Thottal Thodarum

Feb 25, 2012

தலைவன் இருக்கிறான் - சுஜாதா

28sujatha
வருகிற 27 ஆம் தேதி வந்தால் தலைவன் சுஜாதா நம்மிடையே மறைந்து நான்காண்டுகள் ஆகிவிட்டது என்றாலும், இன்றைக்கும் அவர் எழுத்துலகின் சூப்பர் ஸ்டாராகத்தான் இருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை. அதை ஒவ்வொரு புத்தகக் கண்காட்சியில் நடக்கும் விற்பனையே சாட்சி.  தலைவனின் ஸ்பெஷாலிட்டியே என்றைக்கும் ஒத்து வரக்கூடிய, அல்லது எதிர்காலத்தை ஸ்பஷ்டமாய் சொல்லக்கூடிய புத்திசாலித்தனமும், நக்கலும், நையாண்டியும்,  ஸ்பெகுலேஷனுமாய் கலந்தடித்து  கொடுக்கும் படு சுவாரஸ்ய எழுத்துதான். 2008லேயே அவர் இறந்து விட்டாலும், 2010ல் எப்படியெல்லாம் இருக்கும் என்ற அவரது தூரப்பார்வையில் பல விஷயங்கள் நடந்திருப்பது அச்சர்யமாய் இருக்கிறது. 




நில்.. கவனி.. தாக்கு என்று நினைக்கிறேன். அந்நாவலில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்திய ப்ளைட்டை கடத்த முயல்வார்கள். அக்கதை வெளியான சில வருடங்களில் இந்தியாவில் 1999ல் நம் நாட்டு விமானம் ஒன்று கந்தகாருக்கு கடத்தப்பட்டது. அந்தக் கதை வந்த போது இந்திய ப்ளைட்கள் எதுவும் கடத்தப்பட்டதேயில்லையாம்.  இப்படி பல சுவாரஸ்ய விஷயங்கள் தலைவனைப் பற்றி சொல்லிக் கொண்டேயிருக்கலாம். இனி அவர் கற்றதும் பெற்றதுமில் எழுதிய 2010 பற்றிய ஸ்பெகுலேஷனை படித்து பாருங்கள். எத்தனை விஷயங்கள் இன்றைக்கு நடந்தேறியிருக்கிறது என்று. தலைவனுக்கு சாவில்லை. அவரது கட்டுரையை பார்ப்போம்..

2010 என்பது அருகிலும் இல்லாத, தூரத்திலும் இல்லாத ஒரு ரெண்டுங்கெட்டான் எதிர்காலம். அதைப் பற்றி எழுதுவது ‘நிஜமாவதற்கும் பொய்த்துப் போவதற்கும் சம சாத்தியங்கள் உள்ளன.

புள்ளி விவரங்களை மட்டும் கவனித்து எதிர் நீட்டினால் 2010ல்

- செல் போன்கள் இரட்டிப்பாகும்

- மக்கள் தொகை 118 கோடியாகும்

- போக்குவரத்து அதிகரித்து நகரங்களில் அனைவரும் மாஸ்க் அணிவோம்

- சில வியாதிகள் வெல்லப்படும்

- எய்ட்ஸ் தடுப்பு கண்டுபிடிக்கப்படலாம்

- பெண்கள் வருஷம் மூன்று தினம் புடவை கட்டுவார்கள்

- ஆண்கள் அதிக அளவில் தலை முடியை இழப்பார்கள்

- ஒரு பெரிய மதக் கலவரம் இந்தியாவில் வரும்

- ராகுல் பிரதமர் ஆவார்

- தமிழ்நாட்டில் அ.தி.மு.க அல்லது தி.மு.க கூட்டணி ஆட்சி நடக்கும்.

- பாட்டே இல்லாத ஒரு தமிழ்ப் படம் வரும்.

- இர்ஃபான் பதான் அல்லது கைஃப் கேப்டனாக வருவார்.

- டெண்டுல்கள், டிராவிட், சேவாக் யாரும் ஆட மாட்டார்கள்.

