Thottal Thodarum

Jan 1, 2012

தமிழ் சினிமா இந்த வருடம் 2011

தமிழ் சினிமாவின் மாபெரும் வெற்றி, சூப்பர்ஹிட், வரலாறு காணாத கலெக்‌ஷன் என்றெல்லாம் தினம் தினம் நாம் பார்க்கும் விளம்பரங்களையும், எங்க தலைவர் படம் இவ்வளவு வசூல், அவ்வளவு வசூல்ன்னு ஆளாளுக்கு டிஸ்ட்டிபியூட்டர்க்கு கூட கிடைக்காத டி.சி.ஆர் ரிப்போர்ட் கொடுத்துக் கொண்டிருக்க, என்ன தான் மாதா மாதம் பார்த்தாலும், மொத்தமாய் பார்க்கும் போது என்ன ரிசல்ட் என்று பார்ப்போம். மாத ரிசல்ட்டிலிருந்து சில முடிவுகளில் சிறு மாற்றங்கள் இருக்கத்தான் செய்யும். என்பதை கூறிக் கொள்கிறேன்.


சென்ற வருடம் தமிழில் வெளியான மொத்த படங்களின் எண்ணிக்கை – 181


அதில் நேரடி தமிழ் படங்கள் – 142


மொழி மாற்றுப் படங்கள்  -39

நல்ல படமாயிருந்தா நிச்சயம் ஓடும் என்ற மாய எண்ணத்தை சிறு முதலீட்டு தயாரிப்பாளர்கள் விட்டொழிய வேண்டும் என்று மீண்டும் மீண்டும் உணர்த்திய வருடம் என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால் ஒரு சில நல்ல படங்கள் மக்களின் கவனத்திற்கு வராமலேயே போய்விட்டதன் காரணம் போதிய விளம்பரமில்லாமையே. சரி விளம்பரப்படுத்தப்பட்டு ஓடிய படங்கள் எல்லாமே நல்ல படங்கள் தானா?  வெற்றிப் படங்கள் தானா? என்ற கேள்வி உங்களுக்கு எழுவது ஒன்று ஆச்சர்யமில்லை. நிச்சயம் நன்றாக விளம்பரம் செய்யப்பட்டு வெறும் விளம்பரத்திலேயே பல நூறு கோடிகள் கலெக்ட் செய்யப்பட்டதாக சொல்லப்படும் படங்களின் பின்னணி படு கொடுமை. ஒரு வெற்றிப் படம் என்பது  அதன் தயாரிப்பு  செலவையும், அப்படம் கலெக்ட் செய்த தொகையை வைத்துத்தான் சொல்ல வேண்டும். அப்போது தமிழ் சினிமாவின் டாப் 3 படமாக உயர்தியதற்கு நன்றி என்று போட்டதெல்லாம் பொய்யா? என்று கேட்டால் நிச்சயம் பொய் என்றுதான் சொல்வேன்.  ரொம்ப சிம்பிள் பத்து ரூபாய் போட்டு நூறு ரூபாய் சம்பாதிப்பதும். நூறு ரூபாய் போட்டு, நூற்றிப்பத்து ரூபாய் சம்பாதிப்பதும் ஒன்றா? எது சூப்பர் ஹிட் என்று சொல்வீர்கள். சரி.. நாம ரிப்போர்ட்டுக்கு வருவோம்.

ஜனவரி
சென்ற வருட இறுதியில் வெளியான தென்மேற்கு பருவக்காற்று திரைப்படம் வசூல் ரீதியாய் பெரிதாக செய்யாவிட்டாலும், தமிழ் சினிமாவிற்கு தேசிய விருதை கொண்டு வந்து புண்ணியம் கட்டிக் கொண்டது. பொங்கலுக்கு ரிலீசான ஆடுகளம், பல ப்ரச்சனைகளுக்கு இடையே வெளியான காவலன் கலைஞரின் இளைஞன் என்று படங்கள் ரிலீஸ் ஆனாலும் இவ்வாண்டின் சூப்பர் ஹிட் பட வரிசையில் வந்த படம் சிறுத்தை. யாரும் பெரியதாய் எதிர்பார்க்காத தெலுங்கு கரம் மசாலா ஹிட்.படத்தின் ஹிட்டுக்கு சந்தானத்தின் காமெடியும் ஒரு முக்கிய காரணம் என்பதை மறுக்க முடியாது. ஆடுகளம் தேசிய விருதையும், பல முனைகளிலிருந்து பாராட்டுக்களையும் பெற்றிருந்தாலும், சன் இருந்தும், வசூல் ரீதியாய் ஒரு தோல்விப்படமானது வருத்தமே.

