ஏற்கனவே சித்தார்த்துக்கும், ஸ்ருதிக்கும் என்னமோ.. ஏதோ என்று தெலுங்கு பட உலகமே கிசுகிசுத்துக் கொண்டிருக்கும் வேலையில் வந்திருக்கும் படம். பிரபல தயாரிப்பாளர் தில் ராஜுவின் தயாரிப்பில் அதிரடியான இசையையும், நட்பையும் காதலையும் அடிப்படையாய் கொண்ட படம். இந்த காம்பினேஷனே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி நல்ல ஓப்பனிங்கை கொடுத்திருக்கும் படம். எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்ததா? என்று பார்ப்போம்.
சித்தார்த்தும், ஸ்ருதியும் சிறு வயது முதலே நெருங்கிய நண்பர்கள். சித்தார்த்தின் அப்பா ஒரு அரசு அதிகாரி, சித்தார்த்தின் குடும்பமும், ஸ்ருதியின் குடும்பமும் பக்கத்து பக்கத்து வீட்டில் வசிப்பதால் இருவருரின் நட்பு மிக நெருக்கமாய் இருக்கிறது. இந்நிலையில் சித்தார்த் மும்பையில் எம்.பி.ஏ படிக்கிறேன் என்று சொல்லிவிட்டு மியூசிக் படித்துவிட்டு வருகிறான். அவருக்கு சிங்கர், லீட் கிடாரிஸ்டாவது தான் லட்சியம்.இதனால் தந்தைக்கும் மகனுக்கும் உரசல் ஓடிக் கொண்டிருக்கிறது. ஸ்ருதி எதிலும் ஸ்திரமாய் யோசித்து முடிவெடுக்கும் கேரக்டர். இருவரது கேரக்டர் வேறாக இருந்தாலும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுக்காமல் நட்பை பேணுகிறவர்கள். ஸ்ருதிக்கு நவ்தீப்பின் மீது காதல் வர, சித்தார்த்துக்கு ஹன்சிகாவின் மேல் காதல் வருகிறது. இருவரின் காதலுக்கும் வீட்டில் பச்சை கொடி காட்டப்பட, சித்தார்த்தின் இசை போட்டி நிகழ்ச்சிக்காக ஒன்றாய் போகிறார்கள். அங்கு இவர்களது நட்பின் நெருக்கம் சந்தேகத்துக்குள்ளாகிறது. அதனால் இருவரது காதலிலும் விரிசல் உண்டாகிறது. இருவரின் நட்பு காதலானதா? அவர்களது காதல் என்னானது? என்பதுதான் கதை.
சித்தார்த்துக்கு அல்வா சாப்பிடுவது போலான கேரக்டர் மிக இயல்பாய் ஒரு துள்ளலான இளைஞனை கண் முன் கொண்டு வந்துவிடுகிறார். ஸ்ருதியுடன் சுற்றும் போது ஆண் பெண் பேதமில்லாத நட்பின் உடல் சார்ந்த உணர்வில்லாத ஒரு நெருக்கத்தை இருவருமே மிக அழகாய் கொடுக்கிறார்கள். அப்பாவின் பழைய வண்டியை மாற்ற சொல்லும் போதும், தன் முதல் சம்பாதியத்தில் ஒரு பைக் வாங்கிக் கொடுத்தவுடன் வண்டியில் போகாமல் நக்கல் விட்டு போகும் போதும், ஹன்சிகாவை பார்த்ததும் பித்து பிடித்தார்ப் போல அலைவதும், அந்நாட்களில் சித்தார்த்தை மிஸ் செய்யும் ஸ்ருதி கோபித்துக் கொண்டு சென்னைக்கு ஒரு கோர்ஸுக்கு போகும் நேரத்தில் தான் செய்த்து சரிதானென்று சொல்லி, மற்றவர்களுக்கு புரியலைன்னா பரவாயில்லை உனக்கு கூடவா புரியவில்லை என்று கேட்கும் காட்சிகள் என்று எல்லா காட்சிகளிலும் ஸ்கோர் செய்கிறார்.

ஸ்ருதிக்கும் சித்தார்த்துக்கு நிஜ வாழ்க்கையிலிருக்கும் நெருக்கம் இப்படத்திற்கு மிக அருமையாய் செட் ஆகியிருக்கிறது. அவ்வளவு அந்யோன்யம். பேசிக் கொண்டேயிருக்கும் போது பின்பக்கம் காலால் எட்டி உதைக்கும் காட்சிகள், சித்தார்த், ஹன்சிக்காவின் பின்னால் சுற்றிக் கொண்டிருக்கும் காலத்தில் சித்தார்த் இல்லாமல் கஷ்டப்படும் காட்சி, தனக்காக போட்டிக்கு போன இடத்தில் சித்தார்த் சண்டை போட்டதினால் வாய்ப்பு பறிபோய் நிற்கும் போது போடும் சண்டை, தன் உட்பி நவ்தீப்பின் ஆசையை விட நண்பனின் ஆசை, அவனுடய வெற்றி தான் முக்கியம் என்று முடிவெடுத்து அவனுடய வெற்றிக்கு பின்னாலிருந்து கொடுக்கும் தைரியம், என்று எல்லா காட்சிகளிலும் ஸ்கோர் செய்திருக்கிறார். இது போல நட்பு நமக்கு கிடைக்காதா? என்று சில சமயம் ஏங்க வைத்ததில் ஸ்ருதி வெற்றி பெறுகிறார் என்றே சொல்ல வேண்டும்.
நவ்தீப், ஹன்சிகா இருவருக்கு கொடுத்த கேரக்டரில் இருவருமே தம்தம் பாத்திரங்களை உணர்ந்து செய்திருக்கிறார்கள். ஹன்சிகாவுக்கு பாட்டெல்லாம் உண்டு. பெரும்பாலும் க்ளிவேஜ் காட்டிக் கொண்டே வருவதால் முகம் பார்த்து ரசிக்கமுடியாமல் போனதில் கொஞ்சமே வருத்தம். இன்னும் இளைக்க வேண்டும் ஹன்சிகா.. இல்லை மொத்துவானி பட்டம் நிச்சயமாகிவிடும்.

