லதா ரஜினிகாந்த் தலைமையில் நடக்கும் ஆஷ்ரம் ஆர்ட்ஸ் அகாடமியின் சார்பாக கலைஞர்களுக்கு ரஜினிகாந்த் பெயரில், சிவாஜியின் பெயரில், பீஷ்மர் பெயரில் எல்லாம் வாழ்நாள் விருதுகள் கொடுக்கிறார்கள். அதில் இந்த வருடம் ஷம்மிக்கபூர், ஆஷாபரேக், கே.பாலசந்தர் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதான ரஜினிகாந்த் விருதை அளித்து கெளரவித்தனர். இவ்விழாவில் ரஜினி பேசிய போது தன்னை கடைசியில் வந்தால் போதுமென்று சொல்லிவிட்டதால் கடைசியில் பேசுகிறேன் என்றும், தான் ஏதுவும் சாதிக்கவில்லை, என் குருநாதருக்கு என் பெயரில் விருது வழங்குவது வருத்தமாக இருப்பதாகவும், இனி பாலசந்தரின் பெயரில் விருது வழங்க வேண்டும் என்று மனைவியிடம் “கேட்டுக்” கொண்டிருப்பதாகவும் பேசினார். இவர் நினைத்திருந்தால் இந்த விழாவிலேயே பரிசுகள் அளிப்பதற்கு முன்னால் ரஜினியின் இந்தக் கருத்துக்கு மதிப்பளித்து, பாலசந்தரை வைத்தே விருதை மற்றவர்களுக்கு கொடுத்து கெளரவித்திருக்கலாம். ஆனால் கொடுக்கும் விருதை கொடுத்துவிட்டு இம்மாதிரி பேசுவதை பார்த்தால் வடிவேலுவின் ”ரொம்ப நல்லவன்” வசனம் தான் ஞாபகம் வருகிறது. ஒரு விதத்தில் ரஜினியின் நிலையைப் பார்த்தால் பாவமாய்தானிருக்கிறது. ஒரு பக்கம் மனைவி, இன்னொரு பக்கம் மகள்கள் இப்படி எல்லோரும் அவரின் புகழை, வைத்து தங்களை நிலை நிறுத்திக் கொள்ள ஆளுக்கொரு பக்கமாய் இழுக்கிறார்கள் என்பதை பார்க்கும் போது என்ன தான் சூப்பர் ஸ்டாராய் இருந்தாலும் வீட்டிற்கு புருஷன், அப்பன் தானே என தோன்றுகிறது.
@@@@@@@@@@@@@@@@@@
தடை செய்யப்பட்ட புத்தகமான சல்மான் ருஷ்டியின் சாட்டானிக் வர்சஸ் புத்தகத்தை படித்ததினால் நான்கு எழுத்தாளர்களை கைது செய்ய அரசு நடவடிக்கை எடுக்கவிருப்பதால் அவர்களது வக்கீல் நால்வரையும் ஊரைவிட்டு கிளம்பச் சொல்லிவிட்டார். இவர்கள் எல்லோரும் ஜெய்ப்பூரில் நடக்கும் உலக லிட்ரேச்சர் சம்பந்தப்பட்ட கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த எழுத்தாளர்கள். சல்மான் ருஷ்டியும் கலந்து கொள்ளவிருந்தார். கொலை மிரட்டல் காரணமாய் பாதுகாப்பு கருதி அவர் வரவில்லை. தடை செய்யப்பட்ட புத்தகத்தை படித்ததற்காக சட்டம் தன் கடமையை செய்யும் என்று சொன்னவர்கள். எழுதியவரை பாதுக்காப்பு கருதி வரவேண்டாம் என்று சொன்னது ஏன் என்று தெரியவில்லை. வரும் போது அப்படியே அலேக்காக அரெஸ்ட் பண்ணியிருக்கலாமில்லை. வருஷத்துக்கு ஒரு வாட்டி, இந்தமாதிரி புக்கை பத்தி ஞாபகப்படுத்தி விட்டு, திருட்டுத்தனமா படிக்க வைக்க கவர்மெண்டே யோசிச்ச ஐடியாவோ? எப்படியெல்லாம் யோசிக்க வைக்கிறாய்ங்கப்பா
@@@@@@@@@@@@@@@@@@பதினெட்டு லட்ச ரூபாய்க்கு டபுள் பெட்ரூம் ப்ளாட் அதுவும் குரோம்பேட்டையில் என்று விளம்பரப்படுத்தியிருந்தார்கள். போனில் கேட்டதற்கு பல்லாவரம் தாண்டி பாண்ட்ஸுக்கு முன் திரும்பும் திருநீர்மலை ரூட்டில் ஆறு கிலோ மீட்டர் என்றார்கள். கடைசியில் திருமுடிவாக்கம் எனும் இடத்தில் இருந்தது. செம கும்பல். பஃப்பே வைத்து சாப்பாடு டிபனெல்லாம் போட்டு கிட்டத்தட்ட ஒரு கண்காட்சி நடத்திக் கொண்டிருந்தார்கள். அங்கு நடந்த விஷயங்களைப் பற்றி தனியா பதிவிட வேண்டுமளவுக்கு இருக்கிறது. டிபன் காப்பி, சாப்பாடு, எல்லாம் போடுகிறார்கள். சொல்ல வந்த முக்கிய விஷயம் என்னவென்றால், விளம்பரத்தில் போட்ட பதினெட்டு லட்ச ரூபாய்க்கு ப்ளாட்டேயில்லை என்பது தான் ஹைலைட்..
