எனக்கு அனிமேஷன் படங்கள் மிகவும் பிடிக்கும். சாதாரண படங்களில் கிடைக்காத சந்தோஷம் எனக்கு இம்மாதிரியான படங்களில் கிடைக்கும். லயன் கிங் படத்தை உட்லான்ஸ் சிம்பொனியில் ஆறு மணி காட்சி பார்த்துவிட்டு, மீண்டும் அடுத்த காட்சி பார்த்தவன். இம்மாதிரியான கதைகளில் பெரும்பாலும் உறுத்தாமல் நீதி சொல்வார்கள். பல சமயம் மனதை நெகிழவும் செய்துவிடுவார்கள். சமீப கால அனிமேஷன் வளர்ச்சி மேலும் என்னைப் போன்ற அனிமேஷன் ரசிகர்களை கட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.
மம்பிள் டேப் டான்ஸிங் கிங்கான பென்குவினுக்கு ஒரு ப்ரச்சனை. மம்பிளின் மகன் எரிக்குக்கு டான்ஸின் மீது ஒரு அதிருப்தி. அவனுக்கு இண்ட்ரெஸ்ட், ரோல் மாடல் எல்லாமே செவேனா பென்குவின் மேல் தான். ஏனென்றால் பென்குவின்களிலேயே பறக்கும் தன்மையுடையது அது ஒன்று தான். அதனை பார்க்க எரிக் கிளம்பிவிட, அவனைத் தேடி மாம்போ கிளம்பிப் போகிறது. எரிக்கை கண்டு பிடித்து வரும் வழியில் எலிபண்ட் சீலுடன் ப்ரச்சனை. அதை சமாளித்து அதற்கே உதவி செய்துவிட்டு வந்தால். பென்குவின் கூட்டம் பூராவும் ஒரு பெரிய பனி மலை சரிவில் எங்கேயும் போக முடியாத பள்ளத்தில் மாட்டி கொள்கிறார்கள். இவர்களை மம்பிள் எப்படி காப்பாற்றுகிறான். பறக்கும் செவென் பெங்குவின் உண்மைதானா? எரிக் தன் தந்தையை புரிந்து கொண்டானா? என்பது தான் கதை.

கதை என்று பார்த்தால் சாதாரண கதைதான். ஆனால் அதை சொன்ன விதத்திலும், படமாக்கிய விதத்திலும் தான் நம்மை அசர அடிக்கிறார்கள். மீண்டும் நம்மை அண்டார்டிக்கா பனி மலைகளில் உலாவ விட்டிருக்கிறார்கள். அவ்வளவு தத்ரூபமான அனிமேஷன். 3டியில் இன்னும் அட்டகாசம். ஆல்மோஸ்ட் அவர்களுடனேயே இருப்பது போல் இருக்கிறது. முக்கியமாய் படத்தில் வரும் இரால் வகை வில் அண்ட் பில் ஜோடி. அந்த கேரக்டர்கள் மூலம் குழுவாய் ஒற்றுமையாய் வாழ்வதை பற்றி சொல்லும் கருத்துக்கள். அதே போல எலிபண்ட் சீல் கும்பல். அந்த காட்சியும், அந்த சீல் ஒரு பெரிய பள்ளத்தில் மாட்டிக் கொண்டுவிட, அதை காப்பாற்ற இன்னொரு பெரிய சீலை உசுப்பி விட்டு பனித்திரையை உடைக்கும் காட்சி. சூப்பர். க்ளைமாக்ஸில் மம்பிள் தன் டாப் டான்ஸிங்கின் மூலம் தன் இனத்தை காப்பாற்ற முயலும் போதும், சீல்கள் கும்பலை வைத்து ஜெயிப்பதும் விஷுவல் எக்ஸ்ட்ராவென்ஸா.. என்றே சொல்ல வேண்டும்.
படம் நெடுக அந்த இரால் கேரக்டர்கள் மூலமான நகைச்சுவை. மம்பிள் கேரக்டரின் செண்டிமெண்ட். இயற்கைக்கு மாறாக ஒரு விஷயம் இருக்க முடியாது என்பதை நிருபிக்க செவன் எனும் பறக்கும் பெங்குவினின் பின்னணி, ஆபத்தில் உள்ளவர்களுக்கு எதிரியாக இருந்தாலும் உதவுவது என்பது போன்ற நீதிகளை சுவாரஸ்யமாய் தான் சொல்லியிருக்கிறார்கள். க்ளைமாக்ஸில் எரிக் பென்குவின் பாடும் பாடலும், அதன் வலியும் உருக்கம். மாட் டேமன், பிராட் பிட், ராபி வில்லியம்ஸ் போன்ற ஜாம்பவான்கள் தங்கள் குரல்களில் அபாரமாக நடித்திருக்கிறார்கள். தயவு செய்து இந்த படத்தை ஃபேம் போன்ற தியேட்டர்களில் பார்த்து தொலைக்காதீர்கள். 3டி படு மொக்கையாய் உள்ள தியேட்டர்களில் அதுவும் ஒன்று. ஐ ரெகமண்ட் சத்யம்.

Happy Feet -2 - 100/140
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
Post a Comment
12 comments:
வில்-பில் வசனங்களும், முதல் இரு பாடல்களும் நன்றாக இருந்தன. வொர்த் புல் மூவி. அதுவும் உங்களைப்போன்ற மழலைகளுக்கு ஒரே குஷிதான் போங்க.
ஆமாம் அங்கிள்.
pls stop criticizing fame..we all came to know about fame from your previous posts..so when you are repeating again then it make us to feel that you have some personal interest.
Thanks for your review.. my new movies watch list is mainly based on your review.
என்னது 100/140...? உங்க இஷ்டத்துக்கு கணக்கு போடுறது...
ticket விலை 120+20 3டி கண்ணாடியோடு சேர்த்து. படம் வொர்த் 100
//pls stop criticizing fame..we all came to know about fame from your previous posts..so when you are repeating again then it make us to feel that you have some personal interest.//
i want to reach every viewers who are watching in fame.. so.. i often write about that.. if you are aware iam happpy that one of our reader aware of that theatre quality.
wokin wokey.
nice post (www.astrologicalscience.blogspot.com)
mmmM !!
Paarthida Vendiyathu than !! But Sri Lanka la Intha mathiri Nalla Padangala Nallave Late Aagithan Poduraanga so namakku Torrent than Help panuthu ! ;((((
3D layum Paarka Mudiyurathu illa !!
Ippa than SMURFS pottu irukkanga !!
:((
Regards
M.Gazzaly
(http://greenhathacker.blogspot.com)
** Waiting for Mayakkam Enna Review !!
எனக்கும் அனிமேஷன் படம் பிடிக்கும் ,,
வணக்கத்துடன் :
ராஜா
விஜய் மற்றும் அஜித் இணைந்து வழங்கும்…..
Solitingala... pathida vendeyathu than
I EXPECT REVIEW FOR 'PAALAI'
Post a Comment