இந்த வாரம் மட்டும் தமிழில் ஆறு படங்களும், இந்தியில் இரண்டு படங்களும், ஆங்கிலத்தில் ரெண்டும், தெலுங்கில் ரெண்டுமாய் படங்கள் சென்னையில் வெளியாகியிருக்கிறது. இன்னொரு பக்கம் போனவாரம் வெளியான தோனிக்கு பத்திரிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பிருக்கிறது. ஆனால் கூட்டத்தைத்தான் காணோம் என்று பிரகாஷ்ராஜ் டிவீட்டரில் கவலைப் படுகிறார். ரெண்டே வாரத்தில் போட்ட முதல் தியேட்டரில் எப்படி எடுக்க முடியும் என்று தனஞ்செயன் ஒரு பக்கம் கவலைப் படுகிறார். படமெடுக்கும் தயாரிப்பாளர்களை விட எடுக்காதவர்கள் தான் அதிகம் ப்ரச்சனை செய்கிறார்கள் என்று அமீர் அறிக்கை விடுகிறார். ஸ்ட்ரைக் இழுத்துக் கொண்டு போவதால் பல பெரிய படங்களின் ஷூட்டிங் நின்று போய் வட்டி ஏறிக் கொண்டிருக்கிறது என்று ஒரு பக்கம் கவலையாயிருக்கிறார்கள் பெரிய பட தயாரிப்பாளர்கள். இந்த ப்ரச்சனையால் சிறு முதலீட்டு தயாரிப்பாளர்கள் படமெடுக்க யோசனையாய் இருக்கிறார்கள். பல பெப்ஸி ஆட்கள் கேட்டரிங் தொழிலுக்கு டெம்ப்ரவரியாய் ஷிப்டாகி வேலையைப் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் ஒரு தகவல் ஓடிக் கொண்டிருக்கிறது. இத்தனைக்கும் நடுவில் பெரிய பட்ஜெட் பட விளம்பரங்கள் வேறு அறிவித்த வண்ணமாய் இருக்கிறார்களே எப்படி என்று ஒரு புறம் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இப்படி ப்ரச்சனையாய் ஒரு பக்கம் சொல்லிக் கொண்டிருந்தாலும், பெரிய நடிகர்கள் படங்கள் விழாக் காலங்களில் மட்டுமே ரிலீஸ் செய்ய வேண்டுமென்ற விதியால், காதலில் சொதப்புவது எப்படி?, அம்புலி போன்ற படங்களுக்கு கிடைத்திருக்கும் வரவேற்பை பார்க்கும் போது சினிமா பெரிய படங்கள் இல்லையென்றால் கொஞ்சம் வாழும் என்றுதான் தோன்றுகிறது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சசிகலா நடராஜன் மேலும் நில அபகரிப்பு வழக்கு தொடுத்துள்ளார்கள். அடுத்த அஞ்சு வருஷத்திற்குள் இவர்கள் தியாகிகளாய் வலம் வர ஆம்பித்துவிடுவார்கள். சசி வேறு ஜெவுக்கும் ஊழலுக்கும் சம்பந்தமில்லை. அவர் வெறும் இன் ஆக்டிவ் டைரக்டர் மட்டுமே. எல்லாவற்றிக்கும் தானே பொறுப்பு என்றிருக்கிறார். இப்போது புரிகிறது எதற்கு பிரிந்தார்கள் என்று. இதையேத்தான் கனிமொழி கலைஞர் டிவி ப்ரச்சனையில் சொன்னார்கள். அப்போது மட்டும் அதெப்படி என்று கேட்டவர்கள் இதை ”எப்படி பாத்தியா அம்மாவுக்கு எதுவும் தெரியாது” என்று சந்தோஷப்படுவது காமெடியாய் இருக்கிறது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
