புத்தகக் கண்காட்சியில் கிழக்கில் நண்பர் ஒருவருக்காக யூதர்கள் பற்றிய புத்தகம் ஒன்றைத் தேடிக் கொண்டிருந்தேன் கிடைக்கவில்லை. அப்போது அருகில் இருந்த ஒருவரிடம் கேட்க, அவர் புத்தகம் இருந்த இடத்தைக் காட்டினார். எடுத்துக் கொண்டு நன்றி சொல்லும் போது, “உங்களுக்கு யூதர்களைக் காட்டிக் கொடுத்து துரோகியாகிவிட்டேன் என்றார். என்னா ஒரு டைமிங்க்டா..
##############################
ஏழாம் நாளுக்குப் பிறகு தினந்தோறும் புத்தகக் கண்காட்சிக்கு சென்றாலும் பெரிதாய் புதியதாய் சொல்லிக் கொள்ளும்படியாய் ஏதுமில்லை. சங்கர்ராம சுப்ரமணியனுக்கும், வசுமித்ரனுக்கும் இடையே நடந்த இலக்கிய விரல் கடித்த சர்ச்சையைத் தவிர, கடந்த நாட்களில் பெரிதாய் கூட்டமேதுமில்லை. பொங்கல் தினத்தன்று நல்ல கூட்டம். கார், மற்றும் பைக் பார்க்கிங் எல்லாம் புல்லாகிப் போகும் அளவிற்கு. நிறைய புதிய நண்பர்களை சந்தித்தேன். வாசகர்கள் ஜெகன்னாந்தன், பிரசாத், மற்றும் அவரது குடும்பத்தினர்கள் அனைவரையும் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தேன். காலச்சுவட்டில் அநியாய விலையில் புத்தகங்கள் விற்றுக் கொண்டிருந்தார்கள். சுந்தர ராமசாமியில் புளியமரத்தின் கதையை 35 ரூபாய்க்கு ஒளித்து வைத்து விற்கிறாரகள். புது கிளாசிக் எடிஷன் 150 ரூபாய். வித்யாசத்தைப் பாருங்கள். சு.வெங்கடேசனின் காவல் கோட்டம், சாகித்ய அகாடமியின் பரிசுக்கு பிறகு ஆயிரத்தி ஐந்நூறு பிரதிகள் விற்றிருப்பதாய் சொன்னார்கள். புத்தகக் கண்காட்சியிலேயே 450 பிரதிகளுக்கு மேல் விற்றிருப்பதாய் சொன்னார்கள். போகிற போக்கில் பத்தாயிரம் காப்பி விற்பனையாவதற்கான அறிகுறிகள் இருப்பதாய் பதிப்பாளர் சொன்னார். வாழ்க சாகித்ய அகாடமி.
##############################
கடந்த புத்தகக் கண்காட்சி நாட்களில் வாங்கிய புத்தகங்கள்கலாநிதி மாறன் – கிழக்கு –85
சாமியாட்டம் – அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம் - எஸ்.பாலபாரதி –70
மரியா கேண்டீன் – பட்டாம்பூச்சி - சி.முருகேஷ்பாபு-40
துருக்கித்தொப்பி – அகல் - கீரனூர் ராஜா-125
கங்கணம் – அடையாளம் -பெருமாள் முருகன்- 195
சஹர் – காலச்சுவடு - பாவ்லோ கொய்லோ-250
கம்யூனிசம் – கிழக்கு - அரவிந்தன் நீலகண்டன் – கிழக்கு –160
கொலைகார கலைஞன் –10- காமிக்ஸ்
ஒரு புளியமரத்தின் கதை- காலச்சுவடு - 150
ஜே.ஜே. சில குறிப்புகள்- காலச்சுவடு - சுந்தர ராமசாமி –150
##############################
