kingfisher ஏர்லைன்ஸுக்கு கடன் கொடுக்க முடியாது என்று எண்ணைய் நிறுவனங்கள் சொல்லிவிட்டதால். அவர்கள் கடையை தற்காலிகமாய் முடி வைத்திருக்கிறார்கள். பேப்பரை திறந்தால் ஆளாளுக்கு ஏதோ தங்கள் கம்பெனிக்கு ப்ரச்சனை போல பக்கம் பக்கமாய் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஏர் இந்தியாகாரர்கள் புதுசாய் இப்போது தான் தெரிந்தார் போல மன்மோகன் அரசு கார்பரேட்டுகளுக்காகத்தான் உழைக்கிறது. இதே போன்ற ஒரு சிட்ஷுவேசன் எங்களுக்கு வந்த போது உதவவில்லை என்று புலம்புகிறது. பாவம் மல்லையா தன்னுடய ப்ரைமரி ப்ராண்ட் ப்ரூவரியை அடமானம் வைத்து தொழில் செய்கிறாராம். பேங்க கடன் வேறு ஏழாயிரம் கோடியை நெருக்குகிறதாம். என்ன செய்வார் அவர். அவருக்கு உதவ வேண்டியது அரசின் கடமையல்லவா? இங்கே அவனவன் ஒரு லிட்டர் பெட்ரோல் போட்டவனெல்லாம் அரை லிட்டர் போட்டுட்டு ஓட்டிட்டு இருக்கான் அவனுக்கு என்ன செய்யலாம்னு யோசிக்க மாட்டேங்கிறாய்ங்க.. அத கேக்குறதுக்கு ஒரு நாதியில்லை.இதுல பத்திரிக்கைகள் மட்டுமில்லை, மக்களும் தொடர்ந்து தெருவில் இறங்கி போராட வேண்டாமா? ஆவர்களும் கம்முனு இருக்காங்க.. இங்க இருக்கிற மாநில அரசும் சும்மாருக்கு.. என்னங்கடா நினைச்சிட்டு இருக்கீங்க? பூமாதேவி பொங்கப் போற ஒரு நா நீங்க உசுரோட உள்ளார போவப் போறீங்க.
###################################
###################################
சேத்தன் பகத்தின் ரெவ்ல்யூசன் 2020 புத்தகத்தை விளம்பரப்படுத்த லேண்ட்மார்கின் ஒவ்வொரு கடையிலும் எழுத்தாளருடன், அந்தந்த ஊரைச் சேர்ந்த பிரபலஸ்தரையும் வரவழைத்து விளம்பரப்படுத்துகிறார்கள். சென்னையில் சூர்யாவை அழைத்திருக்கிறார்கள். நம்மூரில் புத்தகம் வெளியாகும் நாளில் மட்டும் நான்கைந்து பிரபலஸ்தர்களை கூப்பிட்டு வெளியிட்டுவிட்டு நல்ல புத்தகம்னா தானா விக்கும் என்று பொட்டியை கட்டி விடுகிறார்கள். ஆனால் ஆங்கில புத்தகத்துக்கு அப்படியல்ல புத்தகம் வெளிவருவதற்கு முன்னும், அதன் பின்னும் தொடர்ந்து புத்தகத்தை பற்றி பேசி, விவாதித்து அதை மார்கெட் செய்கிறார்கள். அப்படி யாராவது செய்தால் அது கிண்டல் செய்யப்படுகிறது. ஆனால் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அதே போன்றதொரு மார்கெட்டிங்கை சாரு தன் புதிய நாவலான எக்ஸைலுக்கு கொடுக்க முயற்சித்திருக்கிறார். அவருடய வாசகர் ஒருவர் அந்த நாவலைப் பற்றி ஒரு சிறு வீடியோ ப்ரோமோ எடுத்திருக்கிறார். இது தேவையா? என்று கேட்பவர்களுக்கு என் பதில் நிச்சயம் தேவைதான். புத்தகம் வெளிவந்த பிறகு அது நன்றாக இருக்கிறது இல்லை என்பதை பற்றி விவாதிப்போம். போட்டு தாக்குவோம். கொண்டாடுவோம். ஆனால் புத்தகம் விற்பதற்கு இம்மாதிரியான மார்கெட்டிங் தேவை என்பதே என் எண்ணம். அந்த வீடியோவின் லிங்க்
###############################
###############################
அண்ணா நூலகத்தை மூடப் போறாய்ங்கன்னு கேள்விப்பட்டதும், கும்பல் கும்பலா மக்கள் அதை பார்க்க வந்திட்டிருக்காங்களாம். நிறைய பேர் தங்கள் குழந்தைகளை கூட்டிக் கொண்டு போய் காட்டிட்டு வர்றாங்களாம். ஆஸ்பத்திரியாக்கினவுடன் போய் சுத்தி பாக்க முடியாதில்லை.அதனாலயோ?