நாட்டில் பவர் கட், அது இதுவென பல ப்ரச்சனைகள் உள்ள நிலையில் தன் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று ஸ்டாலின் அறிவித்திருப்பதைப் பார்த்தால் விரைவில் அறிவிப்பு வரும் போலிருக்கிறதே.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சசிகலா நடராஜன் மேலும் நில அபகரிப்பு வழக்கு தொடுத்துள்ளார்கள். அடுத்த அஞ்சு வருஷத்திற்குள் இவர்கள் தியாகிகளாய் வலம் வர ஆம்பித்துவிடுவார்கள். சசி வேறு ஜெவுக்கும் ஊழலுக்கும் சம்பந்தமில்லை. அவர் வெறும் இன் ஆக்டிவ் டைரக்டர் மட்டுமே. எல்லாவற்றிக்கும் தானே பொறுப்பு என்றிருக்கிறார். இப்போது புரிகிறது எதற்கு பிரிந்தார்கள் என்று. இதையேத்தான் கனிமொழி கலைஞர் டிவி ப்ரச்சனையில் சொன்னார்கள். அப்போது மட்டும் அதெப்படி என்று கேட்டவர்கள் இதை ”எப்படி பாத்தியா அம்மாவுக்கு எதுவும் தெரியாது” என்று சந்தோஷப்படுவது காமெடியாய் இருக்கிறது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
நாட்டில் பவர் கட், அது இதுவென பல ப்ரச்சனைகள் உள்ள நிலையில் தன் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று ஸ்டாலின் அறிவித்திருப்பதைப் பார்த்தால் விரைவில் அறிவிப்பு வரும் போலிருக்கிறதே.
சங்கரன் கோவில் இடைத்தேர்தலில் நிற்க வேட்பாளர் தேர்வின் போது அவர் ஸ்டாலின், கலைஞர் எதிரில் நிற்பது போன்ற படங்களை வெளியிட்டதன் பின்னணி என்ன?தைரியமிருந்தா சங்கரன் கோவிலை அழகிரி தன் இன்ப்ளூயன்ஸை வைத்து ஜெயிச்சு காட்டச் சொல்லுங்க.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இந்த வார சந்தோஷம்
இந்த வார விகடன் வலைப்பேச்சில் என்னுடய ட்வீடொன்று வெளியானதை வைத்துப் பார்க்கும் போது நானும் ஒரு ட்வீட்டரென விகடன் ஏற்றுக் கொண்டிருக்கிறது என்பது சந்தோஷமாய் இருக்கிறது.
விரைவில் இன்னொரு புத்தகம் வரவிருக்கிறது. இனி என்னுடய எல்லா படைப்புகளும் “கேபிள் சங்கர்” என்கிற பெயரில் தான் வெளிவர வேண்டுமென பதிப்பாளர்கள் சொல்கிறார்கள். 16 வயதினிலே சப்பாணி போல நான் தான் என் பெயர் ராசகோவாலு, சப்பாணியில்லை என்று சொல்லி அலைவது போல சங்கர் நாராயண் என்று சொல்லித் திரிகிறேன் என்று எனக்கே தோன்றியது. இனி புதிய பதிப்புக்கள், புதிய புத்தகங்கள், திரைப்பட எழுத்து, மற்றும் இயக்கம் அத்தனைக்கும், கேபிள் சங்கர் என்ற பெயரில் வலம் வரலாமென முடிவெடுத்திருக்கிறேன். என்ன சொல்றீங்க?
