மாலையில் கிளம்பலாம் என்றால் சரி மழை பெய்தது. விடாமல் சுமார் அரை மணி நேரத்திற்கு மேல் அடித்த மழை சட்டென ஓய, உடன் கிளம்பினேன். மழையினால் வழியெங்கும் ட்ராபிக் ஜாம். ஒரு வழியாய் ஆறு மணிக்கு கிளம்பியவன் ஏழு மணிக்கு போய்ச் சேர்ந்தேன். பத்திரிக்கையாளர் பாலா போன் செய்தார். அவரை நான் 334 டிஸ்கவரியில் சந்திப்பதாய் சொல்லிவிட்டு, நேற்று ரவுண்ட் அடித்த எதிர்பக்கத்திலிருந்து ஆரம்பித்தேன். மழையின் காரணமாய் கூட்டம் மிகக் குறைவாகவேயிருந்தது. ஒவ்வொரு கடையாய் பார்த்து வரும் போது இந்திராபார்த்தசாரதியின் மூன்று குறுநாவலை வாங்கலாம் என்று யோசித்து பர்சை எடுத்தால் பணமேயில்லை. வெறும் நூறு ரூபாய் மட்டுமே இருந்தது. க்ரெடிட் கார்டும் அக்செப்டட் இல்லை என்பதால் திரும்பக் கொடுத்துவிட்டு, மெல்ல நடந்தேன். வழியில் இன்னொரு நண்பர் கந்தாவை சந்தித்தேன். உதவி கேமராமேன். நான் இணை இயக்குனராய் பணி செய்த படத்தில் அவரும் வேலை செய்தார். இனிமையானவர். சூட்டிங் ஏதுமில்லாததால் இங்கு நண்பருக்கு உதவி செய்வதற்காக வந்திருப்பதாய் சொன்னார். சிறிது நேரம் பேசி கொண்டிருந்தோம். அந்த ஸ்டால் முழுக்க, கம்யூனிசமாகவோ, அல்லது அணு உலை வேண்டாம் என்று சொல்லும் புத்தகங்களாகவே இருக்க, அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டார். நான் படித்ததெல்லாம் வேண்டாம் என்று சொல்லும் கருத்துக்களேயன்றி, வேண்டும் என்று சொல்லும் பக்கத்தை இன்னும் அறியவில்லை. அறிந்ததும் நான் என் கருத்தை சொல்கிறேன் என்றதும் நட்பாய் சிரித்தார்கள். கவிஞர் முத்துகுமாரின் புத்தகங்களை வெளியிடும் பட்டாம்பூச்சி பதிப்பகத்தில் நுழைந்ததும், புதியதாய் சி.முருகேஷ்பாபுவின் மரியா கேண்டீன் என்கிற சிறுகதை தொகுப்பு கண்ணில் பட்டது. முருகேஷ்பாபு என் இனிய நண்பர். உடன் வாங்கினேன். மெல்ல அடுத்தடுத்த கடையாய் பார்த்துக் கொண்டு வந்து வாங்க வேண்டிய புத்தகங்களை லிஸ்ட் போட்டு வந்தேன். குறைந்தது 5000 ஆகிவிடும் போலிருந்தது. கையில் காசு இருப்பதை வைத்துத்தான் முடிவுசெய்ய வேண்டும் வெறும் விண்டோ ஷாப்பிங்கா.. அல்லது நிஜ ஷாப்பிங்கா என்று. காலச்சுவட்டில் மணிஜி, பலாப்பட்டறை சங்கரைப் பார்த்தேன். பின்பு வேடியப்பன் கடைக்கும் ஒரு விசிட் அடித்துவிட்டு, டீ சாப்பிடக் கிளம்பினோம். டீ சாப்பிட்டுவிட்டு நான் முருகேஷ்பாபுவின் ஸ்டாலுக்கு சென்று அவரிடம் ஆட்டோகிராப் வாங்கி வந்தேன். மகிழ்ச்சியாய் இருந்தது. மீண்டும் வேடியப்பன் கடை. காமிக்ஸ் விஷ்வா வந்திருந்தார். அப்துல்லா, குட்டி டின், நாமக்கல் சிபி ஆகியோர் வந்திருந்தார்கள். நண்பர் நேசமித்ரனும் வந்திருந்தார். பை நிறைய தடித்தடி புத்தகங்களோடு. வழக்கப்படி எங்களது புத்தகங்கள் இன்றும் சொல்லிக் கொள்ளும்படியாய் விற்றிருந்தது. சந்தோஷம்.
இன்றைய பர்சேஸ்
மரியா கேண்டீன் – சி.முருகேஷ்பாபு – பட்டாம்பூச்சி பதிப்பகம் -40
மரியா கேண்டீன் – சி.முருகேஷ்பாபு – பட்டாம்பூச்சி பதிப்பகம் -40
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
Post a Comment
3 comments:
wow.. nice finish sir... i really like the story... intersting while reading and unexpected twist :)
ennaathu storiya na nijamnu nambilla padichiten
padichittu comment podungaiya
அன்பு சங்கர்,
இந்த அணு உலை ஆதரவுப் புத்தகங்களை நானும் தேடித்தேடிப் பார்த்து அலுத்துவிட்டேன்.
அறிவு ஜீவிகள் அத்தனை பேரும் ஒட்டு மொத்தமாக வேண்டாம் என்றே சொல்லுகிறார்கள்.
என்னுடைய கேள்வி இது தான். அணுக் கழிவுக்கும், கதிர்வீச்சுக்கும் வளர்ந்த நாடுகளே இன்னும் தீர்வு காணாத போது நாம் ஏன் ரிஸ்க் எடுக்க வேண்டும். ஒபாமாவே தன் நாட்டில் வேண்டாம் என்று சொல்லும் போது நாம் ஏன் கொள்ளிக்கட்டையால் தலையைச் சொரிந்து கொள்ள வேண்டும் ?
Post a Comment