Thottal Thodarum

Nov 7, 2011

கொத்து பரோட்டா – 07/11/11

ஐரோம் ஷர்மிளா இவரை பற்றி தெரியாதவர்கள் நம்மில் அதிகம் பேர். பன்னிரெண்டு வருடங்களாய் உண்ணாவிரதம் இருந்து வருபவர். அன்னா ஹசாரே போல பப்ளிசிட்டியோடு உண்ணாவிரதம் இருப்பவர் அல்ல. மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த இவர் அங்கு இருக்கும் போராட்டக்குழுவை தடுக்க அமைத்த ராணுவம் அங்கிருக்கும் பெண்களை கற்பழித்து கொன்றதை பார்த்து, அதிர்ந்து போய் அதற்கு எதிராக போராட்டத்தில் குதித்தவர். இவரது போராட்டத்தை குலைக்க, இவரை தற்கொலை முயற்சி செய்தார் என்று ஜெயிலில் அடைத்தார்கள். தற்கொலை முயற்சிக்கு அதிகபட்சம் ஒரு வருடம் தான் ஜெயிலில் அடைக்க முடியும் என்பதால் விடுதலை செய்யப்பட்டு, மீண்டும் அவர் உண்ணாவிரதம் இருந்ததால் சிறையில் அடைக்கப்பட்டார். இப்படிகடந்த பதினோரு ஆண்டுகளாய் இவருக்கு இக் கொடுமை நடந்து வருகிறது. தன் இளமையை இழந்து, உடல் உள் உறுப்புகள் சிதைந்து போய், மாதவிடாய் சைக்கிள் எல்லாம் கெட்டுப் போய் வெறும் திரவ உணவு மட்டுமே உட்கொண்டு இன்றும் தன் போராட்டத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார். அண்ணா ஹசாரேவுக்கு கிடைத்த மக்கள் ஆதரவோ, மீடியோ ஆதரவோ இவருக்கு கிடைக்காதது பெரும் குறையே.
###########################################