சுந்தர்.சியின் மசாலா கபேவிற்கு பிறகு, கந்தக்கோட்டை இயக்குனர் சக்திவேலின் புதிய படத்திற்கு வசனமெழுதுகிறேன். க்யூட்டான காதல் கதை.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
ஜெவுக்கும் ஊழலுக்கும் சம்பந்தமில்லையாம் – சசிகலா # தோழி டீ
உன்னை வெறுப்பதற்கும்,
மறப்பதற்கும் எடுக்கும்
அதீத பிரயத்தனங்களை விட
குறைவாகவே தேவைப்படுகிறது
உன்னை காதலிக்க
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
ஜெவுக்கும் ஊழலுக்கும் சம்பந்தமில்லையாம் – சசிகலா # தோழி டீ
உன்னை வெறுப்பதற்கும்,
மறப்பதற்கும் எடுக்கும்
அதீத பிரயத்தனங்களை விட
குறைவாகவே தேவைப்படுகிறது
உன்னை காதலிக்க
இளையராஜாவின் ரசிகராய் இருந்தால் அவர் மோசமாக இசையமைத்தாலும் பாராட்ட வேண்டும் என்று நினைப்பது அராஜகமாய் தோன்றுகிறது.
வெற்றியை இன்னும் அடையவில்லை தான். ஆனால் அடையும் இடத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறேன்.
சில உறவுகள் டாம்& ஜெர்ரியைப் போல,ஒருவரை ஒருவர் சீண்டிக் கொண்டும், அடித்துக் கொண்டுமிருந்தாலும் கூட ஒருவரில்லாமல் மற்றவரால் இருக்கமுடியாது.
நீ இரண்டு பேரின் மேல அன்பு கொண்டிருந்தால் இரண்டாமவனை தேர்ந்தெடு. ஏனென்றால் முதலாமவனை நீ விரும்பாததால் தான் இரண்டாமவனை தெரிந்தெடுக்கிறாய்
நான் என்ன பேசுகிறேனோ அதற்கு மட்டுமேதான் நான் பொறுப்பு. நீ எப்படி புரிந்து கொள்கிறாய் என்பதற்கல்ல.
நம்மை பார்ப்பதற்கோ, அல்லது போனில் பேசுவதற்கோ கூட முயலாதவர்கள் உன்னை மிஸ் செய்கிறேன் என்று சொல்லும் போது எரிச்சலாயிருக்கிறது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Kodak நிறுவனம் வங்கியில் பாங்க்ரப்ஸி நோட்டீஸ் கொடுத்திருக்கிறது. ஃபிலிம் என்கிற ஒரு வஸ்துவை கண்டுபிடித்து, இன்றைய சினிமாவிற்கும், புகைப்படத்துறைக்கும், உலகின் முதல் டிஜிட்டல் கேமராவையும் கொடுத்த நிறுவனம், அவர்கள் கண்டுபிடித்த டெக்னாலஜியினாலேயே மூடப்பட இருக்கிறது. ஃபிலிமில் போட்டோ எடுத்த காலம் போக, இப்போது எல்லாம் சிப்பில் என ஆகிவிட்ட நிலையாகிவிட்டது. சினிமாவும் மெல்ல முழுவதும் டிஜிட்டல் பக்கம் சாய்ந்துவிட்ட நிலையில் ஃபிலிம் தயாரிப்பு என்பது வழக்கொழிந்த விஷயமாய் போய்க் கொண்டிருக்கும் நிலையில் கொடாக்கின் நிலையைப் பற்றி, அவர்களின் வளர்ச்சியைப் பற்றியும், தற்போதைய நிலையைப் பற்றியும், ஒளிப்பதிவாளர் விஜய் ஆம்ஸ்ட்ராங் எழுதிய உருக்கமான, அற்புதமான கட்டுரையை படியுங்கள்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
