Thottal Thodarum

Nov 12, 2011

குறைந்த செலவில் கலாஅனந்தரூபா கொடுக்கும் மீடியா பயிற்சி

மீடியாவில் பணியாற்ற வேண்டுமென்ற ஆர்வம் பல பேருக்கு உண்டு.  அதிலும் முக்கியமாய் டெக்னிக்கல் துறையில் நுழைய பல பேருக்கு ஆர்வமுண்டு. ஆனால் அதற்கான ஊக்குவிப்பை யாரும் தருவதில்லை. அப்படியே அவர்களுக்கென்று ஒரு தேடலோடு தேடி கண்டுபிடித்து போகலாம் என்றால் அதற்கான சரியான பயிற்சி மையங்கள் ஸ்பெஷலாய் இல்லாமல் இருக்கிறது. ஒருவர் எடிட்டிங் கற்றுக் கொள்ள வேண்டும் என்றால் யாராவது ஒரு எடிட்டரிடம் போய் உதவியாளராய் சேர்ந்து அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாய் அவருடன் பணியாற்றி தொழிலை கற்றுக் கொள்கிறார்கள். திரைப்படக் கல்லூரிகள் சொல்லிக் கொடுக்கிறார்கள். ஆனால் அங்கேயும் ஒரு சர்டிபிகேட் கோர்ஸ் போலத்தான் சொல்லிக் கொடுக்கிறார்களே தவிர அவர்களுக்கான வேலைப் வாய்ப்பு கிடைக்குமா? என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் இதற்கான வேலை வாய்ப்புகள் கிடைக்க அதற்கான நெட்வொர்க்கை பிடிக்க வேண்டும். அதிலும் முழுவதுமாய் நமக்கான பயிற்சிகளை கொடுப்பார்கள் என்ற உறுதியும் கிடையாது.


இப்படியிருக்க கலாஅனந்தரூபா மீடியா லேப் எனும்  நிறுவனம் இத்துறையில் அர்வமுள்ளவர்களுக்கு பயிற்சியும் கொடுத்து, வேலை செய்வதற்கு ஒரு ப்ராஜெக்ட் வாய்ப்பும் கொடுக்கிறார்கள். ஆப்பிள், ஆண்ட்ராய்ட், அடோப் என்ற மூன்று நிறுவனங்களில் சர்டிபிகேட் கோர்ஸுகளை நடத்தவிருக்கிறார்கள்.

ஆர்வமுள்ளவர்கள் இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயனடைவீர்கள் என்று கேட்டுக் கொள்கிறோம். மேலும் இந்நிறுவனத்தை நிறுவி நடந்த்தி வரும் திரு. தியாகராஜ்குமாரை பற்றியும், கலாஅனந்தரூபாவை பற்றியும் அறிந்து கொள்ள  https://www.facebook.com/note.php?note_id=10150342447556533 பக்கத்திற்கும் இவர்களின் செயல்பாடுகள் குறித்து அறிந்து கொள்ள  https://www.facebook.com/kalaanantarupahartcenterrtnagarbangalore செல்லவும்.
எஸ்.கே.

Post a Comment

3 comments:

vanila said...

Its a good start, and i do have 2 appreciate this move. keep going.and that too, between your tight schedule, u r doing this, that makes sense.

SURYAJEEVA said...

பகிர்வுக்கு நன்றி தோழர்

arul said...

thagavalukku nandri