மெளனமான பெரும் வரவேற்பை புத்தக கண்காட்சியின் இளைய, புதிய தலைமுறை வாசகர்களை வசீகரிக்கும் சங்கர் நாராயணின் next 2 சிறுகதைத் தொகுப்பு தெர்மக்கோல் தேவதைகள். 2012- உ வெளியீடு.
கேபிள் சங்கர் என்ற இணையதளத்தின் மூலம் பல்வேறு பிராந்திய மக்களை இவர் சென்றடைந்திருக்கிறார். இணையம் வழியாய் என்ன செய்யலாம், என்னவெல்லாம் செய்யக்கூடாது என்கிற தெளிவுக்கு வந்தவர். நம்மையும் வரவழைப்பவர். சுவாரச்யமான கதை சொல்லலில் எழுத்தாளர் சுஜாதாவை மீண்டும் மீண்டும் வா என நினைக்க வைப்பவர். இவரின் லெமன் ட்ரீ புத்தகத்தை விரும்பிப் படித்தவள் நான். புதிது புதிதாய் பல சிறுகதைகளை செய்வது, சொல்வது, எழுதுவது எல்லோருக்கும் அப்படி வந்துவிடுவதில்லை. அதே போல படிக்க வைப்பது ஒரு கலை. சங்கரின் பலம் சொல்வதும், தலைப்பு வைப்பதும், படிக்க வைப்பதும்.
2012ன் தெர்மக்கோல்- நாம் தினமும் சந்திக்கிற, பார்க்கிற, தவிர்க்க இயலாத, சாப்பிட முடியாத, அலைக்கழிக்கிற, அலைகிற, ஆவலான ஒரு பொருள், வலியின் கதை, தேவதைகளுக்கும் சிறகு வேணுமானால் ஒரு பீஸ் தெர்மக்கோலில் செய்து விடலாம். ஆகவே புத்தகமும், கதைகளும், மனிதர்களும், எடையற்று, எளிதாக, நம்மோடு புழங்குகின்றன. ஆதிமூலகிருஷ்ணனின் செய்வினை எனக்கு மிகவும் பிடித்த கதை. நான் நிஜமாய் கதை முடிவில் ஏமாந்தேன். இது சங்கரின் பலம். மற்றபடி தொகுப்பு அட்டை முகப்பு, வசீகரிக்கிறது நண்பரைப் போலவே.
சில கதைகள் சாதாரணமாய் (பொறுப்பு) தொடங்கி, சாதாரணமாய் முடிகிறது. ராஜி விதிவிலக்கு. அதற்கென்ன தினசரி பொழுது என்ன ஸ்பைடர்மேன் ரூபத்தில் விடிகிறதா என்ன? முழுக்க, முழுக்க வாழ்க்கை- இரவு வாழ்க்கை, சென்னை வாழ்க்கை- சினிமாத்துறை வாழ்க்கை என பதிவு பண்ணியுள்ளார் நண்பர். ஆங்கில கலப்பு சொற்கள் அதிகமாய் இருப்பது இணையதள வாசகர்களுக்கு பரவாயில்லை. தொகுப்பு என்று வருகையில் கொஞ்சம் ப்ரூப் பார்த்தால் பரவாயில்லை என்பது என் அபிப்ராயம். உங்க பாணியில் விமர்சனம் எழுதுவது எனில், புத்தக கண்காட்சியின் பிரம்மாண்ட பதிப்பகங்களின் பிரமாண்ட புத்தகங்களின் வீழ்ச்சிக்கும், புகழுரைகளும், ஏதுமற்று, புதிய வாசகனை, சிநேகமுடன் ஒரு மனோநிலையில் வாசிப்பு தளத்திற்கும், தமிழ் ரீடிங்கிற்கும், தமிழ் தெரிந்தவரை அழைத்து செல்வது எளிய பணி அல்ல.
மைனா 2010 திரைப்படம் மாதிரி, எங்கேயும் எப்போதும் மாதிரி, போராளி மாதிர் சில படங்கள் தியேட்டரை, ஓனரை படம் பார்க்கிறவங்களையெல்லாம் திடீர் திடீர்னு காப்பாத்துற மாதிரி வரும் புத்தக கண்காட்சிகளை, பிரம்மாண்டங்களின் பொய் வேஷங்களிலிருந்து, வாசகனை காப்பாற்றுங்கள் நண்பரே - எனக்கு பெண் பெயரிட்ட அனைத்து கதைகளும் பிடித்திருக்கிறன. தொடருங்கள் நண்பரே வெற்றி உமதாகட்டும்
அன்புடன்
கீதாஞ்சலி பிரியதர்ஷினி
திருச்சி –7
கீதாஞ்சலி பிரியதர்ஷினி
திருச்சி –7
இது விமர்சனம் அல்ல, நட்பு பேச்சு.வாஸ்து மீனின் முத்தம், கண்ணாடி தாண்டி வருவதில்லை அல்லவா. ஆனாலும் அது முத்தமிடுகிறது தொடுகிறது.
Post a Comment
5 comments:
ஆங் மறக்காம நம்ம வூட்டு விசேசத்துக்கு வந்துடுங்க..... வர்ட்டா....
சூப்பர் சார்...
Still waiting for the 2 books..
விகடனில் உங்க ப்ளாக் பத்தி வந்திருக்கே ; அதை இங்கே ஷேர் பண்றது? கொத்து பரோட்டாவில் தான் சொல்லுவீங்களோ? எப்ப பண்ணாலும் வெறுமனே மென்ஷன் பண்ணாம அவங்க என்ன எழுதினாங்கன்னு முழுக்க ஷேர் பண்ணுங்க
கல்கி நூல் அறிமுகம்...
நவீன மனநிலைக்கு நகர்த்தும் பிரதி!
‘தெர்மக்கோல் தேவதைகள்’ அத்தனையும் வாசிக்க இலகுவான சிறு கதைகள் கொண்டது. மனித மனங்களைப் பிரதிபலிக்கும் இந்தக் கதைகள் வாழ்வின் யதார்த்தங்களைப் பேசுகிறது. மனித மனங்களுள் ஏற்படும் அபிலாஷைகள், அதற்காக ஆழமான உறவுகளையும் உடைத்தெறிந்து மாடர்ன் லைஃப் நோக்கிச் செல்வது; ஒரு வரையறைக்குள் வாழ்க்கையைப் பார்ப்பது; வேறு சிலர் எல்லாவற்றோடும் சமரசம் செய்து கொண்டு வாழ்வது இப்படியான மனித நிலைப்பாடுகளைப் பாத்திரங்கள் வாயிலாக இந்நூல் பேசுகிறது. விறுவிறு என்று வாசித்து முடிக்கலாம். நவீன மனநிலைக்கு நம்மை நகர்த்துகிறது இந்தக் கதைகள்! சிறுகதைப் பிரியர்களுக்கு இந்நூல் ஓர் அன்பளிப்பு!
- தெர்மக்கோல் தேவதைகள், சங்கர் நாராயண்,
வெளியீடு: உ பதிப்பகம், தொலைபேசி : 98403 32666, விலை ரூ 50.00
Post a Comment