திருவல்லிக்கேணி என்றதும் அங்கிருக்கும் மேன்ஷன்களும், பெரியதும், சின்னதுமாய் இருக்கும் ஹோட்டல்களையும், மெஸ்களையும் யாரும் மறக்க முடியாது. எந்த ஊரிலிருந்து வந்தாலும் பெரும்பலான இளைஞர்களின் முதல் அடைக்கலம் திருவல்லிக்கேணியாகத்தான் இருக்கும். நண்பர், பத்திரிக்கையாளர் பாலாவை சந்திக்க மதியம் திருவல்லிக்கேணிக்கு போயிருந்தேன். நல்ல பசி, ”தலைவரே நல்ல மெஸ்சா சொல்லுங்க” என்றேன்.
“வாங்க நம்ம பாரதி மெஸ்சுக்கு போவோம்” என்று அழைத்துச் சென்றார்.
திருவல்லிக்கேணி பாரதி ரோட்டில், அதாவது இட்லி சாம்பாருக்கு புகழ் பெற்ற ரத்னா பவனிலிருந்து பீச்சுக்கு வலது பக்கம் திரும்புவோமில்லயா அந்த ரோட்டின் பேர் பாரதி ரோடு. ஒரு நூறு மீட்டர் நடந்தால் இடது பக்கமாய் ஒரு பெரிய பாரதியின் படம் போட்ட ஒர் வழிகாட்டி விளம்பரம் இருக்கும். பாரதி மெஸ் என்று. அந்த தெருவின் பெயர் அக்பர் தெரு. உள்ளே நுழைந்தவுடன். முதல் கட்டடமே பாரதி மெஸ்தான் வாசலிலேயே பாரதியார் முண்டாசோடு வரவேற்றார்.
பார்த்த மாத்திரத்திலேயே இடம் பிடித்துவிட்டது. ஒரு சின்ன நீளமான இடம். அதில் இடிபாடில்லாத நிலையில் டேபிள்கள் போடப்பட்டு, பாஸ்ட் புட் பாணியில் நின்று கொண்டு சாப்பிடும் வகையில் ஏற்படுத்தப்பட்டிருந்ததும், சுவரெங்கும் பாரதியின் படங்களும், அவரைப் பற்றிய சிறு குறிப்புகளுமே விரவியிருந்தது இம்ப்ரசிவாக இருந்தது. நாற்பது ரூபாய் சாப்பாடுக்கு. ஒரு வட்ட தட்டில் சின்னச் சின்ன கிண்ணங்களில் சாம்பார், ரசம், காரக்குழம்பு, பொரியல், கூட்டு, ஊறுகாய், அப்பளம், அது தவிர அதில் ஒரு சிறு தட்டில் சாதம் போட்டு சாப்பிட வைத்திருந்தார்கள். அதில் ஒரு குட்டியூண்டு மசால் வடை. அநேகமாய் இந்த வடை மேட்டர் தினம் மாறும் என்று நினைக்கிறேன். அதனுடன் சூடான சாதத்தை ஒரு ஹாட்பேக்கில் ஒரு குட்டி கரண்டி போட்டு தருகிறார்கள். அட பார்க்கும் போதே அசத்துகிறார்களே என்று நினைத்து சாதத்தை எடுத்து போட்டு, துளி காரக்குழம்பை கலந்தடித்து, ஒரு கவளம் சாப்பிட்டவுடன் கண்கள் கலங்கியது. வாவ்… அட்டகாசம். அவ்வளவு சுவையான காரக்குழம்பு. நான் மூன்று முறை வாங்கிச் சாப்பிட்டேன். அளவான காரத்துடன், முழு மிளகையையும், சின்ன வெங்காயத்தையும் போட்டு, திக்காக ஒரு குட்டியூண்டு கப்பில் கொடுத்தார்கள். நாக்கில் ஒட்டியது. அடுத்து வந்த சாம்பார், ரசம் என்று எல்லா அயிட்டங்களுமே அசத்தலாய் மெஸ்களுக்கு என்று இருக்கும் டெம்ப்ளேட் சுவையில்லாமல் வீட்டுச் சாப்பாடு போல இருந்தது. அதிலும் ரசமும், காரக்குழம்பும்.. ம்ம்ம்ம்........ மவுத் வாட்டரிங்..
