நாளை முதல் சென்னையில் இரண்டு மணி நேர மின்வெட்டும், தமிழகத்தின் மற்ற பகுதிகளுக்கு நான்கு மணி நேரமும், தொழிற்சாலைகளுக்கு ஒரு நாள் மின்வெட்டு விடுமுறையும் ஆரம்பிக்கவிருக்கிறார்கள். இது ஜூலை மாதம் வரையாம். அதன் பிறகு காற்றாலை மூலமாய் மின்சாரம் பெற்றுவிடுவார்களாம். ஏற்கனவே எட்டு மணி நேரம் பத்து மணி நேரம் மின்வெட்டென்று அறிவிக்கப்படாமல் நடந்து கொண்டிருக்கும் போதே மின் பற்றாக்குறையாய் இருக்கும் நேரத்தில் எப்படி இப்போது மட்டும் சரியாய் எல்லோருக்கும் குறிப்பிட்ட நேரத்தில் மின்வெட்டை அமல் படுத்த முடியும் என்ற கணக்கு புரியவில்லை. எது என்னவோ.. இனி அபீஷியல் மின்வெட்டு. என்ஜாய் வாக்காள பெருமக்களே..
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
அரசாங்கமே பள்ளிகளுக்கு ஜெனரேட்டர்களையும், ஜென்செட்டுகளையும் வழங்க இருக்கிறதாம். மின் வெட்டினால் மாணவர்களின் படிப்பு கெடக்கூடாது என்கிற தாயுள்ளத்தின் காரணமாய் எடுத்த முடிவு என்கிறார்கள். என்ன தான் ஓசியில் கொடுத்தாலும், அதற்கு டீசலோ, பெட்ரோலோ, கிரசினோ வாங்க எவன் காசு கொடுப்பான்? என்று இப்போதே பள்ளி பிரின்சிபால்களின் மனதில் கேள்வி உதயமாக ஆரம்பித்துவிட்டது. ஏற்கனவே அரசு கேபிள் கண்ட்ரோல் ரூமிற்கு பவர் கட்டினால் அவஸ்தைப்படும் ஆப்பரேட்டர்களின் சொந்தக்காசை போட்டுத்தான் ஜெனரேட்டருக்கு டீசலை கரெக்ட் செய்து வருகிறது. இந்த லட்சணத்தில் பள்ளிகளுக்காம்.. ம்ஹும் எவன் ஊட்டு காசு எடுத்து விடுங்கப்பா..
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
டாஸ்மாக்கை மேலும் இரண்டு மணி நேரம் அதிகமாய் திறந்து வைப்பதன் மூலம் ஒரு ராஜதந்திர காரியத்தை அரசு செய்திருக்கிறது. காலையிலேயே சரக்கடித்து மட்டையாகிவிட்டால் கரண்ட் வந்ததும் தெரியாது போனதும் தெரியாதில்லையா அதுக்குத்தான்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
காதல் ஈர சிமெண்டில் நிற்பது போல, ரொம்ப நின்னுட்டோம்னா காலெடுக்க முடியாது, அப்படியே எடுத்தாலும், நம்ம கால் அச்சை விடாமையும் வர முடியாது.

நல்ல வேளை கடவுள் கண்ணீரை வண்ணமில்லாமல் படைத்துவிட்டான். இல்லையேல் தலகாணிகள் பல கதைகள் சொல்லும்.
உன்னை யாராவது ஓட்டுகிறார்கள் என்று நினைத்தால் கவலை கொள்ளாதே. அவர்கள் உன்னை விட கீழான லெவலில் இருப்பதால் தான் அப்படி செய்கிறார்கள்.
என்னை பார்கிறவர்கள் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்ற எண்ணம் வருவதை தவிர்க்கவே முடியவில்லை.
நாம் எப்போதுமே நம்மேல் அக்கரை உள்ளவர்களை ஒதுக்குகிறோம். ஒதுக்கிறவர்கள் மேல் அக்கறை கொள்கிறோம்.
நடராஜன் கைது # செரினா பாவம் சும்மா விடுமா? என்னா பிகர்டா அது.. ம்ஹும்.