பிப்ரவரி
தூ
ங்கா நகரம், யுத்தம் செய், பயணம் ஆகிய படங்களுடன் பல சிறுமுதலீட்டு படங்கள் வெளியானது. ஆனாலும் பெரிய வெற்றி என்று ஏதையும் சொல்ல முடியாது. யுத்தம் செய், பயணம் ஆகிய படங்கள் மல்ட்டிப்ளெக்ஸ் அரங்குகளில் மட்டும் நன்றாக ஓடியது. இதில் பயணம் மட்டும் கொஞ்சமே கொஞ்சம் தப்பியது அதுவும் தமிழ், தெலுங்கு என்று இரண்டு மொழிகளில் எடுக்கப்பட்டதினால் பட்ஜெட், விளம்பரம் என்று எல்லாம் நன்றாக செய்யப்பட்டு, மல்ட்டி ப்ளெக்ஸுகளில் சுமாரான வசூலை பெற்றது என்றாலும் ஹிட் லிஸ்டிலோ, ஆவரேஜ் லிஸ்டிலோ சேர்க்க முடியாது.

மார்ச்

பரீட்சை மாதமாகையால் நிறைய பெரிய படங்கள் தங்கள் வெளியீட்டை தள்ளிப்போட, வழக்கம் போல் புற்றீசலாய் பல சிறு முதலீட்டு படங்கள் வெளியான சுவடே தெரியாமல் வந்து போனது. பெரிய படம் என்று சொல்லப் போனால் சிங்கம் புலி மட்டுமே என்று சொல்ல வேண்டும். அதுவும் பெரிதாய் ஓடவில்லை. மற்ற சின்னப் படங்களும் ஓடவில்லை. இந்த மாதத்தில் ஒருநாள் தேவி காம்ப்ளெக்ஸில் சிங்கம் புலி ஓடும் போது நான் கவுண்டரில் விசரரித்தேன் மொத்தம் நான்கு தியேட்டர்களில் எல்லா திரைப்படங்களுக்கும் சேர்த்து மொத்தம் 67 டிக்கெட் விற்றிருப்பதாய் சொன்னார்கள். ராசு மதுரவனின் முத்துக்கு முத்தாக மட்டும் மிக ஆவரேஜாய் போனது.

ஏப்ரல்நஞ்சுபுரம், சன்னின் மாப்பிள்ளை, பிரசாந்தின் பொன்னர் சங்கர், கே.வி.ஆனந்தின் கோ, சிம்புவின் வானம் என்று கலந்தடித்து படங்கள் வெளிவந்தது. ராமநாராயணன் வெளியிட்டும் நஞ்சுபுரத்தின் விஷம் ஏறவில்லை. சன் வெளியிட்ட தனுஷின் மாப்பிள்ளை மீண்டும் சன்னுக்கு மட்டுமே சூப்பர் ஹிட் படமாய் தெரிந்தது. கலைஞர் கதை, திரைக்கதை வசனத்தில், பிரசாந்தின் இரட்டை வேட நடிப்பில் வெளிவந்த பொன்னர் சங்கர். ஒன்றும் சொல்லிக் கொள்ளூம்படியாய் இல்லை. படத்தை தியேட்டரிலிருந்து எடுத்தும் இன்றளவில் சில சமயம் கலைஞர் டிவியில் மட்டும் விளம்பரம் வருகிறது.தேர்தல் சமயத்தில் வெளியாக வேண்டிய கோ.. கொஞ்சம் தள்ளி வெளிவந்தது. வந்த சூட்டிலேயே படம் பிய்த்துக் கொண்டு ஓட ஆரம்பித்தது. இன்றளவில் நிற்கவில்லை. தமிழ் தெலுங்கு என்று பின்னி பெடலெடுக்கிறது. தெலுங்கு ரீமேக்கான வானம் தெலுங்கில் எந்தளவிற்கு எடுபட்டதோ அதே அளவில் தான் இங்கேயும். ஹிட்டும் இல்லாமல் தோல்வியும் இல்லாமல் அலைபாய்ந்தது. இந்த மாதத்தில் மட்டுமல்ல இது வரை, இந்த வருடத்தில் ஏப்ரல் வரை வந்த படங்களிலேயே சூப்பர் டூப்பர் ஹிட கோ மட்டும்தான். தமிழில் மட்டுமில்லாது தெலுங்கிலும் ஹிட்டாகியிருக்கிறது.

