Thottal Thodarum

Jan 11, 2012

புத்தகக் கண்காட்சி –நாள் 6- தெர்மக்கோல் தேவதைகள் விமர்சனமும்.




ஜன்னல் 
சேப்பாக்கம்  மேன்சனில் இருந்த பொது இதை போன்று ஒரு  ஜன்னல் அமைந்தது. பல நாட்கள் பலருடன் விவாதித்து இருக்கிறோம். அது உண்மையோ இல்லையோ அதை விவாதிப்பதில் ஒரு சுவாரசியம். உங்கள் ஹீரோ அளவுக்கு தைரியம் எங்கள் யாருக்கும் இல்லை. ஒரு வேலை அந்த ஹீரோ நீங்களா? 

பொறுப்பு
அருமையான கதை. சமுகத்தில் என்பது சதவிகித மக்களின் மன நிலைமையை  காட்டும் ஒரு கதை. 

கப்பல் ராக்கையா
உங்கள் கதைகளில் வரும் அப்பா-மகன் உறவுகளில் வரும் "ஈமோசனல் quotient  " எப்போழுதும் ஒரு அழுத்தம் நீறைந்ததாகவே இருக்கிறது. ஐந்து வயது முதல் அப்பா இல்லாமல் வளர்ந்து வரும் எனக்கு அப்பாவை பற்றிய எந்த உணர்வும் கிடையாது. உங்கள் கதைகளை படித்த பின், ஒரு அளவு இந்த உறவின் முக்கியத்துவம் புரிகிறது.

சுந்தர் கடை
இது போன்ற சுந்தர்கள் நிறைய பேரை சந்தித்து உள்ளேன்.  அவர் பொண்ணு கேட்ட கேள்வியை எந்த பொண்ணும் அவள் அப்பாவிடம் கேட்கலாம்.  அலெர்ட்.

காளிதாஸ்
மனதை கரைத்து விட்டார். 

மகாநதி
மனதை கரைத்த நதி. கருணை யதார்த்தம்.  ஜெயா - இது போன்ற ஏகப்பட்ட அனுபவங்கள் உண்டு. 

ராஜலக்ஷ்மி, ராஜி
-
இரண்டு தற்கொலைகள்.  மிகுந்த தன்னம்பிக்கையான ராஜலகஷ்மியின் தற்கொலை... எனக்கு இறந்து போன தொலைக்காட்சி நடிகையை ஞாபக படுத்தியது.

பிரியா-

சாமி அழகா இருந்த பக்தர்கள் கொஞ்சம் ஜாஸ்தியாதான் இருப்பாங்க. 

தலைவரே, எப்பொழுதும் போல் கதைகள் சுவாரசியமாக உள்ளது. எனக்கு பிடித்த கதைகளை பற்றி மட்டும் எழுதினேன்.  உங்கள் எழுத்தில் தலைவரின் தாக்கம் உள்ளது. அதை பற்றி எனக்கு மகிழ்ச்சி.  தலைவரின் டெக்னாலஜி கதைகளையும் எழுத ஆரம்பிங்க. 
hariharasudhan sundararajan
####################################
புத்தகக் கண்காட்சி  நாள்-6
கடந்த ஐந்து நாட்களாய் வேறெந்த ஸ்டால்களையும் சுற்றிப் பார்க்காமல் இருந்ததால் லேட்டாய் போனாலும், முதல் ஸ்டாலிலிருந்து சுற்றிப் பார்க்கத் துவங்கினேன். ஒரு ஸ்டாலில் ஒரே பெண்கள் கூட்டமாயிருந்தது. பார்த்தால் ஏதோ பத்திப் புத்தகம் விற்கும் பதிப்பகம். அங்கிருந்த கூட்டத்திற்கு வியாபாரம் ஆகியிருந்தது என்றால் நேற்றைக்கு அதிக விற்பனையான ஸ்டால் அதுவாகத்தான் இருக்கும். அங்கிருந்து பரிசல் பதிப்பகத்திற்கு வந்தேன். ஷோபா சக்தியின் இரண்டொரு புத்தகஙக்ள் இருந்தது. எம்.ஜி.ஆர் கொலை வழக்கு  என்ன ஈர்த்தது. அதிலிருந்து விலகி வந்து மெல்ல ஒவ்வொரு கடையாய் நிரட ஆரம்பித்தேன். ஜோதி புத்தக நிலையத்தில் என் புத்தகங்கள் விற்றிருப்பதாய் ஆதி சொன்னார். அதே போல ராஜகுமாரி பதிப்பகத்திலும் ரெண்டு டெரர் டைட்டில்களுக்கு நல்ல வரவேற்பு என்று சொன்னார்கள். அப்படியே மெல்ல வம்சியின் பக்கம் வந்தேன். ஜெ.மோவின் அறம் தொகுப்பும்,அய்யனாரின் புத்தகத்தையும் வாங்கிக் கொண்டிருந்த போது, புதிய நம்பரிலிருந்து கால். ரஜினி ராமசந்திரன் என்பவர் என்னை சந்திப்பதற்காக 334 டிஸ்கவரியில் காத்திருப்பதாகச் சொன்னார். நேரில் பார்த்ததும் மிகவும் சந்தோஷப்பட்டார். என் புத்தகங்கள் எல்லாவற்றையும் வாங்கியிருந்தார். எவ்வளவு வருஷம் ஆனாலும் தான் ஒரு ரஜினி ரசிகன் என்று சொல்லிக் கொள்வேன் என்று பெருமைப்பட்டார். ரஜினியின் பெனாட்டிக்காக ரசிகராய் எதையும் கண்மூடித்தனமாய் பேசாமல், சென்சிபிளாக பேசினார். சுவாரஸ்யமான சந்திப்பு. அண்ணன் அப்துல்லாவும், ழ பதிப்பக ஓனர் ஓ.ஆர்.பி.ராஜாவும் வந்தார்கள். அவர்களுடன் கிழக்குக்கும், பூவுலகின் ஸ்டாலுக்கும் ஒரு விசிட் முடிந்து கிளம்பலாம் எனும் போது நாகரத்னா குகனிடமிருந்து ஒரு அழைப்பு. நண்பர் ஒருவர் சந்திக்க காத்துக் கொண்டிருப்பதாக. அண்ணனிடம் பார்ட்துவிட்டு வருகிறேன் என்ற போது “நான் கிளம்பறேன்.. நீ உன் ரசிகர்களோடு ஐக்கியமாயிடுவ” என்று சொல்லிவிட்டு எஸ்ஸாகிவிட்டார். துபாயில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் தஞ்சாவூர்கார நண்பர் வந்திருந்தார். வலைப்பதிவுகள் தான் வெளிநாட்டிலிருக்கும் அவரைப் போன்றவர்களுக்கு ஆக்ஸிஜன் என்றார். கை ததும்ப, ததும்ப, புத்தகங்களோடு இருந்தார்.அவரோடு பேசிக் கொண்டிருந்துவிட்டு கிளம்பினேன். விகடனின் இணையத்தில் புக்ஃபேர் பகுதியில் என் புத்தகத்தைப் பற்றி புதுசுக்கு மவுசு பகுதியில் போட்டிருந்தார்கள். அவர்களுக்கு என் நன்றிகள். http://news.vikatan.com/index.php?nid=5969

