Thottal Thodarum

Jan 30, 2012

கொத்து பரோட்டா -30/01/11

நாயகர்களுக்கு இணையாய் இயக்குனரின் சம்பளமும் வர வேண்டும் என்று ஆசைப்படுவது சரிதான்.ஆனால் அதை எந்த நேரத்தில் எப்போது சொல்ல வேண்டுமென்று கூடவா தெரியாது?. வர வர அமீரின் காமெடி தாங்கவில்லை. இயக்குனருக்கு பத்து லட்சமாம், இணை இயக்குனருக்கு நாலு லட்சமாம், துணை இயக்குனருக்கு இரண்டு லட்சமாம், உதவி இயக்குனருக்கு ஒரு லட்சமாம். அது தவிர இயக்குனருக்கு பேட்டா ஒரு நாளைக்கு ஆயிரமாம்.  இவருக்கு கிடைத்த தயாரிப்பாளர் போல எல்லாருமே ஜே.அன்பழகன் ஆகிவிட முடியுமா? அவரே கண்ணு முழி பிதுங்கிட்டு இருக்காரு.. ஜெயம் ரவியோ எப்படா படத்த முடிப்பாருன்னு ஒரு பக்கம் புலம்பிட்டிருக்காரு. இன்னொரு பக்கம் தயாரிப்பாளர் புலம்புறது தனி. மொத்தமாய் ஒரு கோடிக்குள் படமெடுக்கும் பல சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்களை ஆட்டத்தை விட்டே துரத்தியடிக்க செய்த சதியாய்த்தான் தெரிகிறது. 350 ரூபாய் பேட்டாவிலிருந்து 450 கேட்டதற்கே உன்னைப் பிடி என்னைப் பிடி என்று ஆளாளுக்கு உண்ணாவிரதமும், போராட்டமுமாய் இருக்கிற நேரத்தில், இவரின் காமெடி உச்சபட்சம். தினசரி பேட்டா 100 ரூபா ஒழுங்கா கிடைக்குமா? இல்லையான்னு இருக்கிற காலத்தில.. இவரு சொல்றது எல்லாம் எவ்வளவு தூரம் சாத்தியம் என்பதை இயக்குனர் சங்கத்திலிருக்கும் இயக்குனர்களுக்கே தெரியும். தயாரிப்பு செலவு எகிறி விட்டது. படங்கள் ஓட மாட்டேன் என்கிறது என்று புலம்புகிற நேரத்தில் தயாரிப்பாளர்களே உருவாக யோசிக்கிற நேரத்தில் இம்மாதிரியான அறிக்கைகள் எவ்வளவு தூரம் தமிழ் சினிமாவின் நிலையை குழப்பும் என்று புரியாமல்தான் பேசுகிறாரா?. சரி.. இவ்வளவு தூரம் பேசுகிறவர்கள் ஏன் நடிகர்களின் சம்பளத்தைப் பற்றி வாயைத் திறக்க மாட்டேனென்கிறார்கள்?. யாராவது கால்ஷீட் கொடுக்காமல் போய்விட்டால் என்ன செய்வது என்ற பயமா? முதலில் இரண்டு மணி நேரப் படத்துக்கு 500 நாட்கள் ஷூட் செய்து அநியாயமாய் பட்ஜெட்டை இழுக்காமல் படமெடுக்க கற்றுக் கொண்டாலே பாதி விஷயங்கள் சரியாக இருக்கும். தெலுங்கு படங்களைப் போல சம்பளத்தை படங்களின் வெற்றிக்கு பிறகு வாங்கிக் கொள்ளச் சொல்லலாமே? அல்லது சதவிகித அடிப்படையில் சம்பளத்தை பெற்றுக் கொள்ளச் சொல்லலாமே? எனக்கு தெரிந்து சமீபகாலமாய் தொடர்ந்து தோல்விகளையே கொடுத்துக் கொண்டிருக்கும் ஒரு கருத்த நடிகரின் சம்பளம் ஆறு கோடியாம். என்ன கொடுமைடா சாமி. அதற்காக பெப்ஸி தொழிலாளர்கள் சம்பள உயர்வை நான் முழுவதுமாய் ஆதரிக்கிறேன் என்று நினைத்து விடாதீர்கள். அது பற்றி தனிப் பதிவே போட வேண்டியிருக்கிறது. தமிழ் சினிமாவில் பட்ஜெட்டில் சினிமாவே எடுக்க முடியாத அளவிற்கு இவர்கள் செய்யும் ப்ரச்சனைகளை சொல்லிக் கொண்டே போகலாம் போலிருக்கிறது.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&