கர்ணன் படத்தை டிஜிட்டல் இண்டர்மீடியேட் செய்து, டி.டி.எஸ் மற்றும் பல டிஜிட்டல் உயர்வு தரத்தில் மீண்டும் திவ்யா பிக்சர்ஸ் வெளியிட இருக்கிறது. அதற்கான ட்ரைலர் வெளியீட்டு விழாவை சத்யமில் நடத்தவிருக்கிறார்கள். பெரிய, புதிய படங்களுக்கு இணையாய் நல்ல விளம்பரத்தோடு வெளிவர இருக்கிறது. எனக்கென்னவோ வர்ற படங்களை விட இது ரீ ரிலீஸ் ஆகி ஹிட்டானால் ஆச்சர்யமில்லை.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
கூடங்குளம் அணு மின் நிலையத்தை எதிர்த்து ஏற்கனவே 49 ஓ போன்றவற்றை மீயூசிக் விடியோவாக வெளியிட்ட குழு மீண்டும் ஒரு மியூசிக் வீடியோவை வெளியிட்டிருக்கிறார்கள்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ப்ளாஷ்பேக்
ப்ளாஷ்பேக்கில் பாடல்கள் மட்டும் தான் வர வேண்டுமா என்ன? நல்ல பின்னணியிசையும் ஞாபகம் வரலாமில்லையா? பின்னணியிசை என்றதும் ஞாபகத்தில் இருக்கும் தலைவன் நம்ம மொட்டை தான். இந்த இசை மணிரத்னத்தின் முதல் படமான “பல்லவி அனுபல்லவி” என்கிற கன்னட படத்தில் வந்தது. எனக்கு மிகவும் பிடித்த கம்போசிஷன். பாலு மகேந்திராவின் ஒளிப்பதிவில், அனில்கபூர், லஷ்மி நடித்திருப்பார்கள். மெளனராகம் கார்த்திக் செய்யும் அத்துனை கலாட்டகளின் ஒரிஜினல் இந்த படத்தில் இருக்கும்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
அடல்ட் கார்னர்
அழகான பெண்ணொருத்தி பெட்ரோல் இல்லாமல் நடுவழியில் நின்றாள். குதிரையில் வந்த ஒரு இந்தியன் ஒருவன் அவளுக்கு குதிரையில் லிப்ட் கொடுக்க, அவன் வழியெல்லாம், ஆ.. ஊ வென கத்திக் கொண்டு வந்தான். பெட்ரோல் பப்பின் அருகில் அவளை இறக்கி விடும் போது, உற்சாகமாய் ஊளையிட்டு, கத்தியபடி சந்தோஷமாய் கிளம்பினான். பெட்ரோல் இளைஞன் அவளிடம் அப்படி என்ன செய்தீர்கள் அவனுக்கு இவ்வளவு சந்தோஷமாய் கத்திக் கொண்டு போகிறான் என்று கேட்டான். ஓன்றுமில்லையே.. அவன் பின்னால் உட்கார்ந்து கொண்டு, அவனை அணைத்தபடி, முன்னிருந்த கைப்பிடியை பிடித்துக் கொண்டு வந்தேன் அவ்வளவுதான். என்றவுடன். “ஐய்யோ மேடம் நீங்கள் பிடித்து வந்தது கைப்பிடியில்லை” என்றான்.
கேபிள் சங்கர்
கேபிள் சங்கர்
Post a Comment
20 comments:
கேபிள் சங்கர்ன்னு பெயர்போடும் போது, குழப்பம் அதிகம் வராது.ok! எப்போதும் போல கொத்து சூப்பர். congrats for next film n book :-)
கலக்குங்க!
கேபிள் சங்கர்::“கேபிள் சங்கர்” என்கிற பெயரில் தான் வெளிவர வேண்டுமென பதிப்பாளர்கள் சொல்கிறார்கள்.:very true .you have familiar in this name. so better use the same NAME for all your articles.BEST OF LUCK.
கொத்து பரோட்டா வழக்கம் போல அருமை.
எனக்கு இந்தமுறை அடல்ட் கார்னர் படிக்கும்போது இன்னொரு ஜோக் ஞாபகம் வந்தது. பகிரலாம் என நினைக்கிறேன்.
