Thottal Thodarum

Feb 13, 2012

கொத்து பரோட்டா 13/02/12

இந்த வார சந்தோஷங்கள்
கல்கி நூல் அறிமுகம்.
நவீன மனநிலைக்கு நகர்த்தும் பிரதி!
தெர்மக்கோல் தேவதைகள்’ அத்தனையும் வாசிக்க இலகுவான சிறு கதைகள் கொண்டது. மனித மனங்களைப் பிரதிபலிக்கும் இந்தக் கதைகள் வாழ்வின் யதார்த்தங்களைப் பேசுகிறது. மனித மனங்களுள் ஏற்படும் அபிலாஷைகள், அதற்காக ஆழமான உறவுகளையும் உடைத்தெறிந்து மாடர்ன் லைஃப் நோக்கிச் செல்வது; ஒரு வரையறைக்குள் வாழ்க்கையைப் பார்ப்பது; வேறு சிலர் எல்லாவற்றோடும் சமரசம் செய்து கொண்டு வாழ்வது இப்படியான மனித நிலைப்பாடுகளைப் பாத்திரங்கள் வாயிலாக இந்நூல் பேசுகிறது. விறுவிறு என்று வாசித்து முடிக்கலாம். நவீன மனநிலைக்கு நம்மை நகர்த்துகிறது இந்தக் கதைகள்! சிறுகதைப் பிரியர்களுக்கு இந்நூல் ஓர் அன்பளிப்பு! - தெர்மக்கோல் தேவதைகள், சங்கர் நாராயண்,
வெளியீடு: உ பதிப்பகம், தொலைபேசி : 98403 32666, விலை ரூ 50.00
புத்தகத்தைப் பற்றிய சிறப்பான அறிமுகம் அளித்த கல்கிக்கு என் நன்றிகள்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