ஒரு குறிப்பிட்ட தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டால் தமிழக அரசின் எல்லா சேவைகளையும் பெறக்கூடிய வகையில் டெக்னாலஜியை கொண்டு வர இருக்கிறது தமிழக அரசு. அதே போல இம்மாதிரியான கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் பொருட்டு இளைஞர்களுக்கு பரிசளிக்கப் போகிறதாம் தமிழக அரசு. ஷயங்கள் வரவேற்கப்பட வேண்டிய விஷயங்களில் ஒன்றுதான். அப்படியாவது லஞ்சமில்லாமல், மீடியேட்டர்கள் இல்லாமல் அரசின் நல திட்டங்கள் மக்களிடையே சென்றடையும் வாய்ப்பாக அமையலாம். இன்றைக்கும் ஆர்.டி.ஓ ஆபீஸ் வாசலில் இருக்கும் ஃபாரம் வெண்டர்களுக்குத்தான் எது எதற்கு எந்த ஃபாரம் என்று தெரியும். அவர்கள் நிரப்பிக் கொடுப்பதைத்தான் நாமும் கையெழுத்திட்டு கொடுக்கிறோம். எத்தனை பேருக்கு தெரியும் அதை நிரப்புவது ஒன்று பெரிய கம்பசூஸ்திரமில்லை என்றும், அப்படியே நாம் தவறாய் நிரப்பியிருந்தால் அதை நமக்கு சொல்லிக் கொடுத்து சரி செய்ய வேண்டியது அந்த அதிகாரியின் கடமையென.. எத்தனை பேர் லைசென்ஸ் எடுக்க காலை பதினோரு மணிக்குள் க்யூவில் போய் நின்று பணம் கட்டியிருக்கிறார்கள்?. எத்தனை பேர் காசு கொடுக்காமல் லைசென்ஸ் வாங்கியிருக்கிறார்கள்?. இதற்கெல்லாம் காரணம் நம் சோம்பேறித்தனமும் தான். நான் இதுவரை எந்த ஒரு ஆர்.டி.ஓ விஷயத்திற்கு ஆள் வைத்து வேலையை செய்து கொண்டதில்லை. வெகு சுலபமாய் நம் வேலைகள நடக்கிறது. எவ்வித மீடியேட் இம்சைகள் இல்லாமல்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
ஆண்ட்ராய்ட் வந்த பிறகு மொபைல் அப்ளிகேஷன்களில் பெரிய மாற்றங்கள் வந்து கொண்டேயிருக்கிறது. பல அப்ளிகேஷன்கள் மிக உபயோகமானவை. பல விஷயங்கள் இலவசமாகவே கிடைக்கிறது.அப்படிப்பட்ட ஒன்றுதான் சென்னை பஸ் ரூட்டுக்கான ஒர் அப்ளிக்கேஷன். சென்னைக்கு புதியவர்களாகவும், தமிழ் தெரியாதவராய் இருந்தால் லோக்கல் பஸ் ரூட்டுகளைப் பற்றி தெரிந்து கொள்வது மிக கஷ்டமான ஒன்று. Chennai MTC info
என்கிற இந்த அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து கொண்டால் மிக சுலபமாய் நாம் சென்னை பஸ்களைப் பற்றி, ரூட் நம்பர் ஆகியவற்றை சுலபமாய் அறிந்து கொள்ள முடியும். ஸ்கந்தா என்கிற பெங்களூரைச் சேர்ந்த இளைஞர் இதை எழுதியிருக்கிறார். Chennai Train Dtroid என்று ஏற்கனவே சென்னை ரயில்கள் பற்றிய அப்ளிகேஷனும் உருவாக்கியிருக்கிறார்களாம்.  டெக்னாலஜி இம்ப்ரூவ்ட் வெரி மச்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