மே
சன்னின் எங்கேயும் காதல். ஏஜிஎஸ் நிறுவனத்தின் படத்தை வாங்கி சன் வெளியிட்டது. தயாநிதி அழகிரியின் க்ளவுட் நைன் தன் பங்கிற்கு சுசீந்திரனின் அழகர் சாமி குதிரை படத்தை வெளியிட்டது. களவாணி தயாரிப்பாளர் நசீரின் எத்தன் டெபிசிட்டினால் ஒரு வாரம் தள்ளி வெளியானது. சின்ன பட்ஜெட் படமான மைதானம், சாப்ட்வேர் கம்பெனியின் கண்டேன் ஆகியவை வெளியாயின. எங்கேயும் காதல் படத்தின் பாடல்கள் பெரிய ஹிட். ஆனால் படம் போகவில்லை. மீண்டும் சன்னுக்கு மட்டுமேயான சூப்பர் ஹிட் படமாய் அமைந்தது. சுசீந்திரனின் அழகர் சாமி குதிரையை டிவியில் விளம்பரங்களில் தமிழ் நாட்டில் இருக்கிற அத்துனை இலக்கியவாதிகள் எல்லோரும் சொல்லி வைத்தார் போல ஜன்னி வரும் வரை பாராட்டியதால், வெகு ஜனங்களுக்கு தூரமான படமாய் போனதோ என்று தோன்றுமளவுக்கு தோல்வியடைந்தது. மைதானம் என்கிற சிறு பட்ஜெட் படம் நான்கு உதவி இயக்குனர்கள் நடித்து வெளிவந்த டிஜிட்டல் படம். ஆங்காங்கே பத்திரிக்கையாளர்களும், சில விமர்சகர்களாலும் பாராட்டப் பட்டாலும் குறைப்பட்ட மேக்கிங். பட்ஜெட் , மற்றும் விளம்பரமின்மை போன்ற பிரச்சனைகளால் பெரும் தோல்வி படமானது. பிரபுதேவாவின் சீடர் முகில் இயக்கத்தில் வந்த கண்டேன் படம் சாந்தனுவுக்கு மீண்டும் ஒரு தோல்விப் படமாகவே அமைந்தது.

ஜூன்
ஆண்மைத் தவறேல், ஆரண்ய காண்டம், அவன் இவன், உதயன், பிள்ளையார் கோவில் கடைசி தெரு, 180, ஆகியவை வெளியாயின. ஆண்மைதவறேல் பிரேசிலியன் படமான ட்ரேட்டின் உல்டா. ஆனால் இதே படத்தை வைத்து இதற்கு முன் வந்த விலை போன்ற படஙக்ளை விட சுமாராக எடுககப்பட்டிருந்தாலும் மக்களிடையே கொண்டு சேர்க்க முடியவில்லை. அதே நிலைதான் இப்படத்திற்கும்.ஆரண்யகாண்டம் ட்ரைலரே மக்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு வந்த ப்ரோமோக்கள் எல்லாம் அடித்து தூள் பரத்த, ரிலீஸான அன்று பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, விமர்சகர்களிடையேவும், பத்திரிக்கையாளர்களிடமும் பெரிய பெயரை பெற்றிருந்தாலும், ஏனோ மக்களிடையே போய் சேரவில்லை. நன்றாக இருக்கிறது என்று மவுத் பப்ளிசிட்டி போய் சேர்வதற்கு தியேட்டர்களிலிருந்து தூக்கப்பட்டுவிட்டது துரதிஷ்டமே. பாண்டிச்சேரியில் ஒரே ஒரு நாளும், இன்னும் சில ஊர்களில் இரண்டு ஷோ, இரண்டு நாள் என்று படம் ஓடாமல் தூக்கப்பட்டது படு வருத்தம். வெளியூர்களில் ஓடாததற்கு படத்தின் போஸ்டர் டிசைன் கூட காரணம் என்கிறார்கள். யார் நடிப்பது என்று கூட தெரியவில்லைஆனாலும் ஒரு சிறந்த படம். பாலாவின் அவன் இவன் பெரும் எதிர்பார்ப்பிற்கிடையே வெளிவந்தது. ஆனால் கதை என்கிற வஸ்துவே இல்லாமல் எடுக்கப்பட்டிருந்த கேரக்டர்களின் தொகுப்புப் படம் மக்களிடையே பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்திவிட்ட காரணத்தால் முதல் மூன்று நாட்களூக்கு பிறகு எல்லா இடங்களிலும் வசூல் வீழ்ந்தது. அடுத்த வாரம் வந்த அருள்நிதியின் உதயன், ஆர்.பி.சவுத்திரியின் இரண்டாவது மகன் ரமேஷின் இரண்டாவது இன்னிங்க்ஸ் படமும் பெரிதாய் செல்ப் எடுக்கவில்லை. சத்யம் சினிமாஸின் 180 சிட்டி மக்களிடம் கொஞ்சம் அதன் டெக்னிக்கல் வேல்யூவிற்காக பாராட்டப்பட்டாலும், வழக்கமான கேன்சர் கதையானதால் தோல்வியடைந்தது என்று சொல்ல வேண்டும்.

