சிங்கார சென்னை – நன்றி மேயர் அவர்களே..
மேலே உள்ள படங்கள் ஆறு வித்யாசங்கள் கண்டுபிடிக்க போடப்பட்ட படமல்ல. நேற்று முன் தினம் எங்கள் தெருவில் உள்ள குப்பைகள் அள்ளப்படாமல் இருப்பதை குறித்து செல்போனில் படமெடுத்து ஒரு பதிவிட்டிருந்தேன். அதை எங்கள் முகப்புத்தக கேட்டால் கிடைக்கும் குழுவிலும், சென்னை மேயரின் பக்கத்திலும் பகிர்ந்திருந்தேன். என்ன ஆச்சர்யம்!!!!. ஒரே நாளில் அந்த இடத்துக் குப்பை மட்டுமில்லாமல் தெரு முழுவதுமே குப்பைகள் எடுக்கப்பட்டுவிட்டன. உங்கள் ஏரியாவின் குறைகளை உடன் இணையத்தின் மூலமாய் மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்தினால் உடனடியாய் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேயர் அறிவித்திருந்ததை வெறும் அறிக்கையல்ல என்பதை நிறுபித்திருக்கிறார். இந்நடவடிக்கைகள் தொடரும் என்ற நம்பிக்கையோடு நன்றி மேயர் சா. துரைசாமி அவர்களே.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
Comments
குறையை சுட்டிக்காட்டுவது மட்டும் என்று இல்லாமல் சரி செய்ததும் , அதனையும் உடனே பதிவிட்டு தெரியப்படுத்தியது சிறப்பான ஒன்று.
போனப்பதிவில் பின்னூட்டத்தில் சொன்னது போல இப்போதைக்கு குப்பை அள்ளுவதில் பிரச்சினை இருக்க செய்யும் என நினைக்கிறேன். ஒப்பந்தம் முடிவானதும் நிலைமை சீராகிறதா எனப்பார்ப்போம்.சென்னையின் பலப்பகுதியிலும் குப்பை சரி வர அள்ளப்படாமல் இருப்பதாக சில நாட்களாக அடிக்கடி செய்தி வருகிறது. மேயர் ஏரியாவாச்சே உடனே நடவடிக்கை. ஆனாலும் பாராட்டுக்குறியவரே மேயர். இணையம் எல்லாம் பார்ப்பது குறிப்பிடத்தக்கது. கல்வியாளர் என்பதால் இருக்கும் என நினைக்கிறேன்.
தனிப்பட்ட முறையில் நல்ல மனிதரும் கூட யாரைப்பார்த்தாலும் சாப்பிட்டீர்களா என விசாரிப்பார். மேலும் சிறப்பாக பணி ஆற்ற வாழ்த்துவோம்.
நன்றி
சித்ரா
மேலும் இரண்டு வேலைகள் செய்யலாம்.
1. இதே இடத்தைத் தொடர்ந்து 6 மாதங்களுக்குக் கண்காணித்து வரலாம்.
அ. ரெகுலரா குப்பையை அள்ளறாங்களான்னு
ஆ. அப்படி அள்ளாத போது ஒவ்வொரு முறை முகப்புத்தகத்தில் போடும்போதும் வந்து சுத்தம் பண்றாங்களான்னு
2. இல்லாட்டி, இதே மாதிரி அசுத்தமா இருக்கிற 20/25 இடங்கள பதிவிட்டால் எல்லா இடங்களையும் உடனே சுத்தம் பண்றாங்களான்னு.
Bottom line : Exceptions cannot replace routine work. Exceptions cannot be scaled up or sustained in the long run.
கட்டகம் உருப்படியா வேலை செய்தா விதிவிலக்குகளைக் கொண்டாடும் அவல நிலை நமக்குத் தோன்றாது.
"Mark...
prcompanionpr@gmail.com
www.prcompanion.com"