------------
ஒரு தேசியமட்ட போட்டியில் முதல்பரிசு பெற்றதற்காக ஸ்கூல் ஒரு மாணவனை க்ளாஸ் டீச்சருடன் தனியாக டூர் அனுப்பினாங்களாம். இரவு தூங்கும் முன் டீச்சரிடம் போய் மாணவன் “டீச்சர் ... எனக்கு தினமும் எங்க மம்மி தொப்புள்ள விரல் வச்சு தூங்கித் தான் பழக்கம். அப்படியே நான் படுத்துக்கவா???”ன்னு கேட்டான். டீச்சரும் பரவால்ல. தொப்புள் தானேன்னு ஓகே சொன்னாங்க. கொஞ்ச நேரத்துல டீச்சர் சொன்னாங்க “தம்பி ... அது என் தொப்புள் இல்ல”. அதுக்கு மாணவனும் “நான் வச்சிருக்கதும் என் விரல் இல்ல” ன்னு சொன்னான்.
------------
ரொம்ப ஓவரா இருந்தா கமெண்ட்டை அழிச்சுடுங்க பாஸ் ...
கேபிள் அண்ணே,
இதே மெட்டில் தமிழில் ரவீந்தர் பாடுவது போல் ஒரு பிரபல பாடல் உள்ளது. பாடல் வரிகள் தற்பொழுது நியாபகம் இல்லை. இந்த இரண்டில் எது முதலில் வந்தது???
கேபிள்ஜி அது கோபால கிருஷ்ணன் தானே. ராசகோபாலு இல்லையே.
எனக்கும் கேபிள்தான் பிடிச்சிருக்கு
ada aamaamilla. ஏதோ கோவாலுன்னு நினைப்பில எழுத்திட்டேன்.
கேபிள் அண்ணே,
இதே மெட்டில் தமிழில் ரவீந்தர் பாடுவது போல் ஒரு பிரபல பாடல் உள்ளது. பாடல் வரிகள் தற்பொழுது நியாபகம் இல்லை. இந்த இரண்டில் எது முதலில் வந்தது??? // தமிழில் இளையராஜா இசையமைப்பில் 'வாழ்க்கை' என்ற படத்தில் வந்தது.சிவாஜி அம்பிகா நடித்தது. மெல்ல மெல்ல என்னைத் தொட்டு...என்று ஆரம்பிக்கும் சில்க் ஸ்மிதா பாடல்.
என் வலையில்;
மாப்பிள்ளை - நாட்டுப்புற பாலியல் கதை (18+)
என் வலையில் ;
மாப்பிள்ளை - நாட்டுப்புற பாலியல் கதை (18+)
மூணுஷோவும் உன் கற்பனைகள் - சினிமா விமர்சனம்
ஜி
அந்த BGM தான் சர்வம் படத்தில் யுவன் பயன்படுத்தி இருப்பார்.
//கேபிள் அண்ணே,
இதே மெட்டில் தமிழில் ரவீந்தர் பாடுவது போல் ஒரு பிரபல பாடல் உள்ளது. பாடல் வரிகள் தற்பொழுது நியாபகம் இல்லை. இந்த இரண்டில் எது முதலில் வந்தது??? // தமிழில் இளையராஜா இசையமைப்பில் 'வாழ்க்கை' என்ற படத்தில் வந்தது.சிவாஜி அம்பிகா நடித்தது. மெல்ல மெல்ல என்னைத் தொட்டு...என்று ஆரம்பிக்கும் சில்க் ஸ்மிதா பாடல்.//
அதுல தான னா னா னா வா ...டிஸ்கோ...போ டிஸ்கோனு தான் அதிகம் வரும் :-))
(மெல்ல மெல்ல என்னைத்தொட்டு வெண்ணிலாவில் பெண்ணைக்கண்டு னு வருமா பாட்டு)
ஆமாம், ஜெயா வீட்டில் நடப்பது அவருக்குத் தெரியாது, கலைஞர் டி வி யில் நடப்பது கனிமொழிக்குத் தெரியாது, 2ஜி ஊழலில் ராஜா செய்தது சிதம்பரத்துக்குத் தெரியாது - நமக்குமட்டும் நாட்டில் நடப்பது என்ன என்று புரிந்துவிடுமா!
