Agent Vinod
ஸ்ரீராம் ராகவனின் படங்கள் என்றால் எனக்கு அவ்வளவு பிடிக்கும். அப்படியொன்றும் பத்து படம் பண்ணிய இயக்குனர் இல்லை. எண்ணி மூன்றே முன்று படங்கள் தான் இயக்கியிருக்கிறார். தன்னுடய முதல் FTIIக்கான டிப்ளமோ படத்திற்கு தேசிய விருது வாங்கியவர். ராமன் ராகவ் எனும் இந்திய சீரியல் கில்லரைப் பற்றிய டாக்குமெண்டரி எடுத்து கவனிக்கப்பட்டவர். ராம்கோபால் வர்மாவின் குழுவில் இரண்டு மூன்று படங்களுக்கு திரைக்கதை செய்தவர். அவரின் தயாரிப்பில் சாய்ப், ஊர்மிளாவை வைத்து ஏக் ஹசீனாதீ எடுத்து வெற்றியை தொட்டவர். அடுத்த வந்த ஜானி கத்தார் படம் பெரிய அளவில் வெற்றியடையாவிட்டாலும், பெரும் பாராட்டைப் பெற்ற படம். இதோ இப்போது ஏஜெண்ட் வினோத்.