படத்தின் முக்கியமான ஒரு விஷயம் பாடல்கள். மிக பெப்பியான பாடல்களை கொடுத்திருக்கிறார் பாடல் இசையமைப்பாளர் ராகுல் ராஜ். பின்னணியிசையமைத்த மணிசர்மா தன் கடமையை செவ்வனே செய்திருக்கிறார். விஜய் கே சக்ரவர்த்தியின் ஒளிப்பதிவு ரம்யம். கேரளா காட்சியில் கொடுக்க வேண்டிய குளூமையையும், ராக் பாண்ட் போட்டியில் கொடுக்க வேண்டிய விஷுவல் இம்பாக்டை சரியான விகிதத்தில் கொடுத்து, படம் நெடுக யூத்புல்லான ஃப்ளூடோனை உபயோகித்து ஒரு ஃப்ரெஷ்னைஸை கொடுத்திருக்கிறார்.
எழுதி இயக்கியவர் புதியவரான வேணு ஸ்ரீராம். ஆணுக்கும் பெண்ணுக்குமிடையே நட்பு என்பதே இருக்கக்கூடாதா? இருக்காதா? என்று அடித்து காயப் போட்ட லைன் தான் என்றாலும் முதல் பாதி முழுவதும் ஃப்ரெஷான திரைகதையினால் போரடிக்காமல் போகிறது. இரண்டாவது பாதியில் தான் கொஞ்சம் இழுத்தடிக்கிறார்கள். முக்கியமாய் சித்தார்த், ஸ்ருதியின் நட்பினிடையே நவ்தீப், ஹன்சிகாவுக்கு ஏற்படும் சந்தேகங்களும், அதனால் வரும் ப்ரச்சனைகளும் கொஞ்சம் ஒன்சைடாகவே இருப்பது போல தோன்றுகிறது. நிறைய பேசுகிறார்கள். ஆனால் அதை எல்லாவற்றையும் க்ளைமாக்ஸ் முடிவு நெகிழ வைத்து விடுகிறது. இப்படத்தைப் பொறுத்தவரையில் இக்கதையை தங்களின் வாழ்கையில் தொடர்ப்பு படுத்த முடிந்தவர்களுக்கு ஒரு அற்புதமான படமாய் தெரியும். மற்றவர்களுக்கு என்னத்து இவ்வளவு ஃபீல் செய்கிறார்கள் என்று தோன்றுவதை தவிர்க்க இயலாது. மொத்தத்தில் ஒரு ஃபீல் குட் தெலுங்கு படம்.

Oh My Friend –30/50
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
Post a Comment
12 comments:
இது போன்ற படங்கள் பயங்கர Fake-ஆக தோன்றுகிறது. இயல்பை விட்டு வெகு தொலைவில் இருந்தாலும் இயல்பாக இருப்பது போல் காட்டிக்கொள்கிறது.. மணிரத்னம் படம் போல!
ஏங்க இது இந்தி படமா இல்லை தமிழ் படமா! இல்லை தெலுங்கு படமா!
விமர்சனம் அருமை .. எல்லா மொழி படத்தையும் அருமையா அலசிரிங்க
இன்று என் வலையில்
அஜித் : THE REAL HERO
இந்த கதைய பார்த்தா ஏற்கனவே பிரசாந்தும் ஷாலினியும் நடிச்ச படம் மாதிரி தெரியுதே???
தமிழில் சில வருடங்களுக்கு முன் வந்த பிரியாத வரம் வேண்டும் படத்தின் கதையோடு ஒத்துப் போகிறதே...
நல்ல விமர்சனம்.
தமிழ் படம்மெல்லாம் எங்க எந்த language ல சுட்டதுனு கரெக்டா சொல்லிடுவிங்க ஆனா இந்த படம் நம்ம பிரியாத வரம் வேண்டும்னு சொல்லாம விட்டுட்டிங்களே சங்கர் sir.
கதை மட்டும் இல்ல scenes கூட அப்பிடியே இருக்கு, அதுல ஷாலினி music competition போவாங்க இதுல சித்தார்த்..........
வித்த்கன் release ஆயிட்டா? விமர்சனத்துக்காக காத்துகிட்டு இருக்கேன்..
பிரியாத வரம் வேண்டும் நிறம் என்ற மலையாள படத்தின் ரீமேக். அதே மாதிரி படம் ஹிந்தி 'Jaane Tu Jaane Na'
தமிழில் அஜித், ஷாலினி நடித்து ராஜா என்ற பெயரில் வந்தது என்று நினைக்கிறேன்.
யாரு கமல் பொண்ணு சுருதியா , சித்தார்த் கூடவா ..அப்ப பிளாசே வோ யாரோ என்னாச்சு ?
ரூம் போடுங்க ப்ளீஸ்!
Piryamana thozhi,Piriyadha varam vendum, jolly(abbas,koushalya)pondra padangalay mixieil pottu saaru pizhindhu kuduthrukanga...kosura 7g father sentiment...
நல்ல அலசல்.
Post a Comment