ஜூலை
அரும்பு மீசை குறும்பு பார்வை, தேநீர் விடுதி, வேங்கை, தெய்வத்திருமகள், காஞ்சனா – முனி2, கருங்காலி, வெப்பம் ஆகிய படங்களுடன் வழக்கம் போல பல சின்னப் படங்கள் மக்களின் பார்வைக்கே வராமல் போனது. அ.மீ.கு.பா, தேநீர் விடுதி, கருங்காலி, வெப்பம் போன்ற படங்களைப் பற்றி ஏகமாய் பேசிவிட்டதால் ஒன்றும் சொல்வதற்கில்லை. வேங்கை சன் வாங்குவதாய் இருந்து கடைசி நேரத்தில் வெளியேறியது. தனுஷின் இந்த வருடத்திய தோல்வி லிஸ்டில் இப்படமும் சேர்ந்தது.  தெய்வத்திருமகள் படத்தைப் பற்றி பல்வேறு குற்றச்சாட்டுகளும் விமர்சனங்களும் இருந்தாலும் யுடிவியின் முதல் தமிழ் வெளியீடு என்பதால் படு பயங்கர மார்கெட்டிங் செய்தது. வாரத்திற்கு மூன்று வெற்றி விழா ப்ரஸ் மீட்டை நடத்தி தமிழ் சினிமாவிற்கு புதியதொரு கலாச்சாரத்தை ஆரம்பித்து வைத்தது. படம் ஓரளவுக்கு நல்ல வசூலை பெற்றிருந்தாலும், வாங்கிய விலைக்கு கொஞ்சம் நஷ்டமே என்பதால் சுமார் ஹிட் வரிசையில் போய் சேர்ந்தது. இந்த மாதத்திய சூப்பர் ஹிட் காஞ்சனா மட்டுமே.  சுமார் நாலரை கோடியில் தயாரிக்கப்பட்டு, தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளுக்கும் சேர்த்து எட்டு கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டு எடுத்த எடுப்பிலேயே தயாரிப்பாளருக்கு லாபம் சம்பாதித்து கொடுத்தது மட்டுமில்லாமல் சுமார் 30 கோடி ரூபாய் வசூல் செய்து பெரும் சாதனை படைத்தது. தமிழ் சினிமாவிற்கு வெகு காலம் கழித்து இரவுக் காட்சிகளுக்கு பெண்கள் கூட்டம் வந்த படம் இந்தப் படத்திற்குத்தான். அதே போல படம் வெளியாகி இரண்டு வாரங்களுக்கு மேலாகியும் இரவு காட்சிகள் ஹவுஸ்புல்லாக ஓடியதும் இந்தப் படம் தான்.

ஆகஸ்ட்
சின்னதும் பெரிதுமாய் பல படங்கள் வெளிவந்தாலும் சில மாதங்களாய் காய்ந்து போயிருந்த தமிழ் சினிமாவிற்கு புத்துணர்ச்சி அளித்தபடம் என்றால் அது மங்காத்தாதான். தொடர்ச்சியாய் லீவு நாட்களாய் போக, தமிழ் சினிமாவில் ஓப்பனிங்கிற்கு பெயர் பெற்ற அஜித் தன் பெயரை சமீபகாலமாய் நிலைநிறுத்திக் கொள்ளாமல் போய்விடுவாரோ என்று யோசித்துக் கொண்டிருந்த போது, வந்து ஒங்கி ஒரு சிக்சர் அடித்தார்.  வெளியான ஐந்தே நாட்களில் சுமார் நாற்பது கோடிக்கும் மேல் கலெக்‌ஷன் என் வரையில் என்பது கோடி வசூலாகும் என்று கணக்கிட்டிருந்த படம், சன் தன் அஃபீஷியல் வெளியீட்டிலேயே இந்த வருடத்திய தங்களின் சூப்பர் டூப்பர் ஹிட் என மங்காத்தாவை அறிவித்ததும், அதன் கலெக்‌ஷன் 130 கோடி என்று அறிவித்ததும்தான். என்னதான் வாங்கிய சன்னுக்கும், அவர்களிடமிருந்து வாங்கிய விநியோகஸ்தர்களுக்கும், தியேட்டர்காரர்களுக்கும், காண்டீன் காரர்களுக்கும் லாபமான படமாய் இருந்தாலும், தயாரிப்பாளர் தயாநிதி அழகிரிக்கு சுமார் ஏழெட்டு கோடி நஷ்டமாம் சன்னுக்கு விற்ற வகையில். பங்காளிகளுக்குள்ள கொடுக்கல் வாங்கல் இருக்கத்தான் செய்யும் அதனால என்ன?

செப்டம்பர்
எங்கேயும் எப்போதும், வந்தான் வென்றான், ஆயிரம் விளக்கு போன்ற படங்களுடன் மேலும் சில சிறு முதலீட்டுப்படங்களும் வெளியாயின. வந்தான் வென்றான் வந்த சுவடே தெரியாத அளவிற்கு போனது. ஆயிரம் விளக்கு ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படியாய் இல்லை. வந்த பங்களிலேயே க்ரிட்டிக்கலாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்ற படம் எங்கேயும் எப்போதும் மட்டுமே. சுமார் 5 கோடியில் தயாரிக்கப்பட்ட இப்படம் மொத்தமாய் இருபது கோடி வசூல் செய்திருக்கிறது என்கிறார்கள்.