”என்” விகடன்

விகடனில் நம்ம பெயரெல்லாம் வராதா? என்று ஏங்கிய நாட்கள் உண்டு.  பதிவெழுத ஆரம்பித்த சில மாதங்களிலேயே என் பதிவுகளை விகடனின் யூத்புல் விகடனில் வெளியிட்டார்கள். கால்கள் கீழே நிற்கவில்லை. அடுத்ததாய் என் முதல் சிறுகதை முயற்சியான “ரோட் ராஷ்” எனும் ஒரு பக்க கதை சிறுகதை விகடனில் வெளியானது. அடுத்து எழுதிய “முத்தம்” எனும் சிறுகதையும் விகடனில் ‘எங்கிருந்தோ வந்தாள்’ என்று வெளியானது. எனக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. இப்படி விகடன் கொடுத்த அங்கீகாரத்தால் வளர்ந்து இன்று தமிழின் முக்கிய பத்திரிக்கைகள் பலவற்றில் சிறுகதைகளும், கட்டுரைகளும், ஐந்து புத்தகங்கள் எழுதி வெளியிடும் அளவிற்கு வளர்ந்திருக்கிறேன் என்றால் விகடன் என்னை போன்றவர்களுக்கு அளித்த ஊக்குவிப்புத்தான். அப்படிப்பட்ட விகடனில் என் படம் போட்ட அட்டை.  உள்ளே இரண்டு பக்க அளவில் என் வலைப்பூவைப் பற்றி. அதுவும் அவர்கள் முதன் முதலாய் அறிமுகப்படுத்தும் பகுதியில்.எவ்வளவு பெரிய அங்கீகாரம். இதே விகடனில் ஒரு முறை வரவேற்பரை பகுதியில் என் வலைப்பூ வந்த போது கிடைத்த வரவேற்ப்பை சொல்லி மாளாது.   இப்போது அட்டைப்படத்தில் என்றால் கேட்கவே வேண்டியதில்லை. திடீரென சென்னையின் தெரிந்த முகமாகிவிட்டேன். இதே விகடனில் என் திரைப்படத்திற்கான விமர்சனமும், நானும் விகடனும் எழுதாமல் ஓயக்கூடாது என்ற எண்ணத்தை உறுதிப்படுத்த மேலும் ஒரு வாய்ப்பை வழங்கிய விகடனுக்கு என் நன்றிகள் பல.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
பதினைந்து வயது சிறுவன் தன் ஆசிரியை ஒருவரை பதினான்கு முறை கத்தியால் குத்திக் கொன்றிருக்கிறான். எவ்வளவு வெறி பாருங்கள். காரணம் அவனின் படிப்பு குறித்து ரிப்போர்ட் கார்டில் எழுதியதுமில்லாமல், இப்படியே படித்தால் அவன் பெயிலாகிவிடுவான் என்று கூறியிருக்கிறார். வீட்டில் அப்பா அவனுக்கு கொடுக்க வேண்டிய பாக்கெட் மணியை படிப்பில் கவனம் செலுத்தாததற்கு தண்டனையாய் கொடுக்க மாட்டேன் என்று சொல்லியிருக்கிறார். சமீபத்தில் பார்த்த அக்னிபத் படத்தில் வேறு கத்தியாய் வில்லனின் நெற்றியில் குத்தியதை பார்த்திருக்கிறான் சிறுவன். கத்தியை வாங்கி தன் ப்ரச்சனையாவற்றுக்கும் ஆசிரியைதான் காரணம் என்று முடிவு செய்து குத்திவிட்டான். ஆனால் இது மட்டுமல்ல ப்ரச்சனை. பள்ளிக் கல்வி மாணவர்களிடையே ஏற்படுத்தும் மன அழுத்தத்தைத்தான் காட்டுகிறது. சமூகத்தில் படிப்பு சுமையினால் மாணவர்களுக்கு ஏற்படும் பலவிதமான மன உளைச்சல்களின் வெளிப்பாடுத்தான் இந்தக் கொலை என்று சொல்ல வேண்டும். கல்வியாளர்களும், பெற்றோர்களும் கொஞ்சம் கவனிக்க வேண்டும். ”படிப்புங்கிறது வாழ்க்கைங்கிற வாசலோட கதவை திறக்கக்கூடிய கதவு மட்டுமே. ஆனால் அதுவே வாழ்க்கையாகாது” என்பார் என் அப்பா.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ரஷ்யாவில் பத்திலிருந்து பதினெட்டு வயதிற்குள்ளானவர்களின் தற்கொலை அதிகமாகி வருகிறதாம். சமீபத்தில் மட்டும் இரண்டு பெண்கள், ஒரு பையன் முறையே 14-17 வயதுக்கு உட்பட்டவர்கள். பல்லடுக்கு மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரை விட்டிருக்கிறார்கள். இவர்களின் ப்ரச்சனை பல வகையிலிருந்தாலும், முக்கிய ப்ரச்சனை படிப்பு, பெற்றோர்களின் வறுமை நிலை, காதல் என்றுதான் போகிறது. நேற்றுக்கூட நம்மூரில் தோழிகளுடனான சண்டையின் காரணமாய் அவர்கள் பேசவில்லை என்பதற்காக ஒரு பெண் இரண்டாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை முயற்சி செய்திருக்கிறாள். இது எல்லாவற்றிக்கும் காரணம் வயதுக்கு மீறிய சிந்தனைகள்.  