பொங்கலுக்கு பெரிய படங்கள் வந்ததால் நிறைய சின்னப் படங்கள் பொங்கலுக்கு முன் வெளியாகி தியேட்டரைவிட்டு ஓட, சென்ற வருடக் கடைசியில் வெளியான மெளனகுரு மட்டும் மெளனமான ஒரு வெற்றியை பெரிய படங்கள் வெளியான பிறகும் பெற்றது. நல்ல படங்களுக்கு மக்களிடம் வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தியது.
பொங்கலுக்கு வெளியான நண்பன், வேட்டை ஆகிய ரெண்டு படங்களுக்குமே செம ஓப்பனிங் கிடைத்தது. இந்தப் படங்களுடன் வெளியான விதார்த்தின் கொள்ளைக்காரன், ஓரளவுக்கு ஓகே என்ற மவுத் டாக் இருந்தாலும் மற்ற இரண்டு படங்களின் இரைச்சலில் சத்தம் கேட்காமல் அமுங்கிப் போனது என்றே சொல்ல வேண்டும்.
நண்பனுக்கு கிடைத்த ஓப்பனிங் ஒன்று ஆச்சர்யப்பட வேண்டிய ஒன்றல்ல. விஜய், மல்ட்டி ஸ்டார் க்ரூப், ஷங்கர், ஹாரிஸ் என்று பெரிய க்ரூப்பே வரிசைக் கட்டி நிற்க, சமீபத்திய விஜய் படங்களில் அவருக்கு பேர் சொல்லும் படமாய், அவரது நடிப்பை பொறுத்தவரை நல்ல பெயரை பெற்றுத்தந்தது. ஆனால் என்னதான் இவர்களே டெர்ராஹிட்.. மெஹா ஹிட், எந்திரன் வசூலை தாண்டிவிட்டது என்று மாற்றி மாற்றி சொன்னாலும், படம் முதல் வாரத்திற்கு பிறகு பி அண்ட் சி ஏரியாக்களில் வசூல் இறங்கிப் போய் விட்டது. அப்போது இறங்கியதுதான் ஏறவே இல்லை என்பது தான் உண்மை. படம் வெளியான இரண்டாவது வாரக் கடைசியில் பிருந்தா தியேட்டரில் காலைக் காட்சியின் மொத்த டிக்கெட் விற்பனை எழுபத்தி சொச்சமே.. ஆனாலும் படம் சில வாரங்கள் ஓட்டப்பட்டது. ஆயிரம் சீட்டுகளுக்குள் இருக்கும் அந்த திரையரங்கில் இரண்டாவது வாரக் கடைசியில் அவ்வளவுதான் டிக்கெட் விற்பனை என்றால் மற்ற ஏரியாக்களில் பார்த்துக் கொள்ளலாம். சுமார் 85-90 கோடியில் தயாரிக்கப்பட்ட இப்படம், முந்தைய சங்கர், விஜயின் படங்களை விட நல்ல பேரை தவிர வேறெதையும் பெரிதாய் பெறவில்லை .
அதே போல் தான் வேட்டை நிலையும். படு அரத பழசான மசாலாவை அரைத்திருந்ததால் ஏமாற்றமடைந்தவர்கள் நிறைய பேர். ஒரு சிலருக்கு இந்தப்படம் ஓகே பரவாயில்லை என்று தோன்றினாலும், பெரிய ஓப்பனிங் இருந்ததே தவிர வசூலைப் பொறுத்தவரை வெகு சுமார் என்றே சொலல் வேண்டும். பி. அண்ட் சி தியேட்டர்களில் மட்டும் கொஞ்சம் சுமாரான வசூலையே பெற்றது. தயாரிப்பாளராய் லிங்குசாமிக்கு நல்ல லாபத்தைத்தான் கொடுத்திருக்கிறது என்றாலும் வாங்கிய யுடிவிக்கு, வாங்கிய விலைக்கும், அவர்கள் செய்த பப்ளிசிட்டிக்கும் கூட பற்றாமல் போனது என்றே சொல்ல வேண்டும். நண்பனின் பிருந்தா தியேட்டர் நிலவரத்தை பார்த்த அன்றே.. முலக்கடை தியேட்டரில் ஓடிக் கொண்டிருந்த வேட்டைக்கு சுமார் முப்பது சொச்ச டிக்கெட்டுகளே விற்றிருந்தது. வாசலில் இரண்டு ஆட்டோக்கள் மற்றும் ஒரு பைக் இருந்தது. விசாரித்த போது பெரிதாய் ஏதும் சொல்ல முடியவில்லை வீக் எண்ட் பார்க்கணும் என்றார்கள். பெரிய விலைக்கு வாங்கியதால் லாபமடையாத ஒரு ப்ராஜெக்டாக யுடிவிக்கு அமைந்துவிட்டது என்றே சொல்கிறார்கள்.