அக்டோபர்
வாகை சூடவா, வர்ணம், முரண், சதுரங்கம், வேலாயுதம், ஏழாம் அறிவு ஆகிய படங்கள் வெளியாயின. தீபாவளிக்கு முன் வெளியான முதல் மூன்று படங்களில் வாகை சூடவா பாடல்களும், விஷூவல்களும் ஏற்படுத்திய பரபரப்பு படத்தில் இல்லாமல் போனதால் நல்லதொரு செய்தியை சொல்ல முன்வந்த திரைப்படம் என்கிற வகையில் விமர்சகர்கள் பாராட்டை பெற்றாலும், வசூல் ரீதியாய் படு தோல்வி அடைந்தது. விமல் அப்படத்தின் தயாரிப்பாளருக்கு தன் சம்பளத்தை திரும்பக் கொடுக்குமளவுக்கு என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். முரண் ஹிட்காக்கின் படத்திலிருந்து தழுவியது என்றாலும் நன்றாகவே எடுக்கப்பட்ட படம். மீண்டும் சேரன் என்கிற நடிகரின் மேலுள்ள ஒரு அபிப்ராயத்தில் மக்கள் தியேட்டரினுள் செல்லாமல் கவனிக்கப்படாமலேயே போனப் படம். ஆனால் சேரன் இப்படத்தில் நன்றாகவே நடித்திருந்தார். யுடிவியின் தொடர் மார்கெட்டிங் வேலைக்காகவில்லை. சுமார் அறுபது கோடி தயாரிப்பு செலவு என்பது கோடிக்கு விற்பனை என்று பெரிய வியாபாரம் பார்த்த படம் ஏழாம் அறிவு. ஆனால் படத்தில் சாதாரண ஆறறிவுக்கு வேலையில்லாமல் போனதால் பெரிய எதிர்பார்ப்பு பொய்த்து போனது. என்னதான் பக்கம் பக்கமாய் சூப்பர் ஹிட், மாஸ் ஹிட் என்று விளம்பரப்படுத்தினாலும் பல பேருக்கு தோல்வியை கொடுத்த படம். தெலுங்கில் ஹிட் லிஸ்டில் கூட இப்படம் இல்லை என்பதை இவர்கள் ஒத்துக் கொள்ளாவிட்டாலும் நிஜம் அதுதான். போட்ட பணத்தை எடுக்க இவர்கள் செய்த விளம்பரச் செலவே பல கோடிகளூக்கு வரும் அதையெல்லாம் வைத்துப் பார்த்தால் வெறும் ஹிட் லிஸ்டில் தான் வரும். இப்படம். அதே நிலைதான் விஜயின் வேலாயுதத்திற்கும். சுமார் நாற்பது கோடிகளில் எடுக்கப்பட்ட இப்படம் ஏழாம் அறிவின் பரபரப்புக்கு பின்னாலும் மெல்ல ஏறி போட்ட முதலை எடுத்தது என்கிறார்கள். ஏழாம் அறிவுக்கு மட்டும் படம் வெளியான் ஒரு வாரத்தில் சுமார் ஆறு வெற்றி விழா பார்ட்டிகளை நடத்தி தொடர்ந்து பத்திரிக்கைகளில் எழுத வைக்க பிரயத்தனப்பட்டும் அவர்களின் மனசாட்சிக்கு புறம்பாக எழுதவில்லை.

நவம்பர்
தம்பி வெட்டோத்தி சுந்தரம், வித்தகன், பாலை, செல்வராகவனின் மயக்கம் என்ன? ஆகிய படங்கள் வெளியாயின. பார்த்திபனின் படம் வந்த சுவடே தெரியாமல் போனது. தம்பி வெட்டோத்தி சுந்தரத்தின் பாடல்கள் நன்றாக ஹிட்டாகியிருந்தும் நல்ல கதை, விறுவிறுப்பான திரைக்கதை என்று இருந்தும், டூமச்சாக கதை சொன்னதில் மக்களின் கவனத்தை கவர்ந்தும், குழப்பியடித்தும், கரண் ஹீரோ என்பதும் மைனஸாய் ஆகிவிட்டது. செல்வாவின் மயக்கம் என்ன? பெரிய எதிர்பார்ப்புக்கிடையே வெளியாகியது. தனுஷுன் தோல்விப்படங்களின் இதுவும் ஒன்றாக சொல்லப்பட்டாலும் தனுஷ் இந்த வருடத்தின் சிறந்த நடிகர் என்பதை மீண்டும் நிருபித்த படம். அபாரமான நடிப்பு, நுணுக்கமான காட்சிகள் எல்லாம் இருந்தும் தொய்வான இரண்டாம் பாதியும், ஆஃபீட் காட்சிகளாலும் வெகு ஜனங்களை கவராமல் போனதால் வெறும் மல்ட்டிப்ளெக்ஸ் படமானது.

