புத்தகக் கண்காட்சி – நாள் 2
சீக்கிரமே போக வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் கிளம்புகையில் லேட்டாகிவிட்டது. ஐந்தரை மணிக்கு சைதையிலிருந்து கிளம்பியவன், கண்காட்சிக்கு போக ஏழானது. படு பயங்கர ட்ராபிக். நேற்று வந்த ரூட் ட்ராபிக் என்று இன்று வேறு வழியில் வந்தால் அது அதைவிட கொடுமை. டிஸ்கவரி புக் வேடியப்பன் என்னை பார்ப்பதற்காக சில பேர் கடைக்கு வந்திருப்பதாகவும், உடன் வரவேண்டுமென்றும் சொல்லி போனை வைத்தார். என்னுடய நண்பர் வாசகர் தாமு வந்திருந்தார். நெடு நேரம் பேசிக் கொண்டிருந்தோம். எனக்கு ஸ்டெல்லாப்ரூஸின் பல நாவல்களை அறிமுகப்படுத்தியதில் பெரும் பங்கு இவருக்கு உண்டு. ஒலக சினிமா, ஒலக சினிமா என்று ஆளாளுக்கு அதைப் பார்த்தேன், இதைப் பார்த்தேன் என்று சொல்கிறவர்கள், இவரும் இவரது நண்பரும் பார்த்த படங்களைப் பற்றி பேசினால் ஆச்சர்யத்தின் எல்லைக்கு போய்விடுவீர்கள். நாற்பதுகளில் வெளிவந்த ஹாலிவுட், ஒலக படமெல்லாம் பார்த்திருக்கிறார்கள்.
நம்ம பையன் ராகுல் செந்தில் வந்தார். புத்தக வெளியீட்டு வீடியோ புட்டேஜை டிவிடியாக மாற்றி கொண்டு வந்திருந்தார். தெர்மக்கோல் தேவதைகளை படித்துக் கொண்டிருப்பாதாகவும், ஜன்னல், ப்ரியா, ராஜி ஆகிய கதைகள் மிகவும் பிடித்திருப்பதாய் சொன்னார். என் தேவதைகள் அவரை மிகவும் தொந்தரவு செய்வதாகவும், மிச்சத்தையும் படித்துவிட்டு ஃபேஸ்புக்கில் எழுதுவதாக சொன்னார். இந்த வருடத்தில் எனக்கும் கவிதைகளுக்குமான பஞ்சாயத்து விடாது போலிருக்கிறது. இவர் வந்து ஒரு குண்டைப் போட்டார். அவர் நண்பர்களோடு சேர்ந்து எடுக்கவிருக்கும் ஒரு வீடியோ ஆல்பத்திற்கு ஒரு பாடல் எழுதித் தரவேண்டுமாம். என்ன கொடுமைடா சரவணா. கவிதைக்கு வந்த சோதனை. எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் அடுத்த வாரம் ட்யூன் தர்றேன்னு சொல்லிட்டு போயிருக்கிறார். சினிமாவுல நான் பாக்கி வச்சிருக்கிற வேலையில ஒண்ணு குறையப் போவுது.
சுகுமார் சுவாமிநாதன் வந்திருந்தார். அவரது டிசைன்கள் பலரால் பாராட்டப்படுவதாய் சொன்னேன். நான் கஷ்டப்பட்டு, மெனக்கெட்டு டிசைன் செய்வதை வேண்டாம் என்று சொல்கிறீர்கள். சும்மா டக்கென செய்ததை ஓகே செய்கிறீர்கள் ஆனால் அது தான் வரவேற்பை பெறுகிறது எப்படி என்று புரியவில்லை என்றார். டிசைன் செய்வது உன் வேலை. அதை செலக்ட் செய்வது என் வேலை. உனக்கும் எனக்கு உள்ள கெமிஸ்ட்ரியே அங்க தான் என்றேன் புரியாமல் சிரித்தான். திருநெல்வேலியிலிருந்து வாசகர் சிவா வந்து பார்த்துவிட்டு போனார். சுரேகா வந்திருந்தார். அவரும் செந்திலின் வீடியோ ஆல்பத்தில் பாடல் எழுதுகிறார். மீனாட்சியில் மலிவு விலை சுஜாதாவை அள்ள வேண்டும் என்ற சுகுமாரின் விருப்பத்திற்கு இணங்க ஒரு ரவுண்ட் போகலாம் என்று கிளம்பினோம். வழியில் உமாசக்தி ஹாய் சொன்னார். சுகிர்தாவை அறிமுகப்படுத்தினார். எஸ்.ராவை வழியில் பார்த்து புத்தாண்டு வாழ்த்துகள் சொன்னேன். என் புதிய புத்தகம் வெளியானதற்கு வாழ்த்து தெரிவித்தார். எல்லாத்தையும் கவனிக்கிறார்பா..
