பதிவர்களே… நண்பர்களே.. வாசகர்களே.. அனைவரும் வருக..
பதிவர்களால் பதிவர்களுக்காக நடத்தப்படும் திரட்டியான “யுடான்ஸ்” நடத்தும் முதல் விழா. ஆதி+பரிசல்+யுடான்ஸ் இணைந்து நடத்தும் விழா. ஆரம்பிச்ச கொஞ்ச நாள்லேயே நம்ம திரட்டிக்கு நீங்க கொடுத்த ஆதரவு கொஞ்ச நஞ்சமல்ல. அபாரமான ஆதரவு. மூன்று மாதங்களில் 50 ஆயிரம் அலெக்ஸா ரேங்கிங்கிற்கு வந்துள்ளது எல்லாம் உங்களால் தான். அதே போல சிறுகதைப் போட்டிக்கு நீங்கள் கொடுத்த ஆதரவையும், அங்கீகாரத்தையும் மறக்கவே முடியாது. இவையெல்லாம் வெற்றிகரமாய் நடந்தேறியது உங்களால் தான். அதற்கு யுடான்ஸ் சார்பாக என் நன்றிகள் பல.
இந்நிகழ்வு வெற்றிகரமாக நடக்க உறுதுணையாக இருந்த நண்பர்கள், பங்கேற்பாளர்கள், வெற்றியாளர்கள், கடும்பணி மேற்கொண்ட நடுவர்கள் அனுஜன்யா, ஸ்ரீதர் நாராயணன், அப்துல்லா என அனைவருக்கும் இந்த நேரத்தில் மீண்டும் எங்கள் மனப்பூர்வமான நன்றியையும், அன்பையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
இடம் : டிஸ்கவரி புக் பேலஸ்
6, முனுசாமி சாலை (மாடியில்)
கே.கே.நகர்.
நிகழ்ச்சி நிரல் :
6.00 : வரவேற்பு
வரவேற்புரை - கேபிள் சங்கர்
பரிசளிப்பு நிகழ்வு
(பிரபல, மூத்த பதிவர்கள், சிறப்பு அழைப்பாளர்கள், வெற்றியாளர்களுக்கு பரிசுப் பத்தகங்களை வழங்குவார்கள்)
சிறப்பு அழைப்பாளர்கள்
இயக்குனர் பத்ரி (வீராப்பு, ஐந்தாம்படை, தம்பிக்கு இந்த ஊரு)
இயக்குனர் கே.பி.பி.நவீன் ( உச்சக்கட்டம், நெல்லை சந்திப்பு)
போட்டி மற்றும் கதைகள் குறித்த ஒரு பார்வை - எம்எம்.அப்துல்லா
(இரண்டு போட்டிகளிலும் நடுவராக இருந்தமையாலும், மற்ற நடுவர்கள் வெளியூர்க்காரர்கள், வருவது சந்தேகம் என்பதாலும் அப்துல்லாவை கேட்டிருக்கிறோம். அவர் கொஞ்சம் பிஸியானவர் என்பதால் நம்ப முடியாது. ஆகவே அவர் வராவிட்டால், யாராவது A4 சைஸ் பேப்பரில் கண்டெண்ட் குறித்து குறிப்பாக பாராட்டி எழுதிக் கொண்டுவந்தால் அதைப் பார்த்து, தணிக்கை செய்தபின் வாசிக்க அனுமதிக்கப்படுவார்கள். ஆகவே வருகிறவர்கள் எதற்கும் தயாராக வரவும்.. ஹிஹி ஹிஹி)
நன்றியுரை - பரிசல்காரன்
நிறைவு
நிகழ்ச்சித் தொகுப்பாளர் - கார்க்கி
பதிவர்கள், இணையத் தோழர்கள் அனைவரும் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பு செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டு, விழாவுக்கு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
நன்றி.
அன்புடன் -
கேபிள் சங்கர்
ஜோஸப் பால்ராஜ்
பரிசல்காரன்
ஆதிமூலகிருஷ்ணன்
Comments
niraiya pathivarkal(chennai pathivarkal utpada) erodu pathivar sangamathirku sentru vittathaaka kelvi pattene....
புலவர் சா இராமாநுசம்