சென்னையில் இனி போக்குவரத்து போலீசார் வாங்கப் போகும் குறைந்தபட்ச அபராதமே 100தானாம். அதிலும் இரண்டாவது முறை என்றால் 300ஆம். போக்குவரத்து விதிகளை மீறுகிறவர்களுக்குத்தானே? நல்ல விஷயம் தானே என்று ஒரு பக்கம் தோன்றினாலும், இன்னொரு பக்கம் இவர்கள் நூறுக்கு குறைவாய் கட்டிங் வாங்கும் தொகையும் மினிமம் ஐம்பதாகி விடுமே என்று பயமாய் இருக்கிறது. அபராத தொகைக்கு குறைவாக கேட்கும் ஆட்களைப் பற்றி புகார் செய்ய வேண்டுமாம். ம்ஹுக்கும்.. நடக்கிற கதைய பாருங்கப்பா..
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
ரயிலில் போய் ரொம்ப நாளாகிவிட்டது.  குடியரசு தினத்தன்று மணிஜி, அழைத்திருந்தார்.காஞ்சிபுரம் வரை ஒரு சின்ன ட்ரிப் போகலாமென்று. சைதையிலிருந்து குரோம்பேட்டை வரைக்கும் மின்சார ரயிலில் போகலாமென்று ஸ்டேஷனுக்கு சென்ற போது பெரிய வரிசை நின்றிருந்தது. ரொம்ப நேரமாய் க்யூ நகரவேயில்லை. என்னவென்று பார்த்த போது, ஒவ்வொருவரும் நான்கைந்து பேருக்கு டிக்கெட் வாங்கிக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். உடன் அவர்களிடமெல்லாம் சண்டை போட்டு, க்யூவை சரி செய்தால் குழந்தையுடன் ஒரு பெண் யாரைப் பற்றியும் கவலைப்படாமல் நேராய் கவுண்டருக்கு சென்று டிக்கெட் எடுக்கப் போனார். நான் மீண்டும் கத்த ஆரம்பித்ததும் கவுண்டரில் இருந்த ஆள் டிக்கெட் கொடுக்க மறுத்து க்யூவில் நிற்கச் சொன்னார். இதில் முக்கியமாய் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால் இவ்வளவையும் பார்த்துக் கொண்டு எல்லோரும் புலம்பிக் கொண்டிருந்தார்களே தவிர, ஏன் என்று ஒருவரும் கேட்கவில்லை. எல்லா இடங்களிலும் ஒரு சூப்பர்மேன் வந்து இவர்களுக்காக குரல் கொடுக்க வேண்டுமென காத்திருப்பார்கள் போலிருக்கிறது. நான் சூப்பர்மேன் என்று என்னைச் சொல்லலை..:)
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
ப்ளாஷ்பேக்
ஒவ்வொரு காலகட்டத்திலும் இம்மாதிரியான பாடல்கள் ஒரு கலக்கு கலக்கிவிட்டு போகும். தேசாப்பில் எப்படி ஏக் தோ தீனோ அது போல இப்படம் வந்த காலத்தில் இந்தியாவே இந்த பாட்டை பாடிக் கொண்டிருந்தது.  பழங்காலக் கொலைவெறி என்றும் சொல்லலாம். ஹம் படத்தில் வரும் இப்பாடல் பட்டி தொட்டி எல்லாம் பேமஸ். லஷ்மிகாந்த் பியாரிலால் இசையில், சுதேஷ்போஸ்லே, கவிதா கிருஷ்ணமூர்த்தி பாடிய இப்பாடல் இன்று கேட்டாலும் நன்றாகவேயிருக்கிறது. கொசுறாய் ஒரு செய்தி.. இப்படம்தான் தமிழில் பாட்ஷாவாக டிங்கரிங் பட்டியெல்லாம் பார்த்து, உல்டா செய்யப்பட்டது. இதில் ரஜினி தமிழில் ஒரு இன்ஸ்பெக்டர் கேரக்டர் வரும் பாருங்கள் அதில் நடித்திருப்பார்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

