Poola Rangadu
ரங்குடு ஹைதையில் பிஸினெஸ் செய்கிறேன் பேர்விழி என்று ஊரெல்லாம் கடன் வாங்கி அலைந்து கொண்டிருக்கும் வேளையில் வாரங்கலில் முப்பது ஏக்கர் சல்லீசாய் வர, தன் குடும்ப சொத்தான ஒரே ஒரு வீட்டையும் அடமானம் வைத்து வாங்குகிறான். வாங்கிய பிறகுதான் தெரிகிறது அந்த நிலம் அவ்வூரின் இரு முக்கிய ப்ரமுகரின் குடும்பப் பகை காரணமாய் ப்ரச்சனையிருப்பது. எப்படியாவது அதை தன் வசம் எடுத்தால் தான் வாழ்வு என்ற நிலையில் இரு குடும்பத்தை சேர்த்தால் தான் நினைத்தது நடக்கும் என்று முடிவெடுக்கிறான். இதனிடையில் ஒரு குடும்பத்து பெண்ணுடன் காதல் வேறு. அவன் நினைத்தது போல் நடந்ததா? இல்லையா? என்பது தான் கதை.

சுனிலை வெறும் காமெடியன் என்று இப்படத்திலிருந்து ஒதுக்கி விட முடியாது. ஏனென்றால் செண்டிமெண்ட், ஆக்ஷன், காமெடி, நடனம் என்று எல்லா விதத்திலும் தன்னை நிருபிக்க முயன்று அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். க்ளைமாக்ஸில் நிஜமாகவே சிக்ஸ் பேக் வைத்து ஊரிலிருக்கிற ஹீரோவுக்கெல்லாம் அஸ்தியை கொடுத்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.
ஹீரோயின் இஷ்கு சாவ்லா படு மொக்கை. வில்லன் க்ரூப்பில் வரும் தேவ்கில், பிரதீப் ராவத் இருவரும் தெலுங்கு குல வழக்கப்படி சீனுக்கு ரெண்டு முறை எதிர் எதிரே முறைத்துக் கொண்டும், நாலு சீனுக்கு ஒரு முறை ஒருவரை கொன்று கொண்டும் இருக்கிறார்கள். தரையில் நெருப்பை பரப்பி சூடு பண்ணி அதில் நிற்க வைத்து, சூடு தாங்காமல் ஆடும் ஆட்டத்திற்கு ஏற்ப தாறு மாறாய் மிருதங்க அடித்து செய்யும் சித்ரவதை சுவாரஸ்யம். ஆலி, மற்றும் ரவிபாபு க்ரூப் காமெடி செய்கிறார்கள். கோட்டா சீனிவாசராவ் வழக்கப்படி.
அனூப்பின் இசையில் இரண்டு பாடல்கள் பரவாயில்லை ரகம். ஒளிப்பதிவு ப்ரசாத். குறையொன்றுமில்லை. எழுதி இயக்கியவர் வீரபத்ரம். மலையாளத்தில் வெளியான பாண்டிப்பப்படா என்கிற படத்தைத்தான் தெலுங்காக்கியிருக்கிறார்கள். முதல் பாதி சுனிலின் காமெடியால் சுவாரஸ்யமாய் போகும் படம், இரண்டாவது பாதியானதும், படு சவ சவ.. தூக்கம் சுழட்டி சுழட்டி அடிக்க ஆரம்பித்துவிடுகிறது. ஒரே ஆறுதல் க்ளைமாக்ஸ் சிக்ஸ்பேக் பைட் தான்.
Poola Rangadu – Only For sunil’s Hard Work.
கேபிள் சங்கர்
Comments
By Experience ah! Eppadiyo vungalala indha padatha pathi ellam therinjikka mudiyuthu!