கடையில் வாசலில் ஒரு சின்ன பூத் வைத்திருந்தார்கள். அதில் நிறைய பத்திரிக்கைகள் போடப்பட்டிருந்தன. “இங்கு இருக்கும் பத்திரிக்கைகளை எடுத்துக் கொண்டு போய் படிக்கலாம் இலவசம்” என்று போட்டிருந்தார்கள். இன்னொரு சிறு அலமாரியில் பாரதியின் கவிதைகள் 20 ரூபாய்க்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. “என்னஜி.. கடை ஓனர் இலக்கியவாதி போலருக்கு?” என்றேன் நண்பர் பாலாவிடம்.
“அட சொல்லலையில்லை. இதை நடத்துறவர் பத்திரிக்கையாளர் கண்ணன். தினமலர்ல இருந்தாரு. இவர் ஒரு குறும்பட, ஆவணபட இயக்குனரும் கூட” என்றார். நிச்சயம் ஒரு அருமையான, சுவையான, நிறைவான, டிவைனான வீட்டு சாப்பாட்டுக்கு நான் கேரண்டி.
“அட சொல்லலையில்லை. இதை நடத்துறவர் பத்திரிக்கையாளர் கண்ணன். தினமலர்ல இருந்தாரு. இவர் ஒரு குறும்பட, ஆவணபட இயக்குனரும் கூட” என்றார். நிச்சயம் ஒரு அருமையான, சுவையான, நிறைவான, டிவைனான வீட்டு சாப்பாட்டுக்கு நான் கேரண்டி.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
Post a Comment
13 comments:
அண்ணே டிவைன் விட்டு விட்டீர்களே. உங்க சாப்பாட்டு கடையில் அது தானே பேமஸ்
சுவையான பதிவு
நண்பர்களே ..
மாணவர்களுக்காக ஒரு சிறு முயற்சி இது ..
உங்கள் கருத்துகளையும் , ஆதரவையும் எதிர்பார்கிறேன் .
மாணவர்களுக்காக கைகோர்க்கலாம் வாருங்கள்.
தவிச்ச வாய்க்கு தண்ணி கொடுத்த வனையும் , உப்பு போட்டவனையும் மறக்காத தமிழ் பண்பாடல்லவா நம் பண்பாடு.- http://www.idhayampesukiren.blogspot.com/
இப்பவே போய் சாப்டனும் போல இருக்கு
நேசமுடன்
ருத்ரா
"பார்த்த மாத்திரத்திலேயே இடம் பிடித்துவிட்டது."பொண்ணு வீடு பாக்க போன மாதிரி இருக்கு ஜி.
இப்ப வேண்டுமானால் சன்ல் விள்ம்பரம் போடாமல் இருக்கலாம் ஆரம்பகாலங்களில் காலையில் எப்பவும் TSN
டிவைன் பழசு கண்ணா பழசு
மௌத் வாட்ரிங் புதுசு கண்ணா புதுசு
Divine is in the last sentence :))
காரக் குழம்பு பார்க்கவாவது அங்க போகணும்.நன்றி சங்கர்.
kallakureenga sankar anna
www.astrologicslcience.blogspot.com
நீங்க வீட்ல எப்ப சாப்பிடுவீங்க?
எல்லா ஐட்டங்களும் நேர் எதிரே இருக்கும் அடையாறு ஆனந்த பவனில் விற்பதில் பாதி விலை! அதற்கு இனையான அல்லது கூடுதலான தரம். ஆனால் ஒன்று. நின்றபடியே சாப்பிடுவது டிபனுக்கு ஓகே, சாப்பாட்டை ஃபுல் கட்டு கட்டுவதற்கு என்ன இருந்தாலும் உட்கார்ந்து ஆர அமர சாப்பிட்டால்தான் திருப்தி...!
சரவணன்
Post a Comment