Thottal Thodarum

Feb 8, 2012

செங்காத்து பூமியிலே..

Sengathu Bhoomiyile Stills 5954 மண்ணுக்குள் வைரம், கிழக்கு சீமையிலே, கருத்தம்மா, தமிழ்செல்வன் முலமாய் கதை வசனகர்தாவாக அறியப்பட்ட  ரத்னகுமாரின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம். நடுவில் எஸ்.ஜே.சூர்யா, மீரா ஜாஸ்மீன் போன்ற பல ஹீரோயின்களை வைத்து தாணுவிற்கு ஒரு படம் இயக்கியதாய் ஞாபகம். இளையராஜா இந்தப்படத்தை பார்த்துவிட்டு பெரிதாய் பாராட்டியதாகவும், அவரே வெளியிட முயற்சி செய்ததாகவும் சொல்லப்பட்ட படம். அதுவே ஒரு டெரரை கொடுத்தது. ஏனென்றால் ராஜா சிலாகித்து பாராட்டினால் அப்படங்கள் பெரிதாய் வெளங்கியதில்லை என்பது ட்ராக் ரெக்கார்ட்.


Sengathu Bhoomiyile 6507 சிம்பிளான, வழக்கமான கதைதான். பவன், செந்தில் இருவரும் மச்சான்கள். பவனு செந்திலின் தங்கையையும், செந்தில் பவனின் தங்கையையும் காதலித்துக் கொண்டிருக்கிறார்கள்.   செந்திலின் அப்பா நல்லவர், சாமியாடி, அமைதியானவர். பவனின் அப்பா சந்தையில் குத்தகைதாரர். பணத்தாசை பிடித்தவர், நெகட்டிவ் ஆசாமி. ஒரு ப்ரச்சனையில் பவன் ஒருவனை கொலை செய்துவிடுகிறார். அதை பார்த்த ஒரே சாட்சி செந்திலின் அப்பா. சாமியாடியாய், ஊருக்கு நல்லவராய் இருக்கும் அவர் சாட்சிதான் முக்கியமாய் இருக்க, பொய் சொல்ல முடியாமல் உண்மையை சொல்லி விடுகிறார். அதனால் பவனின் அப்பா தூக்கில் தொங்கிவிடுகிறார். அப்பாவின் காரியத்தை செய்ய ஜெயிலிருந்து வரும் பவன், செந்திலின் அப்பாவை வெட்டிக் கொன்றுவிடுகிறார். செந்தில் பவனை கருவறுக்க காத்திருக்கிறார். அவர் பழி வாங்கினாரா? செந்தில், பவனின் காதல் என்னவாயிற்று? என்பதுதான் கதை.

பவனின் நடிப்பு நன்றாகவே இருக்கிறது. கதைக்கும் அவர் சரியாக சூட் ஆகிறார். காதல் காட்சிகளில் மட்டும் கொஞ்சம் ரோபோத்தனமான ரியாக்‌ஷன்கள். மிர்ச்சி செந்திலை இதற்கு முன் முழுக்க, முழுக்க கிராமத்து கேரக்டரில் பார்த்ததில்லை. அதுவுமில்லாமல், அவர் என்னதான் வீராவேசமாய் அருவாளைத் தூக்கிக் கொண்டு அலைந்தாலும், பாடி லேங்க்வேஜ் சுத்தம். கவுண்டமணி ஒரு படத்தில  பொண்டாட்டிய வெட்ட அருவாளை தூக்கிட்டு பயந்து  ஓடிவருவாரு அந்த மாதிரி இருக்கு. செந்திலின் அப்பாவாக அழகன் தமிழ்மணி. அவரின் முகத்துக்கு இந்த கேரக்டர் நச்சென பொருந்துகிறது. பெரிதாய் நடிக்காமலேயே பெயர் வாங்கிவிடுகிறார். படத்தில் இருக்கும் ஒரே ஒரு ரிலாக்ஸேஷன் சிங்கம்புலி மட்டுமே. படு சீரியசான கதையில் ஆங்காகே கிச்சுகிச்சு மூட்டுகிறார்.
Sengathu Bhoomiyile Photos 3857 வெய்யில் பிரியங்காவும், சுனு லட்சுமி என்கிற புதுமுகமும் தான் கதாநாயகிகள். ப்ரியங்காதான் மெயின் ஹீரோயின்.  இருவரும் பிழியப் பிழிய அழுகிறார்கள். ப்ரியங்கா மாதிரியான அழகு கதாநாயகிகளை அழுக்காக்கியிருக்கிறார்கள். ஆரம்பக் காட்சிகளிலும், “ஓரம்போ” பாடலிலும் இருக்கும் இளமையும், கிளுகிளுப்பும் அதற்கு பிறகு மிஸ்ஸிங்.