டிசம்பர்
போராளி, ஒஸ்தி, மெளனகுரு, ராஜபாட்டை, மகான் கணக்கு, பதினெட்டாம்குடி எல்லை ஆரம்பம், ஆகிய படங்கள் வெளியாகின. இதில் கடைசி ரெண்டு படங்கள் உட்பட மேலும் நான்கு படங்கள் வருட கடைசி தேதியான முப்பதாம் தேதி வெளிவந்ததால் அதைப் பற்றி ஏதும் சொல்ல முடியாது. ஆனால் பார்த்த வரையில் மகான் கணக்கு இம்ப்ரசிவாக இருக்கிறது. போராளி சசிகுமார், சமுத்திரகனி கூட்டணியில் வந்த படம். நல்ல விலைக்கு போன படமும் கூட, ஆனால் முதல் நாள் ஓப்பனிங் மட்டும் சூப்பராக இருக்க, அடுத்த சில நாட்களிலேயே துவண்டது வசூல்.  ஒஸ்தி, தபாங்கின் தமிழ் பதிப்பு, பெரிய ஓப்பனிங் ஆனால் அடுத்த மூன்று நாட்களில் வீழ்ந்தது. ராஜபாட்டை அதை பற்றி சமீபத்தில்தான் எழுதியதால் ஏதும் சொல்வதற்கில்லை. சமீபத்தில் அப்படத்தின் வெற்றியை புதிய கலாச்சாரப்படி ப்ரஸ்மீட் வைத்து கொண்டாடினார்களாம். மகான் கணக்கு வருடக் கடைசியில் பார்த்த நல்ல படம். பதினெட்டம் குடி நல்ல காமெடிப் படம்.  ஆனால் இந்த வருடத்தின் கடைசியில் வந்தாலும் மெளனமாக நெத்தியில் அடித்த படம் மெளன்குரு. அருமையான டெக்னீஷியனிடமிருந்து வந்த படம். அருள்நிதிக்கு ஆக்ஸிஜன் கொடுத்த படம். ஏன் தமிழ் சினிமாவிற்கே நல்ல படமெடுத்து அதை சரியாக விளமப்ரப்படுத்தினால் நிச்சயம் வெற்றியை கொடுக்கும் என்பதற்கான உதாரணப்படமாய் அமைந்தது. பெரிய ஓப்பனிங் இல்லாமல் இருந்தாலும் படத்தைப் பற்றி மவுத் டாக் நன்றாக இருந்ததாலும் இரண்டாவது வாரம் பெரிய ஊர்களில் எல்லாம் தாக்குப்பிடிக்க, இப்போது அடுத்தடுத்து வந்த பெரிய படங்களின் வீழ்ச்சியால் மெளனகுருவுக்கு மேலும் அதிக தியேட்டர்களில் இடம் கிடைக்க ஆரம்பித்திருப்பதே படத்தின் வெற்றிக்கு சாட்சி.

சூப்பர் டூப்பர் ஹிட் : மங்காத்தா
சூப்பர் ஹிட் : கோ
சூப்பர் ஹிட் : சிறுத்தை. 
சூப்பர் ஹிட் ; காஞ்சனா –முனி-2
சூப்பர் ஹிட் : எங்கேயும் எப்போதும்.
 
ஹிட் : தெய்வத்திருமகள்
ஹிட் : ஏழாவது அறிவு
ஹிட் : வேலாயுதம்.
அபவ் ஆவரேஜ்: மெளனகுரு. (இந்தப் படம் ஹிட் படமாய்க் கூட மாறும் நிலையில் இருக்கிறது)


சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்


படங்கள் வெளியீட்டைப் பற்றிய டேட்டாவுக்கு நன்றி பிலிம் நியூஸ் ஆனந்தன்.

Post a Comment

24 comments:

என்றும் இனியவன் said...

மிகவும் அருமையான பதிவு கேபிள் அண்ணா, ஒரு தொலைகாட்சி சேனல் கூட இப்பட ஒரு டீடைல் ஆனா விமர்சனம் தந்து இல்லை, புத்தாண்டு வாழ்த்துக்க்கள் அண்ணாவிற்கும் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும்.

என்றும் இனியவன் said...

புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
எனது ப்ளாக்கில்:
பாட்டைக் கேளுங்க பரிசு வெல்லுங்க
புத்தாண்டு பரிசு ஒரு வாரம் கோவாவில் குடும்பத்தோடு தங்கும் வாய்ப்பு
A2ZTV ASIA விடம் இருந்து.

Anonymous said...

கரண் கொஞ்சம் காம்ப்ளான் குடிக்கணும். 2011 இல் எனக்குப்பிடித்த படம் மௌனகுரு.

Anonymous said...