சிரிப்பு என்ற வளைந்த கோடு நிறைய விஷயங்களை நேராக்குகிறது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
என்கவுண்டரும்.. தமிழக மக்களும்
பேங்க் கொள்ளையர்களை "சுட்டுப் பிடித்த” செய்தி வந்தவுடனே இணையத்தில் மனித உரிமை தாண்டவமாட ஆரம்பித்துவிட்டது. அவர்களை ப்ளான் செய்து கொன்று விட்டார்கள். ஏன் அவர்களை கொல்ல வேண்டும்? அவர்கள் தான் குற்றவாளி என்று எந்தளவுக்கு உண்மை? இப்படி ஆளாளுக்கு கேள்விகளாய் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதே கொள்ளை நடந்த நேரத்தில் என்ன அராஜகம் இது? பட்டபகல்ல கொள்ளையடிச்சிட்டு போறவனுங்கள விட்டுறாங்க. சும்மா கட்டிங் உட்டுட்டு வந்தா தீவிரவாதி கணக்கா பிடிச்சி வச்சி கேள்வி கேக்குறானுங்க. இவனுங்களை எல்லாம் அரேபியால பண்றா மாதிரி சுட்டுக் கொல்லணுங்க. அப்பதான் சட்டம் ஒழுங்கு சரியாயிருக்கும். சரி உசுரோட பிடிச்ச கசாப்புக்கு ஏன் இன்னும் தண்டனை கொடுக்கலைன்னு ஒரு பக்கம் கேள்வி கேட்டுட்டும் இருக்காங்க. இன்னொரு பக்கம் நம்ம நாட்டுக்கு தீவிரவாதம் செய்தவனை நம்ம வரிப்பணத்திலேயே லட்சலட்சமாய் செலவு செய்திட்டு உக்கார வச்சி சோறு போடுற ஒரே நாடு நாமதான்பா.. அப்படின்னு பேசுறாய்ங்க.. எது எப்படியோ.. இம்மாதிரியான புத்திசாலித்தனமான அரசியல் பேச்சுக்கள், மனித உரிமைகள் பற்றியெல்லாம் இணையத்தில், பத்திர்க்கைகளில் பேச்சு ஓடிக் கொண்டிருந்தாலும், பொது மக்களாகிய, அதுவும் அம்மாவுக்கு ஓட்டுப் போட்டு கெலிக்க வைத்த பொது ஜனம் “அம்மான்னா சும்மாவா.. போட்டாங்க பாரு.. இனி ஒரு கொள்ளை நடக்கும்” அப்படின்னு சொல்லிட்டு திரியறாங்க.. பாருங்களேன் இதை எழுதினதுக்கு என்னை மனுஷனே இல்லைன்னு ஒரு பத்து பேரு பின்னூட்டம் போடப் போறாய்ங்களா இல்லையான்னு..
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
பெப்ஸி ப்ரச்சனையை இன்னும் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறார்கள். அமீர் நாளொரு மேனிக்கு ஒரு கோரிக்கையோடு வருகிறார். மறைமுகமாய் பெரிய பட்ஜெட், மற்றும் பெரிய இயக்குனர்களை ஷூட்டிங் போகச் சொல்லி வருகிறார். அவரது ஐடியா என்னவென்றால் திடீரென ஒரு மாசமாய் ஷூட்டிங்க் இல்லாமல் இருக்கும் நேரத்தில், ஒரேயடியாய் ஒரு பத்து பேர் ஷூட்டிங் கிளம்பினால் ஸ்ட்ரைக் பிசுபிசுத்துவிடும் என்கிற எண்ணம் போலும். இன்னும் சில பேர் சொல்கிறார்கள். இவரு ஸ்ட்ரைக்கை இழுக்கிறதுக்கு காரணமே.. எங்க முடிஞ்சிருச்சுன்னா.. கண்ணபிரான் ஷூட்டிங்கை ஆரம்பிக்க சொல்லிருவாங்களோங்கிற பயம் தாங்கிறாங்க.. சட்டியில இருந்தா அவரு ஏங்க ஸ்டிரைக்குல எல்லாம் கலந்துக்குறாரு.