Thottal Thodarum

Nov 18, 2011

Rock Star

நாற்பது லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கி ஆதரவு தந்து கொண்டிருக்கும் அன்பு வாசகர்களுக்கும், சக பதிவர்களுக்கும் என் நன்றிகள் பல. சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
rockstar-wallpaper-28-10x7 ரண்பீர்கபூர், நர்கிஸ் ஃபக்ரி, ஏ.ஆர்.ரஹ்மான், இம்தியாஸ் அலி, என்று வரிசைக் கட்டி நிற்கும் ஹிட் லிஸ்ட். பாடல்கள் வெளியாகி ஒரு விதமான ட்ரான்ஸ் நிலைக்கு தள்ளப்பட்டவர்களில் நானும் ஒருவன். படத்தின் ப்ரொமோ வீடியோக்களினால் அட்ரிலின் ஏறி நரம்பு புடைக்க பாட வேண்டும் என்று தோன்ற வைத்த சாகஸமான் விளம்பரம் எல்லாம் சேர்ந்து கொடுத்த ஹைப்பை திருப்தி படுத்தினார்களா? என்று கேட்டால் ஓரள்வுக்கு பண்ணியிருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.


ஜனார்தன் என்கிற ஜே.ஜேவுக்கு தான் ஒரு ராக்ஸ்டார் ஆக வேண்டும் என்று கனவு. ஆனால் அவ்வுலகில் நுழைவதற்கு சரியான வழி எதுவென்று தெரியாமல் அலமலந்து கிடக்கிறான். அவனுடய பாடல்கள் ரசிக்கப்பட்டாலும் போற்றப்படாதது ஏன் என்றே தனக்கு புரியவில்லை என்று புலம்பிக் கொண்டிருக்கும் போது, அவனது காட்பாதர் போன்றவர் வாழ்க்கையில் வலியில்லாதவன் எப்படி கலைஞனாவது. நல்ல கலைஞன் ஆவதற்கு வாழ்க்கையின் வலி தெரிய வேண்டும் அப்போது தான் ஜெயிக்க முடியும் என்கிறார். தன் வாழ்க்கையில் வலி வேண்டுமென காலேஜிலேயே பிரபலமான அழகியான ஹீரிடம் தான் காதலிப்பதாய் சொல்ல, அவள் அவனை அவமானப்படுத்தி துறத்துகிறாள். அதனால் தான் வாழ்க்கையில் வலி ஏற்பட்டு ஒரு சிறந்த கலைஞன் ஆவோம் என்று நினைத்தவனுக்கு எல்லாமே தலைகீழாய் போய் விடுகிறது.  ஆனால் அவன் மிகப் பெரிய ராக்ஸ்டார் ஆகிறான். அவன் காதல் ஜெயித்ததா? இல்லையா? என்பதுதான் கதை.
rockstar-wallpaper-32-10x7 படத்தின் முதல் காட்சியில் ஒரு சிறு வீடியோ துணுக்குப் போல ஜோர்டனுக்காக ரசிகர்கள் அலைவதையும், அவனுக்காக கூடும் கூட்டத்தையும் காண்பிக்கப்பட, ஜோர்டன் நான்கைந்து பேருடன் சண்டையிட்டு, ஓடி வந்து லட்சக்கணக்கான ரசிகர்கள் கூடியிருக்கும் மைதானத்துக்குள் நுழைந்து, ரெஸ்ட்லெஸ்சாக, அங்கும் இங்கும் அலைந்தபடி, கிடாரை மாட்டிக் கொண்டு ஸ்ட்ரிங்க்சை மீட்ட, கட்.. இங்கே சிறு வயது காலேஜ் மாணவன் ரன்பீர் டேலண்ட் ஹண்டில் பாடிக் கொண்டிருக்கிறார். பார்த்த மாத்திரத்தில் அட.. என்று எதிர்ப்பார்ப்பை கூட்டுகிறது திரைக்கதை. அதன்பிறகு ரண்பீர், தன் காதலை நர்கிஸிடம் தெரிவிக்க ஆரம்பித்த காட்சியிலிருந்து, லீனியராக போய்க் கொண்டிருந்த கதை, நான் லீனியராய் மாறி முன்னுக்கும் பின்னுக்குமாய் அலைய, மாண்டேஜுகளில் காட்டப்படும் காட்சிகள் இன்னும் நம்மை அடுத்த கட்ட ரசனைக்கு