Thottal Thodarum

Nov 14, 2011

The Adventures of Tintin : The Secret Of The Unicorn

adventures_of_tintin_the_secret_of_the_unicorn_ver3
டின்டின் காமிக்ஸ் படித்தவர்கள் மிகவும் ஆவலாய் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். வெகு நாட்களுக்கு பிறகு ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் இயக்கத்திலும், பீட்டர் ஜாக்ஸனின் தயாரிப்பில் வெளிவருகிறது என்பதால் மேலும் எதிர்பார்ப்பு எகிற, ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்க, ஒரு வழியாய் வெளியாகிவிட்டது டிண்டின்.காமிக்ஸை படித்தவர்களுக்கு கதை ஒன்று புதியதாய் இருக்காது என்றாலும் புத்தகமாய் பார்த்த காமிக்ஸ் கேரக்டர்களை திரையில் பார்க்கும் ஆர்வம் இருக்கத்தான் செய்யும். காமிக்ஸே படிக்காதவர்களுக்கும் ஆர்வமிருப்பது ஒன்றும் ஆச்சர்யமில்லை.


டிண்டின் ஒரு கப்பல் மாதிரியை வாங்குகிறான். வாங்கிய விநாடியிலிருந்து அக்கப்பலை விலைக்கு கேட்டு அலைய, அவன் அக்கப்பலை தரமாட்டேன் என்கிறான். அக்கப்பலில்லிருந்து ஒரு ரகசிய பேனா வெளியே வீழ்கிறது. அது டிண்டின்னுக்கே தெரியாமல் இருக்க, அக்கப்பலை அவனிடமிருந்து கைப்பற்றி விடுகிறார்கள். ஏன் தன் கப்பல் மாதிரியை எடுத்தார்கள் என்று தேட ஆரம்பிக்க, அவனுடய அட்வென்சர் தொடங்குவதுதான் கதை.

எதிர்காலத்தில் நடிகர்களே இல்லாமல் படமெடுக்க ஆரம்பித்துவிடுவார்கள் என்று வாத்தியார் சுஜாதா சொன்னது நிஜமாகிக் கொண்டே வருகிறது. மோஷன் கேப்சரிங் டெக்னாலஜியை பயன்படுத்தி எடுக்கப்பட்ட இப்படம் நிச்சயமாய் ஒரு விஷுவல் ட்ரீட் என்றே சொல்ல வேண்டும். இதற்கு முன்னால் இந்த டெக்னாலஜியில் எடுக்கப்பட்ட அவதார் ஆல்மோஸ்ட் கொஞ்சம் கார்டூனிஷாகவும், நிஜ மனிதர்களையும் கலந்தடித்து இருக்க, இதற்கு டெக்னாலஜியை அளித்த Weta நிறுவனம் தயாரிப்பாளர் பீட்டர் ஜாக்சனின் கம்பெனி. அவர் அதற்கு அடுத்த கட்டமாய் ரைஸ் ஆப் த ஏப்ஸ் படத்தை எடுத்தார். இப்போது இந்த படத்திற்கும் அவரின் கம்பெனிதான் டெக்னாலஜி சப்போர்ட். இதில் மோஷன் காப்சரிங்கில் எடுக்கப்பட்ட காட்சிகளை காமிக்ஸ் கேரக்டர்களாய் உலவ விட்டிருக்கிறார்கள். தத்ரூபத்துக்கு சில மில்லி மீட்டர் அருகில் கொண்டு வந்துவிட்டார்கள்.
adventures-of-tintin-us-poster-01-405x600 ஸ்பீல்பெர்க் அட்வென்சர் கதை என்றதும் தன் கைவரிசையை காட்ட ஆரம்பித்துவிட்டார் என்றே சொல்ல வேண்டும், கடல், பாலைவனம், தரை, என்று சும்மா சேஸ்..சேஸ் என சேஸி மாய்கிறார். சமயங்களில் அவரின் பழைய படங்களான இண்டியானா ஜோன்ஸ், ரைடர்ஸ் ஆப்த லாஸ்ட் ஆர்க் போன்ற படங்களின் காட்சிகள் அப்படியே வருவதை மறுப்பதற்கில்லை என்றாலும் ஸ்டில் இண்ட்ரஸ்டிங். ஆனால் அவரே ஒரு பேட்டியில் தான் டிண்டின் காமிக்ஸ்களின் இன்ஸ்ப்ரேஷனில் தான் என்னுடய படங்களில் அம்மாதிரியான காட்சிகளை வைத்தேன் என்றும் சொல்லியிருக்கிறார்.