என் ட்வீட்டலிருந்து

ஒரு சிறந்த ஆண் உலகம் மெச்சும் அழகியை காதலிக்க மாட்டான். தன்னையும் தன் உலகத்தையும் மகிழ்ச்சியுறச் செய்பவளையே அவன் காதலிப்பான்.

மற்றவர்களின் கருத்துக்காகவும், ஆமோதிப்புக்காவும், வாழாமல் உனக்காக வாழ்ந்து பார்.. வெற்றியடைவாய்.


வெற்றிக்கான வழி எதுவென எனக்கு தெரியாது. ஆனால் எல்லோரையும் திருப்திப் படுத்த நினைப்பது தான் தோல்விக்கான வழி என்பது தெரியும்.

வெகுஜனம் விரும்பும் விஷயங்களை நான் அதையெல்லாம் பார்பதேயில்லை, படிப்பதேயில்லை என்றுசொல்வது தன்னை அறிவாளியாக காட்டிக் கொள்ள விழையும் முயற்சி

மிக சீரியஸாய் சில உண்மைகளை சொல்லும் போது லேசாய் சிரித்துவிட்டால் நாம் சொல்வதும் பொய்யாகிவிடுகிறது.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
என் பாட்டு என் பாட்டு
 &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

திருப்பூர் புத்தகக் கண்காட்சி

திருப்பூர் புத்தகக் கண்காட்சியில் என்னுடய புத்தகங்கள் அனைத்தும் ஸ்டால் நெ.91ல் வனிதா பதிப்பகத்தில் கிடைக்கிறது. “உ” மற்றும் “ழ” பதிப்பக புத்தகங்களும் கிடைக்கிறது. ஒரு சந்தோஷச் செய்தி தெர்மக்கோல் தேவதைகள் அங்கு நல்ல விற்பனையென்று உடன் மேலும் சில புத்தகங்களை அனுப்பி வைக்கச் சொல்லியிருந்தார்கள். கே.பி.என்னில் நேற்றிரவு அனுப்பியிருக்கிறேன். சந்தோஷமாய் இருக்கிறது. புத்தகத்தை வாங்கி சென்ற நண்பர்கள் சிலர் தொலைபேசியில் பேசியது மேலும் உற்சாகத்தை தருகிறது. திருப்பூர் கண்காட்சியைப் பற்றி திருப்பூர் பதிவர்கள் குழுவான சேர்தளம் தனியாய் ஒரு ஃபேஸ்புக் பக்கத்தை தொடங்கியிருக்கிற்து. அது மட்டுமில்லாமல் ஒரு ஸ்டாலையும் திறந்து வைத்துக் கொண்டு, எந்தந்த புத்தகங்கள், எந்தெந்த ஸ்டாலில் கிடைக்கும் என்றெல்லாம் வாச்கர்களுக்கு உதவுகிறார்கள். தினமும், பேஸ்புக் மற்றும் அவர்களது வலைப்பக்கத்தில் எழுதவும் செய்கிறார்கள். வாழ்த்துக்கள் சேர்தளம் குழுவினர்களுக்கு. தெர்மக்கோல் தேவதைகள் பற்றிய திருவாரூர் சுதர்சனின் விமர்சனம் படிக்க

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
அடல்ட் கார்னர்
நண்பன் 1 : இன்றிரவு க்ருப் செக்ஸ் வைத்துக் கொள்ளலாம் என்று ப்ளான் . நீ வருகிறாயா?
நண்பன் 2 : அப்படியா எத்தனை பேர்?
நண்பன் 1 : மூணு பேர் உன் கேர்ள்ப்ரெண்டையும் சேர்த்து என்றான்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

Post a Comment

18 comments:

வவ்வால் said...