புத்தகக் கண்காட்சியில் பெண்களில் வெகு சிலரே புத்தகத்தின் மேல் காதலோடு வருகிறார்கள். பெரும்பாலும் சமையல்கலை, அழகுக்கலை புத்தகங்களோடு நின்றுவிடுகிறார்கள். அதிலும் விலை குறைந்த புத்தகங்களுக்குத்தான் முக்யத்துவம். பெரும்பாலும் குடும்பத்தோடு வரும் கணவன்மார்கள் குறைந்த அளவு புத்தகங்களே வாங்குகிறார்கள். அடுத்த சில நாட்களில் திரும்பவும் வந்து நிறைய புத்தகங்கள் வாங்குகிறார்கள். மீறி புத்தகங்கள் வாங்க வரும் பெண்கள் பெரும்பாலும், ரமணிசந்திரன், பாலகுமாரன், சுஜாதா என்று செலக்டிவ்வாகத்தான் இருக்கிறார்கள். பெரும்பாலான இளம் குமரிகள் தங்கள் ஜோடிகளோடு கை பிடித்து நடக்கவும், ஏதோ ஒரு கண்காட்சி என்று ஒரு மணி நேரம் சுற்றிப் பார்க்க வந்து ஆட்களாய்த்தான் இருக்கிறாரக்ள். சுற்றி ஆட்கள் இருக்கிறார்கள் என்பதையும் மறந்து கிட்டத்தட்ட மோப்பம் பிடிக்காத குறையாய் மூக்கு உரசிக் கொண்டலையும் ஜோடிகள் ஆங்காங்கே அதிகமாகத் தென்படுகிறார்கள். பெரும்பாலும் இவர்கள் கையில் எல்லா கடை புக்லெட்டும் இருக்கிறது. புதுமணத்தம்பதிகளில் கணவன் தான் பெரிய படிப்பாளி என்று காட்டிக் கொள்ள தடித்தடி புத்தகங்கள் வாங்கிக் கொண்டிருக்க, மனைவி முகத்தில் கலவரமாய் ஒரு சிரிப்பு அசட்டுத்தனமாய் தெரிகிறது. வயதுக்கு மீறிய வளர்ச்சியுடனான உடலுடனும், குழந்தைத்தனமான மனதுடன் குதித்தோடும் வளராத குமரிகள். தீவிர இலக்கிய பசியோடு தேடித்தேடியலையும் பேரிளம் பெண்கள். தினமும் யாராவது ஒரு அரசியல்வாதி புத்தகம் ஏதும் வாங்காமல் நான்கு பேர் புடைசூழ மூடும் நேரத்தில் சுற்றி வருகிறார். இது வரை அவரிடமோ, பின்னால் வரும் அல்லக்கைகளிடமோ புத்தகங்களைப் பார்த்ததாய் நினைவில்லை.கணவர் ஒவ்வொரு புத்தகக்கடையாய் ஏற எதைப் பற்றியும் கவலைப்படாமல் டீயோ, காப்பியோ, குடித்துக் கொண்டு, கிடைக்கிற சேரில் குழந்தையை மேய்த்துக் கொண்டலையும் பெண்கள். புத்தகம் ஏதும் வாங்காமலேயே எல்லா ஸ்டால்களையும் சுற்றியலைந்துக் கொண்டு, பாக்கிற எல்லோரையும் ‘தோழர்’ என்று விளித்துக் கொண்டலையும் ஷேவ் செய்யாத இளைஞர்கள். சுந்தர ராமசாமி, பிரபஞ்சன், ஆண்டன் செக்காவ், கவிதை, இலக்கியம், காமிக்ஸ் என்று பேசித்திரியும் முதுகில் பை மாடிய யப்பி இளைஞர்கள் என்று கதம்பமாய்த்தான் இருக்கிறது புத்தகக் கண்காட்சி.
################################
என் ட்வீட்டரிலிருந்து
குழந்தைப் பருவம் என்பது போதையிலிருந்ததைப் போல. நம்மைத் தவிர மற்றவர்களுக்கு ஞாபகம் இருக்கும்.

புன்னகை ஒரு ப்ளாஸ்டரைப் போல, காயத்தை மூடும், ஆனாலும் வலிக்கும். #தத்துவம்டா
சில புத்தக தலைப்புகளைப் பார்த்தாலே முதுகு தண்டு ஜில்லிடுகிறது. ஆண்குறியின் மையத்தை நசுக்கும் என்று போகிறது. நான் விழாவுக்கு போகலை.
உன் மீது யாராவது கல்லெறிந்தால் அவர்கள் மீது நீ பூவை வீசு. மறக்காமல் தொட்டியோடு.
நல்ல அழகான பெண்கள் பூமியில் ஒவ்வொரு மூலையிலும் இருக்கிறார்கள். என்ன பூமிதான் உருண்டையாக இருக்கிறது.
############################
தெர்மக்கோல் தேவதைகளுக்கான ஃபேஸ்புக் விமர்சனங்கள்
ஒரு வழியா நவநீதகிருஷ்ணன் மேல உக்கார்ந்திருந்த சங்கர் நாரயணன துரத்தி விட்டுட்டு படிக்க ஆரம்பிச்சேன்.