முக்கியமாய் அந்த கப்பல் போர்க் காட்சி, என்னா ஷாட்ஸ், ஆக்‌ஷன். அதே போல அந்த பாலைவனை அலைச்சலும் அட்டகாசம். அதே நேரத்தில் பைக்கில் டிண்டின்னும், கேப்டன் ஹடாக்கும் பேசிக் கொள்ளும் காட்சிகள், நாய் ஸ்நோயி சம்பந்தப்பட்ட காட்சிகளில்  நகைச்சுவைக்கு பஞ்சமில்லாதது. மோஷன் கேப்சர் நடிப்பு ஸ்பெஷலிஸ்டாய் மாறிப் போன ஆண்டி செர்கின்ஸ், நம்ம ஜேம்ஸ் பாண்ட் டேனியல் க்ரேக் எல்லாரும் நடித்திருக்கிறார்கள். முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில்

ரொம்ப நாட்களாகவே ஸ்பீல்பெர்க் டிண்டின் காமிக்ஸை படமாய் எடுக்க எண்ணி அதன் உரிமையை வாங்கியிருந்தார். முழுக்க, முழுக்க அனிமேஷனினில் எடுக்க நினைத்திருந்த நேரத்தில், பீட்டர் ஜாக்ஸன் தான் மோஷன் கேப்சரிங் பற்றி சொல்லி அவருக்கு தைரியமளித்து இப்படத்தை சாத்தியமாக்கினார். அந்த வகையில் பார்த்தால் பீட்டர் ஜாக்சன் ஒரு படி மேலே போய் ஸ்பீல்பெர்க்குக்கு குருவாகியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். கேரக்டர்களின் ரியாக்‌ஷன்களை பார்க்க வேண்டுமே அவ்வளவு அருமையாய் இருக்கிறது. 

என்ன தான் டெக்னாலஜியில் அசத்தியிருந்தாலும், பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை பார்க்கும் எஃபெட்டுதான் வருகிறதே தவிர, படத்துடன் முழுவதுமாய் ஒன்ற முடியவில்லை. நிஜ நடிகர்களை வைத்து இதே போன்ற ஆக்‌ஷன் சீன்களும், சேஸிங் சீன்களையும் பார்க்கும் போது இருக்கும் இன்வால்மெண்ட் இதில் இல்லை என்றே சொல்ல வேண்டும். ஃபேண்டஸியாகவும், கார்டூன் கேரக்டர்கள் தானே என்ற எண்ணமும் மேலோங்கியிருப்பதற்கான காரணம் திரைக்கதை கொஞ்சம் நொண்டியடிப்பதால் இருக்குமோ என்று தோன்றுகிறது.

நிச்சயம் ஒரு முறை திரையரங்குகளில் பார்க்க வேண்டிய படம். என்னதான் டிவிடி, டவுண்லோட் என்று பார்த்தாலும், தியேட்டரில், 3டி அனிமேஷனில் கிடைக்கும் உற்சாகத்திற்காகவாவது பார்க்க வேண்டும் சத்யம் போன்ற நல்ல திரையரங்குகளில். பேம் போன்ற ஒன் கே ப்ரொஜக்‌ஷன் தியேட்டரில் பார்க்காமல் இருப்பது நலம்.



மேலே உள்ள வீடியோக்களைப் பார்த்தது உங்களுக்கு மோஷன் கேப்சரிங் பற்றி கொஞ்சம் அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். அது மட்டுமில்லாம பார்த்த உடன் படம் பார்க்க கிளம்பி விடுவீர்கள் என்பது நிச்சயம்.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Post a Comment

15 comments:

ADMIN said...

நல்லதொரு விமர்சனம்.. விமர்சித்த உங்களுக்கு நன்றி ..! வாழ்த்துக்கள்..!!

ADMIN said...

எனது வலையில் இன்று
சிந்திக்க வைத்த சிறுகதை

நேரமிருக்கும்போது தயங்காமல் வந்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அளிக்க அழைக்கிறேன். நன்றி..!

நம்பிக்கைபாண்டியன் said...

ஆம், நல்ல விமர்சனம் நானும் பார்த்தேன், படம் அசத்தல், 3D ல் அசத்துகிறார்கள்,

வவ்வால் said...

கேபிள்,

நல்லா சுருக்குனு சுருக்கமா எழுதிடிங்க!

//ரொம்ப நாட்களாகவே ஸ்பீல்பெர்க் டிண்டின் காமிக்ஸை படமாய் எடுக்க எண்ணி அதன் உரிமையை வாங்கியிருந்தார். முழுக்க, முழுக்க அனிமேஷனினில் எடுக்க நினைத்திருந்த நேரத்தில், பீட்டர் ஜாக்ஸன் தான் மோஷன் கேப்சரிங் பற்றி சொல்லி அவருக்கு தைரியமளித்து இப்படத்தை சாத்தியமாக்கினார். அந்த வகையில் பார்த்தால் பீட்டர் ஜாக்சன் ஒரு படி மேலே போய் ஸ்பீல்பெர்க்குக்கு குருவாகியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.//

ஹி..ஹி ஸ்பீல் பெர்க் கு மோஷன் கேப்சரிங்க் என்றால் என்னனு தெரியாதா, மோஷன் கேப்சர் வைத்து மிரட்டியவரே அவர் தான் ,ஜுராஜிக் பார்க்லாம் பார்க்கலையா?