கேபிள் சங்கர் : சுஜாதா // சங்கர் நாராயண் : எஸ். ரங்கராஜன். இது சரிதானே!
//ரொம்ப ஓவரா இருந்தா கமெண்ட்டை அழிச்சுடுங்க பாஸ் ..// எப்படி, எப்படி! இனி ஹாலிவுட்ரசிகன் கொத்துபரோட்டாவின் நிரந்தர கன்ட்ரிப்யூட்டர்!
-ஜெ.
//இனி புதிய பதிப்புக்கள், புதிய புத்தகங்கள், திரைப்பட எழுத்து, மற்றும் இயக்கம் அத்தனைக்கும், கேபிள் சங்கர் என்ற பெயரில் வலம் வரலாமென முடிவெடுத்திருக்கிறேன்.//
Good decision Cable.
ஒஹொப்ரொடக்ஷன் வந்தது கூட தெரியாம “ஜீனியர் குப்பண்ணா” ஓட்டலில் அப்படி என்னத்தான் சாப்பிட்டீங்க(கட்டு கட்டினீங்க) சார்.
சீக்கிரம் சாப்பாட்டுகடையில் எழுதுங்க, என் அனுபவமும்(fantastic) உங்க அனுமபவமும் ஒத்து போகுதா என்றுப் பார்ப்போம்.
பல்லவி அனு பல்லவி படத்தை பார்க்கணும்னு ரொம்ப நாள் தேடிக்கிட்டு இருந்தேன்,அட்லீஸ்ட் நல்ல பின்னணி இசையுடன் கூடிய ஒரு காட்சி பார்க்க கிடைத்தது,நெக்ஸ்ட் "நீதானே என் பொன்வசந்தம்"
//சுந்தர்.சியின் மசாலா கபேவிற்கு பிறகு, கந்தக்கோட்டை இயக்குனர் சக்திவேலின் புதிய படத்திற்கு வசனமெழுதுகிறேன். க்யூட்டான காதல் கதை.//
வாழ்த்துக்கள் தல,அப்பிடியே என்னோட request யும் மறந்துராதிங்க!!!
@narein
இன்னைய வரைக்கும் அவர் யாருன்னு எனக்கு ஞாபகமில்லை.
//கேபிள் சங்கர் : சுஜாதா // சங்கர் நாராயண் : எஸ். ரங்கராஜன். இது சரிதானே!//
இது அநியாயம் தலைவரே..
//கர்ணன் படத்தை டிஜிட்டல் இண்டர்மீடியேட் செய்து, டி.டி.எஸ் மற்றும் பல டிஜிட்டல் உயர்வு தரத்தில் மீண்டும் திவ்யா பிக்சர்ஸ் வெளியிட இருக்கிறது. அதற்கான ட்ரைலர் வெளியீட்டு விழாவை சத்யமில் நடத்தவிருக்கிறார்கள். பெரிய, புதிய படங்களுக்கு இணையாய் நல்ல விளம்பரத்தோடு வெளிவர இருக்கிறது. எனக்கென்னவோ வர்ற படங்களை விட இது ரீ ரிலீஸ் ஆகி ஹிட்டானால் ஆச்சர்யமில்லை.// நடக்கும் ..நட்டக்க வேண்டும்.
வழக்கத்தை விட..3700 மேலான பார்வையிடல் என, என் வலைப்பூ காட்டியபோது, ஆச்சரியப்பட்டுப்போனேன்..அதற்கு காரணம் இப்போதுதான் தெரிந்தது..நீங்கள் ‘Kodak' பற்றிய என் பதிவை இங்கே குறிப்பிட்டு உள்ளீர்கள் என்பது.. அதனால் வந்த கூட்டம்.. நன்று தலைவரே
மன்னிக்கவும் அது //நன்று தலைவரே// இல்லை..நன்றி தலைவரே..:)
Post a Comment