################################
################################
புது மேயர் பொறுப்பேற்று, மழை பெய்து, காய்ந்தும் போயாயிற்று. துரித நடவடிக்கையாக செய்ய வேண்டிய ரோடு செப்பனிடுகிற வேலை இன்னும் ஆரம்பிக்கலை. அதே குண்டும் குழியிலதான் வண்டி ஓட்ட வேண்டியதாயிருக்கு. என்ன செய்யறாங்களோ தெரியலை. இதுக்கு முன்னாடி உள்ளாட்சி தேர்தல் நடக்கும் போதெல்லாம் சும்மா இருந்த ரோட்டையெல்லாம் தோண்டி, தோண்டி போட்டாங்க.. இப்ப இயற்கையே தோண்டிப் போட்டிருக்கிற ரோட்ட மூட ஆள் இல்லை. என்னாத்த சொல்றது. ஏதோ கவனிச்சா சரி..
################################
தமிழகம் எங்கும் எலைட் பார் திறக்கப் போகிறார்களாம். இங்கு வெளிநாட்டு மதுவகைகள் கிடைக்குமாம். சரக்குக்கு பில் தந்துவிடுவார்களாம். அதனால் அதிக விலைக்கு விற்க முடியாதாம். இதை அறிவிப்பது அரசு தான். அப்படியானால் இதுவரை பில் இல்லாமல் அதிக விலைக்கு விற்றுக் கொண்டிருந்தது தெரிந்தேதான் இருந்திருக்கிறார்கள். என்ன கொடுமைடா சாமி. டாக்டரு.. ஏதோ பூட்டப் போறேன்.. பூட்டப் போறேன்னு சொல்லிட்டு இருந்தியளே.. பூட்டு இன்னுமா கிடைக்கல?
#################################
################################
தமிழகம் எங்கும் எலைட் பார் திறக்கப் போகிறார்களாம். இங்கு வெளிநாட்டு மதுவகைகள் கிடைக்குமாம். சரக்குக்கு பில் தந்துவிடுவார்களாம். அதனால் அதிக விலைக்கு விற்க முடியாதாம். இதை அறிவிப்பது அரசு தான். அப்படியானால் இதுவரை பில் இல்லாமல் அதிக விலைக்கு விற்றுக் கொண்டிருந்தது தெரிந்தேதான் இருந்திருக்கிறார்கள். என்ன கொடுமைடா சாமி. டாக்டரு.. ஏதோ பூட்டப் போறேன்.. பூட்டப் போறேன்னு சொல்லிட்டு இருந்தியளே.. பூட்டு இன்னுமா கிடைக்கல?
#################################
தத்துவம்
தோல்வி என்பது வளர்ச்சி சுழற்றலில் ஒரு பகுதி. எனவே தோல்விக்கு இடம் கொடுங்கள்
தோல்வி என்பது வளர்ச்சி சுழற்றலில் ஒரு பகுதி. எனவே தோல்விக்கு இடம் கொடுங்கள்
கனவுகளுக்கு நிஜத்தை வெல்கிற சக்தி உண்டு. அதற்கான சந்தர்ப்பத்தை கொடுக்கும் போது.