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சங்கரன் கோவிலில் இடைத்தேர்தல் களேபரம் ஆரம்பித்துவிட்டது. பால்விலை உயர்வு, விலைவாசி உயர்வு, மின் விநியோகப் பிரச்சனை என்று ஏகப்பட்ட ப்ரச்சனையிருந்தாலும், நான் ஜெயித்துக் காட்டுவேனென்று தொடை தட்டி சபதம் செய்யாத குறையாய் சட்டசபையில் பேசியாகிவிட்டதால் ஊரில் உள்ள அத்துனை அதிமுகக்காரர்களும் அங்குதான் சுதானமாய் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்களாம். ஜெயிக்கலைன்னா அவ்வளவுதான் என்று கட் அண்ட் ரைட்டா சொல்லியிருக்காங்களாம். அட்லீஸ்ட் மக்களாவது சுதானமாயிருந்து ஓட்டுப் போடுவாங்கனு நினைக்கிறீங்க? ம்ஹூம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இந்தி விண்ணைத்தாண்டி வருவாயாவில் எமி ஜாக்சன் நடிக்கப் போகிறார் என்ற போதே ஊத்திக்கும் என்று யோசித்தேன். அதன் படியே நடந்துவிட்டது. என்ன தான் நம்ம ஊர் கலர் அடித்து காரணங்கள் எல்லாம் சொன்னாலும், அவருடன் ஒட்ட முடியாது. அது மட்டுமில்லாமல் ஒரு பெண்ணின் பின்னால் நாயாய் அலைந்து, அரை மணிக்கொரு முறை குழப்ப உச்சத்திலிருக்கும், காதலில் முடிவெடுக்க முடியாமல் திணறும் பெண்களே வழக்கொழிந்து போயிருக்கும் வட நாட்டு கலாச்சாரத்தில் நம்ம செண்டி ஒர்க்கவுட் ஆகவில்லை என்றே சொல்ல வேண்டும். ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்கள் பெரிய அளவில் ஹிட் என்ற போதிலும், சுமார் எனும் படியான விமர்சனங்களையே தொடர்ந்து வட இந்திய பத்திரிக்கைகள் எழுதிக் கொண்டிருப்பதன் பின்னணியில் ஏதோ ஒரு உள் குத்து இருக்கிறது என்றே தோன்றுகிறது. நீ வா கெளதம் நமக்கு இருக்கவே இருக்கு, தமிழ், தெலுங்கு..
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ப்ளாஷ்பேக்
சில பாடல்கள் எத்தனை வருஷமானாலும் நம்மை தாலாட்டிக் கொண்டேயிருக்கும். அவ்வகையில் இந்த பாடல் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியிலும் சூப்பர் ஹிட் பாடல். எனக்கு தெலுங்கு வர்ஷன் மிகவும் பிடிக்கும். கீரவாணி ராகத்தில் அமைந்த இந்த பாடல் ராஜாவின் எவர் கீரீன் க்ளாசிக்.பாடலின் ஆரம்பத்தில் வரும் அந்த ப்ரீலூடும், எஸ்.பி.பியின் அற்புதமான ஆலாபனையும் நம்மை உடனடியாய் வேறொரு உலகத்திற்கு அழைத்துச் சென்று விடும். அன்வேஷனா என்கிற இந்த படத்தின் இயக்குனர் வம்சி. ஒரு காலத்தில் தெலுங்கில் வம்சி + இளையராஜா + எஸ்.பி.பி என்றால் ஹிட் தான் என்கிற அளவிற்கு ஹிட் டீம். நடுவில் வம்சியின் படங்கள் தோல்வியடைய, மீண்டும் ரவிதேஜாவின் படத்திற்கு இளையராஜாவை கேட்க அப்போது முடியாமல் போகவே மீண்டும் அல்லரி நரேஷ் நடித்த ஒரு த்ரில்லர் படத்திற்கு வம்சி + இளையராஜா இணைந்தார்கள். அந்தப் படம் எதிர்பார்த்த அளவிற்கு போகவில்லை என்றாலும், படம் வெளிவருவதற்கு முன் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதன் காரணம் வம்சி, இளையராஜா காம்பினேஷன் தான்.

