பொங்கலுக்கு வந்த நான்கு படங்களில் நண்பன், வேட்டை பட்ஜெட் பெரிசு. கொள்ளைக்காரனும், மேதையும் சின்ன பட்ஜெட் படங்கள். ஆனால் பல சமயங்களில் பெரிய படங்களை விட சின்னப் படங்கள் திடீரென ஓடிவிடும். உதாரணத்துக்கு மைனா.. என்னதான் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டதினால்தான் என்று பலர் சொன்னாலும் பட்ஜெட் வரையில் அது சின்னப்படம்தான். அப்படி மீண்டும் ஒரு வெற்றிப்படத்தை விதார்த் அளிப்பாரா என்று எதிர்பார்க்க வைத்தப்படம்.
ஊரில் இருக்கும் ஆடு,மாடு வகைகளை திருடி அதில் ஜல்சா செய்யும் சில்லுண்டி திருட்டாசாமிதான் விதார்த். அவருக்கு ஒரு அக்கா, மனநிலை சரியில்லாத குட்டி தங்கை. கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் சுற்றியலையும் விதார்த்துக்கும் பக்கத்து ஊர் சஞ்சிதாவுக்கும் காதல். காதலியின் முன்னாலேயே போலீசாரால் கைது செய்யப்பட, காதலி வெறுக்கிறாள். திருட்டை விட்டு நேர்மையாய் உழைக்கும் நேரத்தில் ஊர் வில்லன் பண்ணையார் போன்றவர் கோயில் நகைகளை திருடி வைத்துக் கொண்டு பழியை விதார்த் மேல் போடுகிறார். அதிலிருந்து தப்பித்தாரா இல்லையா? என்பதுதான் கதை.
விதார்த்துக்கு படம் நெடுக லந்து கொடுக்கும் கேரக்டர். போகிற போக்கில் நக்கல் அடித்துக் கொண்டு அலையும் இடங்களில் சட்டென ரசிக்க முடிகிற நடிப்பு. காதலியை வீட்டில் பார்த்ததும் முகத்தில் தெரியும் சந்தோஷம், அவளின் வீட்டிற்கு மாமாவுடன் பெண் கேட்க போகுமிடத்தில் பார்வையால் காதலியை தேடும் போதும், காதலியை அடித்த வாத்தியாரை பிரம்பெடுத்து அடிக்கும் காட்சியில் எல்லாம் அதிரடியாய் இருப்பவர், அக்காவிடம் தொடப்பக்கட்டை அடி வாங்குமிடத்தில் இயல்பான நடிப்பை கொடுத்துள்ளார்.
சஞ்சிதா பார்க்க பகக்த்துவீட்டு பெண் போல இருக்கிறார். அதுவே படத்திற்கு ப்ளஸாக இருக்கிறது. மற்றபடி பெரிதாய் சொல்லிக் கொள்கிறார் போன்ற பாத்திரமேதும் இல்லை. ரெண்டொரு பாடல்களுக்கும், காட்சிகளை நகர்த்துவதற்கு மட்டுமே பயன்பட்டிருக்கிறார். மோகன் வைத்யா, விதார்த்தின் அக்கா கேரக்டர், ரங்கம்மா பாட்டி ஆகியோர் நல்ல நடிப்பை அளித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு யுவராஜ். இயல்பான கிராமத்தை பெரிதும் பிரயாசைப் படாமல் கொடுத்திருக்கிறார். இசை ஜோகன் எதுவும் குறிப்பிடப்படும்படியாய் இல்லை என்றே சொல்ல வேண்டும். எழுதி இயக்கியவர் தமிழ்செல்வன். முழுக்க முழுக்க நகைச்சுவை டயலாக்குகளை மட்டுமே நம்பியிருந்திருக்கிறார். சொல்லப் போனால் ஊர் பெரியவர், பண்ணையார், நகை திருட்டு, வீண் பழி போன்ற பழசான விஷயங்கள் தான் படத்தின் வேகத்தை குறைக்கிறது. ஆட்டைத்திருடிக் கொண்டு போனபிறகு அதை தேடிக் கொண்டலையும் காட்சிகள் ஆரம்ப சுவாரஸ்யத்திற்காக என்றிருந்தாலும் போகப் போக அசுவாரஸ்யமாகிறது என்று தான் சொல்ல வேண்டும்.