க்டந்த 3.11.11 அன்று ஏ.கருப்பண்ண செட்டியாரின் (A.K.Chettiyar) நூற்றாண்டு விழா. காந்தியவாதியான அவர் ஒரு லட்சம் கிலோ மீட்டர் பயணம் செய்து இந்தியாவின் முதல் டாக்குமெண்டரி படத்தை எடுத்தவர். இம்மகா சாதனையை செய்தவருக்கு அளிக்க வேண்டிய மரியாதையை மத்திய அரசும் சரி, மாநில அரசும் சரி செய்ய தவறிவிட்டது. சரி.. அவர்களை விடுங்க நம்ம சினிமா உலகம். பாசத் தலைவனுக்கெல்லாம் விழா எடுத்தவர்கள். இவரை மறந்தது அநியாயம் அல்லவா..?. சினிமாவை மட்டுமே நம்பி ஓட்டிக் கொண்டிருக்கும் டிவி சேனல்கள் அவர்கள் கூட கண்டு கொள்ளவில்லை. சிம்பு சிக்ஸ் பேக் வைத்து நடித்திருக்கிறார். என்பது போன்ற செய்திகளை ஸ்கோரிலிங்க் ஓட்டும் புதிய சேனலாகட்டும், சன்னாகட்டும் இவர்களும் கண்டு கொள்ளவில்லை. ஒரு வேளை ஏ.கே.செட்டியாரை பற்றி நிகழ்ச்சியை தயாரித்தால் டி.ஆர்.பி. இருக்காது என்பதாலோ..? - நன்றி இயக்குனர் ஷண்முகப்பிரியன் சார்.
############################################### 
பகவான் தாஸ் என்பவரை கொலை செய்துவிட்டதாக குற்றம் சாட்டி, மூன்று பேருக்கு தண்டை அளித்தது கோர்ட். அவர்கள் தொடர்ந்து இந்தக் கொலைக்கும், தங்களுக்கும் சம்மந்தமில்லை என்று திருப்பித் திருப்பி சொன்னாலும், கேட்பார் யாருமில்லாமல் கடந்த பத்து வருடங்களாய் ஜெயில் தண்டனை அனுபவித்திருக்கிறார்கள். ஆனால் சமீபத்தில் பகவான் தாஸ் உயிருடன் திரும்பி வந்திருக்கிறார். அவர் க்டந்த பத்து வருடமாய் இமாசல பிரதேசத்தில் உள்ள தானியக்கிடங்கில் வேலை செய்வந்திருக்கிறார். அவர் உயிருடன் திரும்பி வந்ததை சுட்டிக் காட்டி இவர்கள் மூவரும் விடுதலையாகியிருக்கிறார்கள். தங்களை தவறுதலாய் சிறையில் அடைத்து வைத்ததற்காக ஆளுக்கு 50 லட்சம் நஷ்ட ஈட்டை அரசிடம் கோரியிருக்கிறார்கள். இதில் என்ன பிரச்சனை என்றால்,அரசியல் பிரமுகர் ஒருவரின் ப்ரெஷின் காரணமாய்த்தான் இவர்கள் மீது குற்றம் சாட்டப்ப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். காரணம் பகவான் தாஸ், மற்றும் இந்த மூன்று சகோதரர்களின் நிலங்களை சூறையாடுவதற்காகத்தான். இது இந்தியாவில் மட்டுமே நடக்கும்
#########################################
சென்னையின் புதிய மேயருக்கு வந்தவுடனேயே தலைக்கு மேல் வேலை வந்துவிட்டது பருவ மழையால். சென்னை மட்டுமில்லாது தமிழ்நாடெங்கும் தொடர்ந்து மழை பெய்து வருவதால், வெள்ளம், பாலங்கள் உடைப்பு, ரோடுகள் மோசமடைவது, மழையினால் நிகழும் சாவுகள், பரவும் வியாதிகள் என்று ஏகப்பட்ட விஷயங்கள் ஒரேயடியாய் அவர்கள் முன் நிற்கிறது. இதற்கு முன் இருந்த மேயரான மா.சுப்ரமணியம் ஒரு சிறந்த மேயர். மற்ற ஊர் மேயர்களைப் பற்றி எனக்கு தெரியாது. மா.சு என் ஏரியாக்காரர் என்பதாலும், அவரை மிகச் சுலபமாய் அணுகக்கூடியவர் என்பதாலும் தெரியும். அவருக்கும் சென்னையின் இண்டு இடுக்கு கூட நன்கு தெரியும் அளவிற்கு பழக்கமானவர். அதே போல சைதை துரைசாமி அவர்களும் ஒரு சிறந்த மனிதநேயர். சைதை பகுதி மக்களின் பேராதவு பெற்றவர். இப்போது சென்னை மாநகர மேயர். மிக எளிமையானவர். இவரையும் மிகச் சுலபமாய் அணுக முடியும்.  இப்போதும் தன்னை நேரடியாய் காண காலையில் வீட்டில் ஒரு மணி நேரமும், மதியம் நான்கு மணிக்கு மேல் தன்னை நேரடியாய் காண அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிக் கொள்ள தன் காரியதரிசியின் தொலை பேசி எண்ணை அளித்திருக்கிறார். பார்ப்போம் என்ன செய்கிறார் என்று?
##############################################
Photo0357 Photo0351   Photo0352
Photo0350  Photo0354