@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டரிலிருந்து
பாஸிடிவ் திங்கிங் என்பது எல்லாம் சிறந்ததே நடக்குமென்பதில்லை. நடப்பது சிறப்பானதாக இருக்கும் என்ற நம்பிக்கையே..# தத்துவம்

தன்னை மறந்து சிரிக்கத் தெரிந்த மனிதன் மற்றவர்களை கஷ்டப்படுத்த மாட்டான். ஓஷோ..
பையன்களுக்கு பெண்களைப் பிடிக்கும், பெண்களுக்கு பையன்களை பிடிக்கும் எல்லாருக்கும் இது தெரியும். அந்த ரெண்டு பேரைத்தவிர.
பெண்களிடம் உனக்கு பிடித்தவர்கள் யார் என்று கேட்டால் யாருமில்லை என்பார்கள்,1% உண்மை சொல்பவர்கள் 5% பொய். 94% சொல்லும் யாருமில்லை நீங்கதான்
ப்ளாஷ்பேக்
மீண்டுமொரு இளையராஜாவின் பாடல்தான் நினைவுக்கு வருகிறது. முக்கியமாய் இந்த பாடல் ஜெயசந்திரனுக்கு ஒரு பெரிய பெயரைப் பெற்றுத்தந்த பாடல். இந்தப் பாடலின் ஃப்லோக் இசையும், கர்நாடக சங்கீத இசையும் கலந்து, பிஜிஎம்மில் புல்லாங்குழலையும், வழக்கம் போல வயலின்களையும் இழைய விட்டிருப்பார் ராஜா. இதே பாடலை தெலுங்கிலும் ராஜா உபயோகித்து கேட்டதாய் ஞாபகம்.
@@@@@@@@@@@@@@@@@
கேட்டால் கிடைக்கும் (Ask)
எங்கள் ஏரியாவின் குப்பை விஷயத்தை பதிவில் போட்டு, அதற்கு சென்னை மேயர் நடவடிக்கை எடுத்ததைப் பற்றி ஏற்கனவே சொல்லியிருந்தேன். அதே போல எக்ஸ்பிரஸ் அவின்யூவில் சென்ற மாதம் நண்பர் சுரேகா சென்ற போது அங்கிருக்கும் புட் கோர்ட்டில் சாப்பாடுக்கான கார்டு வாங்க இருபது ரூபாய் எடுத்திருக்கிறார்கள் அது மட்டுமில்லாமல் மிச்ச காசை அடுத்த முறை ஏதாவது வாங்கித்தான் கழிக்க வேண்டும் என்று சொன்னதை எதிர்த்து, பெரும் தகராறு செய்திருக்கிறார். இதற்கு முன்பு நான் ஒரு முறை தகராறு செய்து கார்டிலிருக்கும் மிச்ச பணத்தை வாங்கி வந்திருக்கிறேன். எனக்கு மட்டும் கொடுத்ததைப் போல இவரிடமும் அந்த இருபது ரூபாயையும், மிச்சப் பணத்தையும் கொடுக்க விழைந்திருக்கின்றனர் பொறுப்பில் உள்ளவர்கள். ஆனால் அவர் விடாமல் போராடி அந்த ஹால் மேனேஜரிடம் புகார் செய்து, கம்பெனியின் மேனேஜர்கள் வரை விஷயத்தை கொண்டு சென்றதோடு அல்லாமல், கேட்டால் கிடைக்கும் ஃபோரமிலும் எழுதிப் போட, இப்போது எக்ஸ்பிரஸ் அவின்யூவில் புட்கோர்ட் கார்டுகள் இலவசமாய் தர ஆரம்பித்திருக்கிறார்களாம். நிச்சயம் கேட்டால் கிடைக்கும் என்பதை நிறுபிக்கும் நிகழ்வு.