//ரயிலில் போய் ரொம்ப நாளாகிவிட்டது. குடியரசு தினத்தன்று மணிஜி, அழைத்திருந்தார்.காஞ்சிபுரம் வரை ஒரு சின்ன ட்ரிப் போகலாமென்று. சைதையிலிருந்து குரோம்பேட்டை வரைக்கும் மின்சார ரயிலில் போகலாமென்று ஸ்டேஷனுக்கு சென்ற போது பெரிய வரிசை நின்றிருந்தது. ரொம்ப நேரமாய் க்யூ நகரவேயில்லை. என்னவென்று பார்த்த போது, ஒவ்வொருவரும் நான்கைந்து பேருக்கு டிக்கெட் வாங்கிக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். உடன் அவர்களிடமெல்லாம் சண்டை போட்டு, க்யூவை சரி செய்தால் குழந்தையுடன் ஒரு பெண் யாரைப் பற்றியும் கவலைப்படாமல் நேராய் கவுண்டருக்கு சென்று டிக்கெட் எடுக்கப் போனார். நான் மீண்டும் கத்த ஆரம்பித்ததும் கவுண்டரில் இருந்த ஆள் டிக்கெட் கொடுக்க மறுத்து க்யூவில் நிற்கச் சொன்னார்.//

கேபிள்,

காஞ்சி செல்ல ஏன் குரோம்பேட்டைக்கு டிரெயின் ஏறினீர்கள் ?

சைதை ரயில் நிலையத்திலும் கூட்டம் வருதா? முன்னெல்லாம் காலியாக கிடக்கும்.அதுவும் தர்ப்பனேஷ்வர் கோயில் பக்கம் இருக்கும் ஸ்டேஷன் கவுண்டரில் கூட்டமெ இருக்காது.

ஆண்/ பெண் என்று தனி வரிசை வைக்காத ரயில் நிலைய கவுண்டர்களில் பெண்கள் முன் சென்று தனியே வாங்குவது புறநகர் ரயில் நிலையங்களில் வாடிக்கை.. உங்க சூப்பர் மேன் ஆசைக்கு அந்தம்மா மாட்டிக்கிட்டாங்களே. கவுண்டரில் இருந்தவர் வேற அதுக்கு பயந்து இருப்பது செம காமெடி. வேலைக்கு புதுசா இருக்கும் போல.

--------------

ஹம் அஹ் பாஷா ஆக்கினத சொன்னிங்க, பாஷா வை லால். பாஷா னு மீண்டும் அமிதாப் வச்சு ஹிந்தில ரிமேக் செய்த கொடுமையை சொல்லாம விட்டிங்களே :-))

Cable சங்கர் said...

அது தர்பனேஷ்வரர் கோயில் இல்லை. காரணீஸ்வரர் கோயில்.

தனி க்யூ இல்லாத இடத்தில் அப்படி வாங்குவது வழக்கம் என்பது தானே தவிர.. அது தான் சரி என்பதல்ல.
தவறு என்று உணர்ந்ததால்தான்.. கவுண்டர் ஆளும் மதித்து வேலை செய்தார். க்யூவில் நிறைய பெண்களும் நின்று கொண்டிருந்தார்கள்.

சேகர் said...

உங்களுக்கு மட்டும் இந்த தகவல் எப்படி கிடைகிறது...

Philosophy Prabhakaran said...

அந்த கருத்த நடிகர் தொடர் தோல்வி கொடுத்ததால் தான் வேறு வழியில்லாமல் ஆறு கோடி வாங்குகிறார்... இல்லையெனில் பத்தை தாண்டியிருப்பார்... அவருக்குப்பின் நடிக்க வந்த கார்த்தி அப்படித்தானே வாங்கிக்கொண்டு இருக்கிறார்...

Anonymous said...

வாவ்...அருமையான படம் ஹம்.ரஜினி தன் ரோலில் அவர் ஸ்டைலிலேயே கலக்கியிருப்பார். மல்டி ஹீரோஸ் சப்ஜெக்ட் இப்படித்தான் இருக்கணும். எனர்ஜி உள்ள படம். சின்ன வயசிலேயே இந்தி புரியாவிட்டாலும் ரசித்து ரசித்து பார்த்த படம் HUM.

Anonymous said...

