Oosaravelli
டோனி ஒரு பெண்ணை காஷ்மீரில் ஆபத்திலிருந்து காப்பாற்றுகிறான். அவளை ஹைதராபாத் வரை தொடருகிறான். அவள் மேல் காதல் கொள்கிறான். அவள் பெயர் நிஹாரிகா. பேஷன் டிசைனர். ஆனால் அவளுக்கோ பிரபல அரசியல்வாதி மகன் ராகேஷின் மீது காதல். அவன் மீதான காதல் தெரிந்து தன்னை காதலிக்க சொல்லி அவளுடன் சுற்றுகிறான். டோனியின் செய்யும் ஒரு கொலையை நிஹாரிகாவின் தோழி பார்த்து விடுகிறாள். நிஹாரிகாவிடம் சொல்லப் போவதாய் சொல்ல, தான் இந்த கொலைகளை செய்வதே நிஹாரிகாவுக்காகத்தான் என்கிறான். டோனி யார்? நிஹாரிஹா யார்? எதற்காக டோனியை நிஹாரிஹா ஃபிக்ஸ் செய்கிறாள்? என்பதை போன்ற கேள்விகளுக்கு வெள்ளித்திரையில் பதில் சொல்வார்கள்.
தமன்னாவுக்கு செம ஸ்ட்ராங் கேரக்டர். வழக்கமாய் மாஸ் ஹீரோ படங்களில் ஹீரோயின்களூக்கு பெரிய வேலையிருக்காது. ஆனால் இதில் நல்ல கேரக்டர். இரண்டு ஷேடுகளில் நடிக்க நல்ல வாய்ப்பு அதை நன்றாக பயன்படுத்தியிருக்கிறார். சில காட்சிகளில் செம க்யூட்டாக இருக்கிறார்.
இவர்களைத் தவிர பிரகாஷ்ராஜ், ஷாயாஜி ஷிண்டே, ஜெயபிரகாஷ் ரெட்டி, ராம்பாபு, தனிகலபரணி என்று ஏகப்பட்ட நடிகர்கள் லிஸ்ட். ஆளாளுக்கு நாலு காட்சிகள் வந்து போகிறார்கள். ஜெயபிரகாஷ் ரெட்டி, ராம்பாபு, ஜூனியர் என்.டி.ஆரின் காமெடி காட்சிகளில் லாஜிக் என்பது கிஞ்சித்தும் இல்லாது இருந்தாலும் ஓகே.
ரசூல் எல்லூரின் ஒளிப்பதிவு ஓகே. ஸ்பெஷலாய் ஏதும் சொல்வதற்கில்லை. வழக்கமாய் சுரேந்திர ரெட்டியின் படத்தில் இருக்கும் ஸ்டைலிஷ்னஸ் இதில் மிஸ்ஸிங். Vegence என்ற ஆங்கில பட காட்சிகளை ஆங்காங்கே நினைவூட்டுகிறார்கள். தேவி ஸ்ரீ தேவியின் இசையை பற்றி பெரிதாய் சொல்ல ஏதுமில்லை.
பெரிய நடிகர்களுக்கு கதை பண்ணுவது என்பது அவ்வளவு சுலபமான விஷயமில்லை. மிகவும் மெனக்கெட வேண்டும். லைட்டாகவும் படமெடுத்துவிட முடியாது. அதே போல அவர்களை வைத்து டெஸ்ட் செய்யவும் முடியாது. மாஸ் மக்களுக்கு பிடித்தாக வேண்டிய கட்டாயம் என்று ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கிறது. அதிலும் அதனொக்கடே என்ற ஒரு படத்தின் மூலமாய் தெலுங்கில் பெரிய இடத்துக்கு வந்தவர் இயக்குனர் சுரேந்திர ரெட்டி. அதன் பிறகு மகேஷ்பாபுவை வைத்து கூட ஹிட் கொடுக்க முடியவில்லை. அப்படம் மகேஷ் பாபுவின் கேரியரில் மிக ஸ்டைலிஷாக எடுக்கப்பட்ட படம். கடைசியில் ரவிதேஜாவை வைத்து கிக் கொடுக்க, இப்போது ஜூனியர் என்.டி.ஆர். அவரை ஒரு பெரிய வீரனாகவும் காட்ட வேண்டும். நெகட்டிவ் ஷேடான ரவுடி, பெயிட் கில்லர் என்றும் உருவகப் படுத்தவேண்டும். இன்னொரு பக்கம் வழக்கமான ரன் ஆப் த மில் விஷயங்களையும் போட்டு குலுக்கி படம் செய்ய வேண்டும் என்கிற கட்டாயம் வரும் போது திரைக்கதை என்கிற வஸ்துவை தொலைத்துவிடுகிறார்கள். அப்படி தொலைத்த காரணத்தால் கதை ஹேவயராய கண்ட மேனிக்கு திரிகிறது. ஒரு கதை, அந்த கதைக்குள் கதை என்று. உலகமே நடுங்கும் வில்லனை பப்பர்முட் பாப்பாவாக்கி இவர்கள் போடும் க்ளைமாக்ஸ் அபத்தங்களையெல்லாம் தெலுங்கு படத்தில் மட்டுமே பார்க்க முடியும்.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
Comments
காலை வணக்கம் .
(உலகமே நடுங்கும் வில்லனை பப்பர்முட்டி பாப்பாவாக்கி இவர்கள் போடும் க்ளைமாக்ஸ் அபத்தங்களையெல்லாம் தெலுங்கு படத்தில் மட்டுமே பார்க முடியும்.)
ரசித்த வரிகள் ..
காலை வணக்கம் .
(உலகமே நடுங்கும் வில்லனை பப்பர்முட்டி பாப்பாவாக்கி இவர்கள் போடும் க்ளைமாக்ஸ் அபத்தங்களையெல்லாம் தெலுங்கு படத்தில் மட்டுமே பார்க முடியும்.)
ரசித்த வரிகள் ..
உலகமே நடுங்கும் வில்லனை பப்பர்முட் பாப்பாவாக்கி இவர்கள் போடும் க்ளைமாக்ஸ் அபத்தங்களையெல்லாம் தெலுங்கு படத்தில் மட்டுமே பார்க முடியும்.
//
உண்மை
பா. ம. க சின்னம் மாறுகின்றதா?