சுந்தர்.சி. படத்திற்கு பிறகு, நெல்லை சந்திப்பு இயக்குனர் கே.பி.பி.நவின் அவருடய கதை விவாதத்திற்கு அழைத்திருந்தார். தயாரிப்பாளர் கொடைக்கானலில் காட்டேஜ் எடுத்து கொடுத்திருந்தார். எனக்கு மிகவும் பிடித்த மலைவாசத் தளங்களில் எப்போதும் கொடைக்கானலுக்கு முதலிடம் உண்டு. இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை எப்படியாவது போய்விடுகிறேன். நவம்பர் டிசம்பரில். தினமும் காலையில் ஏரியைச் சுற்றி ஒரு நடை போய்விட்டு வருவது எனக்கு பிடித்த விஷயங்களில் ஒன்று. ஆனால் இம்முறை எனக்கு பிடித்த எதையும் செய்ய முடியவில்லை. ஒரே மழை.பெய்தாய் நிற்காமல் மூன்று மணி நேரம் பெய்கிறது. தொடர்ந்து ஒன்னரை நாள் மின்சாரமில்லை. அநியாய க்ளைமேட். ஸோ.. மூன்று நாட்களில் திரும்பி வரவேண்டியதாகிவிட்டது. இம்முறை கிடைத்த ஒரே சந்தோஷம் ஜெமினிகணேசனின் பங்களாவில் இரண்டு நாள் தங்கியதுதான். தமிழ் சினிமாவின் ஜாம்பவான் வாழ்ந்த வீட்டில் தங்க வைத்த தயாரிப்பாளருக்கும், அதை ஏற்படுத்திக் கொடுத்த நவீனுக்கும் நன்றி. கிடைத்த கேப்பில் நான் எடுத்த படங்கள்.
###########################################
ப்ளாஷ்பேக்
தேவேந்திரன். இளையராஜாவை விட்டு பாரதிராஜா விலகி வந்தவுடன் வேதம் புதிதுக்கு இவர்தான் இசையமைத்தார். பின்பு பல படங்களுக்கு இசையமைத்தாலும் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இவர் இசையமைத்த மண்ணுக்குள் வைரம் படப் பாடல்கள். எஸ்.பி.பி இழைந்து இழைந்து பாடியிருப்பார்.



######################################
உலக நாயகன் கமல்ஹாசனுக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள். ஐஐடி மும்பையில் கமல் ஹாசன் நிகழ்த்திய உரை.
###########################################
தத்துவம்
கனவுகளோடு வாழ்வதை விட, ஞாபகங்களோடு சாவது மேல்

நான் சில பாடங்களில் தோற்றேன். என் நண்பர்கள் வெற்றி பெற்றார்கள். அவர்கள் இப்போது என்னிடம் இன்ஜினியராக வேலை செய்கிறார்கள்.நான் பில்கேட்ஸ்

என் வலியின் வெளிப்பாடுக்கான வார்த்தை மெளனம்##################################
தங்கத்தலைவி, தானைத்தலைவி, கவர்ச்சிக்கன்னி இன்னும் பெயரை வேற சொல்லணுமா? அனுஷ்க்காஆஆஆஆஆஆஆவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
#####################################

ஏழாம் அறிவு தெலுங்கு வர்ஷனில் போதி தர்மர் காஞ்சீரவத்தில்தான் பிறந்தார் என்றே சொல்லியிருக்கிறோம் என்று உதயநிதி ஸ்டாலின் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுத்துள்ளார். போதிதர்மர் கதையை யார் மாற்றினார்கள் என்று சொன்னோம். க்ளைமாக்சில் தமிழனை உசுப்பேத்தும் வசனங்கள் தான் மாற்றியமைக்கப் பட்டிருக்கிறது என்றே சொன்னோம். எங்கப்பன் குதுருக்குள்ள இல்லைன்னு மாத்தி சொன்னா எஸ்கேப்பாக முடியுமா?
#################################
யுடான்ஸ் கார்னர்
ஆதி & பரிசல், யுடான்ஸ் சேர்ந்து நடத்திய சவால் சிறுகதைப் போட்டிக்கான தேதி சென்ற மாத இறுதியுடன் முடிவுற்றது. வெற்றிப் பெற்றவர்களைப் பற்றிய அறிவிப்பு நவம்பர் 15ஆம் தேதி யுடான்ஸில் அறிவிக்கப்படும். விரைவில் இன்னும் பல சுவாரஸ்யமான போட்டிகள் விரைவில்... பதிவர்களால் பதிவர்களுக்காக நடத்தப்படும் யுடான்ஸில்.
################################
அடல்ட் கார்னர்
தன் மூன்று குழந்தைகளுடன் டிபார்ட்மெண்டல் கடைக்கு வந்தாள் ஒருத்தி. மூன்று குழந்தைகளும் படு சுட்டி, ஒன்று மாற்றி ஒன்று அதை எடுப்பதும் கீழே கொட்டுவதுமாய் இருக்க, கடுப்பாகிப் போன அந்தக் குழந்தைகளின் தாய் அவர்களைப் பார்த்து. “பேசாம உங்களையெல்லாம் முழுங்கியிருக்கணும்” என்றாள்.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Post a Comment

23 comments:

sugi said...