பெற்றோர்களும், பள்ளியும், சமூகமும் கொடுக்கும் ப்ரெஷர். இக்காலக் குழந்தைகள் வெகு சீக்கிரத்திலேயே தங்கள் குழந்தைத்தன்மையை இழந்துவிடுகிறார்கள். இதற்கு மீடியாவும், ஒரு முக்கிய காரணம் என்று சொல்ல வேண்டும்.டிவியும், சீரியல்களும் என்று கூட சொல்லலாம்.  நாமே செல்லும் சினிமாவிற்கு அவ்வளவு சென்சார் இருக்கும் போது வீட்டிற்குள் வரும் டிவி நிகழ்ச்சிகளின் கண்டெண்டுகளை தணிக்கை செய்ய ஏதாவது வழி வகை செய்ய வேண்டியது அவசியம் என்று தோன்றுகிறது. அல்லது தயாரிப்பாளர்களே சுய தணிக்கை செய்து நிகழ்ச்சிகளை கொடுக்க வேண்டும். இனி வரும் காலங்களில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மிகவும் ஜாக்கிரதையாய் டீல் செய்ய வேண்டிய நிலையில் தான் இருக்கிறார்கள். முதலில் இவர்களுக்கு நல்ல ட்ரெயினிங் வேண்டும்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ரோஹிணி சிவாவின் திருமணத்துக்காக திருக்கடையூர் போயிருந்தோம். வழக்கப்படி மாயவரத்தில் அபிஅப்பா, செளம்யனின் தஞ்சாவூர்கார விருந்தோம்பலில் நினைந்துவிட்டு, காலையில் திருமணத்தை அட்டெண்ட் செய்தோம். திருமணம் சிறப்பாக நடைபெற்றது. ஆனால் கொடுமை என்னவென்றால் எப்போது பவர்கட் ஆகும், எப்போது வரும் என்பதை யாராலும் சொல்ல முடியாத அளவிற்கு இருக்கிறது. நிலைமை. இதைப் பற்றி நண்பர் ஒருவர் புலம்பிக் கொண்டிருந்தார். கடைசியில் விசாரித்த போது அவர் அதிமுக வார்டு மெம்பராம். அவரு யாருன்னு சொல்ல மாட்டேன். பாவம் அம்மா கட்சிய விட்டு தூக்கிறுச்சுன்னா.. நமக்கேன் பொல்லாப்பு.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
திருமணம் முடித்து, ஜோசப், புருனோ, அப்துல்லா, எல்லோரும் ஆன்மீக சுற்றுப்பயணமாய் வேளாங்கண்ணி, நாகூர் செல்ல முடிவெடுத்து வேளாங்கண்ணிக்கு போகும் வழி முகப்பில் டீ சாப்பிடலாம் என்று வண்டியை நிறுத்தினோம். அப்துல்லா கட்சி கரைவேட்டியிலிருக்க, அப்போது அங்கேயிருந்த இன்னொரு கரை வேட்டி இவரைப் பார்த்ததும், அகமலர்ந்து எழுந்து நின்று வணக்கம் சொன்னார். இவரும் வணக்கம் வைத்துவிட்டு டீக்கடைக்கு போக,  பின்னாலேயே வந்துவிட்டார் அவரும். டீ வாங்கிக் கொடுக்க, அவர் வேளாங்கண்ணி ஏரியா வார்டு மெம்பர். டீ சாப்பிட்ட குறைந்த நேரத்தில் அத்தொகுதி பற்றிய எல்லா நல்லது கெட்டதையும் பேசிவிட்டார். விவரங்களை விரல் நுனியில் வைத்திருந்தார். மின்வெட்டைப் பற்றி பேசும் போது, “ஓட்டுப் போட்டதற்கு அனுபவிச்சுத்தானே ஆகணும்” என்றார். எனக்கு என்ன ஒரு ஆச்சர்யமென்றால், எனக்கு தெரிந்து எல்லா ஊரிலும், திமுகவினர் மட்டும் அந்தந்த ஏரியா வார்டு உறுப்பினர்களோ, அல்லது கட்சிக்காரர்களோ, ஒருவர் காலையிலும், மதியத்திலும், தங்கள் ஏரியாவில் களப்பணி ஆற்றிக் கொண்டுதானிருக்கிறார்கள். அதே போல மற்ற கட்சிக்காரர்கள் யாரையும் எங்கேயும் நான் பார்த்தது இல்லை. அப்போதுதான் எனக்கு ஒன்று புரிந்தது. தொடர்ந்து எம்.ஜி.ஆர். ஆட்சி நடந்த போதும், எதிர்கட்சியாய் அத்துனை ஆண்டுகள் கட்சி எப்படி கட்டுக் கோப்பாய் இருந்தது என்று. மற்றவங்களுக்கெல்லாம் எப்படியோ தெரியாதுண்ணே.. திமுக தொண்டனுக்கு கட்சி உயிர். மத்ததெல்லாம் அப்புறம்தான் என்றார் அப்துல்லா.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
நம்பிக்கை என்பது பேப்பரைப் போல, ஒரு முறை கசக்கி விட்டால் அது சரி செய்ய முடியாது.


