Thottal Thodarum

Dec 21, 2011

Mission Impossible -4

TomCruiseMissionImpossibleGhostProtocolPT_event_main
மிஷன் இம்பாஸிபிள் முதல் இரண்டு பாகங்களுக்கு நான் அடிமை. மூன்றாவது பாகம் எனக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை. ஆனால் அதே நேரத்தில் பார்க்காமல் இருக்க முடியவில்லை என்பதை ஒத்துக் கொண்டுதான் ஆக வேண்டும். அதற்கேற்றார் போல படத்தின் டிரைலர் வேறு என்னை கவர்ந்திழுக்க இதோ மிஷன் இம்பாசிபிள்.


ஏதன்ஹண்ட் தன் குழுவோடு தீவிரவாதி ஹெண்ட்ரிக்கை தேடியலைகிறான். தீவிரவாதி ஹெண்ட்ரிக் ஏதோ மாய்மாலம் செய்து ரஷ்ய நியூக்ளியர் லாஞ்சிங் கோடை திருடி அமெரிக்காவை அழிக்க நினைக்கிறான். ஹெண்ட்ரிக்கை பற்றிய செய்தி கிடைத்து ரஷ்யாவுக்குப் போய் பிடிப்பதற்குள் அவன் கோடை சுட்டு, க்ரெம்ளின் மாளிகைக்கு பாம் வைத்து அதில் ஏதன் ஹண்ட் மாட்டிக் கொள்கிறான். ஐ.எம்.எப்பிற்கு பெயர் கெடும் அளவிற்கு இந்த விஷயம் போனதால் தன் குழுவுடன் தன்மீதும், ஐ.எம்.எப் மீதும் விழுந்த பழியையும், அமெரிக்கா மீதான ஏவுகணை வீச்சையும் எப்படி சமாளிக்கிறான் என்பதுதான் கதை.
mi4_article_story_main
கதை என்பது எல்லாம் வெறும் மொக்கை ஜல்லியடிக்கிற விஷயம். இது போல ஆயிரம் கதைகளை பார்த்திருக்கிறோம். படத்தின் ஈர்பே டாம் க்ரூயிஸ்தான். மனுஷன் கமலும், ரஜினியும் சேர்ந்த கலவை. அவரைப் பார்க்கத்தான் இந்த கூட்டம் கூடுகிறது என்று நினைக்கிறேன். வர வர ஆங்கில படங்களில் கூட படு மொக்கையான கதையுடன் வெறும் ஆக்‌ஷன், பில்டப்புகளை மட்டுமே நம்பிக் கொண்டு படமெடுக்க ஆரம்பித்து விடுகிறார்கள். அப்படித்தான் ஆகிவிட்டது இந்தப்படத்தின் கதையும். வெறும் ஹீரோவையும், மிஷன் இம்பாஸிபிள் பெயர் கொடுக்கும் பில்டப்பை மட்டுமே வைத்துக் கொண்டு, படத்தில் வரும் தீவிரவாதியை தேடக்கூட படத்தில் க்ளூ கிடைத்துவிடும் போலிருக்கிறது. ஆனால் இந்த லாஜிக்கென்ற வஸ்துவை எங்கு தேடினாலும் கிடைக்காது போலிருக்கிறது. அவ்வளவு லாஜிக் மீறல்கள். ஆனால் அதையெல்லாம் யோசிக்க முடியாத வகையில் துபாய் புர்ஜ் பில்டிங்கில் எடுக்கப்பட்ட காட்சி உள்ளங்காலில் குறுகுறுக்கிற அளவுக்கு நைல் பைட்டிங் சீன். வாவ்.. என்னதான் சி.ஜி. டெக்னாலஜி பற்றியெல்லாம் தெரிந்தாலும் காட்சி கொடுத்த இம்பாக்டை மறக்க முடியவில்லை.



நாடு நாடாய் சுற்றுகிறார்கள். நம் காதில் பூவையும் சுற்றுகிறார்கள். அனில் கபூர், இந்தியா, சன் நெட்வொர்க் ஆபீஸ் என்று ஏசியன் மற்றும் இந்திய மார்கெட்டையும் குறிவைத்து ஏவி விட்டிருந்த ஐடியா ஒர்க்கவுட் ஆகும் என்று நினைக்கிறேன்.

Mission Impossible – Nothing special.