தயார் படுத்துகிறது. சில மாண்டேஜுகள், அதுவும் ரண்பீர் ஒரு பாடலை ஆரம்பிக்க, அடுத்தடுத்த் வரிகள் வேறு வேறு களம், இடம் என்று மாறிக் கொண்டேயிருக்க, நடக்கும் நிகழ்வுகளின் கோர்வை அபாரம். பக்கர் ஆப் என்பதை பர்கர் ஆப் என்று புரிந்து கொள்ளும் அளவுக்கு அப்பாவியான ரண்பிருடன் நாளடைவில் நர்கிஸ் க்ளோஸாக பழகி, அவனுடன் தலையில் தொப்பி அணிந்து பிட்டு படம் பார்ப்பதும், லோக்கல் சாராயத்தை வாங்கி அடித்துவிட்டு கொட்டமடிப்பதும், இளமை கொண்டாட்டம். நடுநடுவே ஜிக்சாக்கில் போய் வரும் காட்சிகள் கொடுக்கும் தாக்கங்கள் வேறு இன்னும் எதிர்பார்ப்பை கொடுக்க, இடைவேளை விட்டதும் ஒரு மாதிரி பேஸ்த் அடித்தது போலிருந்தது. அட.. இவ்வளவு அருமையாய், ஒரு இசைக் கலைஞனின் வாழ்க்கையை காட்ட முடியுமா? என்று ஆச்சர்யப்பட்டதை. இரண்டாவது பாதியில் அப்படியே உட்டாலக்கடி ஆகி, அத்வான காட்டிற்குள் நின்று போன வண்டி போல எங்கும் போக முடியாமல் அம்போவென நிற்கிறது திரைக்கதை.
rockstar-wallpaper-34-10x7 ரண்பீரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். முழு படத்தையும் தன் தோளின் மீது சுமக்கிறார். இசை ஆர்வமிக்க இளைஞனாய், இசையைத் தவிர மற்ற விஷயங்களில் கொஞ்சம் தத்தி என்றே கூட சொல்லலாம். வலி இருந்தால் தான் கலைஞனாவான் என்றதும், நர்கீஸிடம் காதலைச் சொல்லி திட்டு வாங்கிவிட்டு, தன் காட்பாதர் கடையில் சமோசாவுக்கு சட்னி கொஞ்சமாய் கொடுத்தற்கு சண்டை போடுவதும், நர்கீஸுடம்  பிட்டு பட தியேட்டருக்கு போய்விட்டு, நாட்டு சாராயம் அடித்து ஊர் மேயும் போதாகட்டும், அதே ரண்பீர் ஜோர்டனாகி, ரெஸ்ட்லெஸ் இளைஞனாய் அலையும் போதாகட்டும், கொஞ்சம் ஆங்காங்கே சின்னத்தம்பி போல ரியாக்‌ஷன்கள் இருந்தாலும் அற்புதமான நடிப்பு. காதலியை வேறு ஒருவன் திருமணம் செய்த பின்பு அவளின் மீது உள்ள காதல் குறையாமல் அதை பாடலாய் வெளிப்படுத்தி உலகெங்கும் பிரபலமான ராக்ஸ்டாராகி, ஒரு விதமான ரெஸ்ட்லெஸ் ஆசாமியாய், தன் போக்கிற்கு போய் அலையும் இலக்கில்லாத இளைஞனை கண் முன் நிறுத்தியிருக்கிறார். ஹாட்ஸ் ஆப் ரண்பீர்.
rockstar-wallpaper-35-10x7 நர்கீஸ் ஃப்கீர். பார்க்க இன்னொரு கத்தரினா கைய்ப் போல இருக்கிறார். குள்ளம். ஆனால் அசத்தும் அழகு. முதல் பாதியில் மிக சுலபமாய் தன் கேரக்டரை சுமந்து போகும் இவர் இரண்டாம் பாதியில் கதை முழுவதுமே தன் தோள் மீது மாற்றப்பட, அதை தாங்க முடியாமல் திணறுகிறார். காதலை விட முடியாமல் நோய் வாய்படும் காட்சிகள் எல்லாம் படு செயற்கை. நடிப்பும். இரண்டாம் பாதியில் அவர் கேரக்டர் மீது ஏற்றப்பட்ட பாரம் தாங்காமல் தள்ளாடுகிறார். ஷம்மிக்கபூர் நடித்த கடைசி படம். ப்யூத் மிஸ்ரா, ஷெனாஸ் படேல் ஆகியோர் கிடைத்த கேப்பில் தங்களை பதிவு செய்ய தவறவில்லை.

