முப்பொழுதும் உன் கற்பனைகள்
கதை என்று பார்த்தால் நல்ல முயற்சிதான். ஏற்கனவே பார்த்திபனின் “குடைக்குள் மழை’யில் முயற்சி செய்ததுதான்.ஆனால் அதை திரைக்கதையாக்கிய விதத்தில்தான் அத்துனை சொதப்பல்களும். சுவாரஸ்ய பின்னலாய் அமைந்திருக்க வேண்டிய படம் உயிரில்லாமல் போனதற்கு காரணம் திரைக்கதைதான். ஒன்று சாருவுடன் காதல் கொண்ட எபிசோட் க்யூட்டாக இருந்திருக்க வேண்டும். அல்லது தற்போதைய எபிசோட் அசத்தலாய் இருந்திருக்க வேண்டும். அல்லது முடிச்சுக்களை போடும்போதாவது அழுத்தமாய் போட்டிருக்க வேண்டும்.

அதர்வா ஆள் ஸ்மார்ட்டாக இருக்கிறார். நடிக்க முயற்சி செய்கிறார். ஓரளவுக்கு நன்றாக நடனம் ஆடுகிறார். ஆனால் பெண்கள் எல்லோரும் மயங்கி பின்னால் சுத்துவதாய் காட்டப்படும் காட்சிகள் எல்லாம் அவ்வளவு நம்பும்படியாய் இல்லை.
ஒரு நாள் முன்னால் அழகாய் இருந்த அமலாபால் அடுத்த நாள் அழுதுவடிவாரா? வார் என்கிறது இந்த படம். காதலில் சொதப்புவது எப்படி? யில் க்யூட்டாய் மனசை கவர்ந்தவர், படம் முழுக்க நம்மை கலங்கடிக்க வேண்டிய கேரக்டராய் இருந்திருக்க வேண்டியவர் ஒட்டாமலேயே போய்விடுகிறார். இவர் ஹேர் ஸ்டைலிஸ்ட் யார் என்று கேட்டு மண்டை மீது ஓங்கி ஒரு குட்டு வைக்க வேண்டும் படு கேவலமான ஹேர் ஸ்டைல்.
நாசர், ஜெயப்பிரகாஷ், போன்றோர் டிபால்டாய் நன்றாக செய்திருக்கிறார்கள் என்பதை எழுதாமலேயே புரிந்து கொள்ளலாம். ஆனால் ஜெயப்பிரகாஷ் போன்ற சிறந்த நடிகர்களை இப்படி வேஸ்ட் செய்யப்படுவது படு மோசம். சந்தானம் அவ்வப்போது வந்து கிச்சு கிச்சு மூட்டுகிறார் அவ்வளவே.
ஜி.வி.பிரகாஷ்குமாரின் இசையில் நிறைய ஆங்கிலப் பாடல்களின் தாக்கம். சுனந்தா, கண்கள் நீயே, ஆகிய பாடல்கள் ஓகே. தாமரையின் வரிகளில் கண்கள் நீயே அருமை. பின்னணியிசை இரைச்சலாய்த்தான் இருக்கிறது. ஒளிப்பதிவு ஓகே. பல இடங்களில் கெளதம் படத்தைப் போல எடிட்டிங் ஸ்டைல் இந்தப்படத்திற்கு ஒத்துவரவில்லை.

எழுதி இயக்கியவர் எல்ரெட் குமார். கதை விஷயத்தில் ஓகே என்றாலும், திரைக்கதை வசனத்தில் பெரிய கோட்டை விட்டபடியால் படம் பார்பவர்களுக்கு குழப்பம் ஏற்படுத்தியது மட்டுமே மிஞ்சுகிறது. ஏற்கனவே வேறு ஒரு இயக்குனரை வைத்து கால்வாசி படம் முடித்துவிட்டு, அவருக்கு சரியாய் வேலை தெரியவில்லை என்று இவரே டைரக்டராய் பொறுப்பேற்று முடித்திருக்கிறார். ஒரு வேளை அந்த பழைய டைரக்டர் ஒழுங்கா பண்ணியிருப்பாரோ..?. படம் ஆரம்பித்ததிலிருந்து ட்விஸ்டு மேல் ட்விஸ்டாய் வைத்து உங்களை அசத்துகிறேன் பார் என்று நினைத்துக் கொண்டு ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகளோடு குழப்பி விட்டிருப்பது வேதனை. சாரு பெயரில் எதற்காக தேவையில்லாமல் ஒரு குருட்டுப் பெண் பேச வேண்டும்? அதர்வாவின் மனநிலை ப்ரச்சனைக்கு காரணம் டிபெண்டெண்டாய் அம்மாவின் நிழலிலேயே வாழ்தது தான் என்று ஒரு அரை மணி நேர கிராமத்து எபிசோடை காட்டுகிறார். அடித்துப் போட்டார் போல தூக்கம் வர ஆரம்பித்துவிட்டது. அமலா பால் சாருவாக இருந்த போது ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் ப்ராஜெக்ட் செய்வதாய் ஒரு பெரிய அபார்ட்மெண்ட்டில் சேர்ந்து இருக்கிறார்கள்? என்ன ப்ராஜெக்ட் என்றால் ஏதோ என்விரான்மெண்ட் அது இது என்று ஜல்லியடிக்கிறார்கள். கம்ப்யூட்டர் சம்பந்தமாய் ஏதுவுமேயில்லை. எதற்காக சாருவை அவரது பெற்றோரும் மாமாவும் அர்ஜெண்டா அமெரிக்காவுக்கு கூட்டிக் கொண்டு போக வேண்டும்?. முகத்தில் கலர் பெயிண்ட் அடித்துக் கொண்டு ஆளை கொன்று விட்டால் யாருக்கும் தெரியாதா? கொலை செய்யும் போது அவனது மனநிலை என்ன? திடீரென அமலாபாலுக்கு நிச்சயம் செய்த அமெரிக்க மாப்பிள்ளை ஹோமோ பார்ட்டி என்று ரெண்டு அரைகுறை வெள்ளைக்காரனை கொண்டு வந்து கொலை முயற்சி செய்வது எதற்கு? என்று கேள்வி மேல் கேள்வியாய் எழுந்து நம்மை குழப்பியெடுத்து, நம்மையும் மூன்று இரவு, பகல் நிலைக்குத்தி உட்கார வைத்துவிடுவார்கள் போலிருக்கிறது. எல்ரெட் பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
Comments
ippa than padam pathu vanthen ! neenga Olippathiva pathi onnum solla illayee ! sila idangalla editings nalla irunthichu ! but enakku knjm confuse irunthathu ! but SANTHAANAM Varum idam ellam ore Kaithattalgal !!
but enakku padam ! OkkkE! until read ur comments
Regards
M.Gazzaly
Greenhathacker.blogspot.com
அதர்வா எனக்கு பிடித்த நல்ல பர்சனாலிட்டியான ஹீரோ. நல்ல எதிர்காலம் உண்டு ... நல்ல படங்கள் தேர்ந்தெடுத்தால்.
சீக்ரட் விண்டோ : திகிலூட்டும் மர்ம பட விமர்சனம்..
Dear Karthik,
He is my Ex. Boss (in 2004) now (6 months before) i came to know he is making the movies, thanks for your comment, if i have a chance i will inform to him (i dont have direct contact for him, but my friends still do contact him so i will try to inform from my friends!)
i have seen "kadalil sothappuvathu eppadi" its very nice as per your Review
Regards
Jayaprakash