Poola Rangadu
தெலுங்கு திரையுலகின் சமீபத்திய கருப்புக் குதிரை என்று சுனிலை சொல்லலாம். பிரபல நகைச்சுவை நடிகராய் வலம் வந்து கொண்டிருந்தவர் தீடீரென கதாநாயகனாய் “அந்தால ராமுடு” வில் நடிக்க ஆரம்பிக்க, தொடர்ந்து, ராஜமெளலியின் “மரியாதை ராமண்ணா” சூப்பர் ஹிட் லிஸ்டில் வந்து சேர, அடுத்து நடித்த ராம்கோபால் வர்மா படம் பப்படமாகிவிட, அப்படத்தில் தெலுங்கு திரையுலக மக்களை கிண்டலடித்ததன் காரணமாய் மற்ற இயக்குனர்களும், பெரிய ஹீரோக்களும் ஒதுக்கி வைக்க, தன்னை நிருபிக்க, மீண்டும் ஹீரோ அவதாரம். இம்முறை, ஆக்ஷன், காமெடி, சிக்ஸ்பேக் என்று.