எங்கேயும் எப்போதும்..அனைவரின் பேவரிட் என நினைக்கிறேன்.

ananthu said...

நேர்மையான பட்டியல் ...! ஆடுகளம் வணிக ரீதியாக தோல்வி என்கிறீர்கள் ! இந்த படத்தை தவிர என்னுடைய லிஸ்டில் உள்ள டாப் டென் படங்கள் உங்களுடன் அப்படியே ஒத்துப்போவதில் மிக்க மகிழ்ச்சி ...தமிழ் சினிமா 2011 - எனது பார்வையில் ...தமிழ் சினிமா 2011 - எனது பார்வையில் ...http://pesalamblogalam.blogspot.com/2011/12/2011.html

arul said...

nandri

Breeze said...

ஹலோ கேபிள் சார், ஆரண்ய காண்டம் DVD கிடைக்கும் இடம் தெரிந்தால் சொல்ல முடியுமா சார். பெங்களூரில் பல கடைகளில் தேடியும் கிடைக்க வில்லை. இங்கு எந்த படம் வந்தாலும் அடுத்த நாள்ளே திருட்டு cd வந்து விடும் ஆனால் இந்த படத்திற்கு திருட்டு cd கூட வர வில்லை. இப்படி ஒரு படம் வந்தது கூட cd விற்பவர்களக்கு தெரிய வில்லை. என்ன கொடுமை சார்

Jayaprakash said...

Thank you sir! thanks for your report

Anonymous said...

மௌனகுரு உண்மையிலே கலக்கலான படம். டைரக்டரின் கொடி பட்டொளிவீசிப் பறக்கிறது.

இளம் பரிதி said...

miga nalla nermaiana list..happy new year sir....

P.S. Suresh Kumar said...

Tamil Film Background Scores 2011 - 50 Best BGM from tamil films of 2011

http://www.backgroundscore.com/2011/12/tamil-film-background-scores-2011.html

வரிசை கி. இராமச்சந்திரன் said...

http://www.tamilcinema.com/CINENEWS/Hotnews/2011/dec/311211a.asp

தியேட்டர் கேன்டீனில் சுட சுட வைக்கப்பட்ட மசால் வடை, அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் தன் ஆவியை போக்கிக் கொள்வதை போல, உள்ளே ஓடிக் கொண்டிருக்கும் சில படங்களும் நாலாவது ரீலிலேயே தனது ஆவியை போக்கிக் கொள்ளும். ஆனால் அதே படத்தை வரலாறு காணாத வசூல் என்று விளம்பரப்படுத்துவார்கள். அதையும் நம்பி நமக்கு கமெண்ட் அனுப்பி கவலைப்படுவார்கள் ரசிகர்களும் வாசகர்களும்.(ராஜபாட்டையை தோல்விப்படம் என்று நாம் எழுதியது பொறுக்க முடியாத வாசகர்கள் சிலர், முதல் சில நாட்களிலேயே வசூல் 42 கோடியை கிராஸ் பண்ணிவிட்டது. அது தெரியுமா உங்களுக்கு? என்றெல்லாம் எழுதுவதை படித்தால், ஐயோ பாவம் என் அறியா ஜனங்களே என்று கவலைப்படவே தோன்றுகிறது)
கடந்த வருடத்தின் சூப்பர் டூப்பர் ஹிட் என்று 'மங்காத்தா' படத்தைதான் மாய்ந்து மாய்ந்து எழுதிக் கொண்டிருக்கின்றன சில ஊடகங்களும், மற்றும் சில விமர்சகர்களும். அப்படி எழுதுவதற்கு முன் குறிப்பிட்ட அந்த படம் தயாரிப்பாளர், விநியோகஸ்தர், திரையரங்க உரிமையாளர் ஆகிய மூவருக்குமே லாபத்தை ஏற்படுத்திய படமா என்று விசாரித்து எழுதினால் புண்ணியமாக போயிருக்கும். இந்த இடத்தில் வசூலையும் முதலீட்டையும் ஒப்பிட வேண்டியதும் மிக மிக முக்கியம்.
நு£று கோடி செலவு செய்து பத்து கோடி லாபம் பார்க்கிற படத்தைவிட, ஏழு கோடி செலவு செய்து பத்து கோடி லாபம் பார்க்கிற படம்தான் சூப்பர் டூப்பர் ஹிட் என்ற உண்மையை புரிந்து கொள்ள கணக்கில் சூரப்புலியாக இருக்க வேண்டும் என்ற அவசியமெல்லாம் இல்லை.

