மரியா கேண்ட்டீன்

மரியா கேண்ட்டீன் பத்திரிக்கையாளர் சி.முருகேஷ்பாபு எழுதி வெளிவரும் முதல் சிறுகதை தொகுப்பு. முன்னாள் விகடன் க்ரூப். ஒரு வருடத்திற்கு முன்னால் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர் வேலைப் பார்க்கும் இணைய இதழுக்காக தொடர் கட்டுரை எழுதக் கேட்டிருந்தார். அந்நேர வேலை பளு காரணமாய் எழுத முடியவில்லை. அதன் பிறகு பல முறை தொலைபேசியிலேயே பேசிக் கொண்டிருந்தோம். கிருஷ்ணவேணி பஞ்சாலை திரைப்பட மார்கெட்டிங் நிகழ்வில்தான் அவரை நேரில் சந்தித்தேன். படு சுவாரஸ்யமான மனிதர். நான் எழுதும் எல்லா பதிவுகளையும் படித்துவிட்டு பின்னூட்டமிட்டிருப்பவர் என்று அறியும் போது சந்தோஷமாயிருந்தது. அவரின் இந்தத் தொகுப்பு பாடலாசிரியர் நா.முத்துகுமாரின் புத்தகங்களை மட்டுமே வெளியிடும் பட்டாம்பூச்சி பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. புத்தகக் கண்காட்சியில் வெளியான அன்றே வாங்கி விட்டேன்.