Ishq
சிம்பிளான கதைதான். டெல்லியில் ஏர்போர்ட்டுக்கு செல்லும் வழியில் ஒர் டிராபிக் சிக்னலில் நித்யாமேனனை பார்த்த மாத்திரத்தில் நிதினுக்கு காதல் வந்துவிடுகிறது. மழை ப்ரச்சனையால் ஹைதராபாத் செல்லவிருந்த விமானம் கோவாவிற்கு மாற்றி விடப்பட, கோவாவில் இவர்களது காதல் வளர்கிறது. அவர்கள் இருவரும் ஹைதையில் இறங்கி காதலை சொல்லிக் கொள்ளலாம் என்று நினைக்கும் போது நித்யாவின் அண்ணன் அஜய் என்று தெரிந்ததால் முடிச்சு இறுகிறது. நிதினுக்கும் அஜய்க்கும் என்ன ப்ரச்சனை? அப்பிரச்சனையை எப்படி நிதின் எதிர்கொண்டு நித்யாவை அடைகிறான் என்பதுதான் கதை.
நித்யாமேனன் வெப்பத்தில் பார்த்தற்கு இதில் கொஞ்சம் இளைத்திருக்கிறார். விரைவில் ஜோதிகாவின் இடத்தை பிடித்தால் ஆச்சர்யமில்லை. கண்களில் தெரியும் குறும்பு, சட்சட்டென மாறும் ரியாக்ஷன்கள். முகத்தில் தெரியும் ஒரு விதமான இன்னொசென்ஸ், என்று பார்க்கிற இடத்தில் எல்லாம் மனதை அள்ளுகிறார். என்ன அவரது ஹைட் மட்டும்தான் பெரிய மைனஸாய் இருக்கிறது. அதிலும் ஒவ்வொரு முறையும் நிதினை அணைக்க கிட்டத்தட்ட எகிறி குதித்து முயல்கிறார். முதல் பாதி முழுவதும் நிதினுக்கும் இவருக்குமான கெமிஸ்ட்ரி செம. வில்லனாய் வரும் அஜய்க்கு வழக்கமான வில்லனாய் இல்லாத கேரக்டர். நன்றாகவே செய்திருக்கிறார்.

படத்திற்கு மிகப் பெரிய ப்ளஸ் பாயிண்ட் டெக்னீஷியன்கள். இசையமைப்பாளர்களான அனூப், அரவிந்தின் பாடல்களும், முக்கியமாய் பின்னணியிசையும் இளைமை துள்ளலோடு இருக்கிறது. படத்தின் ஹீரோ என்று இன்னொருவரை சொல்ல வேண்டுமென்றால் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமை சொல்ல வேண்டும். மிக அழகான ஒளிப்பதிவு. இம்மாதிரியான படங்களுக்கு கொடுக்க வேண்டிய ஸ்டைலிஷான மேக்கிங். அற்புதமான க்ளோசப்ஸ், உறுத்தாத பேனிங், என்று மனுஷன் அசத்தியிருக்கிறார்.
ISHQ - A Feel Good Movie
கேபிள் சங்கர்
கேபிள் சங்கர்
Comments