- டால்மியாதான் கிரிக்கெட் சேர்மேனாக இருப்பார்.

- லாலுதான் பீகார் முதல்வராக இருப்பார்.

- சானியா மிர்ஸா விம்பிள்டன் அரையிறுதிக்கு வருவார், அல்லது கல்யாணம் 
செய்து கொள்வார்.

- தயாரிப்பாளர்கள் பலரின் பிள்ளைகள் படம் எடுப்பார்கள்

- சென்செக்ஸ் (பங்குச் சந்தை) பத்தாயிரத்தைத் தாண்டும்

- அலுவலகத்தில் செய்வது அத்தனையும் செல்போனில் செய்ய முடியும்.

- கவிதைத் தொகுப்புகளில் காதல் குறையும்

- வாரப் பத்திரிகைகளில் தொடர்கதைகளும் சிறுகதைகளும் அறவே 
நீக்கப்பட்டு, முழுக்க முழுக்கப் பெண்கள் படங்களாக, ஒரிரண்டு வாக்கியங்களுடன் வெளிவரும்

- செய்தித்தாள்கள் படிப்பதற்குக் காசும், இலவச பிஸ்கட் பாக்கெட்டும் கொடுப்பார்கள்.

- தமிழ் படிக்கத் தெரிந்தவர்கள் வெளிநாட்டில் அதிகம் இருப்பார்கள்.

- அரசியல் மேடைகளில் மட்டும் தமிழ் உணர்வு மிச்சமிருக்கும்

- மற்றொரு சுனாமி வரும்; ஒரு கடலோர நகரம் அழியும்.

- முடிவெட்டுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டி வரும்

- புத்தகங்கள் குறையும்.

- மருத்துவமனைகளில் இடம் போதாது…

இவ்வாறு சொல்லிக் கொண்டே போகலாம். பிரச்சனை என்னவென்றால் 2010ல் நான் பிழைத்திருந்து, ‘என்னய்யா.. அப்படிச் சொன்னார், நடக்கவில்லையே’ என்று என் வார்த்தைகளை சர்பத்தில் கரைத்து குடிக்கக் காத்திருபார்கள். வயிற்றைப் புரட்டும்.

- நன்றி : சுஜாதா - கற்றதும் பெற்றதும்.

Post a Comment

26 comments:

sugi said...

என்றும் சுஜாதா! இருந்தாலும், இறந்தாலும் இவர் யாரென்று ஊர் சொல்ல வைத்தவர்!

பால கணேஷ் said...

சங்கர்ஜி! நீங்களும் என் போல சுஜாதாவின் தீவிர விசிறி என்பதில் மிக்க சந்தோஷம். ஆனால் ஆகாயக் கடத்தில் பற்றி காந்தகாருக்கு முன்பாகவே எழுதியது சுஜாதா அல்ல, பட்டுக்கோட்டை பிரபாகர்! தமிழ்நாட்டு அரசியலை மையமாக வைத்து சுஜாதா எழுதிய ‘பதவிக்காக’ நாவலில் அவர் கற்பனையாக எழுதியிருந்த எம்.எல்.ஏ. கடத்தல் பின்னாளில் நிஜமாகவே நடந்தது. ‘கறுப்புக் குதிரை’ சிறுகதையில் கிரிக்கெட் மேட்ச் ஃபிக்ஸிங் பற்றி சுஜாதா எழுதியது பின்னர் அப்படியே நடந்தது. அப்படியான தீர்க்கதரிசி அவர்!

Cable சங்கர் said...

ganesh.. மேபி.. கந்தகருக்கு முன்னால் பி.கே.பி எழுதியிருக்கலாம். ஆனால் அதற்கும் முன்னால் எழுதியது தலைவன் தான்.

சுரேகா.. said...

அட.. சென்ற வாரப் பயணத்தில் தலைவனின் ரெண்டு புத்தகங்கள் படித்தேன். அதில் 60 அமெரிக்க நாட்கள் என்ற கட்டுரையில் அவர் சொல்லியிருந்த விஷயங்களைப் படித்து கண்ணீர் வந்துவிட்டது.
இல்லாமல் போயிட்டியே வாத்யாரே என்று..!!