நீங்க 3டி அஹ் மோஷன் கேப்சர் கூட குழப்பிகிட்டிங்கனு நினைக்கிறேன். மட்ரிக்ஸ் படம், ஸ்பைடர் மேன் எல்லாம் மோஷன் கேப்சர் தான் கொஞ்சம் 3டி.ஷ்ரக் படம் ஆஸ்கார் வாங்கியது எபெக்ஸ்ட்காக.

லார்ட் ஆப் தெ ரிங்ஸ் , நார்னியா எல்லாம் 3டி, +மோஷன் கேப்சர் இருக்கும். அவதார் அதுல புது மென்பொருள் பயன்படுத்தியது அவ்வளவு தான்.

வவ்வால் said...

டின் டின் 100% கேப்சர்ட் கேரக்டரா? அப்படினா வேலை செய்ய எளிது தான் , மனிதர்களையும், கிராபிக்ஸ் சேர்த்து சிங்க் பன்றது தான் கஷ்டம்.

vanila said...

eager to watch!.

Cable சங்கர் said...

வவ்வால்.. ஸ்பீல்பெர்க்குக்கு மோஷன் கேப்சரிங் பற்றி தெரியாது என்று சொல்ல வில்லை. முழு அனிமேஷனாய் எடுக்க இருந்த படத்தை மோஷன் கேப்சரிங் மூலம் அனிமேஷனாக் மாற்ற பீட்டர் ஜாக்சனின் கம்பெனி வீடா உதவி செய்ய அதற்கான சாத்தியங்களை சொல்லி ஊக்குவித்தவர் பீட்டர் ஜாக்சன். ஸோ.. இங்கே அவரை பற்றி சொன்னதற்க்கான காரணம். இவ்வளவு விஷயம் தெரிந்தவர் இன்னும் ஒருடெக்னாலஜி பற்றி புரிந்து கொள்ள கற்று கொள்ள விழைந்ததை பற்றி சொல்லத்தான்.

rajamelaiyur said...

விமர்சனமே பார்க்க தூண்டுகிறது

rajamelaiyur said...

இன்று என் வலையில்

சன் டி.வி அரசுடமையாகிறது- பரபரப்பு செய்தி

மதுரை அழகு said...

மோஷன் கேப்சரிங் VIDEO - USEFUL LINK

Thamira said...

’சீக்ரெட் ஆஃப் தி யுனிகார்ன்’ காமிக்காக மட்டுமல்ல, 40 நிமிட 2டி கார்டூன் படமாகவும் வந்திருக்கிறது ஐயா.! தகவலுக்காக..

N.H. Narasimma Prasad said...

இந்த படம் நான் வசிக்கும் உகாண்டாவிற்கு வந்தால், கண்டிப்பாக திரையரங்கில் பார்த்து ரசிப்பேன். பகிர்வுக்கு நன்றி.

IlayaDhasan said...

சிங்கையில தனியா ஒரு கடையே வச்ருக்காங்க டின் டினுக்கு..படம் பாக்கலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.
பாத்துட வேண்டியது தான்!

In mine:

விஜய் சொன்னது சரியா?

Venkatesh Kumaravel said...

படமும் பிடிக்கலை. உங்க விமர்சனமும் பிடிக்கலை :|

வவ்வால் said...

கேபிள்,

மோஷன் கேப்சர் என்பது ரொம்ப பழைய டெக்னாலாஜி தான், இப்போ இந்த வகை 3 டி புரொஜெக்‌ஷன் தான் புதுசு.

உங்களுக்கு 3டி அனிமேஷன், மோஷன் கேப்சரிங்க் என்பதற்கும் 3டி புரொஜெக்‌ஷன் என்பதற்கும் குழப்பம் இருக்கு என நினைக்கிறேன்.

3டி ஸ்கேனிங் மூலம் ஸ்கின் செய்து அனிமேஷனுக்கு டின் டின் ல பயன்படுத்தி இருக்காங்க, (எல்லா அனிமேஷனுக்கும் மோஷன் கேப்சர் தேவை) எந்திரன்லயும் இது இருக்கு. நாம கம்மியா பயன்படுத்தி இருக்கோம், அவங்க படம் முழுக்க , + 3டி புரொஜெக்‌ஷன் அவ்ளோ தான்.