என் வலையில்

தேள் விஷம் - நாட்டுப்புற பாலியல் கதை! (18+)

Anonymous said...

வர வர அமீரின் காமெடி தாங்கவில்லை.//இந்த நபர் மொத்தமே மூணு படம்தான் எடுத்திருக்கிறார் என்பது வியப்புக்குரியது.ஏனெனில் 50 படம் எடுத்தவருக்குரிய பேச்சுதான் எப்போதும். அறிவுரைகளில் தூள் கிளப்புவார்.பருத்தி வீரன் நல்ல படம்.ஆனால் இவருக்கு பருத்திவீரன் தந்த மயக்கம் இன்னும் தெளியவில்லை. அதேமாதிரியே 50 படம் எடுத்து அந்த சப்ஜெக்டே காலாவதியாக்கப்பட்டு விட்டது.

இந்த விஷயத்தில் (மட்டும்) சாரு சொல்வதை நான் ஒப்புக் கொள்கிறேன்.ஒரு சினிமாக்காரனுக்கு படம் ஓடினதும் தமிழ்நாட்டு மக்களுக்கு அறிவுரை கூறும் தகுதி வந்துவிடுகிறது.இது சினிமா சம்பந்தப்பட்ட பிரச்னை வேறு. கேட்கவா வேண்டும். எனக்கென்னவோ கூலி உயர்த்திக் கொடுப்பதில் எதும் இரண்டாம் கருத்து இருப்பதாக தெரியவில்லை.

நிஜமான பிரச்னை எத்தனை பேரை யூனிட்டில் வேலைக்கு வைத்துக் கொள்வது என்பதில்தான் என்று தோன்றுகிறது. இதில் சங்கம் கொஞ்சம் விளையாடுவதாகவே தெரிகிறது.அவர்கள் கேட்கிற கூலி நியாயம் என்றே தோன்றுகிறது.

வவ்வால் said...

கேபிள்,

ஹி...ஹி அந்தப்பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு அதான் காரணீஷ்வர் பேர மாத்தி சொல்லிட்டேன். பிள்ளையார் கோவில்னு சொல்லவில்லை யேனு சந்தோஷப்பட்டுக்க வேண்டி யது தான். :-))

ஆண், பெண் தனி வரிசை வைக்க தவறியது ரயில்வே தவறு. அப்படி இல்லாத இடத்தில் பெண்கள் தனியே முன்னாள் போய் வாங்குவது வழக்கம், கவுண்டரில் இருப்பவரும் கொடுக்கவேண்டும். அது சரியான நடைமுறையே.

இதுவே அந்தப்பெண்மணி விவரமானவராக இருந்து, பெண்களுக்கான வரிசை எங்கே , வையுங்கள் வரிசையில் வருகிறேன் என்று சொல்லி இருந்தால் டிக்கெட் கொடுப்பவர் சத்தம் போடாமல் டிக்கெட் கொடுத்திருப்பார் :-))

கேட்டால் கிடைக்கும் பெண்களுக்கும் உண்டு தானே? :-))

வரவர கேட்டால் கிடைக்கும் என்று சரமாறியா கேட்க ஆரம்ப்பிச்சுட்டிங்க போல :-))

Ba La said...

Congrats, சூப்பர்மேன்

Cable சங்கர் said...

//இதுவே அந்தப்பெண்மணி விவரமானவராக இருந்து, பெண்களுக்கான வரிசை எங்கே , வையுங்கள் வரிசையில் வருகிறேன் என்று சொல்லி இருந்தால் டிக்கெட் கொடுப்பவர் சத்தம் போடாமல் டிக்கெட் கொடுத்திருப்பார் :-))//

தனி க்யூ இல்லையென்றால்.. எல்லோருக்கும் பொது என்றுதான் அர்த்தமே தவிர.. முன்னால் போய் வாங்கலாம் என்பது ஒன்றும் ரூல்ஸ் கிடையாது. இதில் இன்னொரு ப்ரச்சனை என்னவென்றால் அந்தப் பெண்ணுடன் கணவரும் வந்திருந்தார். :)

வவ்வால் said...