நமக்கு ஒர் விஷயம் பிடித்துவிட்டால் அதைப் பற்றி நாம் பேசிக் கொண்டேயிருக்க ஆசைப்படுவோம் ஆனால் அதை கேட்பவர்களுக்குதான் ஒரு எழவும் புரியாது.

சட்டசபைக் கூட்டம் எவ்வளவு மொக்கயா இருந்தா அவங்க வீடியோ பார்த்திருப்பாங்க.. ஏதாச்சும் பெப்பா பண்ணுங்கப்பா..

அவரு பாருங்க இந்த மாதிரி அநியாயம் நடக்குதுன்னு காட்டினாராம் இவரு எட்டிப் பார்த்தாராம். # நம்பிட்டோம்.

மூன்று மணி நேர மின்வெட்டை எட்டு மணி நேரமாய் உயர்த்தியிருந்து சங்கரன் கோயில் இடைத்தேர்தலில் வெற்றி பெறுவோம் அவங்களும் சொல்வாங்க. நாமளும்....
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Whitney Houston. 
தனது 48வது வயதில் நேற்று திடீரென இறந்துவிட்டார். அவரின் இழப்புக்கு காரணம் அவருடய போதை பழக்கம் என்கிறார்கள். இன்னும் முழு விவரம் வரவில்லை. 
ஆதீத பணத்திற்கும், புகழுக்கும் கொடுக்கும் விலை. பாடி கார்ட் படத்தில் இவரது நடிப்பும், I always Love you பாடலும் உலகையே உருக்கியவை. எனக்கும் மிகவும் பிடித்த பெண் பாடகர்களில் ஒருவர்.இவரது மறைவு குறித்து பலரும் அதிர்ச்சியாகியிருக்கிறார்கள். இவரின் மறைவின் பொருட்டு யூ ட்யூப் இவரது நூறு சிறந்த பாடல் வீடியோக்களை தொகுத்து வெளியிட்டுள்ளது . அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
@@@@@@@@@@@@@@@@@@@@@
சி.சி.எல். ஐபிஎல்லுக்கு முன்னால் நடத்தப்பட்டிருக்கும் இன்னொரு கிரிக்கெட் ஆட்டம்.  சென்ற முறை இதற்கு கிடைத்த வரவேற்பை விட இம்முறை அதிகமாகியிருக்கிறது. கிரிக்கெட் என்ற பெயரில் எதைக் காட்டினாலும் பார்ப்பார்கள் என்று சொன்னாலும், நடிகர்கள் ப்ரொபஷனலாகவே விளையாடியது சந்தோஷமாயிருந்தது. சென்னை அணி ஜெயித்த பிறகு அதன் கேப்டன் அழுததைப் பற்றி பலர் இணையத்தில் கிண்டலடித்தார்கள். லோக்கல் டீம் கேப்டனாய் இருந்தாலும் கூட வெற்றி எனும் போது மகிழ்ச்சியின் உச்சமாய் கண்ணீர் வருவதில் என்ன தவறு?. இதற்கு முன்னர் இதை தெலுங்கு மா டிவிதான் ஆரம்பித்தது. சன்னின் கையில் வந்த பிறகு அதன் வீச்சு இவ்வாட்டத்தை வேறு ஒரு கட்டத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது என்பதை இந்த நிகழ்ச்சியின் டி.ஆர்.பி வரும் போது தெரிந்துவிடும். எங்கே சென்றாலும் இதைத்தான் பார்த்துக் கொண்டிருந்தார்கள். என்ன எழவு கமெண்டரி என்ற பெயரில் மேஜர் சுந்தர்ராஜன் போல இங்கிலீஷில் சொன்னதை மறுக்கா தமிழில் சொன்னதைதான் தாங்க முடியலை. கலாண்ணே.. கொஞ்சம் கவனிங்க. சென்னையை தவிர கே டிவி வரவில்லை என்பதால் அதை கொஞ்சம் ப்ரோமோட் செய்ய, லீக் மேட்சுகளை கே டிவியில் ஒளிபரப்பி, மீண்டும் தமிழக கேபிளில் கே வை தெரிய வைக்க செய்த ப்ரொபஷனல் முயற்சியை பார்க்கும் போது கொஞ்சம் பொறாமையாய்த்தான் இருந்தது கே.டி ப்ரதர்ஸைப் பார்த்து.
@@@@@@@@@@@@@@@@@@@@
ப்ளாஷ்பேக்
லங்கை ஒலி. இப்படத்தின் வெற்றிக்கு கமல், ஜெயபிரதா, சரத்பாபு, கே.விஸ்வநாத், என்று ஆயிரம் காரணங்கள் சொன்னாலும் மிக முக்கியமான காரணம் இளையராஜா என்பதை மறுக்க முடியாது. இப்படம் முழுவதும் ராஜா தன் பாடல்கள், பின்னணியிசை என்று கதை நாயகனின் வாழ்க்கையோடு நம்மை கூடவே அழைத்துச் சென்றிருப்பார். பாடல்களை பற்றி சொல்ல தேவையில்லை. ஆனால் பின்னணியிசையைப் பற்றி சொல்லியே ஆகவேண்டும். இந்த வீடியோ இணைப்பில் வரும் முதல் காட்சியைப் பாருங்கள். காட்சிப்படி மிகச் சாதாரணமாய் ஆரம்பித்து, கமலின் நடிப்போடு உற்சாகமாகி, அவனின் சந்தோஷத்தோடு அவரும் சஞ்சாரம் செய்து, அவன் நெகிழும் போது நம்மையும் உருக்கி, நெகிழ வைக்கும் அந்த கோரஸை கேளுங்கள். மளுக்கென கண்ணீர் நீர் வரவில்லையென்றால் நாமெல்லாம் மனுஷன் கிடையாது. இதே பிஜிஎம்மை பலவிதமான உணர்வுகளை வெளிப்படுத்த, பலவித வாத்தியங்களோடு வரும் போது ஒவ்வொன்றும், ஒவ்வொரு உணர்வுகளை நமக்கு கொடுக்கும். இதோ என் மொட்டையின் மிகச் சிறந்த இசைக் கோர்ப்புகளின் ஒன்று.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
மகன்: என் லுல்லா கொஞ்சம் வளைந்தார்ப் போல இருக்கிறபடியால் பெணகளை கவர முடியவில்லை
அப்பா: கவலைப்படாதே. நல்ல உப்பு காகிகத்தை வாங்கி அழுத்தி தேய் நேராகிவிடும் என்றார்.
கொஞ்ச நாள் கழித்து, அப்பா என்னடா என்ன ஆச்சு? இப்ப பெண்கள் எல்லாம் விரும்புகிறார்களா? என்றதும். அதற்கு மகன்: அதான் உப்பு காகிதம் இருக்கே பின்ன அவங்க எதுக்கு? என்றான்.
கேபிள் சங்கர்