படத்தின் ரியல் ஹீரோ யார் என்றால் ரஹ்மான் தான். மனுஷன் அட்டகாசப் படுத்தியிருக்கிறார். பாடல்களிலும், பின்னணியிசையிலும். தர்காவில் கவாலி பாடிக் கொண்டிருக்க, அவர்களுடன் ரன்பீர் கிடாருடன் சேருமிடத்தை  கேளுங்கள். வாவ்.. என்ன ஒரு ஜுகல்பந்தி. அவனின் வலியை, காதலை, உற்சாகத்தை சொல்லும் பாடல்களாட்டும், ஒரு இசை ராஜாங்கமே நடத்தியிருக்கிறார் ரஹ்மான். அந்தக் கவாலி.. அஹா.. படத்தில் காட்சிகளோடு கேட்டுப் பாருங்கள் மெய்மறந்து போய்விடுவீர்கள். சடா ஹக் பாடலை கேட்டு நரம்பு புடைகக் நாமும் பாட ஆரம்பித்துவிடுவோம். படத்தின் திரைக்கதையில் இசையும் ஒரு கேரக்டராய் இருப்பதால் அது எங்கேயும் தனித்தோடாமல் இழைந்து, குழைந்து, கோபப்பட்டு, அழுது, குமுறி என எல்லா உணர்வுகளையும் கொடுத்து நம்மை ரன்பீருடனேயே உலவச் செய்கிறது. ஹாட்ஸ் ஆப் ரஹ்மான். ரஹ்மானுக்கு ஈடாய் இன்னொருவரையும் பாராட்ட வேண்டுமென்றால் பாடகர் மோஹித் சவுகானைத்தான் பாராட்ட வேண்டும். என்ன ஒரு எக்ஸ்பிரஷன்ஸ்.. Awesome.. ரஹ்மானின் கம்போசிங்கை அதன் சாரம் குறையாமல் அத்துனை உணர்வுகளை அள்ளிக் கொடுத்து பாடியுள்ளார்.  ரஹ்மானின் இசையை அதன் அழகு கெடாமல் அள்ளியெடுத்து விஷுவலாய் கொடுத்த இயக்குனருக்கும் பாராட்டுக்கள். என்னா ஒரு வீஷுவல்கள். இந்த வீஷுவல்களை பார்ப்பதற்காகவே தியேட்டரில் பார்கக் வேண்டும். கீழே உள்ள வீடியோக்களைப் பார்த்தால் நிச்சயமொரு முறையாவது தியேட்டரில் பார்க்கலாமே என்ற எண்ணம் தோன்றுவது நிச்சயம்.

ஜப் வி மெட், லவ் ஆஜ் கல், ஆகிய படங்களின் இயக்குனர் இம்தியாஸ் அலி என்பதால் எதிர்பார்ப்பு நிறைய. முடிந்த வரையில் பூர்த்தி செய்ய முயன்று தோற்றிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். என்ன ஒரு ஸ்டைலிஷான ப்ரெசெண்டேஷன், ஷாட்டுகள், கதை சொல்லும் முறை,  மாண்டேஜுகளில் நம்மை அசர வைக்கிறார். அபாரமான உழைப்பு படம் நெடுக தெரிகிறது. ஆனால் அவ்வளவு உழைப்பும், நான் லீனியாராய் கதை சொன்னதில் அடிபட்டு போய்விடுகிறது. வலி இருந்தால்தான் கலைஞன் ஆக முடியும் என்ற கேரக்டருக்கு வலி கொடுக்க வேண்டும் என்பதற்காகவே காதலி வேறொருவனை மணப்பது, ரண்பீர் அவளை மறக்காமல் கல்யாணம் ஆனவள் என்று தெரிந்தும் உருகுவதும், எந்த ஒரு இலக்குமில்லாமல் போரடித்துபோயே உடல் நலமில்லாமல் போகும் நர்கிஸின் கேரக்டர், எதற்காக ரண்பீரை பிடித்தும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறாள்? ரண்பீருக்கு ஏன் குடும்பம் என்று அவ்வளவு பேர் இருந்தும் பெரிதாய் அவனைப் பற்றி கவலைப் படவில்லை? ரண்பீர் ஏன் ரெஸ்ட்லெஸ்ஸாக அலைய வேண்டும். அதுவும் காதலிக்கு திருமணம் என்று தெரிந்திருந்தும் அவன் அப்படி ஆவதற்கான காரணம்? என்று ஏகப்பட்ட கேள்விகள் தொடர்ந்து வருவதால் படத்தின் சுவாரஸ்யம் புஸுக்கென போய் விடுகிறது. வாழ்க்கையின் வலி தான் நலல் கலைஞனாக்கும் என்பதை சொல்லிவிட்டு, எந்த வலியையும் சரியாய் சொல்லாமல் அரைகுறை உணர்வாய் போனதால் படம் எடுபடாமல் போய்விட்டது என்றே சொல்ல வேண்டும். ஆனாலும் இம்தியாஸின் அபாரமான மாண்டேஜுகளும், பாடல்களை படமாக்கிய விதமும், ரண்பீரை நம் கண் முன்னே ராக்ஸ்டாராய் உலவ விட்டதற்காகவும், பாராட்ட வேண்டும்.
Rock Star – 35/50
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Post a Comment

