Thottal Thodarum

Oct 25, 2011

Trespass -2011

பல சமயங்களில் நம் உறவுகளின் பலம் பற்றித் தெரியாது. அதைப் பற்றி கவலை கூட பட்டிருக்க மாட்டோம். ஆனால் ஒரு ப்ரச்சனை என்று வரும் போது அந்த உறவுகள் பற்றிய அத்துனை விஷயங்களும் நமக்கு தெரியவரும். துன்பம் வரும் போதுதான் நிஜ நண்பர்கள், உறவுகள் பற்றி அறிந்து கொள்ள முடியும் என்று சொல்வார்கள். அதை அடிப்படையாய் வைத்து வெளிவந்திருக்கும் படம் தான் இது. நிகலோஸ் கேஜ், நிக்கோல் கிட்மென், பிரபல இயக்குனர் ஜோல் ஷுமேக்கர் என்று எதிர்பார்பை ஏற்படுத்தும் ஸ்டார் காஸ்ட்.


கேஜ் ஒரு பெரும் பணக்கார வைர வியாபாரி. அவருடய அழகிய மனைவி நிக்கோல் கிட்மென். இவர்களுக்கு ஒரு டீன் மகள். எல்லா அமெரிக்க டீன் பெண்களைப் போலவே பெற்றோர்களை எதிர்த்துக் கொண்டு, பார்ட்டிக்கு செல்வதில் ஆர்வம் காட்டுபவள். இவர்களின் பங்களா முழுவ்தும் எலக்ட்ரானிக் செக்யூரிட்டி சிஸ்டத்தினால் ஆனது. அப்படிப்பட்ட பாதுகாப்பான வீட்டில் போலீஸ் உடையில் உட்புகுந்து விடுகிறார்கள் திருடர்கள். கேஜையும், நிக்கோல் கிட்மெனையும் பணயக் கைதியாய் வைத்து வீட்டை கொள்ளையடிக்க முயற்சிக்கிறார்கள்.  வந்தவர்களில் ஒருவனை கிட்மெனுக்கு தெரியும்.  திருடர்கள் வருவதற்கு முன்பே பெற்றோர்களுக்கு தெரியாமல் சுவரேறி குதித்து பார்ட்டிக்கு போகும் பெண் திடீரென பாதி பார்டியில் வீட்டிற்கு திரும்பி வந்து மாட்டிக் கொள்கிறாள். வந்திருக்கும் திருடர்களுக்கு இங்கு கொள்ளையடிக்க வந்திருப்பது அவர்களது வேறு ஒரு ப்ரச்சனையால். இவர்களின் ப்ரச்சனை எப்படி முடிந்தது என்பதை டிவிடியிலோ, அல்லது தியேட்டரிலோ பார்த்துக் கொள்ளவும்.

வழக்கமாய் ஜோல் ஷுமேக்கரின் படங்களில் வரும் ஹீரோ ப்ரச்சனைகளை தனியொரு மனிதனாய் தானே நின்ற தானைத் தலைவனாய் சால்வ் செய்வான். இதில் கொஞ்சம் வித்யாசம். இங்கேயும் தானே நிற்க முயற்சித்தாலும் கடைசியில் குடும்பம் தான் பெரியது என்பதை நிருபிப்பது தான் கதை என்பதால் இன்னும் கொஞ்சம் எம்பஸைஸ் செய்து சொல்லியிருக்கிறார். அதே போல திருட வரும் கேரக்டர்களின் அமெச்சூர்தனங்களுக்கான காரணங்கள் ராமநாராயணன் படங்களை விட மோசம். கட்டாயத்திற்காக திருட வந்து ப்ரச்சனையில் மாட்டிக் கொண்டு மீளவும் முடியாமல், செயல் படுத்தவும் முடியாமல் அல்லாடுவது வழக்கமான ஒன்றுதான் என்றாலும், கேஜ் தன்னுடய வைரங்களை திருடினாலும் விற்க முடியாது என்று சொல்லும் காரணங்கள், தான் பேங்கை ஏமாற்ற செய்யும் ஆடம்பரங்கள், அவளூக்கு கொடுத்த போலி வைர நகைகளை பற்றிய கன்பஷன்கள் என்று ஆங்காங்கெ வரும் ட்விஸ்டுகள் இண்ட்ரஸ்டிங்.