புத்தகம் வெளியீட்டு விழாவுக்கு ஜிகு ஜிகுன்னு கோட் சூட்டோட வந்திருக்கலாம்.
ஜன்னல் கதைய முதல் கதையா இல்லாம பின்னால தூக்கிப் போட்டிருக்கலாம்.
உங்க பாணிலே மார்க் போடணும்ன்னா 37/50. - ஜெயராஜ் பாண்டியன்
இயக்குனர் கே.பி.பி.நவீன்
இதற்கு முன் வந்த சங்கர் நாராயண் தொகுப்புகளை வீட்டில் ஒளித்து வைத்து தான் படிக்க வேண்டும் ஆனால் இந்த தெர்மக்கோல் தேவதைகள்,.நல்ல சிறுகதை தொகுப்பு எனலாம்,..சங்கர் என் நண்பர் என்பதற்க்காக சொல்லவில்லை,..எல்லா கதைகளிலும்,.ஒரு நல்ல திரைக்கதை சென்ஸ் இருக்கிறது,..சில கதைகள் படித்து கண்ணீர் வருகிறது,..!வாழ்த்துக்கள்,..!

#############################
ப்ளாஷ்பேக்
இந்தப் பாடலை எப்போது கேட்டாலும் ஒரு சந்தோஷம் ஏற்படும். இந்திய சினிமாவில் பெரிய சரித்திரத்தை ஏற்படுத்திய மரோசரித்ரா படத்தில் வரும் இந்த பாடல் எஸ்.பி.பியின் ஸ்டைலான ஆங்கிலமும், எல்.ஆர்.ஈஸ்வரியின் வைப்ரண்ட் குரலும் நம்மை கட்டிப் போடும். அதே பாடல் ஹிந்தியில் லஷ்மிகாந்த் பியாரிலாலின் இசையில் கேட்கும் போதும் எஸ்.பி.பி கலக்கியிருப்பார்.
######################################
என்பாட்டு.. என்பாட்டு
என்பாட்டு.. என்பாட்டு
######################################
அடல்ட் கார்னர்ஒரு அசைவ சண்டை:-
கணவன்: ஆபிஸ் முடிந்து வீட்டுக்கு வந்தபோது .....
கணவன்: என்னடி நம்ம வீட்டு காலிங் பெல் அடிக்க மாட்டேங்குது, நீ என்கிட்ட சொல்லவே இல்லையே...
மனைவி:- அடிக்க வேண்டிய பெல் ஒழுங்கா அடிக்கல..இதுல காலிங் பெல்ல குத்தம் சொல்ல வந்துட்டீங்க..
கணவன்:- என்னடி பேச்சு ஒரு மாதிரியா இருக்கு..என்ன விஷயம்..
மனைவி:- நம்ம வீட்டுல எந்த பெல்லும் சரியா அடிக்க மாட்டேங்குது..அத சொன்னேன்..
கணவன்:- எதோ குத்தலா பேசற மாதிரி தெரியுது...
மனைவி:- குத்தலைன்னு தான் பேசிட்டு இருக்கேன்...
கணவன்:- என்னடி வாய் ரொம்ப நீளுது...
மனைவி:- எனக்கு வாய்யாச்சும் நீளுதே..
கணவன்:- என்னடி சொல்லுற..
மனைவி:- இல்லைங்க.. எனக்கு வாய் மட்டும் நீண்டு என்ன பிரயோஜனம்..
கணவன்:- அய்யோ....உன் பேச்சை கேட்டா செத்துடலாம் போல இருக்கு..
மனைவி:- பெல் செத்தப்போவே செத்து இருந்தா எனக்கு வேற பெல்லாவது கிடைச்சி இருக்கும்...
Post a Comment
10 comments:
// தினமும் யாராவது ஒரு அரசியல்வாதி அவரின் புத்தகம் ஏதும் வாங்காமல் நான்கு பேர் புடைசூழ மூடும் நேரத்தில் சுற்றி வருகிறார். இது வரை அவரிடமோ, பின்னால் வரும் அல்லக்கைகளிடமோ புத்தகங்களைப் பார்த்ததாய் நினைவில்லை
//
ஏய்யா,தினமும் ஒரு அரசியல்வாதி அங்க வந்து, கடைமூடி கழுத்தைப் பிடித்து தள்ளும் வரை சுத்தி சுத்தி வந்து ரெண்டு கையிலையும் தூக்க முடியாம புத்தகத்தை தூக்கிட்டுபோவாரே! அவரையெல்லாம் உங்க கண்ணுக்குத் தெரியாதா! :)
அண்ணே.. உங்களையெல்லாம் அந்த அரசியல்வாதி லிஸ்டுல சேர்க்க முடியாதுண்ணே..