@@@@@@@@@@@@@@@@@@
இந்த வார சந்தோஷம்
ஏற்கனவே புத்தகக் கண்காட்சியை பற்றி எழுதியதில் சொன்னது போல என் புத்தகங்களுக்கு வாசகர்கள் காட்டிய ஆதரவுக்கு நன்றி. தெர்மக்கோல் தேவதைகள் சுமார் 127 புத்தகங்களும், அதனுடன் என் முந்தைய புத்தகங்களான லெமன் ட்ரீயும், ரெண்டு ஷாட் டக்கீலாவும், சினிமாவியாபாரம், மீண்டும் ஒரு காதல் கதை, கொத்து பரோட்டா, ஆகியவையும் மொத்தமாய் விற்பனையதாய் வேடியப்பன் தகவல் தெரிவித்தார். மொத்தமாய் அவருடய ஸ்டாலில் மட்டும் முன்னூறுக்கும் மேற்பட்ட என்னுடய புத்தகங்கள் விற்றிருப்பதாய் சொன்னார். இதில் கொசுறாய் இன்னொரு சந்தோஷ விஷயம் இக்கண்காட்சியில் கொத்து பரோட்டா ஆல்மோஸ்ட் அவுட் ஆஃப் ஸ்டாக் ஆகிவிட்டதாய் “ழ” உரிமையாளர் ராஜா தெரிவித்தார். எல்லாம் உங்க ஆதரவினால்.. நன்றி.. நன்றி.. தெர்மக்கோல் தேவதைகள் பற்றிய கே.ஆர்.பி. செந்திலின் விமர்சனம்
ரஹ்மானின் சினிமா பட இசை தொகுப்பை ஜெர்மன் பிலிம் ஆர்கெஸ்ட்ராவான Babelsberg Classic Incantations குழுவும், ரஹ்மானின் கே.எம்.மியூசிக் கன்சர்வேட்டரி கோயர் க்ரூப்பும் இணைந்து நடத்துகிறது. இதை கண்டெக்ட் செய்பவர் உலகப் புகழ் பெற்ற மேட் டங்க்லி. ஐந்து ஊர் டூருக்கு இவர் தான் பொறுப்பு. சென்னை வருகிற 26ஆம் தேதி லேடி ஆண்டாள் பள்ளியில் இருக்கும், முத்து வெங்கடேச சுப்பா ஹாலில் நடைபெறுகிறது. நிச்சயம் உங்களுக்கு ஒர் இசை விருந்து காத்திருக்கிறது. உங்களுக்கான அனுமதி சீட்டுகளை இங்கே பெற்றுக் கொள்ளலாம். Goethe-Institut/Max Mueller Bhavan
4, Rutland Gate, 5th Street
Chennai 600 006
Tamil Nadu, India
Tel.: +91 44 28331314
Fax: +91 44 28332565
@@@@@@@@@@@அடல்ட் கார்னர்
ஒரு ஆணும் பெண்ணும் பாரில் தண்ணியடித்துக் கொண்டிருக்க, அவர்கள் இருவரும் டாக்டர்கள் என்று அறிந்ததும், இன்னும் நெருக்கமாகி விட்டார்கள் ஒருமாதிரி செட்டாகி மேட்டருக்கு ரூம் போட்டார்கள். மேட்டர் எல்லாம் முடிந்தவுடன், பெண் டாக்டர் பாத்ரூமுக்கு சென்று சர்ஜன் ஆபரேஷனுக்கு தயாராவது போல கைகளை தேய்த்து, தேய்த்து பத்து நிமிடத்திற்கு பின்பு வந்தாள். அவளிடம் ஆண் : நீ ஒரு சர்ஜன் தானே?
பெண் : அட ஆமாம் எப்படி கண்டுபிடிச்சே?
ஆண் : நீ கழுவுற ஸ்டைலை வைத்து தான்
பெண் : நீ அனஸ்தாலிஜிஸ்ட்தானே?
ஆண் : அட நீ எப்படி கண்டு பிடிச்சே?