இந்த உலகத்தில் நீ யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் நீ நீயாக இரு
####################################
ஜான் வில்லியம்ஸ் ஹாலிவுட் இசை உலகின் தலைசிறந்த கம்போஸர்களில் ஒருவர். 5 ஆஸ்கர்களுக்கும், 4 கோல்டன் க்ளோப் அவார்டும், 7 பாப்தா அவார்டுகளுக்கும், 21 கிராமி அவார்டுகளுக்கும், 47 அகாடமி அவார்ட் நாமிநேஷன்களுக்கும் சொந்தக்காரர் சொந்தக்காரர். ஸ்டார் வார்ஸ், ஈ.டி, ஜாஸ், ஜுராசிக் பார்க் போன்றவைகள் இவர் இசையமைத்த படங்களில் ஒன்றாகும். இவருக்கும் ஸ்பீல்பெர்க்கிக்கும், ஜார்ஜ் லூகாசிற்கும் இருக்கும் சிங்க் உலகறியும். ஸ்பீல்பெர்க்கின் பெரும்பாலான படங்களின் இசையமைப்பாளர். இன்றைய டின் டின் வரை. இவரது பேக்ரவுண்ட் ஸ்கோர் பற்றி சொல்ல வேண்டுமானால் பதிவுகள் போதாது. E.T படத்துக்கு சில வருடங்கள் முன்னால் லைவ்வாக, திரையில் படம் ஓடிக் கொண்டிருக்க, இவரது ஆர்கெஸ்ட்ராவை வைத்து இசையமைத்து கண்டக்ட் செய்து, அதை அப்படியே லைவாக படத்திற்கு பின்னணியிசையாக மிக்ஸ் செய்து திரையில் கொடுத்தது உலக பிரசித்தம். இவரைப் பற்றியும், இவரது பேக்ரவுண்ட் ஸ்கோர் பற்றியும் பேசிக் கொண்டேயிருக்கலாம் இந்த 70 சொச்ச இளைஞனைப் பற்றி. சாம்பிளுக்கு சூப்பர் ஹிட் படமான ஜாஸ் படத்தின் பின்னணியிசையை கேளுங்கள். E.T Live Score கேட்பதற்கு இங்கு சென்று டவுன்லோட் செய்து கொள்ளவும். http://www.sendspace.com/file/
########################################
ப்ளாஷ்பேக்
ப்ளாஷ்பேக்
இளையராஜாவின் மற்றும் ஒரு அருமையான மெலடி பெரிதாய் கவனிக்கப்படாமல் போன ஒன்று. எஸ்.பி.பி என்னமாய் பாடியிருப்பார் தெரியுமா?எஸ்.பி.பி ஒரு பக்கம் என்றால் வாய் திறந்து பாடாமல் வெறும் ஹம்மிங்கிலேயே ஜானகி நம்மை ஒரு சுழட்டு சுழட்டி அடிப்பார். மிக சிம்பிளான கம்போசிஷன். பின்னணியில் வரும் புல்லாங்குழலும், வயலினும் நம்மை எங்கோ கொண்டு செல்லும். பிற்காலத்தில் இளையராஜாவே இதே ட்யூனை அடிப்படையாய் வைத்து நிறைய பாடல்களை கம்போஸ் செய்திருந்தாலும் இந்தப் பாடலின் அழகே தனி. சுமன், சுமலதா, நிழல்கள் ரவி நடித்திருக்கும் ஆராதனை என்கிற இந்த படம் எழுத்தாளர் சவிதாவின் நாவலை அடிப்படையாய் வைத்து எடுக்கப்பட்ட படம். வாவ்.. என்ன மெலடி.. மொட்டை மொட்டைதான்.
####################################
அடல்ட் கார்னர்
அடல்ட் கார்னர்
தன் மூன்று பெண்களை ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொடுத்தார்கள் ஒரு தம்பதியினர். மூன்று மகள்களின் முதலிரவுகளும் அவர்கள் வீட்டிலேயே நடக்க, இரவில் தண்ணீர் குடிக்க மாடியிலிருந்து கீழிறங்கிய பெண்களின் அம்மா முதல் பெண்ணின் அறையில் அவள் அலறுவதை கேட்டாள். இரண்டாவது பெண்ணின் அறையில் சிரிப்பு சப்தத்தை கேட்டாள். மூன்றாவது பெண்ணின் அறையில் எதுவுமே கேட்கவில்லை. அடுத்த நாள் காலையில் முதல் பெண்ணிடம் “நீ ஏன் கத்தினாய்?” என்று கேட்க, அவள் “நீதானேம்மா வலியாக இருந்தா கத்தணும்னு சொல்லிக் கொடுத்தே?” என்றாள். இரண்டாவள் “கிச்சு கிச்சு மூட்டினா எப்படி சிரிக்காம இருக்க முடியும?” என்றாள் . மூன்றாமவளிடம் ஏன் நீ சத்தம் ஏதுமில்லாமல் இருந்தாய் என்று கேட்க “நீ தானே சொல்லியிருக்கு வாய்பூரா எதை வச்சிட்டும் ஏதும் பேசக் கூடாதுன்னு” என்றாள்.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
Post a Comment
18 comments:
first
அம்மாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
@Cable Ji : Enna boss
Konjam Earlya Kothu Parottava Pottuteenga ..!