நீங்க எதிர்கட்சி.. நான் எழுதினா அது யாரைப் பத்தின்னு உங்களுக்கு தெரியாதா? :))
விரல் கடித்த நிகழ்வைப் பற்றி யாரும் விரிவான ஒரு பதிவு எழுதக் காணோம்!
என் வலையில்;
அஞ்சலி அல்லது பவர்கட் - சுஜாதா
// நல்ல அழகான பெண்கள் பூமியில் ஒவ்வொரு மூலையிலும் இருக்கிறார்கள். என்ன பூமிதான் உருண்டையாக இருக்கிறது. //
அதானே ...
அடல்ட் கார்னர் சூப்பர். இன்னும் சிரிப்பு “அடங்கல”.
உங்கள் பாடல் நல்லாயிருக்கு. ஏன் பாக்ரவுண்டில் இரைச்சல்???
//உங்கள் பாடல் நல்லாயிருக்கு. ஏன் பாக்ரவுண்டில் இரைச்சல்??? //
அது ரசிகர்களின் ஆர்பரிப்புங்க. அண்ணண் பாட ஆரம்பிச்சுட்டாலே ரசிகர் அலைகடலென ஆர்பரிக்க ஆரம்பிச்சுடுவாங்களே.
நண்பர் இல்ல தோழி! உங்க பாட்டு நல்லா இருக்கு.. நன்றி!:)
உங்க குரல் அப்படியே மனோ குரல் மாதிரியே இருக்கு.... அடுத்த பாட்டில் ரசிகர்களை ஒரு அஞ்சு நிமிஷம் அடக்கி வாசிக்கச் சொல்லுங்க...
//தினமும் யாராவது ஒரு அரசியல்வாதி புத்தகம் ஏதும் வாங்காமல் நான்கு பேர் புடைசூழ மூடும் நேரத்தில் சுற்றி வருகிறார். இது வரை அவரிடமோ, பின்னால் வரும் அல்லக்கைகளிடமோ புத்தகங்களைப் பார்த்ததாய் நினைவில்லை.//
என்பதுகளின் கடைசியில் இருக்கும்னு நினைக்கிறன். அப்போ ஒரு புத்தக கண்காட்சில ஒரு புத்தக கடையில் கல்லாவில நான் இருந்தேன். நான் கீழே குனிந்து ரசிது போட்டுக்கொண்டும், காசை வாங்கி கொண்டும் இருந்தப்போ ஒரு குரல், "இந்த புத்தகத்துக்கு ரசிது போட்டு கொடுங்க" அப்டின்னு கேட்டுது. குரல் வந்த திசையில் ரெண்டு பேர் நிக்கறது தெரிஞ்சது. நானும் யாருன்னு பார்க்காமல் சரி ரசிது போட்டு யாருன்னு பார்க்கலாம் எழுத ஆரம்பிச்சேன் , அப்ப அவர் "Dr. கலாநிதி M.P." அப்படின்னு பெயர் போட்டு குடுங்க அப்படின்னு சொல்லிக்கொண்டே புத்தகத்துக்கான காசை என்னிடம் குடுத்தார். பார்த்தால் அவர் தான் அங்க இருந்தார். கூட ஒருவர் பார்க்க அவர் உதவியாளர் போல இருந்தார். டிரைவரா கூட இருக்கலாம். இவர் கையில் ஒரு கட்டு வாங்கிய புத்தகங்கள். கூட வந்தவரின் கைல பை முழுவதும் புத்தகம். ஒரு ஆரவாரம் இல்லை, ஒரு பந்தா இல்லை, ஒரு வாழ்க கோஷம் இல்லை, அட ஒரு அஞ்சாறு அல்லக்கை கூட இல்லை. அது அந்தகாலம்.
//உன் மீது யாராவது கல்லெறிந்தால் அவர்கள் மீது நீ பூவை வீசு. மறக்காமல் தொட்டியோடு.//
Good one
Post a Comment