பெண் : என்ன நடந்துச்சு, உனக்கு இருக்கா இல்லையான்னே தெரியலையே அதை வச்சி கேட்டேன் என்றாள்.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
Post a Comment
21 comments:
முழிச்சிருந்தா முதல்ல படிச்சிரலாம் போல!!
18லட்ச ரூபாய் வீட்டுக்கு வாழ்த்துக்கள்! :)) (இந்த ரணகளத்திலயும் ஒரு கிளுகிளுப்பு கேக்குது உங்களுக்கு? :) )
கேட்டால் கிடைக்கும் என்று ஊர்ஜிதப்படுத்தும் எல்லா முயற்சிகளுக்கும் பாராட்டுக்களைத் தெரிவிப்பதற்கு நன்றி!
கேட்டால் கிடைக்கும் கேட்கிற விதத்தில் கேட்டால்,
ரஜினி நிலைமையும் அப்படிதான்.
//ஒரு விதத்தில் பார்த்தால் ரஜினியின் நிலையைப் பார்த்து பாவமாயிருக்கிறது.//
அந்த மனுசன நெனச்சா ரொம்ப பாவமாத்தான் இருக்கு :((
ரஜினியை ஏன் இப்படி கொண்டாடுகிறார்கள் என்றே தெரியவில்லை..
18 லட்ச ரூபாய் வீட்டுக்கு ஆசைப்பட்டிங்களா தல..
//ஒரு விதத்தில் ரஜினியின் நிலையைப் பார்த்தால் பாவமாய்தானிருக்கிறது. ஒரு பக்கம் மனைவி, இன்னொரு பக்கம் மகள்கள் இப்படி எல்லோரும் அவரின் புகழை, வைத்து தங்களை நிலை நிறுத்திக் கொள்ள ஆளுக்கொரு பக்கமாய் இழுக்கிறார்கள் என்பதை பார்க்கும் போது என்ன தான் சூப்பர் ஸ்டாராய் இருந்தாலும் வீட்டிற்கு புருஷன், அப்பன் தானே என தோன்றுகிறது.
//
உண்மைதான் .. அவர் சூழ்நிலை கைதியாக உள்ளார்
அருமையான பாடல் ..
கேபிள்,
//பதினெட்டு லட்ச ரூபாய்க்கு டபுள் பெட்ரூம் ப்ளாட் அதுவும் குரோம்பேட்டையில் என்று விளம்பரப்படுத்தியிருந்தார்கள். போனில் கேட்டதற்கு பல்லாவரம் தாண்டி பாண்ட்ஸுக்கு முன் திரும்பும் திருநீர்மலை ரூட்டில் ஆறு கிலோ மீட்டர் என்றார்கள். கடைசியில் திருமுடிவாக்கம் எனும் இடத்தில் இருந்தது. செம கும்பல். பஃப்பே வைத்து சாப்பாடு டிபனெல்லாம் போட்டு கிட்டத்தட்ட ஒரு கண்காட்சி நடத்திக் கொண்டிருந்தார்கள். அங்கு நடந்த விஷயங்களைப் பற்றி தனியா பதிவிட வேண்டுமளவுக்கு இருக்கிறது. டிபன் காப்பி, சாப்பட்டு, எல்லாம் போடுகிறார்கள். சொல்ல வந்த முக்கிய விஷயம் என்னவென்றால், விளம்பரத்தில் போட்ட பதினெட்டு லட்ச ரூபாய்க்கு ப்ளாட்டேயில்லை என்பது தான் ஹைலைட்..//
ஹி...ஹி..விவரமானவர்னு உங்களை நினைச்சு இருந்தேன். நாட்டு நடப்பே இப்போ தான் தெரிஞ்சுக்கிறிங்க போல :-)) இப்போலாம் மறைமலை நகர் கிட்டேவே 40 க்கு சுமாரான சைஸ்ல தான் வாங்க முடியும். போன மாசம் விவசாயிகள் பத்தி போட்ட என்ப்பதிவில் இந்த பிளாட் மேட்டர் தான் சொன்னேன்.(அப்போ அப்போ அடுத்தவங்க எழுதுறதையும் படிக்கணும் அப்போ தான் நாட்டு நடப்பு தெரிய வரும்)
அதுவும் திருநீர் மலை ஏரியா எல்லாம் கல்குவாரி ஏரியா , நிம்மதியா எல்லாம் இருக்க முடியாது.ஏர்ப்போர்ட் , தாம்பரம் எல்லாம் பக்கம்னு விளம்பரம் போட்டு இருப்பாங்களே :-))ல்
இப்போ ரீல் எஸ்டேட் நல்லா ஓடுற ஏரியா ஒ.எம்.ஆர்,தாம்பரம் முடிச்சூர் டூ ஒரகடம், ஜி.எஸ்.டி தான்.
