மரியா கேண்ட்டீன் பத்திரிக்கையாளர் சி.முருகேஷ்பாபு எழுதி வெளிவரும் முதல் சிறுகதை தொகுப்பு. முன்னாள் விகடன் க்ரூப். ஒரு வருடத்திற்கு முன்னால் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர் வேலைப் பார்க்கும் இணைய இதழுக்காக தொடர் கட்டுரை எழுதக் கேட்டிருந்தார். அந்நேர வேலை பளு காரணமாய் எழுத முடியவில்லை. அதன் பிறகு பல முறை தொலைபேசியிலேயே பேசிக் கொண்டிருந்தோம். கிருஷ்ணவேணி பஞ்சாலை திரைப்பட மார்கெட்டிங் நிகழ்வில்தான் அவரை நேரில் சந்தித்தேன். படு சுவாரஸ்யமான மனிதர். நான் எழுதும் எல்லா பதிவுகளையும் படித்துவிட்டு பின்னூட்டமிட்டிருப்பவர் என்று அறியும் போது சந்தோஷமாயிருந்தது. அவரின் இந்தத் தொகுப்பு பாடலாசிரியர் நா.முத்துகுமாரின் புத்தகங்களை மட்டுமே வெளியிடும் பட்டாம்பூச்சி பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. புத்தகக் கண்காட்சியில் வெளியான அன்றே வாங்கி விட்டேன்.
புத்தகத்தின் தலைப்பே திருநெல்வேலிக்காரர்களுக்கு முக்கியமாய் சேவியர்ஸிலோ? ஜான்ஸிலோ படித்த கல்லூரி மாணவர்களாய் இருந்தவர்களுக்கு பழைய நினைவுகளை கிளப்பி விடக்கூடியதாயிருக்கும். வழக்கமாய் வரிசைப்படி படிக்கும் வழக்கமுடையவன் நான். இம்முறை எடுத்த எடுப்பிலேயே மரியா கேண்ட்டீனை படிக்க ஆரம்பித்தேன்.
மரியா கேண்ட்டீன் போல ஒவ்வொரு ஏரியாவிலும், ஒவ்வொரு ஊரிலும், டீக்கடையுமில்லாமல், ரெஸ்டாரண்டுமில்லாமல் ஒரு கேண்ட்டீன் இருக்கும். அம்மாதிரியான இடங்களுக்கு கதையிருக்கிறதோ இல்லையோ,அங்கு புழங்கிய ஒவ்வொருவருர் வாழ்க்கையிலும் ஒரு கதையிருக்கும். இவர் சொல்லியிருப்பது ஒரு காதல் கதை. காதலியுடன் முதன் முதலாய் கேண்டீனில் உட்காரும் காட்சியில் விஷுவலாய் மனதில் விரிகிறது இவரது எழுத்து. மரியா கேண்ட்டீன் இன்று அங்கில்லாவிட்டாலும், ஞாபகங்கள் இருக்குமல்லவா? அது போலத்தான் இந்த காதல் கதையும். டச்சிங்.
பெரும்பாலான கதைகள் இவரின் ஊரைச் சுற்றியே நிகழ்கிறது. சாக்கடை நீரில் கார வீட்டு நிழல் கதையில் வரும் சரவணன் கேரக்டரைப் போல நாமும் எங்காவது ஒருவனை சந்தித்திருப்போம்.
ஒருத்தி என்றொரு கதை. பயணங்களின் போது, நம் ஆழ்மன ஓட்டங்களை கிளறிவிடக்கூடிய பெண்களை போன்ற ஒருத்தியைப் பற்றிய கதை. இவருக்கு சில்க் ஸ்மிதாவை ஞாபகப் படுத்தியிருக்கிறாள். டச்சிங் ஸ்டோரி.
நான் இங்கு நலமே என்கிற கதை பானுமதி என்கிற தோழிக்கு எழுதும் கடிதம். சொல்லாமல் போன காதல் வகை. ஆனால அதை வெளிப்படுத்தியிருக்கும் விதம் அருமை.
கடைசி வீட்டு ஆச்சி. இத்தொகுப்பில் என்னை அசத்திய கதை. நுட்பமான விவரணைகள். ஆச்சியை கண் முன் கொண்டு வரும் எழுத்து. அந்த நேட்டிவிட்டி எல்லாம் சேர்ந்து க்ளைமாக்ஸில் கண்களில் நீரை வரவழைத்த கதை.
க்யூட்டான இளவயது லூட்டியான காதல் திருடன், வீட்டை விட்டு ஓடி வந்து திருமணம் செய்து கொண்டு,உனக்கு நான் எனக்கு நீ என்ற நினைப்பில் இருந்து கொண்டிருக்கும் போது திடீரென ஒரு இடைவெளி உருவாகும். அதை மிக அழகாக சொல்லியிருக்கிறார்.
ராமசாமியும், ரொமானோ ஹாசாரிகாவும் தலைப்பில் இருந்த சுவாரஸ்யம் கதையிலில்லை என்றே சொல்ல வேண்டும். நானும் நான்காவது குமாரசாமியும் கதை நாயகனை போன்றவனை நிச்சயம் நாமும் எங்காவது இடறி தாண்டிப் போய்த்தானிருப்போம். மொத்தத்தில் சுவாரஸ்யமான ஒரு தொகுப்பாய்த்தான் மரியா கேண்ட்டீன் வந்திருக்கிறது.
மரியா கேண்ட்டீன்
பட்டாம்பூச்சி பதிப்பகம்
விலை : 40 ரூபாய்.
Post a Comment
8 comments:
படிக்க வேண்டும் என்று ஆசையை கொடுக்கிறது தங்கள் பதிவு.ஆனால், அதன் வாய்ப்பு இங்கிருந்து மிகவும் குறைவு.நன்றி.
mariya canteen, new rushi hotal then corporation poonga hmmmmmm thanks for remembering all these once.
"மரியா கேண்ட்டீன்:புத்தகத்தின் தலைப்பே திருநெல்வேலிக்காரர்களுக்கு முக்கியமாய் சேவியர்ஸிலோ? ஜான்ஸிலோ படித்த கல்லூரி மாணவர்களாய் இருந்தவர்களுக்கு பழைய நினைவுகளை கிளப்பி விடக்கூடியதாயிருக்கும்."
முற்றிலும் உண்மை. புத்தகம் பற்றிய பதிவு அருமை.
நான் கூட ஏதோ சாப்பாடு கடை என்று நினைத்து விட்டேன்..இனிமேல் தான் வாங்கி படிக்க வேண்டும்
தலைப்பைப் பார்த்ததும் நானும் அடுத்த சாப்பாட்டுக்கடை பதிவுன்னு நினைத்துவிட்டேன். ஹி ஹி
இங்கெல்லாம் புத்தகம் வாங்கிப் படிக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு.
http://faceofchennai.blogspot.in/2012/02/walk-in-call-center-executives.html
babuu well done boy
babuu well done boy
Post a Comment