aanaalum Kothu Suppper ..!
athulayum thathuvam supparoo suuppar
Regards
M.Gazzaly
( http://greenhathacker.blogspot.com )
Nice to have a kothu parotta on mid night
// என்னங்கடா நினைச்சிட்டு இருக்கீங்க? பூமாதேவி பொங்கப் போற ஒரு நா நீங்க உசுரோட உள்ளார போவப் போறீங்க.//
அது என்ன எதுக்கெடுத்தாலும் 'என்னங்கடா'? 'டீ' போட மாட்டீங்களா??
பெட்ரோல், மதுவிலை ஏற்றத்துக்கு எல்லாம் ஏன் சார் இப்படி கொந்தளிக்கறீங்க?
ஆஸ்க் அறப்போராட்டம் ஆரம்பிங்க..அலைகடல் என அணி திரள்வோம்.
//இந்த உலகத்தில் நீ யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் நீ நீயாக இரு//
/யார் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்/ - இப்படி இருந்திருக்க வேண்டுமோ??
குங்கும செங்கமலம் பாட்டு SPB பாடியது என்று தெரியாது. இப்போது தான் உங்கள் மூலம் தெரிந்து கொண்டேன். நல்ல பாட்டு
//தோல்வி என்பது வளர்ச்சி சுழற்றலில் ஒரு பகுதி. எனவே தோல்விக்கு இடம் கொடுங்கள்//
உண்மை
nice info about john williams
என்னமோ போங்க பேய்க்கும் பிசாசுக்கும் வாக்க பட்டா இப்படிதான் .....
தமிழ் நாட்டுல பூமாதேவி பொங்குனாலும் பீராதான் பொங்குவா................
Read this in orkut:
Deepika Padukone
Went to Yuvraj Singh - His form dropped
Went to Ranbeer Kapoor - His films flopped
Went to Mallya's - Their airlines flopped
When is she joining Congress? :)
ஆராதனை பாட்டு எனக்கும் ஃபேவரட்... இதுல வர இளம் பனித் துளி விழும் நேரம் பாட்டும் செம்மையா இருக்கும்.. பாஸ் கிடார்ல வழக்கம் போல ராஜா விளையாடியிருப்பாரு... சின்ன வேண்டுகோள்.. முடிஞ்ச வரைக்கும் நல்ல பாட்டோட வீடியோவ போட்ராதீங்க. பாட்டையே கெடுக்கறானுங்க.. ஆடியோ மட்டும் போடுங்க..
// சின்ன வேண்டுகோள்.. முடிஞ்ச வரைக்கும் நல்ல பாட்டோட வீடியோவ போட்ராதீங்க. பாட்டையே கெடுக்கறானுங்க.. ஆடியோ மட்டும் போடுங்க..//
இதை வழி மொழிகிறேன், அந்த காலத்தில ஹிட் அடிச்ச பாட்டை முதன் முறையாக விடியோவா பார்க்கும் போது அடச்சே என்றே இருக்கும். தேங்காவோ, ஜெய்கணேஷோ, கமலோ கொலைப்ப்ண்ணி இருப்பாங்க :-)) உதரணம் முன்னர் நீங்க போட்ட அன்பே சங்கீதா பாட்டு! உன்னை நான் பார்த்தது வெண்ணிலா மேடையில் ... பாட்டு கூட வீடியோ கொடுமையா இருக்கும்.
பல்சுவை விஷயங்களை மிக அழகாக தொகுத்துக் கொடுத்திருக்கிறீர்கள் அண்ணே. பகிர்வுக்கு நன்றி.
Have you seen Rahul Bajaj interview on Kingfisher issue? He talks sensibly.
//பூமாதேவி பொங்கப் போற ஒரு நா நீங்க உசுரோட உள்ளார போவப் போறீங்க//
அவ்வளவு சூடு சொரணை இருக்குன்னு நினைப்பா எல்லாம் மப்புல இருக்கும் போது...அட ஏங்க கடுப்பேத்துரிங்க.....
Boss, One of my friend directed a movie. If you like it, Please share it in next kothu parota..
http://www.youtube.com/watch?v=3bmRnnOWdgc&feature=share
Post a Comment