சாப்பாட்டுக்கடை - கோவிந்த பவன்
கோவிந்த பவனா? என்று யோசிப்பவர்களுக்கு, திருவல்லிக்கேணியில் இது போல பல வித்யாசமான பெயர்கள் கொண்ட பல மெஸ்கள் உண்டு. அதில் ஒன்று இது. திருவல்லிக்கேணி ரோடில் உள்ள ரத்னா கேப்பில் திரும்பி, அதை தாண்டி வரும் முதல் இடது பக்க ரோட்டில் நுழைந்தால் இருக்கிறது இந்த கோவிந்தா பவன்.
நான் போன நேரம் மதிய நேரம். 40 ரூபாய்க்கு தயிரோடு நல்ல சாப்பாடு போட்டார்கள். சாதம், ரசம், கூட்டு, பொரியல், ஒரு அப்பளம், காரக்குழம்பு, சாம்பாருடன் நல்ல வீட்டுச் சாப்பாடு போல சுவையோடு கொடுத்தார்கள். சுவையில் பாரதி மெஸ்சுக்கு இணையாக இல்லாவிட்டாலும், குறை சொல்ல முடியாத வகையில் இருந்தது சாப்பாடு. பாரதி மெஸ்ஸை விட அளவு அதிகமாகவே கொடுத்தார்கள். நான் சென்ற நேரம் மதியம் மூன்று மணியிருக்கும் அப்போதே சாப்பாடு காலியாகிவிட்டது. இதை அறிமுகப்படுத்திய நண்பர் பாலாவுக்கு என்று நன்றிகள். இரவு நேரத்தில் டிபன் போடுகிறார்களாம்.
டிஸ்கி: மைலாப்பூரில் ஐநாக்ஸ் தாண்டி, அம்பட்டன் வாராவதியருகே உள்ள பிரபல விஸ்வநாதன் மெஸ் தற்போது இடித்து கட்டப்பட்டு வருகிறது. எல்லா வேலைகளும் முடிய மூன்று மாதங்களுக்கு மேல் ஆகலாமாம். எனவே அடுத்த சில மாதங்களுக்கு அங்கு போய் அலைய வேண்டாம்.
Comments
கோவிந்தா பவன்..
"கோவிந்த பவன்"
நன்றி.
இன்று :
சிரிக்கவில்லை என்றால் சுட்டேபுடுவேன்