இந்தியில் டர்ட்டி பிக்சர் கொடுத்த பரபரப்பை இந்த தமிழ் படம் கொடுக்குமென பெரிய நம்பிக்கையில் போஸ்டர்களை கவர்சியாக அடித்துவிட்டிருக்கிறார்கள். போஸ்டரில் இருக்கும் கவர்ச்சியை நம்பி வந்தவர்களுக்கு பிழியப் பிழிய கதை சொல்லி அனுப்பியிருக்கிறார்கள்.
அஞ்சலி என்கிற பிரபல நடிகை காணாமல் போகிறாள். அவளைத் தேடி திரையுலகமே அல்லோல கல்லோல பட்டுக் கொண்டிருக்க, எஸ்.ஜி டிவி ஓனரும் சீஃப் ரிப்போர்ட்டருமான புன்னகைப்பூ கீதா இன்வஸ்டிகேட் செய்ய ஆரம்பிக்கிறார். பின்பு அவர் இருக்குமிடத்தை கண்டுபிடித்து, ஏன் அவர் அப்படி செய்தார் என்று கேட்க, அஞ்சலி தன் டைரியை கொடுக்கிறார். அவர் எப்படி நடிகையானார். நடிகையாவதற்கு தான் எதையெல்லாம் இழக்க வந்தது?. பாசமாய் வளர்த்த அம்மா எப்படி பணத்தாசை பிடித்து, தன்னை ஒரு பணம் காய்க்கும் மரமாய் உணர்ந்தாள்? என்று பிழியப் பிழிய சொல்லியிருக்கிறார்கள்.
டர்ட்டி பிக்சருக்கும் இந்த படத்திற்குமான கதை ஒன்றுதான் என்றாலும், அதை சொல்லி திரைக்கதையில் இந்திப்படம் தான் டாப். படு மொக்கையான நாடகத்தனமான காட்சிகள். படத்தின் ஹைலைட்டாக இவர்கள் நினைத்திருக்கும் அஞ்சலி நடிப்பதற்காக படுக்கப் போகும் காட்சியைத்தான். அதற்கு அவளின் அம்மா பேசும் டயலாக்குகளும், அழுகிற அழுகையும், ஒக்காமக்கா டிவி சீரியல் கெட்டது போங்க. அதே போல ஆந்திராவிலிருந்து வரும் குடும்பம் என்று சொல்லியிருக்கிறார்கள். ஒரு காட்சியிலாவது தெலுங்கு வாடை இருந்ததாய்க் காணோம். மகளை டிவி நடிகையாக்கிக் காட்டுவே என்று சபதமிடும் காட்சியும், வெறும் காற்றில் சத்தியமிடுவதை ஹைஸ்பீடில் காட்டும் போது சிரிப்பாய் இருக்கிறது.
சோனியா அகர்வாலுக்கு கம்பேக் படமாம். படம் பூராவும் செக்ஸ், சினிமா என்று சுற்றுகிறதே தவிர மருந்துக்கு கூட க்ளீவேஜ் கூட காட்டாத மடிசஞ்சி படமாய் இருக்கிறது. சோனியாவிற்கு நடிப்பு வருகிறதா என்று ஒரு டூபாக்கூர் அஸிஸ்டெண்ட் செக் செய்யும் காட்சியில் சோனியா கொடுக்கும் நவரசங்கள் அனைத்தும் ஒரே ரசமாய் தெரியும் காட்சி ஒன்றே போதும் சோனியாவின் நடிப்பை பற்றிச் சொல்ல. ம்ஹும் அது சரி வச்சிகிட்டா வஞ்சனை பண்றாங்க.

குறிப்பிடத்தகுந்த நடிப்பு என்று பார்த்தால் கோவை சரளாவும், மனோபாலாவும் அடிக்கும் லூட்டிதான். இரண்டு பேருக்கும் நல்ல கெமிஸ்ட்ரி ஒர்க்கவுட் ஆகி அடித்து தூள் பரத்துகிறார்கள். இயக்குனர் ராஜ்கபூரின் நடிப்பும் நச்சென இருக்கிறது. ஜித்தன் ரமேஷ் ஒரு பாட்டுக்கு மட்டும் வந்து ஐய்ட்டம் டான்ஸ் ஆடிவிட்டு போகிறார். (ஆம்பளை ஒரு பாட்டுக்கு ஆடினாலும் அயிட்டம் டான்ஸ் தானே )
இசை என்று தேவையில்லாமல் பல இடங்களில் சீரியல்களை விட இம்சை கூட்டுகிறது. டோண்ட் டச் மீ என்கிற பாடலைத் தவிர, ஏதும் விளங்கவில்லை. படம் டிஜிட்டலில் எடுக்கப்பட்டிருந்த படமாயிருந்தால் நல்ல துல்லியமான ஒளிப்பதிவு. மிகவும் பட்ஜெட்டில் எடுத்திருப்பது நன்றாக தெரிகிறது.
எழுதி இயக்கியவர் ராஜ்கிருஷ்ணா. படு சுவாரஸ்யமாக சொல்லப் பட்டிருக்க வேண்டிய கதை. படு மொக்கையான திரைக்கதையால் சவசவவென போகிறது. எல்லாரும் ஆளாளுக்கு நாலு பக்கம் பேசிக் கொண்டேயிருக்கிறார்கள். அதிலும் வசனமாக சொன்னதையே சொல்லிச் சொல்லி மாய்கிறார்கள். “நான் என்ன பணம் காய்கிற மெஷினா? “ என்பதை எத்தனை முறை தான் கேட்பது. அஞ்சலி என்றொரு நடிகை இருக்கிறார் அதனால் புது பெயர் வைக்கிறேன் என்கிறார் இயக்குனர் ராஜ்கபூர். பின்னர் அவர் அறிமுகப்படுத்தியும் பெயர் மாற்றவில்லை. இவர்களுடய படம் எடுத்த பட்ஜெட்டுக்கு சாட்டிலைட், எப்.எம்.எஸ் விற்றாலே சுமாராய் கவராகிவிடும் என்று தோன்றுகிறது. ஆனாலும் அநியாயமாய் போஸ்டரில் ஏமாத்திட்டாங்கப்பூ..
ஒரு நடிகையின் வாக்குமூலம் - சவசவ
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
Post a Comment
2 comments:
\\பின்னர் அவர் அறிமுகப்படுத்தியும் பெயர் மாற்றவில்லை. இவர்களுடய படம் எடுத்த பட்ஜெட்டுக்கு சாட்டிலைட், எப்.எம்.எஸ் விற்றாலே சுமாராய் கவராகிவிடும் என்று தோன்றுகிறது. ஆனாலும் அநியாயமாய் போஸ்டரில் ஏமாத்திட்டாங்கப்பூ..\\
நானும் நெறைய போஸ்டர் அஹ பார்த்து ஏமாந்து இருக்கேன் சார்! வுங்களையும் எமதிட்டங்க போல!எப்படியோ அவங்க போட்ட பணத்தை எடுக்க நம்ம (இப்போ வுங்க!) மாதிரி ஆட்கள் இருக்கிரங்கா (நான் இப்போ விட்டாச்சு முன்னாடி பார்த்துட்டு இருந்தேன்)
கேபிள் நீங்க ஒரு சேவீயர் . ஆண்டவா... தமிழர்களை இந்த மாதிரி மொக்கை படம்களிடம் இருந்து காப்பாத்து.
Post a Comment