கேஜ் வழக்கம் போல சரியாக இந்த கேரக்டரில் பொருந்திக் கொள்கிறார். அதே போல கிட்மெனும். ப்ளாஷ்கட்டில் கிட்மெனுக்கும், வந்திருக்கும்  திருடர்களில் ஒருவனுக்குமான ஒரு குட்டிக் கதையில் கிட்மென் ராவிஷிங்க். 

டெக்னிக்கலாய் சொல்ல பெரிதாய் ஏதுமில்லை. ஒரே ஒரு செட்டில் முழுக்க முழுக்க எடுத்திருக்கிறார்கள். திரும்ப, திரும்ப ஆளாளுக்கு மிரட்டிக் கொண்டெயிருப்பதும், பணயக் கைதிகளாய் கேஜையும், கிட்மெனையும் தங்கள் வசம் வைத்த பின்பும், கேஜிடம் பணத்தை கொடுக்கச் சொல்லி கெஞ்சுவது, “வேனெலலாம் வச்சி கடத்தியிருக்கோம். ஏதாவது செய்யுங்க” என்று கெஞ்சுகிற ரேஞ்சில் இருப்பது காமெடி. இந்த ப்ரச்சனையின் காரணமாய், மனைவி லேசாய் சபலப்பட்டதும், கணவன் தன் குடும்பத்தை கவனிக்காமல் வியாபாரம் வியாபாரம் என்று சுற்றியதைப் பற்றியும், தன் பெற்றோர்களின் த்ன் மீது வைத்திருக்கும் அன்பைப் பற்றி அவர்களது மகள் புரிந்து கொள்வதும் என்று நிறைய ட்ராமாக்கள் ஆரம்பித்த சுவாரஸ்யத்தை கெடுக்கவே செய்கிற்து.

அப்படி என்ன இருக்கிறது இந்த திரைக்கதையில் என்று இந்த மாபெரும் நடிகர்கள் ஒத்துக் கொண்டு நடித்தார்கள் என்று தெரியவில்லை.  ஆனால் இந்த நடிகர்களால் தான் படத்தை பார்க்க முடிகிறது. படத்தை ஆரம்பிப்பதற்கு முன்பே கேஜ் விலகிக் கொள்வதாய் இருந்தாராம். ஹீரோவுக்கு பதிலாய் இதில் வரும் ஒரு முக்கிய திருடன் கேரக்டரில் நடிக்க விருப்பப்பட்டாராம். நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஒரு அருமையான திருடன் கேரக்டர் படத்தில் இருக்கிறது. குறைந்த தியேட்டர்களில் வெளியான இப்படம் வெளியான நாள் அன்றே வீடியோ ஆன் டிமாண்ட்டில் வெளியிட்டு விட்டார்களாம். இன்னும் இரண்டு வாரங்களில் வீடியோவும் ரிலீஸ் செய்யப் போவதாய் தகவல். ஒரு கட்டத்திற்கு பிறகு பல படங்களில் பார்த்த காட்சிகளே வருவதால் சுவாரஸ்யம் குன்றித்தான் போகிறது.
Trespass - No..Need to
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Post a Comment

9 comments:

sugi said...

ok. I got ur msg :)

IlayaDhasan said...

அப்ப இது 'பாஸ்' பண்ண வேண்டிய படம்.

மீனம்மா,மீனம்மா - உன் கண்கள் மீனம்மா!

ரைட்டர் நட்சத்திரா said...

இனிய தீபாவளி
நல்வாழ்த்துக்கள்

COOL said...

இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.

சக்தி கல்வி மையம் said...

ok., nice.,

அந்த நரகாசூரன் நினைவு நாள் மட்டும் தீபாவளி அல்ல.
நீங்கள் சிரித்து மகிழும் ஒவ்வொரு நாளும் தீபாவளி தான்.

உங்களுக்கும்,உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்...

rajamelaiyur said...

தீபாவளி வாழ்த்துகள்

rajamelaiyur said...

இன்று என் வலையில்
இந்த திபாவளிக்கு இலவசமாக வெடி வேண்டுமா?.

அபிமன்யு said...

ப்ரூஸ் வில்லிஸ் நடித்த 'தி ஹோஸ்டேஜ்' படத்தின் சாயல் மிக பலமாக இந்த படத்தில் விழுந்திருப்பது போல் உணருகிறேன்.

விச்சு said...

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்...