Thottal Thodarum

Nov 11, 2011

நான் – ஷர்மி - வைரம்-10

striking girl ரேஷ்மாவின் பிறந்தநாள் அதிர்ச்சிக்கு பிறகு என்னால் இயல்பாக இருக்க முடியவில்லை. அன்றைக்கு அர்ஜுனை ஆளாளுக்கு அடித்தார்கள். ரேஷ்மாவின் அம்மா “சின்னப் பையன்னு இல்ல நினைச்சேன்.” என்று சொல்லிச் சொல்லி அடித்தாள். ரேஷ்மாவின் அப்பாதான் அவனை பிரித்து அழைத்துச் சென்றார். அன்றைக்கு முழுவதும் என் உடல் நடுங்கிக் கொண்டேயிருந்த்து. வீட்டிற்கு வந்து படுத்தவள் தான் காலையில் கண் விழிக்கவில்லை. கடும் ஜுரம். நடந்ததை யாரிடமும் சொல்லவில்லை. எனக்கு உடல்நிலை சரியில்லை என்று என் நண்பர்கள் நிறைய பேர் வந்து பார்த்துப் போனதாய் சொன்னாள் அம்மா. அதில் அர்ஜுனும் ஒருவன். எனக்கு அவன் அடிவாங்கியதை நினைத்து கொஞ்சம் பாவமாய் இருந்தாலும் அவன் அன்று செய்த்தை நினைத்தால் உடலெங்கும் இன்னமும் நடுக்கம் ஓடத்தான் செய்தது. கனவுகளின் துரத்தல்களில் என் உடலெங்கும் கைகளாய் பரவி, என் குறியை, முலையை அழுத்தியது. அம்மா மட்டும் கேட்டுக் கொண்டேயிருந்தாள். “பார்டியில் என்ன ஆச்சு? என்ன ஆச்சென்று. நான் ஏதுவும் சொல்லவில்லை. ரேஷ்மாவின் அம்மா கெஞ்சிக் கேட்டுக் கொண்டாள். அவர்கள் வீட்டில் இம்மாதிரி ஒர் சம்பவம் நடந்தை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எனக்கும் அதே போலத்தான் தோன்றியது.


அடுத்த சில வருடங்களுக்கு ரேஷ்மா வீட்டில் பிறந்தநாள் விழாவே கொண்டாடுவதில்லை என்று முடிவெடுத்து விட்டார்கள். வருஷம் ஏற ஏற நான் அழகாகிக் கொண்டேயிருக்கிறேன் என்பதை என் தோழிகள் சொல்வதை வைத்து மட்டுமே இல்லாமல் என்னாலேயே உணர முடிந்தது. பார்வைகள். ஒவ்வொன்றும் உடை கிழித்து உள் நுழைந்து என் முலையையும், குறியையும் பார்க்க விழையும் பார்வைகள். வயது வித்யாசமில்லாமல் ஒவ்வொரு பார்வையும் உள் சென்று நிர்வாணமாக்குவதை அவர்கள் மறைத்தாலும், அவர்கள் கண்கள் மறைப்பதில்லை. அவர்களைச் சொல்லி தப்பில்லை. என்னை திரும்பிப் பார்க்காமல் பெண்களே போக முடியாது. வயது ஏற ஏற என்னையும் என் உடலையும் நானே ஆராதிக்க கற்றுக் கொண்டுவிட்டேன். உயரமும் இல்லாத, குட்டையும் இல்லாத உயரம். தேவையில்லாத இட்த்தில் கொஞ்சம் கூட சதை இல்லாத உடலமைப்பு. நல்ல தெளிவான முகம். லிப் க்ளாஸ் போடாமலேயே பளபளக்கும் உதடுகள். சற்றே பெரிய கண்கள். லேசாய் நீண்ட கழுத்து. ஜெல்லியை கப்பில் வார்த்து கவிழ்த்தது போன்ற த்தும்பும் மார்பகங்கள். அப்படியே கீழிறங்கி சட்டென அகலும் இடுப்பு, நீண்ட கால்கள் என்று நான் என்னையே ஒவ்வொரு நாளும் ரசித்துக் கொண்டிருப்பவள். அப்படிப்பட்ட என்னை எல்லாரும் பார்வையாலேயே துகிலுறிக்கிறார்கள் என்று கம்ப்ளெயிண்ட் செய்வது அநியாயம் என்றே தோன்றுகிறது. சில சமயம் என்னை கண்ணாடியில் பார்க்க எனக்கே மூச்சு முட்டியது.

