நம் எதிர்கட்சி தலைவர் மானஸ்தர். வீரர். சூரர் என்றெல்லாம் எலக்ஷனினின் போது பேசினார்கள். அவர் சினிமாவில் மட்டுமே மாத்தி மாத்தி கைநீட்டி அறிக்கை விடத் தெரிந்தவர் என்று மீண்டும் மீண்டும் நிருபித்து வருகிறார். கொஞ்ச நாள் முன்னாடி நடந்த ஒரு சம்பவத்தை பற்றி இங்கே சொல்ல வேண்டும். நித்யானந்தாவின் லீலைகள் பிரபலமான பின் எல்லாம் அடங்கிவிட்டபின் இவர்களின் செய்திகளுக்கு ஏதாவது பரபரப்பூட்ட வேண்டும் என்று அச்சமயத்தில் நடிகை மாளவிகா அவரின் ஆஸரமத்துக்கு போனதை ஸ்ரோலில் போட்டு எட்டு மணி செய்திகளை பாருங்க.. பாருங்க என்று இம்சித்துக் கொண்டிருந்தார்கள். செய்திகளிலும் காட்டினார்கள். இது நடந்தவுடன் நித்யானந்தாவின் சீடர் அவரைப் பற்றி செய்திகளை போடக்கூடாது என்று கோர்ட் ஸ்டே வாங்கி வந்தாக சொல்லி, இனி போடக் கூடாது என்று சொல்லியிருக்கிறார்கள். அதையும் மீறி இவர்கள் மறுநாளும் அதையே போட, நித்யானந்தாவின் சீடர்கள் அவரது சேனல் அலுவலகத்திற்கு முன்பு ஆர்ப்பாட்டம் செய்தார்கள். அவர்கள் ஆர்பாட்டம் செய்ததையும் இவர்கள் படம் பிடித்து செய்திகளில் போட்டார்கள். போலீஸ் பாதுகாப்பெல்லாம் போட்டு நடந்த விஷயங்கள் இவை.
செய்திகளை தருவதில் ஏதும் பாரபட்சம் காட்டமாட்டோம் என்று சொன்னவர்கள் தற்போது அதே கேப்டன் டிவியில் காலையில் நித்யானந்தாவின் சீடர்கள் சேனலுக்கு பணம் கட்டி அவரைப் பற்றிய நிகழ்ச்சியை ஒளிபரப்புகிறார்கள். திருட்டு தில்லாங்கடி என்று தெரிந்த பிறகு அவரை ஆதரித்து வரும் அந்த அரை மணி நேரம் நிகழ்ச்சிக்கு அவர்களிடமிருந்து 25,000 + சர்வீஸ் டேக்ஸோடு வாங்கிக் கொண்டு பக்தியை பரப்புகிறார்களாம். என்ன கொடுமைடா இது.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
Post a Comment
24 comments:
Money Money Money.
Money Money Money.
என்னங்கண்ணே பண்றது
அவருக்கு 2G or 3G தெரியாது.
அதனால குருG-யை நம்பி பொழப்ப ஓட்டுறாரு...
அவரு TV-ய பாத்துதான் நமக்கு பக்தி வரணுமான்னே?
என்னங்கண்ணே பண்றது
அவருக்கு 2G or 3G தெரியாது.
அதனால குருG-யை நம்பி பொழப்ப ஓட்டுறாரு...
அவரு TV-ய பாத்துதான் நமக்கு பக்தி வரணுமான்னே?
பாஸ்...செவனேன்னு கெடந்த சிறுத்தைய சொரண்டி பாத்துட்டீங்க. இனிமே உங்களுக்கு பொங்கல்தான்.