நல்ல நடிகர்களையும், டெக்னீஷியன்களையும், நகைச்சுவையான டயலாக்குகளையும் மட்டுமே நம்பி களத்தில் இறங்கியிருக்கிறார் போலும், கொஞ்சம் திரைக்கதையை கவனித்திருந்தால் கவனிக்கப்பட்டிருப்பார் என்றே தோன்றுகிறது.
Post a Comment
13 comments:
ஹி..ஹி இதே போல இன்னும் எத்தனைப்படம் தான் பார்க்கனுமோ, எல்லாம் தமிழ் சினிமா ரசிகர்கள் வாங்கி வந்த வரம் :-))
இதையும் வழக்கம் போல ஸ்கிப் பண்ணிற வேண்டியது தான். ஹி ஹி ...
டியர் ஷங்கர்,
விமர்சனம் அருமை! அனல் நீங்கள் விமர்சித்தா "வேட்டை" ரொம்ப டூ மச் சார்! நாளை கு நீங்களும் டைரக்டர் அக போறவர், வுங்க படத்தை யாராவது இப்படி கவளமா ஒரு விமர்சனம் செய்தல் எப்படி இருக்கும் நு நினைத்து பாருங்கள் (கவனிக்க: வுங்கள் விமர்சனம் தவறு என்று சொல்ல வில்லை!) லிங்குசாமி யும் நல்ல படம் எடுத்து இருக்கலாம் நு சொல்லி இருக்கார்! சோ தப்பு ஒத்து மன பக்குவம் வர எடுத்த படத்தை இவ்வளவு கவளமாக விமர்சிக்காமல் இருக்கலாம்! நீங்கள் "வினையாக" படம் பற்றி எழுதிய விமர்சனத்தை படித்தேன்! விமர்சனம் பரவ இல்லாம தன எழுதினீங்க அனா படாத பார்க்க முடியல (அம்பத்தூர் முருகன் ல சண்டே அதுவுமா நான் என் பிரிஎந்து சேர்கம மொத்தம் பாத்து பேர் தன!). சோ, விமர்சிக்கும் பொது சாதாரண மனுசன இல்லாம டைரக்டர் அஹ கொஞ்சம் யோசிங்க சார்!
இப்படிக்கு
ஜெயப்ரகாஷ்
அருமையான விமர்சனம் வாழ்த்துகள்.
muthal பாதி நன்றாக போனது .. ஆனால் இரண்டாம் பாதி சுமார் தான்
உங்கள் பார்வைக்கு இன்று ..
நண்பன் VS வேட்டை
”மேதை” விமர்சனத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்...
y ivaloo soft u ?
//நாளை கு நீங்களும் டைரக்டர் அக போறவர், வுங்க படத்தை யாராவது இப்படி கவளமா ஒரு விமர்சனம் செய்தல் எப்படி இருக்கும் நு நினைத்து பாருங்கள் //
தாராளமா விமர்சிக்கட்டும். எப்போ ஒரு விஷயத்தை வெளியிட்டுட்டோமோ அப்போதே அது மக்களுக்கு என்றாகி விட்டது. அதை கொண்டாடுவதும் தூக்கிப் போட்டு மிதிப்பதும் அவரவர் இஷ்டம் என்பதில் நம்பிக்கை உள்ளவன் நான்.
I am eagerly looking forward for the review of Methai!
//R.Gopi said...
”மேதை” விமர்சனத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்...//
நானும் தான்.
:)))
>>”மேதை” விமர்சனத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்...
+infinity
மேதை படம் விமரிசனம் கேட்பவர்களிடம் ஆளுக்கு நூறு ரூபாய் அனுப்பச் சொல்லி பதிலளிப்பீர்கள் என்று நம்புகிறேன். அவர்களெல்லாம் உங்கள் மேல் கொலவெறியோடு அலைபவர்கள்!! - ஜெ.
Post a Comment