கொள்ளைக்காரன். சீனு ராமசாமியின் உதவியாளர் இயக்கிய படம். கொஞ்சம் நேட்டிவிட்டியோடு, லைட் ஹூமரை சேர்த்துக் கொடுத்திருந்தாலும், அரத பழசான கதையினால் பெரிய இம்பாக்டை கொடுக்க முடியவில்லை. மற்ற பெரிய படங்களின் சத்தத்தில் அமுங்கிப் போனது ஒரு வருத்தமே. நான் பைலட் தியேட்டரில் காணும் பொங்கலன்று காலைக் காட்சி பார்த்தேன். இத்தனைக்கு தியேட்டரில் 50/30 மட்டுமே டிக்கெட் விலை. மொத்தம் 50 ரூபாயில் என்னையும் சேர்த்து 6 பேர். 30 ரூபாயில் இருபது பேர் இருக்கும். என்ன சொல்வது பெரிய நடிகர்கள், பெரிய அளவில் விளம்பரப்படுத்தினால் மட்டுமே தியேட்டருக்கு வருவேன் என்று அடம்பிடிக்கும் ரசிகர்களை எப்படித்தான் சின்னப் படங்களுக்கு இழுத்து வருவது என்று புரியாமல் திணறுகிறார்கள், விநியோகஸ்தர்களும், தயாரிப்பாளர்களூம். இதற்கு பிறகு வெளிவந்த தேனி மாவட்டம் போன்ற பல சின்னப் படங்கள் வந்த சுவடு தெரியாமல் போனதும் இந்த மாதத்தில் உண்டு.
கேபிள் சங்கர்
Post a Comment
14 comments:
போன் வயர் பிஞ்சி இருபது நாளாச்சு...
மேதை ரிப்போர்ட்? ஏன் இந்த ஓர வஞ்சனை?
'கிளிப்பச்சை, டார்க் ரோஸ் சொக்காய்'
ராமராஜன் தீவெறி பேரவை,
மத்திய நடு சென்ட்ரல் ஐரோப்பா.
நண்பன் ரொம்பவே நல்லா இருந்தது. ஆனாலும் எதிர்பார்த்த அளவுக்கு ஒடல அப்டினு தான் சொல்லணும் அண்ணா :(
ஏன்னு தெரியல..
படம் விமர்சனத்தோட இந்த தகவல் எல்லாம் எங்க சங்கர் மூலம் தான் தெரிஞ்சுக்க முடியுது!Tnx :-)
வழக்கம் போல நடுநிலையான அலசல் கேபிள்ஜி
//85-90 கோடியில் தயாரிக்கப்படம்//
தயாரிக்கப்பட்ட படம்??
***
//முலக்கடை தியேட்டரில் ஓடிக்கொன்றிருந்த//
மூலக்கடை தியேட்டரில் ஓடிக் கொண்டிருந்த??
**
நிறைய எழுத்து பிழைகள் கேபிள். பார்த்து சரி செய்யவும் !
மக்களுக்கே எது நல்லா இருக்கு என்ற குழப்பம் வரும்போல. இதுல படம் எடுக்கிறவங்க நிலமை மண்டை காய்ஞ்சிரும்போல.இந்த மாதிரியான நிலையில் ஸ்டிரைக் வேறு.
ஆனா விஜய் நண்பன் வெற்றிப் படம்னு சொல்வாரே!
toooo late post!!