Post a Comment

14 comments:

Anonymous said...

konjam menakketu irunthaal inum nala padam eduthu irukalam MI 4 crew !! ilaaya sirji ?

Mohammed Arafath @ AAA said...

enna sir. padatha pathi niraya solluveenga nu partha sudden na mudichuteenga?..

anil kapoor mokayathu.. suntv sattilite use panrathu pathi ellam ethvume solala. :)

என்றும் இனியவன் said...

ஆம், நீங்கள் சொல்வதைப் பார்க்கும் போது படம் சுமார் என்று தான் நினைக்கிறேன்.பதிவுக்கு நன்றி.
எனது இன்றய பதிவு :
முல்லைப் பெரியார் -ஒரே தொல்லைப் பெரியார்

Unknown said...

வர வர கேபிள் சங்கர் விமர்சனம் படு மொக்கையா இருக்கு.

arul said...

your review about MI 4 is simple

www.astrologicalscience.blogspot.com

CS. Mohan Kumar said...

இந்த படத்துக்கு தானே சிவகுமார் டிக்கட் குடுத்தார். அதை எல்லாம் சொல்றதில்லையா? ஜாக்கியா இருந்தா பதிவிலேயே சொல்லியிருப்பார்

rajamelaiyur said...

ஆக்ஷன் அருமை .. இப்பதான் பாத்துட்டு வாரேன்

rajamelaiyur said...

உங்கள் பார்வைக்கு இன்று ..

இந்த வருடத்தில் நான்- ஒரு தொடர் பதிவு.

shortfilmindia.com said...

@mohan kumar

ஜாக்கி வேற நான் வேற. அது மட்டுமில்லாமல் இதை எதிர்பார்த்து சிவகுமார் டிக்கெட் கொடுக்கலைங்கிறது என் அபிப்ராயம்.:)

shortfilmindia.com said...

@vinay

நன்றி வினய்.. சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும். இந்த விமர்சனம் மட்டும்னா இந்த பதில்.. எல்லாமேன்னா.. சாரி பாஸ் நமக்கு அவ்வளவுதான் வரும்.

வவ்வால் said...

கேபிள்ஜி,

ஹி..ஹி படம் இப்படி மொக்கை அடிக்கும்னு என உள்ளூர ஒரு பட்சி கூவிக்கொண்டே இருந்தது, உங்க விமர்சனம் அதை உறுதி செய்கிறது.

வேறு ஒரு விமர்சனத்தில் கட்டிடத்தில் ஏற வாக்குவம் கையுறை என எல்லாம் போட்டு இருந்தது, அதெல்லாம் ஒரு நவீனமா , அந்த காலத்தில் எழுத்தாளர் சுபா எழுதிய நரேன் துப்பறியும் கதை என நினைக்கிறேன் அதிலேயே வரும் அப்படிப்பட்ட கையுறை.

காண்டாக்ட் லென்ஸ் மூலம் கேமிரா என்பது முன்னர் மூக்கு கண்ணாடியில் கேமிரா என்பதன் ஒரு முன்னேற்றம் தான், தொழில்நுட்ப மிரட்டலுக்கு கூட அதிகம் மெனக்கெடவில்லை என்றே தோன்றுகிறது. டாம் குரூஸின் ஸ்டார் வேல்யூ, நன்கு பிரபலமான ஒரு படத்தின் பெயரில் வரும் சீக்குவல் என்ற அடிப்படையே போதும் வியாபாரமாக என நினைத்து விட்டார்கள் போல.

சண்டைக்காட்சிகளாவது நன்றாக இருந்தால் சரி தான்.ஜாக்கி சானின் படங்களில் எல்லாம் ஒரே கதை இருந்தாலும் சண்டைக்காட்சிக்காக தானே மக்கள் போவார்கள்.

Anonymous said...

@ ஷார்ட் பிலிம் இந்தியா

உண்மைதான் சார். ஈரோடு போகவிருந்ததால் MI-4 டிக்கட்டை உங்களுக்கு தந்தேன்.

@மோகன்குமார்

நான் கேபிளை விட மிகப்பிரபல பதிவருங்கோ.

Anonymous said...

//ஜாக்கி வேற நான் வேற.//

புதிய தத்துவம் 10,001.

Unknown said...

அப்படினா சட்டியில (ஒஸ்தி விமர்சனம்) அதிகமா இருந்துச்சா அகப்பைல வருதுக்கு... ஒஸ்தி ப்லோப்போ ப்லோப்பு