காலையிலேயே வேடியப்பன் அழைத்தார். வேறொரு இயக்குனருடனான கதை விவாதம் இருந்ததாலும், அலுவலக வேலைக் காரணமாகவும், எங்கேயும் போக முடியவில்லை. கே.ஆர்.பியும் நானும், மாலை நான்கு மணிக்காய் கிளம்பினோம். நேற்று நான் சொன்ன கவிதை புத்தக வெளியீடு வேறு இருந்ததால் கட்டாயம் போக வேண்டியதாகிவிட்டது. ராஜகுமாரியில் புத்தக விற்பனை எப்படி போகிறது என்று பார்க்க ‘ழ” கே.ஆர்.பியுடன் நுழைந்தோம். நன்றாக போயிருப்பதாகவும், என் புத்தகங்கள் விற்றிருப்பதாய் சொன்னார். மணிஜி வேறு போன் செய்திருந்தார். அவருக்காக காத்திருந்த வேலையில் வாசகர் சுதர்சன் வந்தார். தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, புத்தகங்களையும், என் கையெழுத்தையும் வாங்கிக் கொண்டு போனார். என் முந்தைய புத்தகங்களான லெமன் ட்ரீயும், ரெண்டு ஷாட் டக்கீலாவையும், சினிமா வியாபாரத்தையும் பாராட்டினார்.
அங்கிருந்து கிளம்பிய போது இலக்கியவாதி கூட்டமான கார்த்திகை பாண்டியன், எம்.எஸ்.சரவணக்குமார், கிருஷ்ணபிரபு, மேவி ஆகியோருடன் நேசமித்ரனும் இருந்தார். கையில் தடியாய் ரெண்டு புத்தகம் மட்டுமே வைத்திருந்தார். இன்றைய பட்ஜெட் அவ்வளவுதானாம். சிறிது நேரம் அளவளாவிக் கொண்டிருந்த போது தல பாலபாரதி பரபரப்பாக வந்து யாருக்காவது வரலாற்றின் மேல் காதல் இருந்தால் என்று சொல்லி ஒர் புத்தகத்தை பற்றி சொன்னார். எட்டு வால்யூம் சும்மா தீயா இருக்கு என்றார். விலை ஐந்தாயிரமாம். நிஜமாவே தியாய்த்தானிருந்தது. வழியில் தாமிராவை பார்த்தோம். ஏற்கனவே களைத்துப் போயிருந்தார். மனைவி குழந்தையை வேறெங்கோ விட்டிருப்பதாகவும், கிளம்புகிறேன் என்றார். அதற்குள் நாகரத்னா குகன் புத்தக வெளியீட்டிற்காக கூப்பிட்டார். மக்களை அழைத்துக் கொண்டு டிஸ்கவரி போனேன். பொன்.சுதா, இயக்குனர் சற்குணம், அவரது உதவியாளர்கள் குழுமியிருந்தனர். ”எப்ப படம் பண்ணப் போறீங்க? எத்தன நாளுக்குத்தான் மத்த படத்துக்கு எழுதிட்டிருப்பீங்க? நாங்க எப்ப உங்க படத்த விமர்சிக்கிறது? ” என்று அக்கரையுடன் கேட்டார்கள். விரைவில் அதற்கான நேரம் வருகிறது என்றும், அது வரை நான் எழுதும், வேலை செய்யும் படங்களை பற்றி விமர்சித்துக் கொண்டிருங்கள் என்றேன்.
உமா செளந்தர்யாவின் “விழிப்பறிக்கொள்ளை” கவிதை நூலை இயக்குனர் சற்குணம் வெளியிட, நான் பெற்றுக் கொண்டேன். அங்கிருந்த பதிவர்கள் அனைவரும் தனித்தனியாய் ‘வாகை சூடவா” அற்புதமாக இருந்ததாய் சொல்லி பாராட்டினார்கள். நேசமித்ரன் தமிழில் குறிப்பிடத்தக்க, பீரியட் பிலிம் என்று புரியும்படியாய் பாராட்டினார்.
உமா செளந்தர்யாவின் “விழிப்பறிக்கொள்ளை” கவிதை நூலை இயக்குனர் சற்குணம் வெளியிட, நான் பெற்றுக் கொண்டேன். அங்கிருந்த பதிவர்கள் அனைவரும் தனித்தனியாய் ‘வாகை சூடவா” அற்புதமாக இருந்ததாய் சொல்லி பாராட்டினார்கள். நேசமித்ரன் தமிழில் குறிப்பிடத்தக்க, பீரியட் பிலிம் என்று புரியும்படியாய் பாராட்டினார்.