கேபிள்ஜி,,

//தனி க்யூ இல்லையென்றால்.. எல்லோருக்கும் பொது என்றுதான் அர்த்தமே தவிர.. முன்னால் போய் வாங்கலாம் என்பது ஒன்றும் ரூல்ஸ் கிடையாது. இதில் இன்னொரு ப்ரச்சனை என்னவென்றால் அந்தப் பெண்ணுடன் கணவரும் வந்திருந்தார். :)//

இப்போதான் கணவரை பற்றி சொல்கிறீர்கள். அவர் மகளீர் இடஒதுக்கீட்டில் தனக்கும் சீட் வாங்க ஆசைப்பட்டிருக்கிறார். :-))

சத்யம் தியேட்டரில் கூட நீங்க கவுண்டரில் நின்று இருக்க மாட்டிர்கள் என்பது மட்டும் நல்லா தெரியுது.
அங்கும் ஆண் ,பெண் தனி வரிசை இருக்காது, பெண்கள் பக்கவாட்டில் நேரா போய் டிக்கெட் வாங்குவார்கள்.(அடுத்த முறை அங்கும் குரல் கொடுத்துப்பாருங்க)

ஆண்/ பெண் என தனி வரிசை வைக்கனும். வைக்க தவறும் நிர்வாகம் அது ரெயில்வே அல்லது திரை அரங்கம் எதுவாக இருந்தாலும் அவர்களுக்கு மாற்று செய்ய வேண்டும். அது தான் முன்னர் போய் வாங்கிக்கொள்ள கொடுக்கும் சலுகை.

100 ஆண்கள் வரிசையில் நிற்கும் போது ஒரே ஒரு பெண் வந்து பொது வரிசை தான் இருக்குனு 101 ஆக நின்றால் என்னாவது.ஆணுக்கும் பெண்ணுக்கும் டிக்கெட் பகிர்ந்து அளிக்கும் விகிதம் 1:100 ஆகிறது. சமூகத்தில் சம வாய்ப்பு என்பது பாதிக்கப்படுகிறது .

இப்படி ஒரு நிலை என வைத்துக்கொள்வோம்,

ஒரே வரிசை தான் இருக்கு, அதில் 100 பெண்கள் இருக்கிறார்கள். நீங்கள் போய் 101 ஆக நின்று டிக்கெட் வாங்குவிர்களா இல்லை ஆண்களுக்கு (ஒரே நபர் ஆனாலும் ஒரு பன்மை)என்று தனியா வரிசைப்போடு சொல்வீங்களா?


ஹி..ஹி நானா இருந்தா 101 ஆ நின்று பொறுமையா வாங்கிப்பேன் , அம்புட்டு பொண்ணுங்க இருக்கும் போது என்னாத்துக்கு அவசரம் :-))

Cable சங்கர் said...

vavall. நீங்கள் எழுதியதை நீங்களே மீண்டும் படித்துப் பாருங்க. எவ்வளவு தூரம் விதண்டாவாதமாய் இருக்குமென்று.. சத்யமில் எல்லோரும் ஒரே க்யூவில்தான் வாங்குகிறார்கள்.

வவ்வால் said...

கேபிள்ஜி,

//vavall. நீங்கள் எழுதியதை நீங்களே மீண்டும் படித்துப் பாருங்க. எவ்வளவு தூரம் விதண்டாவாதமாய் இருக்குமென்று.. சத்யமில் எல்லோரும் ஒரே க்யூவில்தான் வாங்குகிறார்கள்.//

ஆஹா நான் விதண்டாவாதமா பேசுறேனா? நாசமா போச்சு போங்க :-))

நான் சத்யமில் படம் பார்க்க டிக்கெட் வாங்கும் போது மட்டும் பெண்கள் முன்னால் சென்று டிக்கெட் வாங்குகிறார்கள் போல , இனிமே நானும் குரல் கொடுக்கிறேன் :-))

எனக்கு தெரிந்து , தாம்பரம் எக்மோர் போன்ற முக்கியமான புறநகர் ரயில் நிலைய டிக்கெட் கவுண்டர்களில் இரண்டு வரிசை இருக்கும் , ஆனால் ஒருவர் தான் கவுண்டரில் இருப்பார், அவர் ஆணுக்கு ஒரு முறை பெண்ணுக்கு ஒரு முறை என டிக்கெட் கொடுப்பார்.ஒ ரே வரிசை இருக்கும் போது பெண்கள் முன் சென்று வாங்கிக்கொள்வார்கள்.