அப்பாவின் வளர்ச்சி படு ஏறுமுகத்திலிருந்தது. அவரைப் பார்ப்பதே அபூர்வமான விஷயமானது. பத்தாவதில் நான் ஜஸ்ட் பாஸ் செய்தது பற்றி அம்மா மட்டுமே கத்திக் கொண்டிருந்தாள்.”இவ படிச்சு தான் நம்மளை காப்பாத்த போறாளா? குழந்தைய திட்டாதே” என்று அம்மாவை ஆபீஸ் போகும் அவசரத்தில் திட்டிவிட்டு, என்னை அணைத்து நெற்றியில் முத்தமிட்டு, “நீ என் அதிர்ஷ்ட தேவதை உனக்கெதுக்கு படிப்பு” என்று சொல்லிவிட்டு போனார். நான் அம்மாவை பார்த்து ஒழுங்கு காட்டியது இன்றைக்கும் ஞாபகம் இருக்கிறது. பெரிதாய் மார்க் எடுக்க மாட்டேனே தவிர, அடித்து, பிடித்து +2 வரை பாஸாகிவிட்டேன். அப்பா இந்தியாவெங்கும் கிளை ஆரம்பித்திருந்தார். அம்மா மேலும் தன் வயதை குறைக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள். அம்மாவுக்கும் வக்கீல் அங்கிளுக்குமான நெருக்கம் கொஞ்சம் அதிகமாகத்தான் இருந்தது.

டிரைவர் சுந்தரம் இப்போதெல்லாம் என்னிடம் சில்மிஷம் செய்வதில்லை. ஒரு வருட்த்திற்கு முன் வழக்கம் போல என்னை நெட்டி முறிப்பது போல முகம் வழித்து “ராசாத்தி” என்று உடல் தடவி, மார்பழுத்த, சட்டென கை தட்டி விட்டு, “இன்னொரு வாட்டி இப்படி பண்ணீங்கன்னா.. அம்மாட்ட சொல்லிருவேன்’ என்றதும் சட்டென முகம் மாறி பதிலேதும் சொல்லாமல் நகர்ந்தான்.அவனின் அடிப்பட்ட பார்வை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எனக்கு வர வர இம்மாதிரியான பார்வைகள் பழகிப் போயிருந்தது.

“என் கூட காபி ஷாப் வரியா?” என்று கேட்கும் சிரிக்கும் பார்வை.