வழக்கம் போல உயிர்மை, கிழக்கு, ஆகிய ஸ்டால்களில் கூட்டமிருந்தது. ஆனாலும் சென்ற முறை போல பெரிய கடையாய் இல்லாததால் கூட்டம் சிதறித்தான் போயிருந்தது கிழக்குக்கு. ஆனால் கிழக்கின் அத்துனை பெஸ்ட் செல்லர் புத்தகங்களும் பெரும்பான்மையான கடைகளில் கிடைக்கிறது. போன் செய்தால் உடனடியாய் பில்லோடு எடுத்து வந்துவிடுகிறார்கள் கிழக்குக்காரர்கள். டிஸ்கவரியில் “தெர்மக்கோல் தேவதையும்” “அழிக்கப்பிறந்தவன்” நாவலும் பரபரப்பாக போவதாய் சொன்னார் பட்டர்ப்ளை சூர்யா. நிறைய பேர் என் புத்தகங்களை மொத்தமாய் வாங்கியதாகவும், அதிலும் கொத்துபரோட்டா இன்று அவுட் ஆப் ஸ்டாக் ஆகியது சந்தோஷமாயிருந்தது.
பாண்டியிலிருந்து மனோகரன் வந்திருந்தார். புதிய புத்தகமான தெர்மக்கோல் தேவதைகளை நேரில் வாங்க. ஃபேஸ்புக் நண்பர் முத்துசாமி தெர்மக்கோல் தேவதை படித்துவிட்டதாகவும், மிக அருமையாய் இருக்கிறது என்றும் கூறி, என்னுடய மற்ற புத்தகங்களையும் வாங்கிச் சென்றார். நிறைய பேருக்கு படிக்கும் பழக்கமேயில்லையென்றும், அதை ஊக்குவிக்கவாவது சுவாரஸ்யமான வெகுஜன எழுத்துக்கள் தேவையென்றார். அது என்னவோ உண்மைதான் படிக்க ஆரம்பித்துவிட்டு கொஞ்சம் கொஞ்சமாய் அடுத்த நிலை நோக்கிப் போவது ஒரு விதமான வளர்ச்சிதானே? என்று தோன்றியது. மேலும் வாசகர் நண்பர் வெற்றி,பதிவர் ஆரூர்.முனா செந்தில் , பிலாசபி பிரபாகரன், சிவகுமார், ‘ழ” நிறுவனர் ஓ.ஆர்.பி. ராஜா, ஈழவாணி, சுரேகா, தடாகம் நிறுவனர், பாரதிதம்பி, அதிஷா, லக்கி, ஆகியோருடன் அரட்டை ஓடியது.
வழக்கம் போல இன்றும் லயன் காமிக்ஸ் விற்று தீர்ந்துவிட்டது. புதிய ஸ்டாக் நாளைதான் வருமென்றார்கள். தேவைப்படுகிறவர்கள் முன்பதிவு செய்து கொள்ளுங்கள். மீனாட்சியில் சல்லீசு சுஜாதா புத்தகங்கள் ஆல்மோஸ்ட் காலி. ஓரிரு புத்தகங்களே இருக்கின்றன.
வழக்கம் போல இன்றும் லயன் காமிக்ஸ் விற்று தீர்ந்துவிட்டது. புதிய ஸ்டாக் நாளைதான் வருமென்றார்கள். தேவைப்படுகிறவர்கள் முன்பதிவு செய்து கொள்ளுங்கள். மீனாட்சியில் சல்லீசு சுஜாதா புத்தகங்கள் ஆல்மோஸ்ட் காலி. ஓரிரு புத்தகங்களே இருக்கின்றன.
ஐம்பது ரூபாய்க்கு குறைவாய் காண்டீனில் எந்த அயிட்டமும் இல்லை. டீயும், காப்பியும் அருமையாய் இருந்தது. வெஜிட்டபிள் மசாலா போண்டா ஆனாலும் அநியாயமாய் சிறுவர்கள் விளையாடும் டூமாங்கோலி போல இருந்தது. கொஞ்சம் பாத்து மனசு வச்சு அட்லீஸ்ட் ரெண்டு டூமாங்கோலி சைசுக்காவது போடுங்க பாஸ். சரியான கழிவறை வசதியில்லாததால் கேண்டீன் பக்கத்து ஏரியாவெங்கும் ”யூரினைன்” வாசனை. மற்றபடி சுத்தமாய்த்தான் இருந்தது புத்தகக் கண்காட்சி.
என் புத்தகங்கள் கிடைக்குமிடம்
334 - டிஸ்கவரி புக் பேலஸ்
161/162 - ராஜகுமாரி பப்ளிகேஷன்ஸ்
334 - டிஸ்கவரி புக் பேலஸ்
161/162 - ராஜகுமாரி பப்ளிகேஷன்ஸ்
281/282 - வனிதா பப்ளிகேஷன்ஸ்
ஆகியவற்றில் கிடைக்கும்
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
Post a Comment
3 comments:
அவர் ஆரூர்.முனா செந்தில். சுரேகா,சுரேகா ரிப்பீட். போண்டா.. மணி ஜாஸ்திதான்.
அண்ணே, நேத்து நான் சொன்னது "லெமன் ட்ரீயும், இரண்டு ஷாட் டக்கீலாவும்" புஸ்தகத்துல வர முத கத- முத்தம் . நாலு வாட்டி படிச்சிட்டேன். இன்னும் செமைய டிவலப் பண்ணலாம்.
கம் பேக் காமிக்ஸ் புஸ்தகம் வாங்கிட்டீங்களா ?
நன்றி மேவி.. இன்னும் வாங்கலை..
Post a Comment