அம்புலி 3டி
ஓர் இரவு எப்படி தமிழின் முதல் ஃபாயிண்டாப் வியூ படமோ, அம்புலி தமிழின் முதல் ஸ்ட்ரீயோபோனிக் டிஜிட்டல் 3டி படம். பாதி திரைப்படங்கள் 2டியில் எடுக்கப்பட்டு, அதை சாப்ட்வேர் மூலம் 3டி என்று உட்டாலக்கடி அடித்துக் கொண்டிருக்கும் காலத்தில், ஒரு முழு ஸ்ட்ரீயோபோனிக் 3டியை நமக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். கதை என்று பார்த்தால் நம் பாட்டி காலத்திலிருந்து சொல்லப்படும் ‘அந்தப்பக்கம் போகாதே.. பேய் இருக்கு” என்ற கதைதான் என்றாலும் அதை சுவாரஸ்யமாக சொல்லியவிதத்தில் ஜெயித்திருக்கிறார்கள். அதை விட சுவாரஸ்யமாய் 3டியின் மூலம் நம்மை அந்த சோளக்காட்டுக்குள்ளேயே உலவ விட்டிருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். ஓப்பனிங் பத்து நிமிடங்கள் விஷுவல்கள் அட்டகாசம். நல்ல மர்மக்கதையை படிப்பது போல படு சுவாரஸ்யமாய், அம்புலியைப் பற்றிய செய்திகளும், அது இல்லை என்று நம்பவைப்பதும், பல கொலைகள் தொடர்ந்து அரங்கேறுவதுமாய் சும்மா பரபரவென போகிறது.
புதிய நடிகர்களான அஜய், ஸ்ரீஜித், சனம் ஆகியோரின் நடிப்பு ஆப்டாக இருக்கிறது. ஒரு சின்ன கேமியோ ரோலில் வரும் பார்த்திபனின் கேரக்டர் இம்ப்ரசிவ். படத்துக்கு கொடுக்க வேண்டிய இம்பாக்டை சரியாக கொடுத்திருக்கிறார். இவர்களுடன் தம்பி ராமையா, நண்டு ஜெகன், கலைராணி, பாலாசிங், பாஸ்கி, கோகுல் ஆகியோரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். கோகுல் என்ன கேரக்டரில் வருகிறார் என்பதை கடைசி சீனில் தான் தெரிகிறது.
எழுதி இயக்கியவர்கள் ஹரீஷ், ஹரி என்ற இரட்டையர்கள். இதில் ஹரீஷ் பதிவரும் கூட டிரீமர்ஸ் என்கிற பெயரில் எழுதி வருபவர். இவரது கேணிவனம் தொடர் படு பிரசித்தம். முதல் பட அனுபவத்திலிருந்து கொஞ்சம் பெரிய பட்ஜெட், நல்ல டெக்னாலஜி, ஷூயூர் ஷாட் த்ரில்லர் என்ற வெற்றிப்பட பார்முலாவிற்குள் வந்திருந்தாலும், தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை டெக்னிக்கல் புரட்சி என்றுதான் சொல்ல வேண்டும். அமேசிங் ஒர்க். புதிய நடிகர்களை வைத்துக் கொண்டு இந்த பட்ஜெட்டில் ஒரு நல்ல த்ரில்லரை கொடுக்க ஆதரவு கொடுத்த தயாரிப்பாளருக்கு ஒரு “ஓ” போட வேண்டும். நல்ல மர்ம நாவலை திரையில் பார்த்த திருப்தியை இவர்களது திரைக்கதை கொடுத்திருக்கிறது. அம்புலியின் ப்ளாஷ் பேக்கை டைட்டிலிலேயே விஷூவலாய் இல்லாமல் Graphical Shadow முறையில் காட்டிய உத்தி, அம்புலி உருவாவதற்கான காரணத்தை அழகாய், ஷார்ட்டாய் சொன்ன விதம் சுவாரஸ்யம். மிரட்டலான ஆரம்ப பத்து நிமிடங்கள். மைனஸ் என்று பார்த்தால் சுவாரஸ்யத்தைக் கெடுக்கும் பாடல்களும், க்ளைமாக்ஸ் லாஜிக் ஓட்டைகளும் என்று சொல்லலாம். ஆனால் பெரும்பாலான படங்கள் சிஜியிலும், அனிமேட்ரானிக்சிலும் செய்து மிரட்டியதை, லைவாக செய்து அற்புதமான டெக்னிக்கல் அனுபவத்தை நமக்கு அளித்திருகும் இந்த டீமை பாராட்டியே தீர வேண்டும்.
அம்புலி 3டி – நிச்சயம் பார்க்க வேண்டிய ஒரு அனுபவம்
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
Comments
avanga marketing ellam super thala..
சீக்ரட் விண்டோ : திகிலூட்டும் மர்ம பட விமர்சனம்..
உண்மையாகவே தங்களது பதிவின் வழியே இந்த படத்தை இப்பொழுதுதான் அறிகிறேன்.. அருமையான விமர்சனம்..படமும் நன்றாக உள்ளது என்பதை தங்களது எழுத்துக்களே சொல்கின்றன..இணையத்தில் கிடைப்பின் பார்க்கிறேன்.நன்றி. ////
நண்பரே...3D படங்களை திருட்டு வீசிடியிலோ இணையத்திலோ பார்ப்பது நன்றாக இருக்காது, அந்த திரிலும் கிடைக்காது அத்துடம் பயங்கரமாக தலைவலியும் வந்துவிடும். நிச்சயம் தியேட்டரில் பார்ப்பதுதான் உத்தமம்.
நமக்கு தியேட்டர் இல்ல. அதனால இந்தப் படமும் ஸ்கிப் தான். ஓர் இரவு படம் டீவீடி எங்காவது கிடைக்குமா எனத் தேடிக் கொண்டிருக்கிறேன்.