ஒரு ஆறு மாசமா பிளாட் வாங்க வேட்டை ஆடிப்பார்த்துட்டு ச்சீ சீ இந்த பழம் புளிக்கும் னு ஒதுங்கியாச்சு.ஆனாலும் நீங்க அதிஷ்டக்காரர் சாப்பாடுலாம் கிடைச்சு இருக்கு, எனக்கு டீ க்கூட கிடைப்பதில்லை மாலையில் செல்வதால்.
ஜிஎஸ்.டி ரோட்ல இருக்குனு போடுவாங்க , கிட்டே போன அங்கே இருந்து ஒரு சின்ன ரோட்ல வாங்க சொல்லி உள்ள வயக்காட்டில கொண்டுப்போய் விடுறாங்க.இப்படித்தான் ஷ்ரிராம் சங்கரினு ஒரு பிளாட் எஸாரெம் அருகில்னு சொல்லிட்டு , கன்னிவாக்கம் னு ஒரு கிராமதுக்கு கூப்பிட்டு போறாங்க. ஆனால் 200-300 பிளாட்னு பெருசா கட்ட்டுறாங்க, சுவிம்மிங் ஃபூல், கிளப் ஹவுஸ்,ஜிம், பார்க், ஏடிஎம், ஷாப்பிங் ஸோன், இன்னும் என்ன என்னமோ சொல்லி 40 தான் ஆரம்ப விலைனு குண்டு போடுவாங்க அப்படியே 60-70 க்கு தான் கொஞ்சம் நல்ல அளவுள்ள வாங்க முடியும்.அப்படியே முக்கி முக்கி சொந்தமா பிளாட் வாங்கிட்டாலும் மெயிண்டனன்ஸ் சார்ஜ்னு மாதம் ஒரு 5000 ரூ தாளிப்பாங்க. மேற் சொன்ன வசதிக்கு. நம்மக்கிட்டே காசு வாங்கப்போறாங்க, அப்புறம் எதுக்கு அது இருக்கு இது இருக்கு பீத்திக்கிறாங்க. என்னமோ ஓசுல கொடுக்கிறாப்போல.
அதுவும் செமையா மொளகா அரைப்பாங்க, சூப்பர் கன்ஸ்ட்ரக்டட் ஏரியா னு சொல்லி 1400 ச.அ சொல்வாங்க, அதப்பார்த்து ஏமாறக்கூடாது கார்பெட் ஏரியா கேட்டா 950 ச.அ தான் இருக்கும்.ஆனால் விலை 1400 ச.அ க்கு.
இப்படி ஏமாத்துறவங்க எல்லாம் சின்ன ஆளுங்க இல்லை எல்லாம் பெரிய நிறுவனங்கள், அருண், அக்ஷயா, ஷ்ரி ராம் குருப், மஹெந்திரா வோர்ல்ட் ,ஐடிசி, டிஎல் எப், போன்றவங்க.
மஹேந்திரா சிட்டில டுயுப்லெக்ஸ் ஹவுஸ் ஒரு கோடி , பிளாட் 50 லட்சம். அதுவும் இல்லாம ஏர் போர்ட்க்கு மிக அருகில்னு வேற விளம்பரம் போடுவாங்க செங்கல்பட்டுக்கிட்டே கட்டிட்டு :-)) எல்லாம் என்.ஆர்.ஐ, ஐ.டி காரங்க செய்கிற வேலை விலையை ஏத்திவிட்டுறாங்க :((
எல்லாம் புக் ஆகிடிச்சு இன்னும் சில பிளாட் தான் இருக்குனு ,நம்மளை கோழி அமுக்க பார்க்கிறாங்க :-))
இப்போ பல்லாவரம் 100 அடி ரோட்ல நிறைய பிராஜக்ட் வருதுனு சொல்லி மீண்டும் என்னை உசுப்புறாங்க போய்ப்பார்க்கணும். போய்ப்பார்க்கிரிங்களா? :-))
லேட்டஸ்ட் அப்டேட் 13 ஜனவரி எக்ஸ்பிரஸ் avenue சென்றேன் .ஸ்ட்ரிக்ட்லி no refund என்று பில் கவுன்டரில் ஒட்டிவிட்டார்கள்.