Present!:))

ஜோசப் பால்ராஜ் said...

மைனாக் காட்டேஜ்லயா தங்குனிங்க? அது ஒரு காலத்துல கொடைக்கானல் கிறிஸ்டியன் காலேஜோட லேடிஸ் ஹாஸ்டலா இருந்துச்சு.

Anonymous said...

Photos: Cable alla. CAP LA SANKAR.

சுதா SJ said...

ஏழாம் அறிவு மிக சிறந்த படம் அதில் எந்த மாற்றுகருத்தும் இல்லை. உங்களை போன்று எல்லாம் தெரிந்தவர்களே அப்படத்தை ஆதரிக்காமை வேதனையாக இருக்கு :(

Muthu said...

Hi Cable,

I have read most of you blogs and haven't found any info about A.K.Chettiyar.

If Shanmugapriyan hadn't informed you about A.K.Chettiyar would you have come to know about this person?

Think before you accuse others. You have avvused Murugadoss for doing the same in his file very recently.

Hope you publish this comment.

வழிப்போக்கன் said...

அன்புள்ள சங்கர்!
ஏ.கே. செட்டியார் நினைவு குறித்து நீங்கள் பதிவுசெய்துள்ள குறிப்புக்கு மிக்க நன்றி. தனது குமரிமலர் மூலம் தமிழுக்கு வளம் சேர்த்தவர். மிகச் சிறந்த காந்தியவாதி. உலகம் சுற்றிய முதல் தமிழர். கவரிங் நகைகள் பளிச்சிடும் இன்றைய தமிழ் உலகில் அசல் சொக்கத் தங்கங்கள் குப்பையில் கிடக்கும் குந்துமணியாக இருப்பது காலத்தின் கோலம்தான்.
இருட்டடிப்புக்கு ஆளான செட்டியாரை நினைத்துப் பார்க்க நீங்கள் ஒருவர் இருக்கிறீர்கள் என்பது ஆறுதல் அளிக்கிறது.

Sivakumar said...

சென்ற வருடம் ஏ.கே.செட்டியார் பற்றி சாரு இரு கட்டுரைகளைத் தன் தளத்தில் எழுதியிருந்தார்.

shortfilmindia.com said...

@Muthu
எனக்கு ஷண்முகப்பிரியனின் பெயரை போடும் நேர்மையிருக்கிறது. ஆனால் இதை செய்ய வேண்டிய மீடியா என்ன செய்தது என்பதுதான் கேள்வி.

பால கணேஷ் said...

ஐரோம் ஷர்மிளா அறியப்பட வேண்டியவர். கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட புத்தகம் மூலமாக இவரைப் பற்றி அறிந்து நெகிழ்ந்து போனேன். நீங்கள் சொன்னதன் மூலம் நிறையப் பேர் தெரிந்து கொள்வார்கள். கொத்து பரோட்டா அருமை சார்.

Anonymous said...

பகவான் தாஸ் கேஸை என்னால் ஜீரணிக்க முடியவில்லை...இந்த கேடுகெட்ட நாட்ல இருக்க அவமானமா இருக்கு. இந்த லட்சணத்துல சுய அரிப்பு படங்களும், பேச்சுகளும்...வெளங்காது.அந்த மூணு பேர் இடத்தில இருந்து யோசிக்கும்போது இந்த அதிகாரவர்க்க ........பசங்களை சாவடிக்கலாம்...தப்பே இல்ல.

தருமி said...

கமல் - என்ன இங்க்லீஷ்’பா!

அருண் said...