குறும்படம்
குறும்படம்
இன்றைய டிஜிட்டல் டெக்னாலஜியில் ஒரு சின்ன ஹேண்டிகாம் இருந்தால் யார் வேண்டுமென்றாலும், குறும்படம் எடுக்க முடியும். ஆனால் பதினெட்டு வருஷத்திற்கு முன், ஒரு ஆவணக் குறும்படத்தை. எம்.1000 எனும் கல்யாண வீடியோ எடுக்கும் கேமராவை வைத்து வெட்டியான்களின் வாழ்க்கையை பற்றி எடுக்கப்பட்ட இந்தக் குறும்படம். யுனஸ்கோ விருதையும், சிறந்த படம், மற்றும் இயக்குனருக்கான விருதையும் இந்தியவிற்கும், தமிழர்களுக்கும் பெருமை சேர்த்தது என்பது தான் சிறப்பு. இதை எழுதி இயக்கியவர் ஸ்ரீராம் ஷர்மா. சென்ற வருடம் “வேலு நாச்சியார்” எனும் நாட்டிய நாடகத்தை சிறப்பாக அரங்கேற்றியவர். இந்த படம் வெளிவந்து விருது வாங்கிய பின்னால் பத்திரிக்கைகள் வெட்டியான்களைப் பற்றி எழுத ஆரம்பிக்க, அரசு இவர்களை கார்பரேஷன் ஆட்களாய் பணிக்கு அமர்த்திக் கொள்வதாய் முடிவெடுத்தாம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
டீச்சர் ஒரு பையனிடம் உன் பெற்றோர்கள் என்ன செய்கிறார்கள் என்று கேட்டார். அதற்கு பையன் “என் அப்பா வக்கீல், அம்மா ஹவுஸ் ஒய்ப்” என்றான் . இன்னொரு மாணவனை கேட்க, அவன் அப்பா டாக்டர் என்றும், அம்மா வக்கீல் என்றும் சொல்ல, அடுத்த மாணவனை கேட்க, அவன் என் அப்பா இறந்து விட்டார். அம்மா விபச்சாரியாக இருக்கிறாள் என்றான். கோபப்பட்ட டீச்சர் பிரின்ஸிபாலுக்கு அனுப்பி வைக்க, திரும்பி வந்த சிறுவனைப் பார்த்து, “என்ன சொன்னார் பிரின்ஸிபால்? என் கிட்ட என்ன சொன்னியோ அத அப்படியே சொன்னியா?” என்று கேட்க, பையன் “ஆமாம் டீச்சர் அதை சொன்னவுடனே அவர் ரொம்பவும் வருத்தப்பட்டு, ஒரு சாக்லெட் பாக்கெட் கொடுத்து, இன்னைய காலத்தில எந்த வேலையும் இழிவு இல்லைன்னு சொல்லி எங்கம்மா போன் நம்பர் வாங்கிக்கிட்டாரு டீச்சர் என்றான்.
கேபிள் சங்கர்
கேபிள் சங்கர்
Post a Comment
13 comments:
http://www.thehindu.com/news/states/tamil-nadu/article2935088.ece?homepage=true
"In case it is not possible, the government itself will get generators on rent for these institutions. The expenditure on diesel for these generators will also be met by the government,” the Chief Minister said in a statement here on Sunday.
- sriram
Actress name is Sherin? Right?
1) நீங்க மனுஷனே இல்லை
2) நீங்க மனுஷனே இல்லை
3) நீங்க மனுஷனே இல்லை
4) நீங்க மனுஷனே இல்லை
5) நீங்க மனுஷனே இல்லை
எங்க ஊருல இப்பலாம் எப்ப கரென்ட் வருமே தெரில
இதையும் படிக்கலாமே
கேட்டான் பார் ஒரு கேள்வி…! நான் அழுவதா ? சிரிப்பதா?
அடல்ட் கார்னர் - என்னால் இதனை நகைச்சுவையாகப் பார்க்க முடியவில்லை.
எந்த நிலையிலும் உண்மை கூறும் மன உறுதி வேண்டும் என்ற படிப்பினையைச்
சொல்லுவதாகவே பார்க்கிறேன்.
இந்த முறை தாங்கள் எழுதிய அடல்ட் கார்னரை ரசிக்க முடியவில்லை.. படிக்கும் போது, அந்த சிறுவனின் மனநிலையிலிருந்து பார்ப்பதால் மிகவும் கஷ்டமாக உள்ளது.. முடிந்தால் தயவு செய்து அதை நீக்கவும்...
அடல்ட் கார்னர் படுமோசம். அத ஜோக்குனு சொல்லி போட்டது அத விட மோசம்.
எல்லோருக்கும் ஒரு voyeuristic எண்ணம் இருக்கும் தான். அதனால் தான் adults' corner jokes விரும்பப்படுகிறது. ஆனால் அதையே perverseஆக அம்மா வைத்து நக்கல் செய்வது கொஞ்சம் சரியில்லை.
Post a Comment