Post a Comment

21 comments:

moe said...

Power cuts are not by ADMK's rule or DMK's wonderful management.

Policy decisions can only fix it.. though over a long term.

DMK men can take some credit(for the power cuts) since they would have made TN a good place to live or invest.

புதுகை.அப்துல்லா said...

வேளாங்கன்னி நிகழ்வு பற்றி சற்று விரிவாக எழுதியிருந்திருக்கலாம்...


அவருக்கு வணக்கம் வைத்துவிட்டு நாம் டீக்கடைக்குச் சென்றபோது உங்களிடம் " அந்தக் கரைவேட்டிக்காரர் பின்னாலயே நமக்கு டீ வாங்கிக் குடுக்க வருவார் பாருங்க" என்று சொன்னேன். அதன்படி அவரும் வந்தார் :)

அதேபோல கடைவீதியில் வண்டியை நிறுத்தி நாம் டீ சாப்பிடச் சென்ற நேரம் உச்சி வெயில் சுமார் 12 மணி இருக்கும்.அந்த மனிதர் அங்கு வேர்க்க விறுவிறுக்க நின்றுகொன்டு சிலரோடு ஏரியாப் பிரச்சனையைப் பேசிக்கொண்டு இருந்தார். எப்பவும் திமுககாரன் மட்டும்தான் மக்களோடு இருப்பான். அதுதான் அவனுக்கு பிரச்சனையே. அவன் செய்யும் சிறிய தப்புகள்கூட பெரிய அளவில் தெரிந்துவிடும். அவன்மீது மக்களுக்கு வெறுப்பு கூடிவிடும். இதே அதிமுக போன்ற கட்சி நண்பர்கள் மக்களோடு பெரும்பாலும் இருப்பதில்லை. அவர்களை மக்களுக்குப் பெரிதாக அடையாளமும் தெரியாது.அதனால் அவர்கள் தப்பு செய்தாலும் தெரியாது. மற்றபடி திமுககாரனுக்கு கட்சி உயிர் அல்ல அதற்கும் மேல் :)

Unknown said...

கோவை இராமகிருஸ்ணா மருத்துவமனையில் ஒரு பெண்ணுக்கு AB+ இரத்தம் தேவைப்படுகிறது இரத்ததானம் தர விரும்பும் கோவை நண்பர்கள் தொடர்பு கொள்ளவும் Cell : 9865191061

ஸ்ரீ.... said...

விகடனில் தங்கள் வலைப்பூ குறித்த அறிமுகம் சிறப்பாக இருந்தது. வாழ்த்துக்கள்! இன்னும் பல வெற்றிகளை அடைவதற்கு இப்போதே வாழ்த்துகிறேன்.

ஸ்ரீ....

Sivakumar said...

திமுக தொண்டனுக்கு கட்சி உயிர். மத்ததெல்லாம் அப்புறம்தான் :)))

Vidhya Chandrasekaran said...