சரி... மங்காத்தா மேட்டருக்கு வருவோம். கோடம்பாக்கத்திலிருக்கும் சில வியாபார புள்ளிகளிடம் விசாரித்தால் நமக்கு கிடைக்கிற தகவல் அதிர்ச்சியை அளிக்கிறது. இந்த படம் விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்கத்திற்கும் பெருத்த லாபத்தை பெற்றுக் கொடுத்தது உண்மையே. ஆனால் தயாரிப்பாளருக்கு சுமார் ஏழு கோடி நஷ்டமாம்.
கடந்த வருடத்தில் தயாரிப்பாளர், விநியோகஸ்தர், தியேட்டர் உரிமையாளர் ஆகிய மூன்று தரப்புக்கும் லாபத்தை கொட்டிக் கொடுத்த படங்கள் என்று எடுத்துக் கொண்டால் நான்கே நான்குதான். காஞ்சனா, கோ, சிறுத்தை, மற்றும் எங்கேயும் எப்போதும். இந்த நான்கு தவிர வெளிவந்து வெற்றி பெற்ற படங்களில் சில இந்த மூவரில் ஒருவரை நுரை தள்ள வைத்த படங்கள் என்பதுதான் ஜீரணிக்க முடியாத உண்மை.

இப்படி ஒரு குழப்பமான வெற்றியை தந்த படங்கள்தான் வேலாயுதமும், 7 ஆம் அறிவும் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.
அசல் மட்டும் தேறிய படங்களில் ஒன்று போராளி. கடந்த வருடத்தில் அதிசயமாக தேறிய டப்பிங் படம் ஒன்று மாவீரனாம். இதுவும் விநியோகஸ்தர் ஒருவர் சொல்கிற கணக்குதான்.

கூட்டி கழித்து குப்புறத் தள்ளி, நிமர்த்தி வளைத்து படுக்க வைத்து பார்த்தாலும் 2011 ன் லட்சணம் டாப் 5 என்ற அளவிலேயே நின்று போனதுதான் வேதனை கலந்த ஆச்சர்யம்.

-ஆர்.எஸ்.அந்தணன்

அண்ணே இதுக்கு பதில் என்ன சொல்றீங்க? எது உண்மைன்னே தெரியலியே...

Annamalai Swamy said...

கேபிள், கோ சூப்பர் டூபர் ஹிட் இல்லையா? ரொம்பா நாள் ஓடினது போல் இருந்ததே?

ramachandran.blogspot.com said...

கலக்கிட்டீங்க தலைவா... சூப்பர்.

CS. Mohan Kumar said...

Thanks for detailed analysis

Kiruthigan said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சார்..!
இந்த ஆண்டு பல வெற்றிகளை குவிக்க வாழ்த்துக்கள்.

தமிழ் படங்களின் கடந்த வருட அலசல் அருமை.


http://tamilpp.blogspot.com/2011/10/blog-post.html


http://tamilpp.blogspot.com/2011/11/blog-post.html

சில்க் சதிஷ் said...

என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

சுரேகா.. said...

நல்ல அலசல் தலைவரே!

Vediyappan M said...

செக்ஸ் பற்றிய தேடல் இந்தியா - சென்னை முதலிடத்திற்கு வர நீங்கள் கொத்துபரோட்டா அடல்ட் கார்னர்-காக தெடியதே காரணம் என்ற தகவலை கூகுள் வெளியிட்டிருக்கும் அதை மறைத்திருப்பீர்கள்!

Srinivas said...

based on Chennai Theatre Response& Collection, my Top 10 Movies :)

1 ) KO - Not Huge Opening Like Mankatha but still ran very well till 70th day in almost 60-80% of released centers ) : Super Hit

2) MANKATHA - Grand Opening , first two weeks Huge Response : Super Hit

3) KANCHANA - Surprise Winner :): Hit

4) 7AAM ARIVU - Negative reviews irundhalum, Ran well for 1st twoweeks : Hit

5) ENGEYUM EPPODHUM - Good Movie, Good Result : Hit

6) DEIVA THIRUMAGAL - Family Audience naala Decent Hit : Hit

Ada Pongapa....Hit nu eduthukitta avlo dhan varudhu... Naan yedhavadhu MISS Pannitenaa..illa Ivanga Padam MISS pannuchaanne therila...and

VELAYUDHAM - Ran well only in the opening weekend, next weekend shows kooda tickets easy ya kedaichadhu, But they are telling Huge Hit.May be South Side la Odirukkalaam Naan paatha varaikkum ..Chennai and Trichy la Vela Kandippa Hit illai,: Above Average

Unknown said...

நல்லதொரு ஆய்வு.... ஆனால் கோ பற்றி மட்டும் இன்னொரு முறை பரிசீலனை செய்து இருக்கலாம்.

சே.கு. said...

2011 பம்பர் ஹிட் லத்திகா.

2012 மகா மெகா பம்பர் ப்ரேக் ஹேண்டில்பார் ஹிட் ஆனந்த தொல்லை

sada said...

ezhaam arivu super duper hit by
collection
www.sadatamil.blopspot.com

KKPSK said...

please share ur comments on this video by Director R Sundarrajan

http://www.youtube.com/watch?v=QWkGM8SmFpE&feature=youtu.be