அது அரசியல் - இது பிஸ்னெஸ்
கேபிள் ஜீ ஆணைக்கு அற்றம் என்றால் குதிரைக்கு குற்றம் என்கிறீர்கள். முதலில் நடந்தது அரசியல். பின்னர் நடந்தது வியாபாரம். ஒரு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், நான் உங்கள் தளத்தில் "கேபிள் சங்கர் பக்கங்கள் படிக்கவே படிக்காதீர்கள்" என்று விளம்பரம் கொடுத்தாலும் அதை நீங்கள் வெளியிட வேண்டும், நான் அதற்கான காசு கொடுக்கும் பட்சத்தில். அது தான் வியாபாரத்தின் தார்மீகம். அது தான் சட்டமும் கூட. இடம் தர முடியாது என்றெல்லாம் கூற இயலாது. நான் கடை விரிக்கும் பட்சத்தில் எனது எதிரிக்கும் சேர்த்து தான் கடை விரிக்கிறேன்.
sathya priyan avargale.. idam thanthuvittu poda koodathu enbathu sari. aanal cable ji solvathai neengal thaan purinthukollavillai pol ullathu. iravu 8 manikku nan thirudan endru seithiyil potuvittu, marunaal kaalai nan solum ubathesaththai poduvathu entha vithathil nyayam agum. antha nigalchiyai oliparappa koodaathu enbathai thaan cable ji solkiraar.
To Sathya Priyan: இது கேபிளின் தளம் என்றால்.. "கேபிள் சங்கர் பக்கங்கள் படிக்கவே படிக்காதீர்கள்" என்று விளம்பரம் கொடுத்தால், நீங்கள் கொடுக்கும் காசிற்காக அவர் அதை வெளியீட்டால் அது எவ்வளவு பச்சோந்தி தனமோ அதுதான் அவர் டுபாக்கூர் எம்ஜிஆர் பற்றி சொல்வதும்!!
அரசியல் வேறு வியாபரம் வேறா? ஹா.ஹா..
what you say about kuda
amman padam, panpu padam and madridra padam poduranga in kalaigar tvla
Niti matter : we know about un biosed tv channel Sun TV and Nakkeran who published this news.
@SathyaPriyan
கேபிள் ஜீ ஆணைக்கு அற்றம் என்றால் குதிரைக்கு குற்றம் என்கிறீர்கள். முதலில் நடந்தது அரசியல். பின்னர் நடந்தது வியாபாரம். ஒரு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், நான் உங்கள் தளத்தில் "கேபிள் சங்கர் பக்கங்கள் படிக்கவே படிக்காதீர்கள்" என்று விளம்பரம் கொடுத்தாலும் அதை நீங்கள் வெளியிட வேண்டும், நான் அதற்கான காசு கொடுக்கும் பட்சத்தில். அது தான் வியாபாரத்தின் தார்மீகம். அது தான் சட்டமும் கூட. இடம் தர முடியாது என்றெல்லாம் கூற இயலாது. நான் கடை விரிக்கும் பட்சத்தில் எனது எதிரிக்கும் சேர்த்து தான் கடை விரிக்கிறேன்.
super
குமரேஷ் மற்றும் ரஃபீக் அவர்களே,
நான் இங்கே வக்காலத்து வாங்குகிறேன் என்பதற்காக நான் ஒன்றும் டுபாக்கூர் சாமியாரையோ அல்லது கறுப்பு எம்ஜீஆரையோ நெஞ்சில் பச்சை குத்திக் கொண்டு வழிபாடு செய்து கொண்டிருக்கிறேன் என்று பொருள் இல்லை :-)
நான் கேட்க வந்தது சட்டதில் அதற்கு இடம் இருக்கிறதா? என்பதே.
incident 1 is News
incident 2 is advertisment
there are so many Tv channel putting advertisment even in Kalaigar TV(
( through MR. MK is anti Hindu (not anti Hindu not anti-religios) there are so many advertisment of Hindu functions and its products), even they put spl program on Vinayagar Chathurthi as Holiday spl program compare to that it is 175000 core times better.
Vijayakant who God and God man , so i dont think its anything wrong in that.
MR. Sanaranarayanan writes this as he usual. hope he understand.
”சாரு”வின், ஆஸ்தான சீடர் என்று நிரூபித்துவிட்டீர்கள். சாருவிடமிருந்து பாராட்டுமழை பொழிந்ததனால் எந்த பாரில் பார்ட்டி வைத்தீர்கள் என தெரியாது???
naren.. நான் அவ்வளவு ஒர்த் இல்லை..:)
சார் சார்.. நீங்க இவ்ளோ அப்பாவியா சார்?