“நீ ரொம்ப அழகாயிருக்கே ஷர்மி” என்று சொல்லிவிட்டு பார்வையை வேறு பக்கம் திரும்பிக் கொள்ளும் அடிப்பார்வை. ஏதும் பேசாமல் முகம் பார்க்காமல் தயங்கி மார்புக்கும் முகத்துக்கும் அல்லாடும் பார்வை, சுந்தரம் போல ஏதாவது சிறு முயற்சி செய்துவிட்டு, கண்டுபிடிக்கப்பட்டவுடன் வரும் ரியாக்‌ஷனின் வரும அடிப்பட்ட பார்வை. என்று என்னை பார்க்கும் பார்வைகளில் காம்ம் தான் இருந்த்தே தவிர மிக குறைவான நேரங்களில் தான் ஃப்ரெண்ட்லியான பார்வைகளை பார்க்க முடிந்த்து. அம்மா, அப்பா, சில பெரியவர்கள் என்று. தோழிகளின் பார்வையில் பொறாமை ஆறாய் ஓடும். ஆனால் அர்ஜுனிடம் எப்போது ஒரு அடிப்பட்ட பார்வை இருந்து கொண்டேயிருக்கும். அந்த நிகழ்விற்கு பிறகு அவன் என்னுடன் பேச முற்பட்ட்தேயில்லை. ஆனால் என் பின்னாலேயே நிழலாய் சுற்றுவான். ஆரம்பத்தில் எரிச்சலாய் இருந்தாலும் பழகிவிட்டது என் பின்னால் அலையும் மற்ற பசங்களுடன் அவன் இருக்கும் போது மேலும் சிரித்து பேசும் போதெல்லாம் அவன் அங்கிருக்க பிடிக்காம நகர்ந்துவிடுவான். அதற்காகவே பசங்களுடன் நான் கொஞ்சம் இழைவேன். அவன் நகர்ந்தவுடன் இவர்களை கட் செய்துவிடுவேன். என் மூட் மாற்றத்தை பற்றி இன்றைக்கு புரியாமல் என்னை குழப்பத்துடன் பார்க்கும், பேசும் பசங்கள் இருக்கிறார்கள். வயதும் அழகும் கொடுத்த திமிர் என்று நீங்கள் சொல்வீர்கள். ஆனால் அதையெல்லாம் மீறி என்னுள் ஏதோ ஒரு பொக்கிஷம் இருப்பதை போல, என்னை நானே பொத்தி, பொத்தி பாதுகாக்காப்பதிலும், அந்த பாதுகாப்பு வளையத்தை உடைக்க வருபவன் யாராக இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பிலும் ஒரு த்ரில் இருக்கத்தான் செய்தது.

என்னைப் பற்றி மட்டுமே யோசித்துக் கொண்டிருந்த காலத்தில் வாழ்க்கையை பற்றி யோசிக்க வைத்டஹ் விஷயங்கள் நடக்க ஆரம்பித்த்து. எல்லாம் நன்றாக போய் கொண்டிருப்பதில் ஒரு பெரிய சுவாரஸ்யம் இருக்காதல்லவா.? அது போல என் வாழ்க்கையை புரட்டிப் போடும் படியான ஒரு திருப்பம் என் குடும்பத்தில் நடந்தேறியது.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Post a Comment

7 comments:

மதன்செந்தில் said...

இப்படி பிட்டு பிட்டா போடாம முழுசா போட்டு புத்தகமா குடுத்துடுங்க தோழர்.. <3

கா.கி said...

சார், நிறைய சரோஜாதேவி influenceah?? இல்லை இதுதான் பின்நவீனத்துவ கதையா?? ஒண்ணும் புரியலியே :(

rajamelaiyur said...

கலக்கலா போகுது

rajamelaiyur said...

இன்று என் வலையில்

உங்கள் பள்ளி புகைபடங்களை தரும் ஒரு இனையதளம்.

balapadam said...

சுவையாக எழுதுகிறீர்கள். அருமை அருமை, எனது தளத்திற்கும் வந்து இடுகைகளை படித்து கருத்துகளை பகிர்ந்து கொள்ளுமாறு வேண்டுகிறேன். http://kadavuldharisanam.blogspot.com/

balapadam said...

சுவையாக எழுதுகிறீர்கள். அருமை அருமை, எனது தளத்திற்கும் வந்து இடுகைகளை படித்து கருத்துகளை பகிர்ந்து கொள்ளுமாறு வேண்டுகிறேன். http://kadavuldharisanam.blogspot.com/

அருண் said...

கலக்கலா போகுது,புத்தகமா ஒரே மூச்சில் படிக்கும் போது செமையா இருக்கும்.
-அருண்-