நேற்றைக்கு வாங்கியவை

ஜெ.மோ – அறம்- வம்சி பதிப்பகம் –250
கூடங்குளம் விழித்தெழும் உண்மைகள் – அ.முத்துக்கிருஷ்ணன் – 15
ரெயினீஸ் ஐயர் தெரு – வண்ண நிலவன் – கிழக்கு –70
விடுதலை – அசோகமித்ரனின் குறுநாவல்கள் – கிழக்கு –130
உரையாடலினி – அய்யனார் விஸ்வநாத்- 80 – வம்சி.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Post a Comment

9 comments:

கோவை நேரம் said...

வாழ்த்துக்கள் .இன்று விகடன்...நாளை ...?

naren said...

யூத் கேபிள்,

ப்ளாக்கின் வடிவமைப்பை மாற்றவும். படிக்க முடியவில்லை, சகிக்கவும் முடியவில்லை.

Ba La said...

வாழ்த்துக்கள் Boss.

New template is good, but it will be better when the content background is white I think, please check the images as their borders are made for white background.

சேகர் said...

வாழ்த்துக்கள்

Prabu Raja said...

// பக்கி புத்தகம் //

A typo which made a pun :D
I guess it is Bhakthi?

ramachandran.blogspot.com said...

நேற்று தங்களை சந்தித்து உரையாடியது எனக்கும் மிக மகிழ்ச்சியாக இருந்தது.
ப்ளாக் உலக சூப்பர் ஸ்டாரான தாங்கள்,திரையுலகிலும் வெற்றி காண்பீர்கள் என்பது தங்கள்
சுவாரஸ்யமான பேச்சிலேயே தெரிந்தது.(பேச்சு Is the index of the mind.)
அட்வான்ஸ் வாழ்த்துக்கள். (தங்கள் புத்தகங்களை படித்து விட்டு விமர்சனம் எழுதுகிறேன்.)நன்றி.

சமுத்ரா said...

உங்கள் புத்தகங்களைப் பற்றி தான் அதிகம் எழுதுகிறீர்கள்.
சுய விளம்பரத்தைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ளவும்.

பிரபல பதிவர் said...

நாலு நாளா புக் வாங்கிருக்கீங்க....

ஆனா நீங்க எழுதுன புக் எதயுமே வாங்கல....

நீங்க எழுதுன புக்க நீங்களே வாங்கலேன்னா வேற எவன் வாங்குவான்???

Cable சங்கர் said...

சமுத்ரா.. என் பக்கத்தில் என் புத்தகங்களைப் பற்றித்தான் எழுதுவேன். வேற புத்தகத்தைப் பற்றி வேறொருநாள் எழுதும் போது வந்து முடிஞ்சா படிச்சிட்டு போங்க.. :)