//எந்திரன் வசூலை தாண்டிவிட்டது என்று மாற்றி மாற்றி சொன்னாலும், படம் முதல் வாரத்திற்கு பிறகு பி அண்ட் சி ஏரியாக்களில் வசூல் இறங்கிப் போய் விட்டது. அப்போது இறங்கியதுதான் ஏறவே இல்லை என்பது தான் உண்மை
//
உண்மைதான்
இன்று
விஜயின் துப்பாக்கி படம் கைவிடப்பட்டதா ? - விஜய் பரபரப்பு பேட்டி
Nice But late...
Tamil Cinema News
கேபிள்,
//படம் முதல் வாரத்திற்கு பிறகு பி அண்ட் சி ஏரியாக்களில் வசூல் இறங்கிப் போய் விட்டது. அப்போது இறங்கியதுதான் ஏறவே இல்லை என்பது தான் உண்மை. படம் வெளியான இரண்டாவது வாரக் கடைசியில் பிருந்தா தியேட்டரில் காலைக் காட்சியின் மொத்த டிக்கெட் விற்பனை எழுபத்தி சொச்சமே.. ஆனாலும் படம் சில வாரங்கள் ஓட்டப்பட்டது.//
முதல் முறையாக சென்னை சிட்டி லிமிட் தாண்டிய பின் படங்களின் வசூல் நிலைமை என்ன என்பதன் அடிப்படையில் வெற்றி நிலவரம் சொல்லி இருக்கீங்க என நினைக்கிறேன். நல்ல முன்னேற்றம். இதைத்தான் நான் அடிக்கடி சொல்லிவந்தேன். ஆனால் அப்போதெல்லாம் உங்களுக்கு மட்டுமே உண்மை தெரியும் என்று சொல்லி வந்தீர்கள் :-))
ஒரு வாரத்திற்கு பின் என்னக்கதி என்பதை நான் இதே போல திரையரங்குகளில் பார்த்து விடுவதால் தெரிந்து விடுகிறது எனக்கு.
நண்பனை முதல் வார முடிவில் 20 ரூ மட்டும் டிக்கெட் என்றும் அடுத்த வாரம் 10 ரூ மட்டும் டிக்கெட் என்றும் போட்டே கடலூரில் ஓட்டினார்கள்(நிறைய ஊர்களில் இப்படித்தான் கட்டணம் குறைத்து ஓட்டுகிறார்கள், காஞ்சிபுரம் போனாலும் அப்படிப்பார்க்கலாம்,அதெல்லாம் ஓடிய நாட்காளைக்கூட்டிக்காட்டவே), வேட்டைக்கும் அதே நிலை ஆனால் 2 வாரத்தில் தூக்கி விட்டார்கள், மெரினா, தோனி எல்லாம் ஒரே வாரத்தில் இரண்டுக்காட்சியாக ஆக்கி 20 ரூ டிக்கெட் என்று ஓட்டிப்பார்த்தும் முடியாமல் எடுத்து விட்டார்கள்.
பெரும்பாலும் மிகப்பெரிய வெற்றி என்று சொல்லிக்கொள்ளும் படங்கள் எல்லாம் ஒரு வாரம் மட்டுமே தாக்குப்பிடிக்கின்றன, ஒருவாரத்தில் வசூல் எடுக்க முடியாது என்பது என் எண்ணம். ஆனால் வழக்கமாக ஒரு வாரத்தில் போட்டக்காசை எடுத்துவிட்டார்கள் என்று சொல்வீர்கள் :-))
நண்பன் வசூலில் நூறு கோடியை தாண்டி விட்டது என்கிறார்கள் !?...வேட்டை ஒரு வாரம் ஓடியதே அதிகம் ... பெரிய நடிகர்களை பொறுத்தவரை படத்தின் வெற்றி முதல் வாரத்திலேயே தீர்மானமாகிறது என்பதே தற்போதைய நிலவரம் !
இன்று நகரில் பெரிய போஸ்டர் பார்த்தேன் - 60-ஆவது நாள் - படம்: “பாவி”. இன்றுதான் இந்தப் பெயரில் படம் வந்தது என்று தெரிந்துகொண்டேன்! நீங்கள் எல்லாப் படமும் பார்ப்பவராயிற்றே, இதைப் பற்றி எழுதினாற்போல் தெரியவில்லயே! (நான் அவ்வளவு பாவம் செய்யவில்லை என்று சொல்லாதீர்கள்!) - ஜெ.
Post a Comment