நீங்களும் எழுதியிருக்கிறீர்கள்..சூப்பர்!

சேலம் தேவா said...

தலைவரை நினைவூட்டும் பதிவு..!!

MANO நாஞ்சில் மனோ said...

சுஜாதா ஒரு பல்கலைகழகம்...!!!

MANO நாஞ்சில் மனோ said...

சுஜாதாவின் அந்த மெக்சிக்கோ சலவைக்காரி மாதிரி என்கிட்டயும் மொரோக்காகாரி சூப்பர் ஜோக் இருக்கு...!

MANO நாஞ்சில் மனோ said...

சுஜாதாவின் அந்த மெக்சிக்கோ சலவைக்காரி மாதிரி என்கிட்டயும் மொரோக்காகாரி சூப்பர் ஜோக் இருக்கு...!

BALA said...

Sujatha... Genius!!!!

ராஜரத்தினம் said...

இதை இப்ப சொல்லதேவையில்லதான்! இருந்தாலும் சொல்றேன்! எனக்கு சுஜாதா அவரோட பகுத்தறிவு, திமுக சொம்பு இந்த இரண்டு காரணத்திற்காக அறவே பிடிக்காது! அவருடைய கடைசி காலங்களில் கடவுளை பற்றி கொஞ்சம் softஆக எழுத ஆரம்பித்தார்! அதுக்கப்புறம் அவரோட பழைய புத்தகங்கள் படித்துபார்த்தேன்! என்னை கவரவேயில்ல! அவருடைய உங்க கொத்து பரோட்டா inspirationஆன கற்றதும் பெற்றதும் கேள்விபதில் போன்றவை பிடிக்கும்! அப்ப கூட திமுக ஆதரவு எழுத்தாளர்களை எனக்கு என்றுமே பிடித்ததில்லை! எனக்கு சுஜாதா மீதான ஒரு ஈர்ப்பு கடைசி வரை வரவேயில்லை!

Anonymous said...
This comment has been removed by the author.
Anonymous said...

Comment misplaced in your blog..Hence removed..:)

Cable சங்கர் said...

@raja rathnam
உங்களுக்கு சுஜாதாவை பிடிக்கவில்லை என்பதால் ஏதோ ஐ.எஸ்.ஓ சர்டிபிகேட் குறைந்துவிட்டது என்று யாரும் வருத்தப் பட போவதில்லை. உங்களுக்கு பிடிக்கலை என்றால் அது உங்கள் வரை.. காரணம் எல்லாம் யாரும் உங்களை கேட்கப் போவதில்லை.:))

துரைடேனியல் said...

அட நல்லாருக்கே. நானும் ஒரு காலத்தில் அவரது மந்திர எழுத்துக்களுக்குள் கட்டுப்பட்டு கிடந்தவன்தான். இப்போது நாவல்கள் படிப்பது இல்லை. அவரது இண்டெர்நெட் பற்றிய ஒரு புத்தகம் அட்டகாசமான புத்தகம்.திருக்குறளை அவரது ஸ்டைலில் எளிமைப்படுத்தி ஒரு சிறிய புத்தகம் வெளியிட்டிருக்கிறார் பாருங்கள். சான்ஸே இல்லை அவரை அடிக்க. நிச்சயம் அவர் இல்லாதது தமிழ் உலகத்திற்கு பேரிழப்புதான் என்பதில் சந்தேகமில்லை. சுஜாதாவை நினைக்க வைத்த உங்களுக்கு நன்றி சார்.

ராஜரத்தினம் said...

Your critics abt tamil cinema too not taken by anybody seroiusly! But still you are doing that! I want register my opinion abt your hero. If my opinion is not ISO then yours is of noble comitee member!?

Unknown said...

Mr.Cable i am sorry to say this you could have reacted ( if it is really required ) to rajarathnam in a better way. being a great fan of sujatha even i couldnt able to digest rajarathinam comments especially DMK part. but i didnt find any thing offensive in his comment.he just registered his view but you being a moderator you have greater responsibility not to hurt anyone who is viewing your site.