11 comments:

shabi said...

1st
2 or 3 நாள்ல DVD print வந்தா பாத்துடலாம்

shabi said...

நர்கிஸிடம் தெரிக்க(தெரிவிக்க) ஆரம்பித்த...

CS. Mohan Kumar said...

என்னது நாப்பது லட்சமா? அவனவன் ஒன்னு ரெண்டு லட்சத்துக்கே அல்லாடுறான். காதில் புகை வர வைக்கிறீர். சரி சரி.. சீக்கிரம் ஒரு கோடி ஹிட்ஸ் அடிக்க வாழ்த்துகிறேன்

புது ஹீரோயினை போய் தானை தலைவி கத்தரினா கைய்ப் உடன் ஒப்பிட்ட கேபிளை எதிர்த்து சைதாபேட்டையில் சாலை மறியல் செய்ய ஐடியா..

rajamelaiyur said...

வாழ்த்துகள் ..

rajamelaiyur said...

இன்று என் வலையில்


விஜய் Vs அஜித் : யாருக்கு ரசிகர்கள் அதிகம் ஒரு மெகா சர்வே

சேகர் said...

நான் இன்னும் பாட்டே கேக்கலையே.இனிமே தான் கேக்கணும்.

குறையொன்றுமில்லை. said...

நான் பாட்டு எல்லாமே கேட்டிருக்கென். படவிமரிசனம் நல்லா பன்ரீங்க.இங்க எந்த எஃப்.எம் திருப்பினாலும் ராக் ஸ்டார் பாட்டுதான் வரும். பாட்டெல்லாம் நல்லாவே இருக்கு.

விமல் said...

ரன்பிரீன் நடிப்பும் ரஹ்மானின் இசையும் அருமை. ஆனால் காஷ்மீரில் நடக்கும் சம்பவங்கள் பெரும்பாலும் Mere Brother Ki Dulhan படத்தை ஞாபகப்படுத்துகிறது. முதல் பாதியில் அப்பாவியாய் காட்டிவிட்டு பின்பு திமிர் பிடித்தவனாய் சித்தரிக்கப்பட்டதும் நெருடுகிறது. கண்டிப்பாய் ஒருமுறை பார்க்கவேண்டிய படம்.

ஜானகிராமன் said...

Very good review. I'm addicted to "Kun Faya Kum" of this movie. Great A.R.R

KARTHIK said...

பயக்குன் குன்பய பாட்ட விட்டுட்டீங்களே....
நல்ல விமர்சனம் தல :-))))

Jay said...

இன்றுதான் திரைப்படம் பார்த்தேன். Hum to, Naadan parinada என்று எல்லாப் பாட்டுமே பிடித்திருந்தது. இரண்டாம் பாதியில் காதலை எப்படிக் காட்டுவது என்று தெரியாமல் கதை கொஞ்சம் தடம் மாறுகின்றது. கிளைமாக்ஸ் பாடல்கள் சூப்பரோ சூப்பர். காட்சியமைப்புகளும் அருமை.