ் மகன்,குருவி,வில்லு ,வேட்டைக்காரன்,சுறா என ஐந்து படங்கள் தான் தோல்வி அது என்ன "ஆறரை" விளக்கம் தரவும்
காவலன் ஹிட்
படத்தின் குறைகளை கண்டுபிடிக்க முன் உங்கள் பதிவின் குறையை சீர் செய்க
//நீங்க படம் பார்க்காமலேயே விமர்சனம் எழுதிட்டீங்களா பாஸ்? ஃபர்ஸ்ட் லைனே தப்பா இருக்கே? :-(//
நீங்க படிக்காமலேயே பின்னூட்டம் போடுவீங்களா? பின்னூட்டமே தப்பாயிருக்கே..
http://rajkanss.blogspot.com/2011/10/blog-post_28.html
http://pothinimalai.blogspot.com/2011/10/blog-post_28.html
@yuvakrishna
//நீங்க படம் பார்க்காமலேயே விமர்சனம் எழுதிட்டீங்களா பாஸ்? ஃபர்ஸ்ட் லைனே தப்பா இருக்கே? :-(//
நீங்க படிக்காமலேயே பின்னூட்டம் போடுவீங்களா? பின்னூட்டமே தப்பாயிருக்கே..//
அவர் மேற்கோள் காட்டிய வரிக்கும் அதில் அவர் கேட்டிருக்கும் கேள்விக்கும் நீங்கள் கொடுத்த பதில் சரியா?
ஜெனிலியாவும் நண்பர்களும் தங்கள் நாட்டுக்கு ஏதாவது செய்ய வேண்டும். அதற்கு ஒரு ஊடகத்தில் இருந்தால் அதன் சட்ட திட்டங்கள் தடையாக இருக்கும் என்பதால் சுதந்திர ஊடகவியலாளர்களாக (freelance journalist) செயற்படுகிறார்கள். அவர்கள் ஒன்றும் பத்திரிக்கை ஆரம்பிக்கவில்லை. அதைத்தான் யுவகிருஸ்ணா கேட்டார். சுதந்திர ஊடகவியலாளர்கள் என்பது தாங்களாக செய்திகளைச் சேகரித்து ஊடக நிறுவனங்களுக்கோ, அல்லது தேவைப்படும் இடத்தில் ஆதாரங்களாக பொலிஸ் மற்றும் அரசாங்கப் பிரிவினருக்கோ வழங்க முடியும்.
உங்களின் இரண்டாவது வரி சரியானதே! அதை அவர் மேற்கோள் காட்டவில்லை என்பதை கவனிக்க.
விஜய் சீட்டுக்கம்பனியால் ஏமாற்றப்பட்டு நொந்துபோயிருக்கும் நேரத்திலா ஜெனிலியா அவரை தனது ஸ்ரூடியோ அழைத்துப்போய் வேலாயுதம் பற்றிய உண்மைகளைச் சொல்கிறார்??????
விஜய், ஜெனிலியாவை வில்லன்களிடமிருந்து காப்பாற்றிய பின்னர் ஒரு நாள் ஏதோவொரு சாப்பாட்டுக்கடையின் முன்னால் இருவரும் சந்திக்கும்போது விஜய் அதுவரை நடந்த சம்பவங்களுக்கான விளக்கங்களைச் சொல்ல, அதிர்ச்சியுற்ற ஜெனி “உன்னைத்தான் வேலாயுதம் என மக்கள் நம்பியிருப்பதாக” கூறி தனது ஸ்ரூடியோ அழைத்துச் சென்று அதுவரை கிடைத்த குண்டுவெடிப்பு மற்றும் வேலாயுதம் தொடர்பான வீடியோவை திரையிட்டு மக்களுக்காக நீ வேலாயுதமாக மாற வேண்டும் என கேட்கிறார்.
“நீங்க உருவாக்கின வேலாயுதத்தை நீங்களே அழிச்சிடுங்க” என விஜய் கூற இடைவேளை.
இதற்கு பின்னர் தான் சீட்டுக்கம்பனி பிரச்சனை. அதன் பின் தானாகவே விஜய் வேலாயுதமாக மாறுகிறார்.
நான் சொன்ன இந்தக் கதை வேலாயுதம் திரைப்படத்தில் இருக்கின்றதா? இல்லை நான் பீலா விடுகிறேனா?
நீங்கள் ஏதோ அவசரத்தில் படத்தைப் பார்த்திருக்கிறீர்கள். அல்லது விஜய் படம் தானே என வேண்டா வெறுப்பாக பார்த்திருக்கிறீர்கள்.
ஆறரை என்ற வார்த்தை பிரயோகம் சூப்பர்
அன்புடன்
விஜய் பாஸ்கர்
அன்புடன்
விஜய் பாஸ்கர்
one lineaaaa please see the azaad movie sir so many scenes has been copied. thirupathi swamy uyirodu irunthu irundha raja mela case potturuppar.
//one more thing azaad itself an unofficial remake of mein azaad hoon an amitabachan starrer film released in late 1980's. this is also not an original plot but it has been inspired from "Meet John Doe" - 1941 year film.//
ஹி..ஹி..இதெல்லாம் மாஸ்க் ஆப் சாரோ வில இருந்து வந்த கதைனு அவர் சொல்வார்!(தேவையா இது)
அப்புறம் அமிதாப் படத்துல தங்காச்சி இருக்கா இதுல இருக்கு ,பஞ்ச் டயாலக் இருக்கா? இதுல இருக்கு, அப்போ இது புது கதை ,புது படம்:-))
(mein azaad hoon அப்படினா நான் ஆசாத்னு அர்த்தமா?)
தெலுங்கு படம் ஆசாத் கூட இது இல்லைனு சொல்றவர் கிட்டே 1980 ல வந்த இந்தி படம் என்று சொன்னா கேட்கவா போறார்!
பேரரசு அல்லது ராமநாரயணன் கிட்டே எல்லாம் அறிவு ஜீவி தனமா கேள்வி கேட்பிங்களா? அப்புறம் என்ன! வந்தமா சூப்பர், கலக்கிட்ட தல, அப்படினு பின்னூட்டம் போடணும் இங்கெ எல்லாம்!(அதிகமா பேசுனா கமெண்ட் கூட வராது இங்கேலாம்)
வவ்வால்.. என்னை எப்படி நீங்க அறிவு ஜீவீன்னு அவமானப்படுத்தலாம்.:))
வணக்கம்,
//வவ்வால்.. என்னை எப்படி நீங்க அறிவு ஜீவீன்னு அவமானப்படுத்தலாம்.:))//
இல்லையா பின்ன, நீங்க ஒரு அறிவு ஜீவினு நான் தனியா வேற சொல்லனுமா? நாகேஷ் குக்கனூர்,குருதத்,சத்தியஜித் ரே,ஷியாம் பெனகல்,மனோஜ் ஷியாமலன்,அடூர் கோபாலாகிருஷணன்,காசரவல்லி,இவங்க எல்லாம் கலந்த கலவை, உங்களை நம்பித்தான் தமிழ் சினிமா எதிர்காலமே இருக்கும்,(முக்கியமா நாங்க)
ஒரு கேன்ஸ், கோல்டன் குளோப், ஆஸ்கர்னு வாங்கி எங்களைக்காப்பாத்தனும் ஜி!
1st 30 mins sema Mokkai!
Indha Padatha 3 mani neram paaka mudiyumnu poi 3 mani neram paakara andha dhairiyam irukke..andha dhairiyam dhan velaydham!!!
in tamil cinema DMK groups plan to get money continuously..., when it change , our CM must bring order for all cinema advertisement for all channels