இசைஞானி இளையராஜாவின் இசையாம். ஒன்றும் பெரிதாய் சொல்லிக் கொள் ஏதுமில்லை. எல்லாமே எங்கேயோ, எப்போதோ கேட்டதாகவே இருக்கிறது. க்ளைமாக்ஸில் வரும் சோகப்பாட்டும் சேதுவிலிருந்து ஏகப்பட்ட படங்களில் கேட்டதுதான். பின்னணியிசையில் ஆங்காங்கே ராஜா தெரிவதை தவிர வேறொன்றுமில்லை.
Sengathu Bhoomiyile 2721 கதை, திரைக்கதை, வசனமெழுதி, இயக்கியவர் ரத்னகுமார். ரொம்பவே அரத பழசான கதை தான் முதல் மைனஸ். அதற்கு அப்புறம் கதையில் வரும் கேரக்டர்கள். சட்டுபுட்டுன்னு கதை சொல்லி முடிக்காம, ஆளாளுக்கு ஆழாக்கு அழுதுட்டுத்தான் பேசுறாய்ங்க. பல சமயங்களில் ஹீரோயின் முகத்தில் வேர்வையும் கிளிசரின் கண்ணிருமாய் சேர்ந்து முல்லை பெரியாறு அணையில் தேக்கி வைத்த தண்ணீரோ என்று தோன்றுமளவுக்கு இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ஆங்காங்கே வரும் வசனங்களில் இயக்குனர், வசனகர்த்தாவாக தெரிகிறார். திரும்பத் திரும்ப கிராமம், ஊரு, பழிவாங்கல் என்று அடுத்த காட்சி என்ன வரும் என்பதை சுலபமாய் கணித்துவிடக்கூடிய ஒன்றாயிருப்பதால் சுவாரஸ்யம் கம்மியாகி, சீக்கிரம் யாராவது ஒருத்தரை வெட்டிட்டு சாவுங்கப்பா என்று சொல்ல வைத்துவிடுகிறார்.
செங்காத்து பூமியிலே - அழுவாச்சி
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Post a Comment

9 comments:

Thava said...

மொத்தத்தில் இது எந்த ரகமான படமென்று விமர்சனமே சொல்கிறது..நான் பார்ப்பேனா என்று தெரியவில்லை..நன்றி.எழுத்துக்கள் அருமை..அருமை.

சைக்கோ திரை விமர்சனம்

Jayaprakash said...

இந்த படத்தையும் வுங்கலாலா பார்க்க முடியுது என்றல் நீங்கள் நல்ல சகிப்பு தன்மை விடையவர் என்பதை நிருபித்து விட்டர்கள்! வாழ்த்துக்கள்!

aotspr said...

மிகவும் நல்ல கருத்து



"நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com"

aotspr said...

நன்கு உலகத்தை தெரிந்து வைத்திருக்கிறீர்கள்


"நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com"

'பரிவை' சே.குமார் said...

Nalla vimarsanam...
Raja music Nalla illaiya?

Anonymous said...

கேபிள் சங்கர், நீங்க ராமராஜனுக்கு செய்யிற அவதூறு அவர் படத்த விமர்சனம் செய்யாமலிருப்பது.

ramarajan said...

sir, unga books yenga kedaikum??i can't able to purchase through online..shop therinja nalla irukkum..sollunga

ஜெட்லி... said...

s.j.surya nadicha thirumagan padathai kelvippattum intha padathukku poneengalaa....??....

naan kooda vilambarathai paathu mersel aayittaen...

Piraisoodi said...

நன்றி நண்பரே,விமர்சனத்துக்கு மிக்க நன்றி.

கடந்த சில வருடங்களாக தமிழ் திரைப்படத்தை கூர்ந்து கவனித்து பார்த்தால் யாருக்காக படம் எடுக்கிறார்கள், அதன் உள்ளார்ந்த அரசியல் என்னென்ன, யாருக்கு லாபம், நஷ்டம், யாருக்கு பெயர் போகின்றது, போகவில்லை..? என்று ஒருபக்கம் இருந்தாலும், Fun, Entertainment ஆக இருந்தால் தான் படம் ஓடும் என்பது ஒரு பொது புத்தி. பதின் வயது முதல் நாற்பது வயது வரை சினிமாவை பொழுதுபோக்கு அம்சம்மின்றி தன் வாழ்வை அதனுள் புகுத்தி தன்னை அந்நிலையில் வைத்து பார்பவர்கள் ஏராளம் என்பேன்.

மதுரை குரு திரையரங்கில் ஒரு படம் பார்க்கும் பொது மனம் எப்படி லயிக்க வேண்டும்மோ அதே மனநிலை தான் சென்னையில் பார்க்கும் போதும் வர வேண்டும்.

யாருக்காக படம் (Multiplex Viewers, Number of Show, No of Audience Occupancy,Box Office) இவர்களுக்கா ? அல்லது யாருக்கு லாபம் (theatre, Producers) இவர்களுக்கா ?
இல்லை படம் ஓடாமல் இருக்கும் பட்சத்தில் இந்திய தொலைகாட்சியில் முதல் முறையாக என்று கூவும் டீவீகளுக்ககவா???? (Sun,Vijaym,Jeya)

சாதாரண கதையை மிக எதார்த்தமாக சொல்லி வெற்றி படத்தை எடுக்க வேண்டும் என்று முயல்பவர், அசாதாரண மனிதனாக தான் இருக்க வேண்டும். தியாகம் வேண்டும், கூட நேர்மையும் வேண்டும். புத்தர் மிக வேகமாக நடப்பார் என்றும், தனக்காக ஒரு யாசகன் காத்திருப்பான் என்றும் அவன் ஒரு போதும் தனக்காக ஏமாற்றம் அடைய கூடாது என்பது நிகுபு என்று ஒரு மேடையில் எஸ் ரா குறிப்பிட்டார்.

வணிகம் சார்ந்து அல்லாமல், படைப்பை மட்டுமே நம்பும் நல்ல படம் வெகு தூரத்தில் இல்லை.

நன்றி,
பிறைசூடி இ.