Cable சங்கர் said...

//our critics abt tamil cinema too not taken by anybody seroiusly! But still you are doing that! I want register my opinion abt your hero. //

சரியான காமெடி பீஸாயிட்டு வர்றீங்க...நீங்க தொடர்ந்து படிக்கிறதுல ஒண்ணும் கொறைச்சலில்லை.. :))]


வெங்கட்..

இவரெல்லாம் அதுக்கு சரி பட்டு வர மாட்டாரு.. :))

nellai அண்ணாச்சி said...

நேற்று இன்று நாளை ##என்றும் சுஜாதா வாழ்வார்

nellai அண்ணாச்சி said...
This comment has been removed by the author.
சுரேகா.. said...

நான் இந்தப்பதிவுக்குப் போட்ட பின்னூட்டத்தைக் காணும் யுவர் ஆனர்! :)

Unknown said...
This comment has been removed by the author.
Cram Speaking said...

சுஜாதாவின் சில சிறுகதைகளை படிக்க நம்ம சைட்-க்கு வாங்க. :)

www.openreadingroom.com

[இப்படி ஓபன்-எ விளம்பரம் பண்றது புடிக்கலேன்னா எடுத்துருங்க தல!]

ராஜரத்தினம் said...

நான் சுஜாதவை பிடிக்காது என்று ஒரு வார்த்தையில் சொல்லாமல் அதற்கு காரணம் சொன்னால் நான் கமெடி பீஸென்றால் உங்கள் blogல் தினமும் ஒரு காரணம் எழுதின நீங்க எவ்வுளவு பெரிய காமெ... என்றெல்லால் நானும் உங்களை போல தரம் தாழ விரும்பவில்லை! எனக்கு தெரியும் என்றாவது பூனக்குட்டி வெளியே வரும் என்று! உங்கள் உள்ளம் எவ்ளோ மோசமென்று அறிய படுத்தியதற்கு நன்றி! நீங்கள் இதற்கு என்ன பதில் சொன்னாலும் எனக்கு தெரிய போவதில்ல! ஏன்னா இனி எந்நாளும் இங்கு வரபோவதில்ல! தேவையில்லாம பதில் எழுதி time waste பண்ணாதீங்க! நீங்கள் விரைவில் இயக்குவனாவதற்கு என் வாழ்த்துகள்.. க்கள் கிடையாது!ஏன்னா நான் அல்லகை கிடையாது!
Bye

Rafeek said...

சுஜாதாவை, திமுக சொம்புன்ற அளவில் அவரின் ஆளுமையை புரிந்து கொண்டுள்ளவர்களிடம் இது போல அரைவேக்காட்டுதனமான சாடல்கள் தான் வரும்.IGNORE this EGOISTIC person cable sir.

Cable சங்கர் said...

ஹா..ஹா.. ஹா.. சிரிச்சா காமெடின்னுதானே அர்த்தம்..:)

Ungalranga said...

80களில் இருபதுகளின் இலக்கிய தலைவர் இவர், அவரின் கணேஷும் வசந்தும் என் மனதின் மூலையில் இன்னும் அடிக்கடி எட்டிப்பார்த்தபடியே இருக்கிறார்கள்..

இளம்பெண்களை காண்கையில் கணேஷ் இவளை என்னவென்று அழைப்பான்? என்றெல்லாம் யோசித்ததுண்டு..

வசந்தின் புத்திகூர்மையும் விவேகமும், என்னையும் கொஞ்சம் மெருகேற்றியவை..

எனக்கு சுஜாதா Introduce ஆனது என்னுடைய பெயரின் மூலம்..

என் இயற்பெயரும், அவரின் இயற்பெயரும் அட்சரம் பிசகாது ஒன்றேதான்..

Yes.. S. Ranga Rajan.

நன்றி,
ஒரு காவிய தலைவனை நினைவுக்கூர்ந்தமைக்கு..!!