மேலே உள்ள படம் சென்னை சைதாப்பேட்டை ஆஞ்சநேயர் தெருவில் இன்று காலை எடுக்கப்பட்டது. சென்னை மேயருக்கு மிக நெருக்கமான தொகுதி. வழக்கமாய் குப்பைத்தொட்டியில் இல்லாமல் வெளியே குப்பைபோடும் பழக்கம் நம் ஆட்களிடம் உண்டு. குப்பை தொட்டியில் போடும் பழக்கம் பெரும்பாலும் கிடையாது. அதையெல்லாம் மீறி குப்பை தொட்டி நிரம்பிப் போய், ரோடுகளில் போடப்பட்டு, பாதி தெருவுக்கு ஆக்கிரமித்துக் கிடக்கிறது இந்த குப்பைகள். இரவு நேரங்களில் நாய்கள் மேலும் அதில் உழன்று இன்னும் விஸ்தாரமாய் குப்பையை கிளறிவிட, இன்னும் நிறைய இடத்தை குப்பை ஆக்கிரமிக்கிறது. அடுத்த நாட்களில் நம் வீட்டுப் பெண்களும் விட்ட இடத்திலிருந்து தொடர்வது போல நின்ற இடத்திலிருந்து குப்பை கொட்ட இன்னும்.. இன்னும் இன்னுமாய் விரிவடைகிறது. சென்னையின் இந்த ஒரு தெருவில் மட்டுமல்ல, பெரும்பாலான குப்பை தொட்டியிடங்களில் இதே நிலைதான். போட்டோ எடுத்தால் கேமரா மெமரி பத்தாது. அவ்வளவு குப்பை கூளங்கள். இன்ற்ளவில் இன்னும் ரோடுகள் செப்பனிடப்படவில்லை. குப்பைகள் எடுக்கப்படவில்லை. சிங்காரசென்னை குப்பைக்கார சென்னையாகிவிடும் போலிருக்கிறது. கட்சியில் களையெடுத்து சுத்தப்படுத்துவது எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவு ஊரை சுத்தப்படுத்துவதும் முக்கியம் என்று அம்மாவிடம் யாராவது சொல்வார்களா? மேயர் அவர்கள் இதை கவனிப்பார்களா? சிம்பாலிக்காக கோபாலபுரத்தில் ஆரம்பித்த குப்பை அள்ளும் கம்பெனி வந்தால்தான் இதெல்லாம் க்ளீன் ஆகுமா? ஏற்கனவே இருந்த கார்பரேஷன் ஆட்கள் செய்ய கூடாதா?
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
Post a Comment
10 comments:
சிங்கார சென்னை?
இவ்வளவு குப்பைகளுக்குமிடையே ஒரு ஆட்டோ நிற்கிறதே ! ! எப்படி ?
Chennai corporation follows old methodology in cleaning the garbage. I use to see corporation lorry accompanied by a JCB to clear the garbage. Which creates chaos in traffic during peak hours.
குப்பை அள்ளுவதை தனியாரிடம் ஒப்படைக்குனும்னு ஒரு கூட்டம் வருமே, இன்னும் கணோம்! :)
குப்பையை அள்ளும் பணியை கார்ப்பரேசன் அதிகாரிகள் தொடர்ந்து செய்துகொண்டுதானே இருக்க வேண்டும்.
உடனடியாக நடவடிக்கை எடுப்பார்களா?
தெரு நடுவே குப்பையைப் போடும் பழக்கம் மக்களிடமிருந்து எப்போதுதான்ப்ப் போகுமோ!
குப்பைக்கு என்று ‘குட்பை’ சொல்லப் போகிறோம்?
கேபிள்,
//சிம்பாலிக்காக கோபாலபுரத்தில் ஆரம்பித்த குப்பை அள்ளும் கம்பெனி வந்தால்தான் இதெல்லாம் க்ளீன் ஆகுமா? ஏற்கனவே இருந்த கார்பரேஷன் ஆட்கள் செய்ய கூடாதா?//
அய்யா சிம்பாலிக்கா ஆரம்பிச்ச நீல் மெட்டல் ஃபனால்கா குப்பை அள்ளும் ஒப்பந்தம் 4 வட்டங்களுக்கும் டிசம்பர் 31 உடன் ஒப்பந்தம் முடிந்து விட்டது. எனவே புதிய ஒப்பந்தம் விட தயார் ஆவதாக மாநகராட்சி போன மாசம் செய்தி வெளியிட்டது.
கோடம்பாக்கம் ஸோனில் தான் கே.கே.நகர் எல்லாம் , அது நீல் மெட்டல் பகுதி. இப்போ அவங்க போயிட்டதால மாநகராட்சி ஆட்கள் தான் செய்யனும். ஆனால் ஆட்கள் இல்லை.புதிதாக நியமிக்கவும் முடியாது , ஏன் எனில் விரைவில் ரெட் மெட்டல் , ஆனிக்ஸ் னூ எதாவது பேருல ஒப்பந்தம் எடுக்க ஆள் வரப்போறாங்க. அது வரைக்கும் சென்னைல பூ மழை இருக்கோ இல்லையோ குப்பை மழை உண்டு.
ஆனால் ஒரு ஆட்டோவையும் உதவாத குப்பைனு போட்டுடாங்க போல இருக்கு :-))
ரொம்ப வருத்தமா இருக்குங்க. எப்பங்க நாம் மாறப் போகிறோம்..
Photo is not taken in Good clarity.
So your Post is rejected.
By
Chennai Corporation
Sir,
I have been reading your blog for a long time. I know that you are very much interested in bringing about change in society. Ask you will get - is a good initiative. Similarly, Why don't you initiate some method by which we can send such complaints to the mayor. This could be a like a complaints blog where in users post complaints/issues in their neighbourhood. Corporation authorities can just look at this blog and attend to such issues. Atleast this will help to bring such issues to their notice immediately. Please think about it.
R.Vijay
Chennai
Post a Comment