சன் டிவி-யில் வர்ற விளமபரம் எல்லாம் தாயநிதி சொல்வதாகவும், கலைஞர் டிவி யில் வரும் விளம்பரம் எல்லாம் கருணாநிதி சொல்வதாகவும், ஜெயா டி.வி யில் வரும் விளம்பரங்களை முதல்வரே சொல்வதாகவும் எடுத்துக்கொள்வீர்களா?
ஒவ்வொரு விளம்பரத்தையும் அப்படி யோசித்துப் பார்த்தால் செம்ம காமெடியாக இருக்கும்... தாமசு பார்டி சார் நீங்க.. :)
பறக்கும் குதிரை
நான் அப்பாவி அல்ல, கலைஞர், தயாநிதி, கலாதிதி எல்லாம் பார்த்தவன் தான். அவர்கள் தான் டூபாக்கூர் என்றும் இவர் தான் தமிழகத்தை காக்க வந்திருக்கும் அவதாரம் என்று நினைத்து பேசும் ஆட்களுக்கான பதிவு இது. உங்களுக்கு அல்ல. நன்றி
கலைஞர், தயாநிதி, கலாதிதி எல்லாம் பார்த்தவன் தான். அவர்கள் தான் டூபாக்கூர் என்றும் இவர் தான் தமிழகத்தை காக்க வந்திருக்கும் அவதாரம் என்று நினைத்து பேசும் ஆட்களுக்கான பதிவு இது. உங்களுக்கு அல்ல
--
கலைஞர், தயாநிதி, கலாதிதி டூபாக்கூர் அல்லது இல்லையா. உங்க கருத்து என்ன
பின்னூட்டம் இட்டவர்களுக்கு,
ஒரு சேனல் நடத்துவதற்கென நெறிமுறைகள் உள்ளன. காசு கொடுத்தால் எதை வேண்டுமானாலும் ஒளிபரப்ப வேண்டும் என்ற கட்டாயம் எந்த தொலைக்காட்சிக்கும் கிடையாது. சொல்லப்போனால் விளம்பரதாரர் நிகழ்ச்சிகளைக்கூட முழுமையாக பார்த்து தணிக்கை செய்து ஒளிபரப்புவது சேனலின் கடமையாகும். எந்த சாமியாரின் நிகழ்ச்சியையாவது(இந்து,கிறித்துவ, முஸ்லிம்,etc) சன் டிவியில் நீஙகள் காசு கொடுத்து காட்ட செய்தால் அந்த செலவுடன் மேலும் ஒரு லட்ச ரூபாய் தர நான் தயார்!
இதனால் நான் சன்னின் ஆதரவாளன் என்று நினைக்க வேண்டாம். வியாபாரத்திலும் கொள்கைகளை கைபிடிக்க முடியும் என்பதற்கான உதாரணம் மட்டுமே!
கேப்டன் ரொம்ப காய்ஞ்சிபோயிருக்காரு.....எதோ ஒரு வருமானம் வந்தா சரின்னு தான்....
Dear ECR,
We know (atleast i know) the channel etics of Sun TV. when its started it used to put TSN and all its kind. why it is not getting published now becasue the Cost of advertisment and Sun TV will lose its audience on that time.
for other channel they have no other go.
there is no business etic in this matter on sun Tv it is business management.
if you are ready pay me 1 core(for the advertishment) i will ready for your challange.
everything money and money and money.
no business etic and others.
@muthukumar,
TSN டெலிமார்கெட்டிங் விளம்பரமே தவிர , மதகுரு விளம்பரம் கிடையாது. தவிர நான் இங்கே சன் டிவீக்கு ஜால்ரா அடிக்க வரவில்லை. விஷயம் தெரியாதவர்களுக்கு தகவல் சொல்ல மட்டுமே!
making money in business is ethics... thats all.
Post a Comment