ரொம்ப பிசியாகிட்டிங்க போல,அதுக்கு முதல்ல வாழ்த்துக்கள்,கொத்து பரோட்டா சரியா மசாலா கலவை,இன்னிக்கு எத்தன பேருக்கு பொறந்த நாள்?இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கும் இன்னைக்கு பர்த் டேனு நினைக்கிறேன்.பாடகர் கார்த்திக்கும் இன்னைக்கு பர்த் டே,இவங்க எல்லாத்துக்கும் என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
உலக நாயகன் கமல் சார்கும் என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-அருண்-

Muthu said...

Dear Cable,

Will you be interested in taking a documentary file about AK Chettiyar?

I think you do not care about TRP ratings.

Place yourself in other's situations and reply honestly.

SURYAJEEVA said...

ஐரோம் ஷர்மிளா, குறித்த பகிர்வு மிக முக்கியமானது.. என்ன தேச பக்தி என்ற போர்வைக்குள், ராணுவத்தினர் செய்யும் அட்டூழியங்களை கண்டும் காணாமல் செல்கின்றனர் மக்கள்

IlayaDhasan said...

ஐரோம் சர்மிளாவுக்கு உள்ளூரில் சப்போர்ட் எப்படி? நீதித் துறை என்ன செய்கிறது? அவரின் டிமாண்டுகள் அவளவு
கஷ்டமா செயல்படுத்துவதற்கு? ஒன்னும் புரியல...இந்தியாவில் எல்லா விசயமும் எப்படி இவ்வளவு சாதாரணமாக
ஆகிக் கொண்டிருகிறது என்பதைக் காண வருத்தமாக இருக்கிறது.


என்னை ஏதோ செய்கிறாள்- 2 -கிரைம் தொடர்

settaikkaran said...

// அண்ணா ஹசாரேவுக்கு கிடைத்த மக்கள் ஆதரவோ, மீடியோ ஆதரவோ இவருக்கு கிடைக்காதது பெரும் குறையே.//

அண்ணா ஹஜாரேயிடம் தனது போராட்டத்துக்கு ஆதரவு தருமாறு கேட்டும் சரியான பதில் போகவில்லையே!

பிரபல பதிவர் said...

தேவையில்லாம செய்யும் புரட்சி எடுபடாது என்பதற்கு உதாரணம்தான் முதல் செய்தி....

எடுத்துக்காட்டக.. போலீஸ்காரனுங்க அராஜகம் செய்றாங்க என்ற காரணத்தால் போலீஸ் டிபார்ட்மென்டே வேண்டாம்னு உண்ணாவிரதம் இருந்தா யாரும் கண்டுக்க கூட மாட்டாங்க‌

பிரபல பதிவர் said...

இப்ப கூடங்குளத்துல கூட சில பதர்கள் இருக்காங்ளே.. தேவையில்லாம‌

Cable சங்கர் said...

@Muthu
dear muthu, if you are serious about your question my answer is yes.. are you serious enough to produce it?

Muthu said...

@Cable,

I'm not a producer or have enough money to produce a film.

Hence i don't say that others should do this.

If you have the interest and money to produce, you produce the film, else don't ask others to do it.

Cable சங்கர் said...

haa..haa.. muthu.. :))

ரைட்டர் நட்சத்திரா said...

ஷர்மிளா அவர்களை பற்றிய தீராத பக்கங்கள் தளத்தில் முழுகட்டுரையாக எழுதியிரந்தார்கள் . நீங்கள் மறுபடியும் நினைவுபடுத்தியது நன்றி.

Sharmmi Jeganmogan said...

இப்படிப்பட்ட போர்க்குணம் படைத்த வீராங்கனையின் பெயரை எனக்குத் தந்த என் தந்தைக்கு நன்றி கூறுகிறேன். இந்தியாவை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஒரு பெண் இத்தனை ஆண்டுகளாக உணவருந்தாமல் இருப்பதை யாருமே கண்டு கொள்ளமாட்டார்களா? படித்தவர்களெல்லாம் கணணிகளுக்கு பின்னால் ஒளிந்து கொள்ள, படிக்காத பாமரர்கள் தங்கள் வயித்துப் பாட்டைப் பார்த்து ஓட, தருணம் கிடைக்கும் எல்லோரும் நாட்டைச் சொரண்டிக் கொண்டோடுகிறார்கள்...