கல்கி & விகடனிற்கு வாழ்த்துகள்...

வெங்கி said...

போன பதிவுல இளையராஜாவை பற்றி இகழ்ந்து எழுதியதற்கு இந்த பதிவில் பரிகாரமா??

Cable சங்கர் said...

இல்லை. இசையைப் பற்றி, இளையராஜாவைப் பற்றி எனக்கு எவ்வளவு தெரியும் என்பதை சொல்வதற்காகத்தான்.:)

சமுத்ரா said...

வாழ்த்துக்கள்!

rajamelaiyur said...

/இதே விகடனில் என் திரைப்படத்திற்கான விமர்சனமும், நானும் விகடனும் எழுதாமல் ஓயக்கூடாது என்ற எண்ணத்தை உறுதிப்படுத்த மேலும் ஒரு வாய்ப்பை வழங்கிய விகடனுக்கு என் நன்றிகள் பல.
//
வாழ்த்துகள்

rajamelaiyur said...

இன்று

பிரபுதேவாவுக்கு அடுத்து யார் ? நயன்தாரா பதில்

Sivakumar said...

விகடனுக்கு பெருமை சேர்த்த நீவீர் வாழ்வாங்கு வாழ்க!!

வெங்கி said...

//இல்லை. இசையைப் பற்றி, இளையராஜாவைப் பற்றி எனக்கு எவ்வளவு தெரியும் என்பதை சொல்வதற்காகத்தான்.:)//

இசையை இளைய ராஜா வை துரோணராக கொண்டு கற்றுக்கொண்ட ஏகலைவன் நான்.. அவரின் இசை நுணுக்கங்ககளை புரிந்து கொள்ள நமக்கு ஞானம் இல்லை... அதனால் இப்படி ஒரு கமென்ட்..
மேலும்...விகடனில் வந்தமைக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்..

வெங்கி..
பெர்த்..ஆஸ்திரேலியா

குரங்குபெடல் said...

"திமுக தொண்டனுக்கு கட்சி உயிர். மத்ததெல்லாம் அப்புறம்தான் என்றார் அப்துல்லா. "


உண்மைதான் . . . .

லட்சம் கோடிகளை லவட்டுவதற்கான முதலீடே
அப்பாவி தொண்டர்களின் விவரம் அறியா உழைப்புதானே . . .

நன்றி

bandhu said...

//மற்றபடி திமுககாரனுக்கு கட்சி உயிர் அல்ல அதற்கும் மேல்//
ஹா..ஹா..ஹா.. இன்னும் சிரித்துக்கொண்டே இருக்கிறேன்!
நல்ல கட்சி.. நல்ல தொண்டர்கள்..

ம.தி.சுதா said...

////லோக்கல் டீம் கேப்டனாய் இருந்தாலும் கூட வெற்றி எனும் போது மகிழ்ச்சியின் உச்சமாய் கண்ணீர் வருவதில் என்ன தவறு?/////

நியாயமான கேள்வி...

தங்கள் தளமாற்றத்திற்கு என் வாழ்த்துக்கள் அண்ணாச்சி...

சுரேகா said...

கல்கி, விகடனுக்கு வாழ்த்துக்கள் தலைவரே!

Hari said...

வாழ்த்துக்கள் தலைவரே!!

யுவகிருஷ்ணா said...

என்னைப் பொறுத்தவரை கரைவேட்டியை விட சிறந்த உடை வேறில்லை. திமுககாரன் வீட்டில் குழந்தை பிறந்தாலும் கரைவேட்டியில்தான் ஏந்துவார்கள். திமுககாரன் செத்தாலும் கரைவேட்டியைதான் போர்த்துவார்கள். இந்த உடைக்கும், திமுக குடும்பங்களுக்கும் இருக்கும் உறவினை வார்த்தைகளில் வெளிப்படுத்தவே முடியாது.

ராசின் said...

வாழ்த்துகள்.

இனியா said...

திமுக தொண்டன் குறித்து அப்துல்லா சொல்வது உண்மைதான்.
இப்படிப்பட்ட பல திமுக தொண்டர்களை நேரில் கண்டிருக்கின்றேன்.
பகிர்ந்ததற்கு நன்றி. ஆனால் திமுக குடும்பச் சண்டையால் சிதைந்து
ஒன்றும் இல்லாமல் சென்று விடுமோ என்றக் கவலையும் ஒவ்வொருத் தொண்டனுக்கும் உண்டு.