நீங்கள் கேட்டால் கிடைக்கும் என் று பிரஸ்தாபிப்பவர் என்பதால் கேட்கிறேன், அப்படியானால் பெண்கள் தமக்கென்று தனி வரிசை கேட்க கூடாதா? உரிமை இல்லையா?

ஏன் எனில் கேட்டிருந்தால் கொடுக்கப்பட்ட்ருக்க வேண்டும் என முன்னரே நான் சொல்லிவிட்டேன். ஆனால் நீங்கள் தான் ஏற்காமல் சுற்றி வளைக்கிறிர்கள். அப்படியானால் கேட்டால் கிடைக்கும் கோஷம் ஆண்களுக்கு மட்டுமா? தெளிவு படுத்த வும்.

பின்னர் யார் பேசுவது விதாண்டாவாதம் என்பது தெரியும் :-))

a amalraaj said...

உதவி இயக்குனர்களின் இந்த புதிய சம்பளம், பேட்டா அனைத்தும் இயக்குனரும், உதவி இயக்குனரும் ஒப்பந்தம் செய்துகொள்ளாத நிலையில் சங்கத்தில் புகார் அளித்தால் பெற்றுத்தருவார்களாம். அதேவேளை இருவரும் புரிந்துனர்வு ஒப்பந்தமோ, அல்லது 50000ற்கோ, 100000ற்கோ ஒப்பந்தம் போட்டுக்கொண்டால் செல்லாதாம்.

சாதாரண கிராமத்தான் said...

கேபிள்,
எனக்கு என்னவோ குழந்தையுடன் வரும் பெண்கள் முன்னால் போகலாம் என்றே தோன்றுகிறது அவர் கணவர் வுடன் வந்தாலும். வயதானவர்களுக்கும் இந்த சலுகை தரலாம் என்றே தோன்றுகிறது. குறிப்பாக சேவை நிமித்தமாக que முறையில் நின்றோமானால் (சினிமா கிடையாது) இதை பின்பற்றலாம். நமது ஊரில் எல்லா இடத்திலும் பின்பற்றவிட்டாலும் எங்கெல்லாம் que முறை பின்பற்றுகிறோமோ அங்கெல்லாம் இதில் தவறில்லை என்றே தோன்றுகிறது. தனி முறை இல்லா விட்டால் இது குறித்து ஒரு போர்டு வைப்பது நலம். ஹிந்தி படங்கள் தூர்தர்ஷனில் பார்த்ததோடு சரி. அதற்கும் நமக்கும் ஆகாது என்றே ஆகி விட்டது. ஆனால் இந்த படம் பற்றி கேள்வி பட்டு இருக்கிறேன் அனால் இந்த தகவல்கள் தெரியாது. இயக்குனர் மற்றும் நடிகர்களின் சம்பளம் படம் எவ்ளவு நாள் ஓடுகிறதோ எவ்ளவு லாபம் சம்பாதிக்கிறதோ அதன் அடிப்படையில் இருக்கலாம். மற்ற தொழிலார்களின் சம்பளம் முறைபடுதலாம். இது நடக்காத விஷயம் தான் அனால் இது சரியாக இருக்கும் என்று நினைக்கிறன்.

ammuthalib said...

கொத்து பரோட்டா -30/01/11 - X

கொத்து பரோட்டா -30/01/12 - :)

Sara Suresh said...

இப்போது எந்த புறநகர் ரயில் நிலையதிலும் பெண்களுக்கு தனி வரிசை இல்லை. 2 counter இருந்தாலும் கலந்து நின்று தான் டிக்கெட் வாங்குகிறார்கள்

Balaganesan said...

daily am searching &reading ur kothu barotta sir....