உங்கள் புத்தகங்கள் கிடைக்கும் பட்சத்தில் கட்டாயம் வாசிக்க ஆவலாயிருக்கிறேன்.கொத்து பரோட்டா அருமை,
ஒரு நாளைக்கு எத்தன மணிநேரம் தூங்குவிங்க?இல்ல தூங்கவே மாட்டிங்களா?(டவுட்டு?!%$#)
கொத்து பரோட்டா மிட் நைட்லையே ரிலீஸ் ஆகுதே அதான் கேட்டேன்.
-அருண்-
ரஜினி முன்பே இதை செய்திருந்தால் கே.பாலசந்தர் அவர்களுக்கு அவர் பெயரிலேயே
விருது கொடுக்க முடியுமா? அடுத்த முறையிலிருந்து அதை தொடர்வதற்காக அப்படி
கூறினார்...(தலைவர் செய்யும் தவறு என்னவென்றால்,பிளான் செய்து அதற்கேற்றவாறு வாழ்க்கையில்
நடிக்காமல்,இயல்பாக உண்மையாக இருப்பது தான்.).
Ramachandran Sir neenga sonnathu 100% correct cable anna namum Rajni pola iruntha therium Avar rajinia irupathanal evvlo kastamnu ungalauku theriyatha.... sry anna thappa iruntha k athu muluka muluka unga thought but THALAIVARA Sonna Manasukku Kastama Irukku Athanala Than K THAPA ninaikka Vendam KKKKKKK
sema sema >>>>>>>vazhthukkal virpanai saathnaikal thodaratum
எனக்கும் ராமசந்திரன் சொல்வது சரி என்றே படுகிறது. அவருக்கே தெரியாதா என்ன வேண்டாம் என்று தடுக்க. இப்படிச் செய்வதனால் இனிமேல் யாரும் விருது கொடுப்பதை தடுக்கலாம்/யோசிப்பார்கள் என்றிருக்கலாம். அவருக்கு புகழினால் வருகிற தொல்லை,நிம்மதியின்மை நானோ நீங்களோ புரிந்து கொள்வது கடினம்தான்.
கேபிளார் ரஜினி பற்றி “ஆதங்கம்” கொண்டு எழுதுவது இது என்ன முதல் முறையா?
கேபிளார் அவர்களுக்கு ரஜினி மேல எம்புட்டு “பாசம்” இருக்குன்னு FB உட்பட பல இடங்களில் அவர் பேசி இருப்பதை பார்த்தால் தானே தெரியும்!!!!
உடனே இதுக்காக என்னை திட்டிடாதீங்க சங்கர் ஜி....
Hi sir
we r waiting for Naan, Sharmi Vairam story. Pls post it regularly
இந்த ரியல் எஸ்டேட் விளம்பரங்களே பொதுவாக போலிதான்! இன்னின்ன இடங்களிலிருந்து இத்தனை நிமிஷங்கள் என்றால் ”விடிகாலை 2 மணிக்கு, ட்ராஃபிக் இல்லாத போது 150 கிமீ ஸ்பீடில் ட்ரைவ் செய்தால்” - என்பது சொல்லாத விஷயம்! Better go for reputed names in business. Particularly, if you go for a flat, quality of construction can be assured only by big name builders though the price will be a little higher - which I feel is worth spending. Best wishes,
-R. J.
கமல் ரசிகருக்கு ரஜினி மேல எவளோ அக்கறை.... !!! ஆடு நினைதுன்னு ஓநாயகள் எல்லாம் அழுதுச்சாம்!!
உங்க வேலையை நீங்க பாருங்க அவர் வேலையை அவரு பாத்து பாரு!!..
...புத்தி சொல்றராமா!!!
// ஒரு விதத்தில் ரஜினியின் நிலையைப் பார்த்தால் பாவமாய்தானிருக்கிறது. ஒரு பக்கம் மனைவி, இன்னொரு பக்கம் மகள்கள் இப்படி எல்லோரும் அவரின் புகழை, வைத்து தங்களை நிலை நிறுத்திக் கொள்ள ஆளுக்கொரு பக்கமாய் இழுக்கிறார்கள் என்பதை பார்க்கும் போது என்ன தான் சூப்பர் ஸ்டாராய் இருந்தாலும் வீட்டிற்கு புருஷன், அப்பன் தானே என தோன்றுகிறது.//
I shudder the thought of him becoming CM.
உடன்பிறவா சகோதரின்னா கழட்டி வுட்றலாம், வீட்டு எஜமானிய?
மிகவும் அருமை ........
"நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com"
அருமை
"நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com"
Post a Comment