பாஸ்கர் சக்தியும் வந்திருந்தார். சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம். யாரும் அவரிடம் தவறியும் ராஜபாட்டையைப் பற்றி பேசாதது அவர் மேல் இருக்கும் மரியாதையை காட்டியது. மிக இயல்பான, இனிமையான மனிதர். என் புத்தகத்தை அவருக்கு கொடுத்தேன். தான் விலை கொடுத்து வாங்கிக் கொள்வதாய் சொன்னார். எஸ்கேப்பாயிட்டாருடா சங்கரா..
வழக்கமாய் கிழக்கின் வாசலில் இருக்கும் பா.ரா இல்லாமல் கொஞ்சம் ஒரு மாதிரித்தான் இருக்கிறது. மதி நிலையத்தில் பா.ராவின் குற்றியலுலகம் என்று பா.ராவின் ட்வீட்டுகளை தொகுத்திருந்தார்கள். சென்ற வருடம் வந்த பேயோன் ஆயிரம் போல. அதில் என் பெயரும் இடம் பெற என்ன பாக்யம் செய்தேன் என்று சந்தோஷப்பட்டு நாலு காப்பி வாங்கினேன். இந்த கண்காட்சியில் நான் வாங்கிய முதல் புத்தகம். என்.சொக்கன் புத்தகமெல்லாம் போட்டிருக்கிறார்கள் மதியில். கேம்ப் ஷிப்ட் ஆகிவிட்டதோ?
லயன் காமிக்ஸ் கடையில் விஷ்வா, ரகு ஆகியோரை பார்த்துவிட்டு, போலீஸ்காரர் பிகில் ஊதி துரத்தும் வரை நின்று பேசிக் கொண்டிருந்துவிட்டு, வரும் வழியில் நாஞ்சில் நாடனையும், சு.வெங்கடேசனையும் பார்த்து அளவளாவிவிட்டு வந்தோம். வழக்கமாய் தமிழில் எழுதுபவர்களுக்கு சாகித்ய அகாடமி விருதுகள் எல்லாம் காலத்தே வந்ததில்லை. உங்களுக்கு அது சீக்கிரமே வந்திருக்கிறது என்று வாழ்த்தினேன். வண்டியை எடுக்கும் போது நேற்றைய தினத்தைப் போலவே பத்து ரூபாய் பார்க்கிங் கட்டணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துவிட்டு, மொத்தமா சீசன் டிக்கெட் மாதிரி ஏதாவது ஸ்கீம் வச்சிருக்கீங்களா? என்று கேட்டேன் ஒரு மாதிரி விழித்தார்கள்.
இன்றைய நிகழ்ச்சி
விழிப்பறிக் கொள்ளை என்ற கவிதை நூலை வெளியிடப் போகிறேன்.
இந்த அறிவிப்பு எதற்கு என்று புரிந்தவர்களுக்கு தெரியும் என்ன செய்ய வேண்டுமென்று.:)
இந்தப் புத்தகக் கண்காட்சியில் என் அனைத்து புத்தகங்களும், கிடைக்குமிடம்
334 டிஸ்கவரி புக் பேலஸ்
160/161 ராஐகுமாரி பப்ளிகேஷன்ஸ்
281/82 வனிதா பதிப்பகம்.
ஆகிய இடங்களில் கிடைக்கும்.
Comments
ஆனா
கேக்குறவனும்
படிக்கிறவனும்தான்
பாவமோ.. பாவம்...
லயன் காமிக்ஸ் கடையில் விஷ்வா, ரகு ஆகியோரை பார்த்துவிட்டு, போலீஸ்காரர் பிகில் ஊதி துரத்தும் வரை நின்று பேசிக் கொண்டிருந்து
//
அவங்க ரெண்டு பேரும் சாப்பாடு தண்ணி இல்லாம புத்தக கண்காட்சி முடியும்வரை அங்கதான் இருப்பாங்க என்று நிச்சயமா தெரியும் :). அவர்கள் மூலமா இன்னும் புதிய காமிக்ஸ் ரசிகர்கள் உருவாக வாழ்த்துகிறேன்.
irukkum engalai
pondravargalukku
ungal visit ----post---
eekkathai thanikkirathu....
கே.ஆர்.பி.செந்தில் said...
ஆனா
கேக்குறவனும்
படிக்கிறவனும்தான்
பாவமோ.. பாவம்...
//
K.R.P : Ithu therinchithan unga blogla kavithaya ezhuthi thallu reengala????